Showing posts with label த‌மிழ் சொற்க‌ள்...தொட‌ர்ப‌திவு. Show all posts
Showing posts with label த‌மிழ் சொற்க‌ள்...தொட‌ர்ப‌திவு. Show all posts

வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ள்

Sunday, March 1, 2009
வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ளைப்ப‌த்தி எழுத‌ சொல்லி தேவா கூப்பிட்டுருக்கார்.ந‌ன்றி தேவா:-)

கொஞ்ச‌ நாளாவே இது வ‌லைப்பூக்க‌ள்ல‌ பிர‌ப‌ல‌மானதா இருக்கு.ம‌ற்ற‌ வ‌லைப்பூக்க‌ள்ல‌ பாக்கும்போது சுல‌ப‌மான‌தாதான் தோணிச்சி.ஆனா என்னை எழுத‌ சொன்னதும் ஒரு வார்த்தை கூட‌ கிடைக்க‌லை.

ச‌ரி.. யார் கால்ல‌யாவ‌து விழ‌ வேண்டிய‌துதான்னு முடிவு ப‌ண்ணி,த‌மிழ் அறிவு என்னைவிட‌ (கொஞ்ச‌மே கொஞ்ச‌ம்)அதிக‌மா இருக்க‌ற‌(தா அவ‌ நினைச்சிட்டு இருக்க‌ற‌) தோழிகிட்ட‌ போய்......."இந்த‌ மாதிரி பிளாக்ல‌ எழுத‌ ஒருத்த‌ர் இன்வைட் ப‌ண்ணி இருக்கார்.என‌க்கு வேர்ட்ஸ் ஏதாவ‌து சொல்லு" ன்னு கேட்டேன்.அவ‌ ..முறைச்சாலே ஒரு முறை.முறைச்ச‌துமில்லாம‌ "ஏண்டி ..இதை கேக்க‌றதுக்கே..இத்த‌னை ஆங்கில‌ வார்த்தை க‌ல‌க்க‌றே.... நீ த‌மிழ‌ப‌த்தி எழுத‌ போறியா..என்ன‌ கொடுமை இது அப்ப‌டின்னு வேற‌ கேட்டுட்டா:‍(

இந்த‌ அவ‌மான‌த்துக்க‌ப்புற‌மும் அவ‌ளை கேக்க‌ணுமான்னு எகிறி குதிச்ச‌ ம‌ன‌சாட்சி த‌ன்மான‌ சிங்க‌த்தை பிஸ்க‌ட் போட்டு தூங்க‌ வ‌ச்சிட்டு..."ஏய்..ப்ளீஸ் சொல்லுப்பா.அவ‌ர் இன்வைட் ப‌ண்ணி ரொம்ப‌ நாள் ஆயிடிச்சி"ன்னு திரும்ப‌ கேட்டேன்.அவ‌ ஒரு 4,5 வார்த்தைங்க‌ சொன்னா...ஆனா அது எல்லாம் ஏற்க‌னவே யாராவ‌து எழுதின‌ வார்த்தையாவே இருந்திச்சி.போடின்னு சொல்லிட்டு நானே தேட‌ ஆர‌ம்பிச்சுட்டேன்.
கொஞ்ச‌ வார்த்தைங்க‌ கெடைச்சுது.அவை கீழே.

தூரிகை -பிர‌ஷ்

பனுவல்-நூல்,புத்த‌க‌ம்

தூவ‌ல்- பேனா

புரிசை- ம‌தில்

மேழி - ஏர்

வ‌துவை-ம‌ண‌மாலை

ம‌தி-நில‌வு

சாளர‌ம்-ஜ‌ன்ன‌ல்

க‌ட‌வுச்சீட்டு-பாஸ்போர்ட்

சல்லியம்-சிறுச‌ண்டை

ச‌ர‌க்குந்து-லாரி

சால‌ம்-மாஜிக்

சுழியம்-பூஜ்ய‌ம்

சிலாகித்த‌ல் ஆன‌ந்த‌ப்ப‌ட‌ல்

ந‌ற‌வு தேன்

ந‌ர‌லுத‌ல் ஒலித்த‌ல்

நுத‌ல் நெற்றி


இதுல‌ருந்து என‌க்கு என்ன‌ தெரிஞ்சிதுன்னா..இப்ப‌டியே நம்ம‌ பேச்சு வ‌ழ‌க்கு இருந்த‌துன்னா..த‌ங்கிலீஷ்ன்னு ஒரு மொழி உருவாகி நிலைச்சுடும்.த‌மிழ் வ‌ள‌ர‌ இந்த‌ மாதிரி வ‌லைப்பூக்க‌ள்ல‌ எழுத‌ற‌து ம‌ட்டும் இல்லாம‌ல் பேச்சுத்த‌மிழ் வ‌ள‌ர‌வும் ஏதாவ‌து செய்ய‌ வேண்டும்.

ஓ...ம‌ற‌ந்திட்டேன்.யாரையாவ‌து தொட‌ர் ப‌திவுக்கு கூப்பிட‌ணுமாமே.ம்ம்.... ந‌ம்மால‌ எவ்ளோ பேரை மாட்டிவிட‌முடியுமோ....செஞ்சிடுவோம்:-))

1.பொடிய‌ன் ச‌ஞ்ச‌ய்
2.ப‌துமை-Aiz
3.அன்புட‌ன் அருணா
4.அப்துல்லா
5.sureஷ்
6.புதுகைச் சாரல்
7. சீமாச்சு
8.அனுப‌வ‌ம்
9.கார்த்திகைப் பாண்டிய‌ன்
10.தேனியார்
11.இவ‌ன்
12.மகா


.