Showing posts with label தொட‌ர்க‌தை. Show all posts
Showing posts with label தொட‌ர்க‌தை. Show all posts

என்ன‌ருகே நீ இருந்தும்..(6)

Thursday, July 23, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 5ம் ப‌குதி

மாலைநேரம்..அவ‌ள் வீட்டில் ஆஜ‌ர்.
ஆண்டி..சூடாக டிப‌ன் செய்து கொண்டிருக்க‌ ஜன‌னி ச‌ம‌ய‌ல‌றை மேடையில் உட்கார்ந்து அதை சுவைத்துக் கொண்டிருந்தாள்.
ஏய்.இன்னும் கெள‌ம்ப‌லியா நீ?
ஓ..காட் ..வ‌ந்திட்டியா?.இதோ ஒரு 5 மினிட்ஸ்
ஆன்ட்டி! போய்ட்டு சீக்கிர‌ம் வ‌ந்துடறோம்..அங்கிள்கிட்ட‌ சொல்லுங்க‌..அவ‌ளைத் திட்ட‌ போறார்..அப்புறம் அந்த வாலு என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா...
என‌ச் சொல்லிக்கொண்டே டிப‌னைக் காலி பண்ணும் வேலையை நான் தொட‌ர்ந்தேன்..
ச‌ரிப்பா..நான் சொல்லிக்கறேன்..உன்கூட தானே வர்றா..ஏதுவும் சொல்லமாட்டார்..
அதற்குள் கிளம்பி வந்து மலராய் நின்றாள்..
அல்லோ ..என்ன..டாக்டர் சார்..போலாமா?..
அம்மா..பை மா..

ம்..ம்..போலாம்..வா..பை ஆன்ட்டி..

பை..பத்திரமா போய்ட்டுவாங்க கண்ணு..


கார் நகர ஆரம்பித்தது..

போகும் வ‌ழியில்

ஏன் ஜனனி ஒரு மாதிரி சைலன்டா இருக்க‌

இல்ல..இன்னிக்கு எங்க அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க..அதை யோசிச்சிட்டு இருந்தேன்..

என்ன் விஷயம்? எதைப் பத்தி ?


உங்க‌ளுக்கு அலைய‌ன்ஸ் பாக்க‌ ஆர‌ம்பிச்சி இருக்காங்க‌ இல்ல‌?..அத‌னால அதிக‌மா 2 பேரும் ஒண்ணா சேர்ந்து சுத்தாதீங்க‌..பாக்க‌ற‌வ‌ங்க‌ எல்லாரும் இதை ந‌ல்ல‌ வித‌மா எடுத்துக்க‌ மாட்டாங்க‌..யாராவ‌து ஏதாவ‌து சொல்லிட்டா ரெண்டு குடும்ப‌த்துக்குமே க‌ஷ்ட‌ம்ன்னு சொன்னாங்க‌

ஓ..அப்படியா...

ஆமாம்..அதைக் கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சி..

இதைச் சொல்வதற்குள் அவள் கண்களில் குளம்..

அப்போ உங்க கல்யாணம் ஆயிட்டா நாம் ரெண்டு பேரும் பழக முடியாதா..வர்ற பொண்ணு நம்மள புரிஞ்சிக்க மாட்டாங்களா? நம்ம பிரண்ஷிப் அவ்ளோதானா..என்னால முடியாதுப்பா.. நம்ம பிரண்ஷிப்பை யாராவது ஏதாவது சொன்னா நான் அவ்ளோதான்..

இதற்கும் கண்களில் இருந்த குளம் கரை மீறியது..அழ ஆரம்பித்திருந்தாள்..

ஏய்..ஏம்மா அழற..அதெல்லாம் பாத்துக்கலாம் விடு..ப்ளீஸ் பேபி ரிலாக்ஸ் யுவ‌ர்செல்ஃப்...

சில‌ நிமிட‌ ச‌மாதான‌த்துக்குப் பின்..
ம்ம்..ஒகே..அழல..கோயிலுக்குப் போலாமா?

என்ன‌ திடீர்ன்னு?

போலாம் ப்ளீஸ்..


ச‌ரி..போலாம்..என‌க்கும் உன்கிட்ட‌ கொஞ்ச‌ம் பேச‌ணும்..

தரிசனத்திற்குப் பின்..பிரகாரத்தில் அவளது ஃபேவரிட் இடத்தில் அமர்ந்தோம்..

என்னவோ..பேசணும்ன்னு சொன்னீங்களேப்பா..சொல்லுங்க..

ம்.ம்..ஏன் திடீர்ன்னு எமோஷனல் ஆயிட்டே ..நீ?

ம்ப்ச்ச்ச்..அதை விடுங்க..யு டெல்..

ஜனனி உன் மனசில நம்ம ஃபிரண்ஸ்ஷிப்பை பத்தி எவ்ளோ பயம் இருக்கோ ..அதைவிட பல மடங்கு பயம் எனக்கும் இருக்குடா.. வர்ற பொண்ணு நம்மல புரிஞ்சிக்கலன்னா..நாம நிரந்திரமா பிரிய வேண்டிய நிலமை கூட வரும்..அதவிட பெரிய கஷ்டம் நம்ம லைஃப்ல வேற ஏதும் இருக்காதுன்னு நினக்கிறேன்..

ம்ம்..அதை நான் இவ்ளோ நாளா யோசிக்கல..இன்னிக்கு அம்மா சொன்னபின்னாடிதான் புரிஞ்சிது..

அதுக்கு எனக்கு ஒரு வழி தோணுது..ஆனா அது எந்த அளவுக்கு சரின்னு எனக்குத் தெரியல..என்ன அது?

பேசாம நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா? நான் இப்படி சொன்ன உடனே,இதே எண்ணத்தோடதான் நான் உன்கிட்ட பழகினேனான்னு நெனக்காதே..இந்த பிரச்சினைக்கு ஒரு சொல்யூஷனாத்தான் இதைச் சொல்றேன்...

இது நிச்சயமா ஒரு சொல்யூஷன் இல்ல ராஜ்.. எனக்கும் இப்படி ஒரு எண்ணம் அம்மா சொன்ன உடனே வந்துது..அப்புறம் தான் யோசிச்சேன்..

அப்படி ஒரு முடிவு எடுத்தா அது நம்ம பேரண்ஸ்க்கு நான் செய்யற நம்பிக்கை துரோகம்..ரெண்டு வீட்லயும் நம்ம மேல இருக்கற நம்பிக்கைல தானே நம்மலபழக விட்டு இருக்காங்க..இப்போ போய் இப்பிடி சொன்னா ...அவங்க நமக்காக ஒத்துக்கலாம்..ஆனாமனசுக்குள்ள எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்க.. கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..
அதுவுமில்லாம உங்க அப்பாக்கு ஜோசியம்னா எவ்ளோ நம்பிக்கைன்னு உங்களுக்கே தெரியும்.. நம்ம 2 பேர் ஜாதகமும் சேராதப்போ ..அவர் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்ன்னா அது அவருக்கு எவ்ளோ கஷ்டம்..

இதெல்லாம் யோசிங்க.. அதுக்கு அப்புறம் நீங்க எண்ண முடிவு எடுத்தாலும் நான் அக்செப்ட் பண்ணிக்கறேன்..கார்ல வெய்ட் பண்றேன்..முடிவு பண்ணிட்டு வாங்க..
சில நிமிடங்களுக்குப் பின் நான் மீண்டும் கடவுள் முன் நின்றேன்..

"கடவுளே! எங்களோட நட்புக்கு பங்கம் வராத மாதிரி வாழ்க்கைத் துணைகளை எங்களுக்குத்தா.."


என வேண்டிக் கொண்டு காரை நோக்கி நடந்தேன்..கோயிலில் விளக்குகள் ஒளிர்ந்தன‌


முற்றும்.

.

என்ன‌ருகே நீ இருந்தும்.....(5)

Monday, June 22, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 4ம் ப‌குதி



இதைப் போன்ற‌ கேள்விக‌ள் எங்க‌ளைப் பார்க்கும் ப‌ல‌ரிடமிருந்தும் வ‌ந்த‌ன‌. நான் யோசிக்க‌ ஆர‌ம்பித்தேன் இதுவ‌ரை யோசித்திராத‌ புது கோண‌த்தில். இந்நாட்க‌ளில் எக்ஸாம் ஆர‌ம்பித்த‌தால் அவ‌ள் ப‌டிப்பில் பிஸி ஆகிவிட்டாள். நாங்க‌ள் ஒன்றாய் க‌ழிக்கும் நேர‌ம் மிக‌க் குறைந்த‌து.அவ‌ளை ப‌ல‌ வ‌ருடங்க‌ளாய்காணாத‌ போது இருந்த‌ வேத‌னையை விட‌க் க‌டும்வேத‌னையை உணர்ந்தேன்.இனியொரு முறை அவ‌ளைப் பிரிய‌ நேரிட்டால், அது உயிர் பிரியும் வேத‌னையைத் தான் த‌ரும் என்ப‌து நித‌ர்ச‌ன‌மாய்த் தெரிந்த‌து
ப‌ல‌ நாள் யோச‌னைக்குப் பின் ஒரு முடிவுக்கு வ‌ந்தேன்.
அம்முடிவை அவ‌ளிட‌ம் வெளிப்ப‌டுத்தினால் ஏற்ப‌டும் விளைவுக‌ள் என்ன‌ என‌ அனுமானிக்க‌ முடிய‌வில்லை..சொன்னால் கோப‌ப்ப‌டுவாளோ.. ஏத்துக்குவாளோ..கோப‌ப்ப‌ட்டால் எப்ப‌டி ச‌மாளிப்ப‌து..அவ‌ள் முக‌த்தில் எப்ப‌டி விழிப்ப‌து?
எண்ண‌ அலைக‌ள் எப்போதும் என்னைச் சூழ்ந்த‌ன‌.

அவ‌ள் தேர்வுக‌ள் முடிந்த‌ நாளும் வ‌ந்த‌து.அவ‌ள் வீடு நோக்கி விரைந்தேன்.அவ‌ளுக்கு முன் வீட்டில் இருந்தேன்.

அவ‌ள் அம்மா க‌த‌வைத் திற‌ந்தாங்க‌.

ஆன்ட்டி எப்ப‌டி இருக்கீங்க‌?


ம்ம்.. ந‌ல்லா இருக்கேன். நீ எப்ப‌டி க‌ண்ணு இருக்கே?வீட்டு ப‌க்க‌மே ஆள‌க் காணோம்?


கொஞ்ச‌ம் வேலை ஆன்ட்டி.அதான் இப்போ வ‌ந்துட்டேனே.ஜ‌ன‌னி இன்னும் வ‌ர‌லியா?

இன்னும் இல்லை..ப‌ஸ் எல்லாம் ரொம்ப‌ ர‌ஷ் ஆ இருக்கு..லேட்டா கிள‌ம்பி வ‌ர்றேன்னு இப்போதான் போன் ப‌ண்ணினா..

ஓ..அப்ப‌டியா..ச‌ரி ஆன்ட்டி.. நான் போய் அவ‌ளை கூட்டிட்டு வ‌ந்துட‌றேன்..எங்க‌ இருக்கா?

அவ‌ பிர‌ண்ட் க‌விதா வீட்ல‌.. லேட் ஆகுது.. நீ சாப்பிடு..அப்புற‌ம் போலாம்..


இல்லை ஆன்ட்டி..அவ‌ளையும் போய் கூட்டிட்டு வ‌ந்துட‌றேன் ..சேர்ந்து சாப்டுக்க‌லாம்
நீங்க‌ அவ‌ளுக்கு போன் ப‌ண்ணி காலேஜ் என்ட்ர‌ன்ஸ்க்கு வ‌ர‌ச் சொல்லிடுங்க‌

ச‌ரி..போய்ட்டு வா..

கிள‌ம்பி போய் அவ‌ளை அழைத்து வ‌ந்து சாப்பிட்டு எவ்வ‌ள‌வோ க‌தைக‌ள் பேசியும் என் எண்ணத்தை வெளிப்ப‌டுத்தும் தைரிய‌ம் இல்லாம‌லே வீட்டைவிட்டு கிள‌ம்பினேன்.

கிள‌ம்பும்போது..
ஏய்..ம‌யிலு..இன்னிக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா?

ஏன் கேக்க‌றே?

சொல்லும்மா..ஃப்ரீயா..இல்லையா?

ஃப்ரீதான்..

ச‌ரி..அப்போ ஈவினிங் ரெடியா இரு..அம்மா ப‌ர்த்டேக்கு ஒரு சாரி வாங்க‌ணும்.வ‌ந்து செல‌க்ட் ப‌ண்ணுவியாம்..


ஓ..அடுத்த‌ வார‌ம் ..ஆன்ட்டி ப‌ர்த்டே வ‌ருதில்லே...ம‌ற‌ந்திட்டேன்..ச‌ரி போலாம்..எப்போ வ‌ருவே?

Around 6...அதுக்குமேல‌ லேட்டா போனா அங்கிள் கிட்ட‌ உதைதான் விழும்...

ஒகே..I will be waiting for you


அப்போது தெரிய‌வில்லை என‌க்கு என் எண்ண‌த்தை வெளிப்ப‌டுத்தும் தைரிய‌ம் ஈவினிங் வ‌ரும் என்று

((இந்த‌ ப‌குதி ஒரு மீள் ப‌திவு))
(தொட‌ரும்)

.

என்ன‌ருகே நீ இருந்தும்...(4)

Tuesday, June 9, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 3ம் ப‌குதி

நாட்க‌ள் உருண்ட‌ன‌.அவ‌ர்க‌ள் வீடு என‌து ம‌ருத்துவ‌ம‌னைக்கு அருகிலேயே இருந்த‌தால் நான் என் ரூமிற்குப் போவ‌தென்ப‌தே அரிதான‌து.இருவ‌ரும் சேர்ந்து சமைப்ப‌து,வீட்டை சுத்த‌ப்ப‌டுத்துவ‌து என‌ விடுமுறைக‌ளில் வீட்டையே இர‌ணக‌ள‌ப்படுத்திக் கொண்டிருந்தோம்.

என‌க்குப் பெண் தேட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.என‌க்கென்ன‌வோ அதில் ஒரு இன்ட்ரெஸ்ட் வ‌ர‌வில்லை.எத்தனையோ வ‌ர‌ன்க‌ள்,ஜாத‌கங்க‌ள்,போட்டோக்க‌ள்.என் அப்பாவின் அபார‌ ஜோதிட‌ ந‌ம்பிக்கையை பூர்த்தி செய்யும் ஜாதக‌ம் கிடைப்ப‌து குதிரை கொம்பான‌து.என‌க்கென்ன‌மோ ஜாலியாய்தான் இருந்த‌து. போட்டோவில் finalise செய்யும் வேலையை என் அம்மா ம‌யிலிட‌ம் கொடுத்தார்.என் அப்பா ஒன்றிர‌ண்டு ஜாத‌க‌ங்க‌ள் சேர்வ‌தாய்ச் சொன்னால் , அந்த‌ பெண்க‌ளின் போட்டோக‌ளில் இவ‌ள் திருப்திப்ப‌ட‌வில்லை.

ஜெம்மு..உன‌க்கு ஏத்த‌ மேட்ச் இல்ல‌ப்பா..இந்த‌ பொண்ணு..வேணாம்..


அடிப்பாவி..நீயும் எங்க‌ப்பாவும் சேர்ந்தா என‌க்கு டைர‌க்டா அறுப‌தாம் க‌ல்யாண‌ம்தான்

அலையாத‌ப்பா..அப்பா,அம்மா முன்னாடி interest இல்லைங்கிற‌து..அப்புற‌ம் த‌னியா அலைய‌ற‌து..ச‌ரியான‌ அல்ப‌ம்ஸ் நீ

நீ தாண்டி அல்ப‌ம்..உன‌க்கு க‌ல்யாண‌ம் ஆக‌ற‌ வ‌ரைக்கும் என‌க்கும் ஆக‌க்கூடாதுன்னு ம‌ன‌சில‌ ஏதும் பிளான் வ‌ச்சிருக்கியா சொல்லிடு..உன‌க்கும் மாப்பிள்ளை பாக்க‌ சொல்றேன்..அதுக்காக‌ என் வாழ்கைல‌ வெளையாட‌த‌..

டேய்..போடா லூசு..என‌க்கு எப்போ மாப்பிள்ளை பாக்க‌ சொல்ல‌னுன்னு என‌க்கு தெரியும்.. நீ ஒண்ணும் ரெக‌ம‌ண்ட் ப‌ண்ண‌ வேணாம்..இரு..இப்போவே ஊருக்கு போன் ப‌ண்ணி ஆன்ட்டிகிட்ட‌ நீ எவ்ளோ பெரிய அலைஞ்சான்னு சொல்றேன்

இப்போ ம‌ட்டும் போன் ப‌ண்ணிண‌ ....அப்புற‌ம் ந‌ட‌க்க‌ற‌தே வேற

அடுத்த‌ ச‌ண்டை ஆர‌ம்பித்த‌து.
இப்ப‌டியே நொடிக்கொரு ச‌ண்டையும், ம‌ணிக்கொரு அடித‌டியுமாய் நாட்க‌ள் ந‌க‌ர் ந்த‌ன‌..


நான் அப்பா அம்மாவைப் பார்க்க‌ ஊருக்கு போவ‌து குறைந்து அவ‌ர்க‌ள் இங்கு வ‌ருவ‌து அதிக‌ரித்த‌து

ஒருமுறை ஊருக்கு வ‌ ந்த‌ அம்மாவிட‌ம் கேட்டேன்.
ஏம்மா..இப்ப‌டி இவ‌ கைல‌ என் த‌லைவிதியை எழுத‌ வைக்கிறே..

உன்னோட‌ டேஸ்ட் எங்க‌ளை விட‌ ஜ‌ன‌னிக்குத் தெரியுண்டா..அத‌னால‌தான்..அவ‌ selection எப்ப‌வுமே ச‌ரியாருக்கும்.

என்ன‌மோ போம்மா..இதை வ‌ச்சிகிட்டு அவ‌ ப‌ண்ர‌ அலும்பு தாங்க‌ல‌

ஏங்க‌ண்ணு..ஒண்ணு கேட்டா கோச்சிக்க‌ மாட்ட‌யே?


என்ன‌ம்மா? சொல்லு..என்ன‌மோ ஏங்கிட்ட‌ ப‌ய‌ ந்து ந‌டுங்க‌றா மாதிரி பில்ட‌ப் குடுக்க‌றே..

இல்லாடா... உன் ம‌ன‌சில‌ ஜ‌னனி ப‌த்தி ஏதாவ‌து நென‌ப்பு வ‌ச்சிருக்கியா?


அப்ப‌டில்லாம் இல்ல‌ம்மா..உன் ம‌ன‌சில‌ ஏதாவ‌து நென‌ப்பு இரு ந்தா அதுக்கு என் த‌லையை உருட்டாத‌..ஆமா..ஏன் திடீர்னு இப்பிடி கேக்கிறே?

இல்ல‌ க‌ண்ணு...பொண்ணு பாக்க‌ற‌துல‌ ஒரு இன்ட்ரெஸ்டே காமிக்க‌ மாட்டீங்கிறியே ..அதான் கேட்டேன்.என் ம‌ன‌சில‌ என்ன‌ நென‌ப்பு இரு ந்து என்ன‌டா ப‌ண்ற‌து..அதான் உங்க‌ ரெண்டு பேரு ஜாத‌க‌மும் ஒத்து போல‌யே:‍(

யாரு ஜாத‌க‌ம்மா? ஜ‌ன‌னியோட‌தா? பாத்தீங்க‌ளா..

ஆமா க‌ண்ணு..உன‌க்கு பொண்ணு பாக்க‌ ஆர‌ம்பிச்ச‌தே மொத‌ மொத‌ பாத்த‌தே அவ‌ ஜாத‌க‌ந்தான்..என்ன‌ ப‌ண்ற‌து..ஒத்து போல‌..

அப்பாடா.தேங்க் காட்..இல்ல‌ன்னா அந்த‌ ராட்ஷ‌சிகிட்ட‌ சிக்கி இருப்பேனா...

டேய் ..சும்மா பேசாத‌..அவ‌ ரொம்ப‌ ந‌ல்ல‌ புள்ளைடா..உன்மேல‌ உசுரையே வ‌ச்சிருக்கா

ஆமா...ஏற்க‌ன‌வே திமிர்புடிச்சி ஆட‌றா. நீ வேற‌ ஏத்தி விடாத‌ அவ‌ளை.போம்மா..போய் வேலையைப் பாரு..

அம்மாவின் முக‌த்தில் சிறு வ‌ருத்த‌த்தை க‌ண்டேன்
ஒரு நாள் அங்கிளும்,ஆன்ட்டியும் ஊருக்குப் போய்விட‌ த‌னியாய் இருக்க‌ ப‌ய‌ந்து,ப‌க்க‌த்திலேயே இருந்த‌ அவ‌ள் சித்த‌ப்பா வீட்டிற்கும் போக‌ ம‌றுத்து, நைட் டியூட்டிக்கு ஹாஸ்பிட‌ல் போக‌ இருந்த‌ என்னுட‌ன் ஒட்டிக் கொண்டாள்.


அன்று இர‌வு ஹாஸ்பிட‌ல் முழுக்க‌ அவ‌ள் ராஜ்ஜிய‌ம்தான்.சீரிய‌ஸ் ஆன‌ கேஸ் எதுவும் ஹாஸ்பிட‌லில் இல்லாத‌தால் எல்லோருக்கும் ஜாலியாக‌வே போன‌து பொழுது.அன்றிலிருந்து என் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரும் அவ‌ளுக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் ஆயின‌ர்.

ஒரு நாள் என் ந‌ண்ப‌ன் கேச‌வ்சொன்னான்...

ராஜ்.. நீயும் ஜ‌ன‌னியும் made for each other மாதிரி இருக்கீங்க‌ப்பா..பேசாம‌ அவ‌ங்க‌ளையே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம் இல்ல‌..


இல்ல‌ கேச‌வ்.அப்ப‌டி ஏதும் எங்க‌ளுக்குள்ள இல்லை..

இதுவ‌ரைக்கும் இல்லாட்டி என்ன‌..யோசிச்சிபாரு.. இதுக்கு உங்க‌ வீடுக‌ள்ல‌யும் எந்த‌ பிர‌ச்சினையும் வ‌ராது..வேற‌ஏதோ ஒரு பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ணினா அந்த‌ பொண்ணு உங்க‌ளை புரிஞ்சிக்குமா? இந்த‌ ரிலெஷ‌ன்ஷிப் க‌ன்டினியூ ப‌ண்ண முடியுமா?

No கேச‌வ்.No more discussions regarding this pls.

ok pa..sorry if i am wrong..

its ok..leave it..lets go for a coffee now:-)
என‌ அவ‌ன் வாயை அடைத்தேன்

என்ன‌ருகே நீ இருந்தும் 5ம் ப‌குதி(தொட‌ரும்)
.

என்ன‌ருகே நீ இருந்தும்...(3)

Sunday, June 7, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 2ம் ப‌குதி

அவ‌ள் என் பார்வையில் ப‌டும்ப‌டியான‌ ஒரு இட‌த்தில் அம‌ர்ந்தேன்.அவ‌ளிட‌ம் போய் எப்ப‌டிப் பேச‌லாம் என ம‌ன‌துக்குள் ஒத்திகை பார்த்த‌ நேர‌ம்..வந்தார்..கேண்டீன் முத‌லாளி ..

வ‌ண‌க்க‌ம் டாக்ட‌ர்...நைட் டூயுட்டிங்க‌ளா? இங்கியே வ‌ந்திட்டீங்க‌?ரூம் ச‌ர்வீஸ் சொல்ல‌லிங்க‌ளா.?.

ஓ..வ‌ண‌க்க‌ங்க‌..வீட்டுக்கு கிள‌ம்பிட்டேன்‌..அப்ப‌டியே சாப்ர‌லாம்ன்னு வ‌ந்தேன்

ச‌ந்தோஷ‌ங்க‌..என்ன‌ சாப்ட‌ரீங்க‌..

ஊத்த‌ப்ப‌ம் கொண்டுவ‌ர‌ச் சொல்லுங்க‌..

ச‌ரிங்க‌ .. என‌ ஒரு வ‌ழியாய் ந‌க‌ர்ந்தார் அவ‌ர்.

வ‌ந்த‌ ஊத்த‌ப்ப‌த்தில் ஒரு சிறு ப‌குதியைப் எடுத்து சாம்பாரில் தோய்த்து த‌னியாக வைத்தேன்.அது ஜ‌ன‌னியின் ப‌ங்கு.இது நாங்க‌ள் இருவ‌ரும் சிறுவ‌ய‌தில் ப‌ழ‌கிய‌ ப‌ழ‌க்க‌ம். நான் அவ‌ளுக்கும்,அவ‌ள் என‌க்குமான ப‌ங்கை சாப்பிடும்முன் எடுத்து வைப்ப‌து அந்த‌ ப‌ழ‌க்க‌ம் இன்று வ‌ரை என்னில் தொட‌ர்கிற‌து.இந்த‌ ப‌ழ‌க்க‌த்தால் ந‌ண்ப‌ர்க‌ளிடையே எவ்வ‌ள‌வோ முறை சிக்கி சின்னாபின்ன‌ப்ப‌ட்டிருக்கேன்.ஆனாலும் ப‌ழ‌க்க‌த்தை விட‌வில்லை.

இப்போது என்னில் ஒரு ஆவ‌ல்.அவ‌ளும் அந்த‌ ப‌ழ‌க்க‌த்தை வைத்திருக்கிறாளா என்று.... அவ‌ள் த‌ட்டைப் பார்த்தேன்.அங்கேயும் அதே போல் ஒரு துண்டு ச‌ப்பாத்தி த‌னியாக‌ இருந்த‌து.
ம‌ன‌ம் ஆன‌ந்த‌க் கூத்தாடிய‌து.ச‌ந்தோஷ‌த்துட‌னே சாப்பிட்டு முடித்தேன்.

அத‌ற்குள் அவ‌ள் கேண்டீனை விட்டுக் கிள‌ம்பிவிட்டாள்.கேண்டீன் வெளியே நின்று தொலைபேசிக் கொண்டிருந்தாள்.பேசி முடித்துவிட்டு ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தாள்.

Excuse me Miss.Janani என்றேன். நின்றாள்.திரும்பினாள்.Yes Doctor என்றாள்

உங்க‌ பேர் ம‌யிலுதானே என்றேன்.
(அது அவ‌ளை நான் ம‌ட்டும் கூப்பிடும் பேர். )

க‌ண்க‌ள் விரிய‌, சிரித்துக் கொண்டே ..அப்போ நீங்க‌ பாண்டிய‌னா? அட‌ச்சே..GEMஆ?
(GEM-இது அவ‌ள் என்னைத் திட்டும் பெய‌ர் (Ginger Eating Monkey))

அப்பா காலைல‌யே சொன்னாங்க‌ நீங்க‌ இங்க‌தான் இருக்கீங்க‌ன்னு.. நான் எப்போ பாப்போம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்..என‌ துள்ளிக் குதித்தாள்.

உன்னைப் பார்ப்பேனான்னு இருந்தேன் ம‌யிலு.10 years க்கு மேல‌ ஆச்சு நாம‌ பார்த்து.ம்ம்ம்..Now i am very very happy ...ச‌ரி அங்கிள் எங்க‌? என்றேன்.

அப்பா,சித்த‌ப்பா வீட்ல‌ இருக்காங்க‌.என‌க்கு அம்மாவை விட்டுட்டு இருக்க‌ முடிய‌ல‌..அத‌னால‌ நான் ICUல‌யே இருந்துக்கறேன்னு சொல்லிட்டு வ‌ ந்துட்டேன்.

பேசிக்கொண்டே ICU- Doctors Roomக்கு வ‌ந்தோம்.

வா GEM.போய் அம்மாவை பாக்க‌லாம்.

நான் இப்போதான் aunty condition check ப‌ண்ணிட்டு வ‌ந்தேன்.She is improving.

oh..Thanks.நான் போய் பாத்துட்டு வ‌ரேன் இரு .

அவ‌ள் சீஃப்ன் relative என்ப‌தால் த‌டுப்ப‌வ‌ர் எவ‌ருமில்லாம‌ல் ICU.வினுள் நுழைந்தாள்.

திரும்பி வ‌ந்த‌ அவ‌ள் முக‌த்தில் என்னைக் க‌ண்ட‌போதிருந்த உற்சாக‌ம் மிஸ்ஸிங்.

என்ன‌ம்மா ஆச்சு? ஏன் ட‌ல் ஆயிட்டே?

ஒண்ணும் இல்லை ..அம்மாவை இப்ப‌டி பாக்க க‌ஷ்ட‌மாயிருக்கு..

it's ok ...nothing serious .we are here na..நான் பாத்துக்க‌றேன்

என‌ ஆர‌ம்பித்த‌ எங்க‌ள் உரையாட‌ல்.. நாங்க‌ள் meet ப‌ண்ணியிருக்காத‌ அந்த‌ 10 வ‌ருட‌ங்க‌ளையும் உள்ளட‌க்கிய‌து.
காலை 6 ம‌ணிக்கு வீட்டிலிருந்து அவ‌ளுக்கு கார் வ‌ந்த‌பின் தான் நாங்க‌ள் கால‌த்தை உண‌ர் ந்தோம்.

அவ‌ள் வீட்டிற்கு கிள‌ம்பினாள். நான் சில‌ ச‌ர்ஜ‌ரிக்க‌ள் இருந்த‌தால் அங்கேயே refresh செய்து கொண்டு என் அன்றைய‌ ப‌ணியை ஆர‌ம்பித்தேன்.

அடுத்த‌ நாள் ஆன்ட்டி ICUலிருந்து ரூமுக்கு மாற்றப்ப‌ட்டார்.ஜ‌ன‌னியும் அங்கிளும் ஹாஸ்பிட‌லிலேயே த‌ங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.டியூட்டி இல்லாத‌ என் நேர‌ம் அனைத்தும் அவ‌ர்க‌ளுக்காய் ஆன‌து. எங்க‌ள் விட்டுப் போன‌ ந‌ட்பு, மீண்டும் துளிர் விட்ட‌து.

ஆன்ட்டி discharge ஆகி சில‌ வார‌ங்க‌ளில் அங்கிளுக்கு நான் இருந்த‌ ஊருக்கே மாறுத‌ல் வ‌ந்த‌து.அவ‌ளும் அதே ஊரில் முதுநிலைப் ப‌டிப்பில் சேர்ந்தாள்.

(தொட‌ரும்)
என்ன‌ருகே நீ இருந்தும் 4ம் ப‌குதி
.

என்ன‌ருகே நீ இருந்தும்...(2)

Friday, June 5, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் முத‌ல் ப‌குதி


சிஸ்ட‌ர்..இவ‌ங்க‌ கூட‌ வ‌ந்த‌வ‌ங்க‌ எங்க‌?இங்க‌ கூட்டிட்டு வாங்க‌..
ப‌ட‌ப‌ட‌ப்பான‌ சில‌ நிமிட‌ங்க‌ளுக்குப்பின்..

சார்..அவ‌ங்க‌ சீஃப் ரூம்ல‌ இருக்காங்க‌ என‌ ப‌தில் வ‌ந்த‌து..
oh..ok..நான் சீஃப் ரூம் வ‌ரைக்கும் போய்ட்டு வ‌ரேன்.தியேட்ட‌ருக்கு இன்ஃபார்ம் ப‌ண்ணீ கேஸ் ரெடி ப‌ண்ண‌ சொல்லுங்க‌.
சீஃப் ரூமிற்குள் நுழைந்தால்..
.. வாங்க‌ ராஜ்.Meet my brother Mr.Srinivasan.அங்கிருந்த‌வ‌ர் ப‌க்க‌ம் திரும்பி..
அண்ணா..இவ‌ர்தான் Dr.ராஜேஸ்வ‌ர‌ன்.ந‌ம்ம‌ ஹாஸ்பிட‌லோட‌ young and energetic chap.
என் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ரைப் பார்க்க‌ இன்ப‌ அதிர்ச்சி
சார்.. அங்கிளை என‌க்கு இன்ட்ர‌ட்யூஸ் ப‌ண்ண‌னுமா? அங்கிள்..என்னைத் தெரிய‌லியா.. பாண்டிய‌ன் அங்கிள் நான்..ஆன்ட்டியை ஐசியுவில‌ பாத்த‌தும் உங்க‌ளைத் தேடிட்டுதான் ஓடி வ‌ந்தேன்.
பாண்டியா...எப்ப‌டி க‌ண்ணு இருக்கே ..ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மா இருக்குப்பா உன்னைப் பார்க்க‌..அப்பா அம்மால்லாம் ந‌ல்லா இருக்காங்க‌ளா...
(பாண்டிய‌ன் என்ப‌து என் வீட்டில் கூப்பிடும் பெய‌ர்)

ம்ம்..எல்லாம் ந‌ல்லா இருக்காங்க‌ அங்கிள்.

ஓஓ... ரெண்டுபேரும் ஏற்க‌ன‌வே தெரிஞ்ச‌வ‌ங்க‌ளா...ச‌ந்தோஷ‌ம்.ச‌ரி அண்ணா..ஜ‌ன‌னி எங்கே?.என்ற‌து சீஃப் இன் குரல்..
வெளில‌தான் இருக்கா..ரிஷ‌ப்ஷ‌ன்ல‌ உக்காந்திருக்கா..பாவ‌ம் பொண்ணு ரொம்ப‌ சோர்ந்து போச்சி.. நான் தான் அம்மாவை வ‌ர‌ச்சொல்லி ஆக்ஸிடெண்ட்ல‌ மாட்டி விட்டுட்டேன்னு பொல‌ம்பிட்டு இருக்கா..

oh..so Sad ..அது என்ன ப‌ண்ணும் பாவ‌ம்..அவ‌ளை ஏன் அண்ணா த‌னியா விட்டீங்க‌..இருங்க‌ உள்ள கூப்பிட‌லாம்....
சிஸ்ட‌ர்... ஜ‌ன‌னின்னு ஒரு பொண்ணு ரிஷ‌ப்ஷ‌ன்ல‌ இருக்கும் கூட்டிட்டு வாம்மா..
அனைவ‌ரும் ஜ‌ன‌னிக்காய் காத்திருக்க‌...நானும் என் செல்ல‌ தேவ‌தையைக் காணும் சந்தோஷ‌த் த‌விப்பில் வினாடிக‌ளை விழுங்க‌
வேக‌மாய் திற‌ந்த‌ க‌த‌வினுள் அவ‌ச‌ர‌மாய் நுழைந்த ந‌ர்ஸ்..டாக்ட‌ர்..ஐசியு 2 ல‌ 5th bed patient க்கு திரும்ப‌ pain வ‌ந்திருச்சி..என‌ப் ப‌தைக்க‌,நான் இன்ட‌ர்ன‌ல் வே வ‌ழியா ஐசியுவுக்கு விரைய‌,வெளிக்க‌த‌வைத் திற‌ந்து என் தேவ‌தை சீஃப் ரூமினுள் பிர‌வேசிக்கிறாள்.
ஹ்ம்ம்ம்ம்..ஜ‌ன‌னியைக் காணாம‌லே என் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ நிமிட‌ங்க‌ள் ஆர‌ம்பித்த‌ன‌.
ஐசியு,ச‌ர்ஜ‌ரி என‌ என் ம‌ணித்துளிக‌ள் ம‌ர‌ணித்தாலும் ம‌ன‌தை நிறைத்த‌ என் ம‌யில்தேவ‌தையை ம‌றுக்க‌முடிய‌வில்லை:-(
என‌க்காய்ச் சில‌ நிமிட‌ம் கூட‌ இல்லாம‌ல் என்ன‌ வாழ்க்கை என‌ என்றுமில்லாச் ச‌லிப்பு என் தொழில்மீதே வ‌ந்த‌து.ஆனாலும் வேறுவ‌ழியின்றி.. ச‌ர்ஜ‌ன்ஸ் மீட்டிங்கிற்கு சீஃப் டாக்ட‌ருட‌ன் கிளம்பிய‌ நேர‌ம்,சீஃப் டாக்ட‌ரின் காரிலிருந்து காலையில் என் ம‌ன‌தைக் க‌லைத்த‌ பெண் இற‌ங்கிச் சென்றாள்.

அப்போ..அதுதான் ஜ‌ன‌னியா.. என் ம‌யில்குட்டியா!!!! ப‌ழைய‌ ந‌ட்பும்,அன்பும்தான் என்னைத் த‌டுமாற‌ வைத்த‌தா??

சார் ஜ‌ன‌னிதானே அது..ஆவ‌லை அட‌க்க‌ முடியாம‌ல் சீஃப் இட‌மே கேட்டுவிட்டேன்..
அவ‌ர், ஆமாம் ராஜ்..உங்க‌ளுக்கு அடையாள‌ம் தெரிய‌லையா...சின்ன‌ப் பொண்ணுல‌ பார்த்த‌தோ.கா‌லைல‌ருந்து இன்னும் அதுகிட்ட‌ பேச‌லையா...அண்ணா உங்க‌ ஃப்ர‌ண்ட்ஷிப் ப‌த்தி சொன்னார்.திக் ஃப்ர‌ண்ஸாமே..பிரிய‌வே மாட்டீங்க‌ளாம்..

ஆமாம் சார்..காலைல‌ இருந்து வ‌ந்த‌ கிரிடிக‌ல் கேஸ்க‌ளால பேச‌க்கூட‌முடியாம‌ போச்சு :-(.

anyway my dear boy..you should spare time for such important things.ஒரு டாக்ட‌ர்க்கு எந்த‌ அள‌வுக்கு profession முக்கிய‌மோ அதே அள‌வுக்கு personal lifeம் முக்கிய‌ம்..இல்லைன்னா லைஃப்ல‌ ஒரு ச‌லிப்பு வ‌ந்திடும்

ok sir.I will follow your advice.Now we have reached the meeting hall..

மீட்டிங் முடிந்து இர‌வு உட‌ல் ஓய்வைக் கேட்டாலும்,ம‌ன‌ம் ஆன்ட்டியின் உட‌ல் நிலையை ப‌ரிசோதிக்க‌ சொல்லிய‌து..ஓர‌த்தில் ஜ‌ன‌னியை ச‌ந்திக்கும் சாத்திய‌க்கூறுக‌ளையும் ஆராய்ந்த‌து.

so again back to hospital.

ஆன்ட்டியின் க‌ண்டிஷ‌ன் பார்த்து திருப்திய‌டைந்த‌ வேளையில்,கைபேசி ஒலித்த‌து.
அறை ந‌ண்ப‌னின் SMS
Cooking women didn't come today.Have dinner outside.
என்ற‌து.

ok.என‌ ரிப்ளை செய்துவிட்டு கேண்டீன் நோக்கி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினேன்
கேண்டீனில் மிக‌ச்சில‌ரே இருந்த‌ன‌ர்.அங்கே த‌னியாய் சோக‌மே உருவாய் அம‌ர்ந்திருந்தாள் ஜ‌னனி.
(தொட‌ரும்)

என்ன‌ருகே நீ இருந்தும் 3ம் ப‌குதி

.

என்ன‌ருகே நீ இருந்தும்...

Wednesday, June 3, 2009
"காத‌ல் வ‌ந்தால் சொல்லிய‌னுப்பு

உயிரோடிருந்தால் வ‌ருகிறேன்"


காரின் ஸ்பீக்க‌ரிலிருந்து க‌சியும் என் ஃபேவ‌ரிட் பாட‌ல் எப்போதும் போல‌ ம‌ன‌தை ம‌ய‌க்க‌ காரைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.இந்த‌ பாட்டு ரிலீஸ் ஆன‌துல‌ இருந்து ஒரு 100 முறையாவ‌து கேட்டிருப்பேன்.ஆனாலும் ச‌லிக்க‌வில்லை.பாட்டு முடிய‌ற‌துக்குள்ள‌ என்னைப் ப‌த்தி ஒரு ரீகேப் பாருங்க‌.

நான்.. ந‌க‌ரின் புக‌ழ் பெற்ற‌ ஒரு ஹாஸ்பிட‌லின் டாக்ட‌ர்.போன‌ வ‌ருட‌ம் தான் மருத்துவ‌ மேல் ப‌டிப்பை இங்கிலாந்தின் புக‌ழ்பெற்ற‌ க‌ல்லூரியில் முடித்திருந்தேன்.ம‌ருத்துவ‌த்துறையில் ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌தே வாழ்நாள் சாத‌னையாய் எண்ணுப‌வ‌ன்.


ஹாஸ்பிட‌ல் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு,போய் என் சீட்டுக்கு உட‌லைக் கொடுத்து,கேஸ் ஹிஸ்ட‌ரிக்க‌ளை புர‌ட்ட‌ ஆர‌ம்பித்த நேர‌ம்,கைபேசி ஒலித்த‌து.யாராய் இருக்கும் என‌ யோச‌னையோடு எடுத்தால்...சீஃப் காலிங்..எழுத்துக்க‌ள் மின்னின‌..

குட்மார்னிங் சார்..
குட்டே ராஜ். ஹேவ் யு ரீச்டு ஹாஸ்பிட‌ல்?
யெஸ் சார்.ஜ‌ஸ்ட் ந‌வ்
ஒகே..குட்..மை க‌ஸின் பிர‌த‌ர்ஸ் வொய்ப் மெட் வித் ஏன் ஆக்ஸிடெண்ட் அன்ட் அட் கிரிட்டிக‌ல் பொசிஷ‌ன்.தே டுக் ஃப‌ர்ஸ்ட் எய்ட் அட் சேல‌ம் அன்ட் க‌மிங் டு அஸ் ஃபார் ஃபர்த‌ர் டிரிட்மெண்ட்..தே வில் ரீச் தேர் இன் 10 மினிட்ஸ்..டேக் கேர் ஆஃப் தெம்..ஐ வில் க‌ம் இன் 15 மினிட்ஸ்..
ஓகே சார்...மே ஐ நோ த‌ பேஷ‌ண்ட் நேம்?
ம்ம்ம்ம்...பார்வ‌தி ..ஹர் ஹ‌ஸ்பெண்ட் ஈஸ் சீனிவாச‌ன்.யு பி வித் தெம் டில் இ ரீச்..
ஓகே.சார்.ஐ வில் டேக் அட் மோஸ்ட் கேர்.

போனை வைத்து விட்டு இண்ட‌ர்காமில் ரிஷ‌ப்ஷ‌னைக் கூப்பிட்டு குறிப்பிட்ட‌ பேஷ‌ண்ட் வ‌ந்தால் மினி தியேட்ட‌ருக்கு கொண்டு வ‌ந்து, என‌க்குத் தெரிவிக்க‌ச் சொல்லிவிட்டு,ஜ‌ன்ன‌லில் வேடிக்கை பார்க்க‌த் தொட‌ங்கினேன்..
சில‌ நிமிட‌ங்க‌ளில் பேஷ‌ண்ட் வ‌ந்துவிட்ட‌தாய் த‌க‌வ‌ல் வ‌ர‌..மினி தியேட்ட‌ரை நோக்கி அவ‌ச‌ர‌மாய் ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன்.அப்போது ரிஷ‌ப்ஷ‌ன்,விஸிட்ட‌ர்ஸ் லான்ஜ்ல் அம‌ர்ந்திருந்த‌ ஒரு பெண் என் க‌வ‌ன‌த்தை க‌வ‌ர்ந்தாள்

எவ்வ‌ள‌வோ பேர‌ழ‌கிக‌ள் கூட‌ இன்று வ‌ரை என் க‌வ‌ன‌த்தைக் இப்ப‌டிக் க‌வ‌ர்ந்த‌தில்லை. எந்த‌ப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத‌ சாமியார் என‌ பேர் வாங்கிய‌வ‌ன் நான் ஆனால் இன்று....ஒரு நிமிட‌ம் த‌ட‌ம் மாறிய‌ சிந்தனையைத் .."அடேய்..என்னாச்சு உன‌க்கு?."..என‌ த‌லையில் த‌ட்டி நிக‌ழ்வுல‌குக்கு வ‌ந்தேன்.

பேஷ‌ண்ட் அருகில் சென்று பார்த்தால் ...அவ‌ர் ம‌ய‌க்க‌மாய் இருந்தார்.இப்போது ம‌ன‌ம் இன்னும் க‌ட்டுப்பாட்டை இழ‌ந்து குதித்தது....ம‌ன‌தைக் க‌ட்டுப்ப‌டுத்தி க‌ண்டிஷ‌ன் அன‌லைஸ் ப‌ண்றதுக்குள்ள‌ சீஃப் வ‌ ந்துட்டார்.அவ‌ரின் சிகிச்சை முறைக‌ளை க‌வ‌னித்து விட்டு,பேஷ‌ண்டை ஐசியுவிற்கு அனுப்பிவிட்டு வெளியே அந்த‌ பேஷ‌ண்டுட‌ன் வ‌ந்த‌வ‌ர்க‌ளைத் தேடினேன்


இத‌ன் தொட‌ர்ச்சியைப் ப‌டிக்க‌ இங்கே கிளிக்க‌வும்( தொட‌ரும்)

.