"காதல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்"
காரின் ஸ்பீக்கரிலிருந்து கசியும் என் ஃபேவரிட் பாடல் எப்போதும் போல மனதை மயக்க காரைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.இந்த பாட்டு ரிலீஸ் ஆனதுல இருந்து ஒரு 100 முறையாவது கேட்டிருப்பேன்.ஆனாலும் சலிக்கவில்லை.பாட்டு முடியறதுக்குள்ள என்னைப் பத்தி ஒரு ரீகேப் பாருங்க.
நான்.. நகரின் புகழ் பெற்ற ஒரு ஹாஸ்பிடலின் டாக்டர்.போன வருடம் தான் மருத்துவ மேல் படிப்பை இங்கிலாந்தின் புகழ்பெற்ற கல்லூரியில் முடித்திருந்தேன்.மருத்துவத்துறையில் ஏழைகளுக்கு உதவுவதே வாழ்நாள் சாதனையாய் எண்ணுபவன்.
ஹாஸ்பிடல் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு,போய் என் சீட்டுக்கு உடலைக் கொடுத்து,கேஸ் ஹிஸ்டரிக்களை புரட்ட ஆரம்பித்த நேரம்,கைபேசி ஒலித்தது.யாராய் இருக்கும் என யோசனையோடு எடுத்தால்...சீஃப் காலிங்..எழுத்துக்கள் மின்னின..
குட்மார்னிங் சார்..
குட்டே ராஜ். ஹேவ் யு ரீச்டு ஹாஸ்பிடல்?
யெஸ் சார்.ஜஸ்ட் நவ்
ஒகே..குட்..மை கஸின் பிரதர்ஸ் வொய்ப் மெட் வித் ஏன் ஆக்ஸிடெண்ட் அன்ட் அட் கிரிட்டிகல் பொசிஷன்.தே டுக் ஃபர்ஸ்ட் எய்ட் அட் சேலம் அன்ட் கமிங் டு அஸ் ஃபார் ஃபர்தர் டிரிட்மெண்ட்..தே வில் ரீச் தேர் இன் 10 மினிட்ஸ்..டேக் கேர் ஆஃப் தெம்..ஐ வில் கம் இன் 15 மினிட்ஸ்..
ஓகே சார்...மே ஐ நோ த பேஷண்ட் நேம்?
ம்ம்ம்ம்...பார்வதி ..ஹர் ஹஸ்பெண்ட் ஈஸ் சீனிவாசன்.யு பி வித் தெம் டில் இ ரீச்..
ஓகே.சார்.ஐ வில் டேக் அட் மோஸ்ட் கேர்.
போனை வைத்து விட்டு இண்டர்காமில் ரிஷப்ஷனைக் கூப்பிட்டு குறிப்பிட்ட பேஷண்ட் வந்தால் மினி தியேட்டருக்கு கொண்டு வந்து, எனக்குத் தெரிவிக்கச் சொல்லிவிட்டு,ஜன்னலில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்..
சில நிமிடங்களில் பேஷண்ட் வந்துவிட்டதாய் தகவல் வர..மினி தியேட்டரை நோக்கி அவசரமாய் நடக்கத் தொடங்கினேன்.அப்போது ரிஷப்ஷன்,விஸிட்டர்ஸ் லான்ஜ்ல் அமர்ந்திருந்த ஒரு பெண் என் கவனத்தை கவர்ந்தாள்
எவ்வளவோ பேரழகிகள் கூட இன்று வரை என் கவனத்தைக் இப்படிக் கவர்ந்ததில்லை. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத சாமியார் என பேர் வாங்கியவன் நான் ஆனால் இன்று....ஒரு நிமிடம் தடம் மாறிய சிந்தனையைத் .."அடேய்..என்னாச்சு உனக்கு?."..என தலையில் தட்டி நிகழ்வுலகுக்கு வந்தேன்.
பேஷண்ட் அருகில் சென்று பார்த்தால் ...அவர் மயக்கமாய் இருந்தார்.இப்போது மனம் இன்னும் கட்டுப்பாட்டை இழந்து குதித்தது....மனதைக் கட்டுப்படுத்தி கண்டிஷன் அனலைஸ் பண்றதுக்குள்ள சீஃப் வ ந்துட்டார்.அவரின் சிகிச்சை முறைகளை கவனித்து விட்டு,பேஷண்டை ஐசியுவிற்கு அனுப்பிவிட்டு வெளியே அந்த பேஷண்டுடன் வந்தவர்களைத் தேடினேன்
இதன் தொடர்ச்சியைப் படிக்க இங்கே கிளிக்கவும்( தொடரும்)
.
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
தொடர் சிறக்க வாழ்த்துகள்
தொடர் கதையின் முதல் பகுதி நல்லா வந்திருக்கு...
தொடருங்கள் வாழ்த்துக்கள்...
துவக்க பாடலே அருமையானதுங்க
தொடர்கதை துவங்கியிருக்கீங்க
வாழ்த்துகள்.
\\மனதைக் கட்டுப்படுத்தி கண்டிஷன் அனலைஸ் பண்றதுக்குள்ள\\
நல்லாயிருக்கு ...
எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு... கதை நல்லா இருக்கு :)
கண்டிப்பாக தொடருங்கள் அக்கா கதை நல்லா இருக்கு
நல்ல ஆரம்பம்.. தொடருங்கள் தோழி..:-)
ஆங்கில உரையாடலை ஆங்கிலத்திலேயே டைப்பியிருந்தால் வாசிக்க எளிதாக இருந்திருக்கும் இயற்கை.
ஐ, நீங்களும் தொடர் எழுத ஆரம்பிச்சுட்டீங்களா...
எழுதுங்க. நாங்களும் உங்களைத் தொடருகிறோம்.
//ஆங்கில உரையாடலை ஆங்கிலத்திலேயே டைப்பியிருந்தால் வாசிக்க எளிதாக இருந்திருக்கும் இயற்கை.//
ரிப்பீட்
வாழ்த்துக்கள்
@T.V.Radhakrishnan நன்றிங்க:-)
@புதியவன் ..நன்றிங்க புதியவன்..ஏதோ என்னால் முடிஞ்சது
//நட்புடன் ஜமால் said...
துவக்க பாடலே அருமையானதுங்க//
அது என் ஃபேவரிட் பாட்டுங்க...ஒரு வகைல எனக்கு நான் இந்த பேர் செலக்ட் பண்ணதே அந்த பாட்டாலதான்:-)
@Gowripriya
இந்த பாட்டு பிடிக்காதவங்களே இல்லை போல:)
@கார்த்திகைப் பாண்டியன்..... நன்றி தோழா..
நன்றி Anbu...sure
// விக்னேஷ்வரி said...
ஆங்கில உரையாடலை ஆங்கிலத்திலேயே டைப்பியிருந்தால் வாசிக்க எளிதாக இருந்திருக்கும் இயற்கை.//
செய்திருக்கலாமோ!!! நானும் டைப் செய்ய ரொம்ப கஷ்டப்பட்டேன்..
யோசனைக்கு நன்றி..அடுத்துவரும் பாகங்களில் பின்பற்றுகிறேன்
@வசந்த் ..நன்றிங்க
ம்ம்ம் அப்புறம்???
நல்லா இருக்கு.தொடருங்க.
யோசனை: வித்தியாசமா எழுதுங்க முடிங்க.
என் பதிவில் நீங்க கேட்ட லிங்க் இங்க இருக்கு
http://pudugaithendral.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
:)
//அன்புடன் அருணா said...
ம்ம்ம் அப்புறம்???
//
அப்புறம்..போட்டாச்சி அருணா அக்கா...
//கே.ரவிஷங்கர் said...
நல்லா இருக்கு.தொடருங்க.
யோசனை: வித்தியாசமா எழுதுங்க முடிங்க.//
நன்றிங்க ரவிஷங்கர்ஜி...வித்தியாசமாவே முடிக்க முயற்சி பண்றேன்
//எம்.எம்.அப்துல்லா said...
என் பதிவில் நீங்க கேட்ட லிங்க் இங்க இருக்கு//
நன்றி அண்ணா..பாட்டு சூப்பர்.அவங்க பிளாக் நானும்தான் படிக்கிறேன்..எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்:-))
நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க....
ஆஹா இவ்ளோ நாளா மிஸ் பண்ணிட்டேனே அடுத்தடுத்த பதிவுகளை நோக்கி......
இந்த கதை முன்னாடி படிச்சேன்னாலும் மறந்துடுச்சு..... இப்போ தொடர்ச்சியாய் வாசிக்கிறேன்........
Post a Comment