Showing posts with label ச்சும்மா. Show all posts
Showing posts with label ச்சும்மா. Show all posts

ச்சும்மா ஒரு கடிதம்.. படிச்சுட்டு திட்டக்கூடாது

Sunday, May 1, 2011
ச்சும்மா ஒரு கடிதம்.. படிச்சுட்டு திட்டக்கூடாது

மாமா நலம் நலமறிய ஆவல்.

இந்த ஒரு வரி இந்தக் கடிதம்க்கு தேவையில்லைன்னு நினைக்கிறேன்.ஏன்னா நீங்க நல்லா இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். நான் எப்படி இருக்கேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

உங்களின் ஒவ்வோரு செயலும்,சொல்லும் எனக்கு கத்துக் குடுத்தது நிறைய. நீங்க சொல்லித்தர கூட இல்லாத நேரங்களில் கூட இந்த மாதிரி சூழ்நிலைல நீங்க கூட இருந்தா என்ன முடிவு சொல்வீங்கன்னு யோசனை பண்ணிதான் நான் நெறைய முடிவு எடுத்து இருக்கேன்.அப்படி முடிவெடுத்த விஷயங்கள் எதுலயும் நான் தோத்ததில்லை

மாமா.. நீங்க எப்போவும் சொல்வீங்களே.. " நீ சித்தார்த்தன் மாதிரி.. வாழ்க்கைல உனக்குத் தெரியாத விஷயங்கள்,கஷ்டங்கள், எவ்ளவோ இருக்கு..அதெல்லாம் தெரியும்போது உனக்கு என்னோட வார்த்தைகளின்,செயல்களின் அர்த்தம் புரியும்..என் நிலைல இருந்தா நீயும் அப்படிதான் நடந்துக்குவே"அப்படின்னு..

உங்களப் பிரிஞ்ச இந்த 11 வருஷத்துல அந்த மாதிரி நெறைய விஷயங்கள் கடந்திருக்கேன்..கத்துக்கிட்டிருக்கேன். ஆனாலும் நீங்க எனக்குப் புரியாத புதிராத்தான் இன்னிக்கும் இருக்கீங்க.. உங்களோட புகைப்படங்களையோ, காணொளிகளையோ,உறவுகள் உங்களைப் பற்றிப் பேசும் புரணிகளையும்,உங்களக் குறை சொன்னா என்னோட பதில் எப்படி இருக்குன்னு செக் பண்றதுக்குன்னே உண்டாக்கப்பட்ட சூழ்நிலைகளையும் புன்னகையுடன் கடக்கும் அளவுக்கு நான் தயாராகிட்டேன்.ஆனாலும் உங்களை நேருக்கு நேராகப் பார்க்கும் போதும் யாரோன்னு உண்ர்ச்சியற்ற வெற்றுப் பார்வையை வீசுமளவுக்கு நான் பக்குவப்படவில்லை.. நிச்சயமாய் எனக்குத் தெரியும் ..அது இறுதி மூச்சு வரை என்னால் முடியக் கூடிய விஷயமல்ல.


உனக்கு இதுதான் சந்தோஷம்ன்னு சொல்லிச் சொல்லியே நிறைய சோகங்களைத் தந்துருக்கீங்க மாமா..அதுல ஒண்ணு உங்க பிரிவு.. எதிர்கால வாழ்க்கைக்குச் சந்தோஷம்ன்னு சொல்லி இன்னிக்கு நிமிஷத்தை நரகமாக்கிட்டிருக்கேன் நான்..

ப்ளீஸ் மாமா.. இதுக்கும் மேலயும் என்னால பொறுக்க முடியாது.. "எங்க வீட்டு ராஜகுமாரி..எங்க குலதெய்வம்" ன்னு பெருமிதப்படுவீங்களே அந்தத் திரு மாமா எனக்கு வேணும்..

எவ்ளோ கஷ்டமான பிரச்சினைகளுக்கு நடுவுல இருந்தப்போவும் என்கிட்ட மட்டும் சந்தோஷ முகத்தை மட்டுமே காட்டும் என் திரு மாமா எனக்கு வேணும்.

மாமா எனக்கு போதி மரமும் வேணாம்.. நான் புத்தராகவும் வேணாம்.. உங்களோட பாசத்துக்குரிய செல்லமா மட்டும் இருந்தா போதும்.. நாம பேசிக்கறதால வர்ற பிரச்சினைகளைத் தாங்கிக்கிற தெம்பு எனக்கு இப்போ இருக்கு மாமா..ஆனால் உங்கள அடையாளம் தெரியாத மாதிரி கடந்து போகற தெளிவுதான் இல்லை.

ப்ளீஸ் மாமா... என்னைப் பார்க்க வருவீங்களா? முன்ன மாதிரி என் கூடப் பேசுவீங்களா? :‍(


.

நானில்லாமலென்ன‌?

Saturday, June 19, 2010
அள்ளி அள்ளிச் சாப்பிட்ட
ஆசை காலியான‌து
பில்லைக் க‌ண்ட‌தும்



தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே


எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்


தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது ஒட்டு முடியை

வேறென்னன்னு கேட்டார் இல்ல இவரு.. இங்கன வந்து பார்த்துக்கச் சொல்லுங்க‌

பிளாக்கும் பின்னூட்டமும் பின்னே ஆறு டவுட்டும்

Wednesday, June 2, 2010
1.ரொம்ப யோசிச்சு சீரியசா ஒரு போஸ்ட் போடறோம்ம்னு நெனச்சு போஸ்ட்ப் போட்டுட்டு ரிப்ரெஷ் பண்ணி போஸ்ட்ப் பாக்கறதுக்குள்ள வந்து கும்மிப் பின்னூட்டங்களாப் போட்டு கும்மறாங்களே.. அந்த நேரத்தில் அவங்க ஆபீஸ் மேனேஜரோ,வீட்டுத தங்கமணியோ அவங்கள எந்த வேலைக்கும் கூப்ட மாட்டாங்களா??!!!


2. நாம உண்மையிலெயே நல்லா எழுதுன போஸ்ட் நல்லாருக்கான்னு அடுத்தவங்ககிட்ட கேக்காம இருந்துட்டு செம்ம மொக்கை போஸ்ட்க்கு மட்டும் கருத்து கேட்டு அதுவும் நல்லா இருக்குன்னு பதில் வரணும்ன்னு எதிர் பார்ர்க்கறோமே.. லாஜிக்படி இது சரியா?

3.நாம‌ போஸ்ட் போட்டுட்டு சாட்,ஜிமெயில்,எஸ்.எம்.எஸ்ன்னு எப்பிடிக் கூப்ப்டாலும் ந‌ம்ம‌ பிளாக் ப‌க்க‌ம் வ‌ராத‌வ‌ங்க‌,போஸ்ட் போடாம‌ பிரேக் விட்டா ம‌ட்டும் க‌ரெக்ட்டா வ‌ந்து எழுத‌ற‌தே மொக்கை அதையும் தொட‌ர்ச்சியா எழுத‌ மாட்டியான்னு கேக்க‌றாங்க‌ளே அது எப்பிடி??

4.போஸ்ட் போட உக்காந்தா அடம்புடிக்கற சிந்தனையும் சொற்களும், யாராவது ஒரு கைப்புள்ள பிளாக்ல கும்மும்போது ம‌ட்டும் ச‌ராமாரியா வ‌ருதே..அதுவ‌ரைக்கும் இந்த‌த் திற‌மையெல்லாம் எங்க‌ ஒளிஞ்சிருக்கும்?

5.பிளாக் அல்லாத உலகத்துல் வெளில‌ வ‌ராத‌ ந‌ம்ம‌ இலக்கிய‌தாக‌மும்,உல‌க‌ அறிவும்,த‌மிழ் ப‌ற்றும் பிளாக்குல‌ ப‌ற்றும் தாராள‌மா பொங்குவ‌து ஏன்?

6.பிளாக்குல‌ காலேஜ‌ப் ப‌த்தியும் கிளாஸ‌ப் ப‌த்தியும் பேசினா திட்டாத‌வ‌ங்க‌, கிளாஸ்ல‌ பிளாக்க‌ப் ப‌த்தி பேசினா டென்ச‌ன் ஆக‌றாங்க‌ளே.ச‌ட்ட‌ங்க‌ள் இட‌த்துக்கு இட‌ம் மாறுப‌டுமா?



மக்களே இது சும்மா.ஜுஜுபி.. நான் வெறும் அம்புதான்.. எய்யப்பட்டது இங்க இருந்துதான்...


.

ஈரோடு கதிரிடம் எனக்குப் பிடிக்காதவை

Sunday, May 30, 2010
//1. நானும் பதிவு எழுதறேன், வலைப்பூவில எழுதறேன்னு சம்பளப் பணத்துல நெட் கனெக்சனும், லோன் போட்டு புதுசா லேப்டாப்பும் வாங்கினையே, முதல்ல அது பிடிக்கலை.//

இதே சாக்குல‌ நீங்க‌ லேப்டாப் வ‌ச்சிருக்கீங்க‌ன்னு த‌ம்ப‌ட்டம் அடிக்கிறீங்க‌ளே அது என‌க்கு பிடிக்க‌ல

//2. வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.//

அவ்ளோ போட்டோ வ‌ச்சிருந்தும் ப‌த்தாம் கிளாஸ்ல‌யும் அஞ்சாம் கிளாஸ்ல‌யும் எடுத்த‌ போட்டோவைப் போட்டுட்டு இருக்கீங்க்ளா அது பிடிக்க‌ல‌

//3. நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.//

அதுக்க‌ப்புற‌ம் ப‌டிச்சியா அதப் ப‌த்தி உன்னோட‌ க‌ருத்து என்ன‌னு கேட்க‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌
//4. நீயே ஒரு ஹிட் கவுண்டர் செட் பண்ணிட்டு தினமும் குறைஞ்சது 200லிருந்து 300 வாட்டி பிரவுசரை Refresh பண்ணிறியே அது பிடிக்கலை.//

அந்த‌ ஹிட்ட‌ வ‌ச்சி நானும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்ன்னு பீலா உட‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//5. யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.//

அந்த‌ப் பின்னூட்ட‌த்துல‌ வ‌ந்த‌ பாராட்டைப் ப‌த்தி கான்ப்ர‌ண்ஸ் கால் போட்டு மணிக்கணக்குல பேச‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//6. போன வாரம் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில “வலைப்பூ புகழ்”னு லேப்டாப் முன்னாலே நீ உட்காந்திருக்கிற மாதிரி போட்டோ போட்டு பிளக்ஸ் பேனர் வைச்சிருந்தியே அது பிடிக்கலை.//

அந்த பேனரை கோயிலுக்கு ச‌ம்ப‌ந்த‌மே இல்லாத‌ ர‌யில்வே ஸ்டேஷ‌ன் ப‌க்க‌ம் வ‌ச்சிருந்தீங்க‌ளே..அதுல‌ இருக்க‌ உள்குத்து என‌க்குப் பிடிக்க‌ல‌

//7. “சிறந்த வலைப்பதிவு சிங்கம்”னு எம்ராய்டரிங் பண்ணின பிட்டுத் துணிய தினமும் சட்டைப்பையில் குண்டூசி வைச்சு குத்திட்டு, நெஞ்ச நிமிர்த்திட்டு போயி ரோட்ல கிடந்த கல்லுல கால் நகத்தை பேத்துக்கிட்டியே அது என‌க்குப் பிடிக்கலை.//

அந்தக் கல்லுகிட்ட போயி... என் வலைப்பு பத்தி தெரியுமா இன்னிக்கு போஸ்ட் படிச்சியான்னு கருத்து கேட்டுட்டு இருந்தீங்களே அது என‌க்குப் பிடிக்கல‌

//8. வேலை செய்ற கம்பெனியில உன் பேரு போட்டு கொடுத்த விசிட்டிங் கார்டுல வலைப்பூ முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குத்திட்டு, மார்கெட்டிங் போற இடத்திலெல்லாம் வலைப்பூ பத்தியே பேசுறியே அது பிடிக்கலை.//

இதுபோதாதுன்ன்னு ஐடி கார்டுல கூட வலைப்பூ பேர் வேணும்ன்னு க‌ம்பெனிய‌ டார்ச்ச‌ர் ப‌ண்றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//9. பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.//

கல்யாணம் நடந்து பல வருஷன் ஆயும் பொண்ணு பாக்கற தொடர்ந்து ஜாத‌க‌ம் குடுக்க‌ற சாக்குலபொண்ணு பார்த்து வ‌லைப்பூவை மார்க்கெட்டிங் ப‌ண்றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//10. சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.//

இப்பிடி நீங்க‌ ஒரு நாளாவ‌து சொல்ல‌மாட்டீங்க‌ளான்னு நாங்க‌ எதிர்பாக்க‌றோம்ன்னு தெரிஞ்சும் தெரியாத‌ மாதிரி ந‌டிக்க‌றீங்க‌ளே அந்த‌ அறிவாளித்த‌ன‌ம் என‌க்குப் பிடிக்க‌ல‌

//11. பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.//

எப்பிடியும் கும்முவோம்ன்னு தெரிஞ்சும் 10க்கு பதிலா 13 எழுதி என் வேலைய அதிகப்ப்டுத்துறீங்களே அது என‌க்குப் பிடிக்க‌ல

//12. கடைசியா, இத்தனை நாளா கஷ்டப்பட்டு, ஒரு மொக்கை கூட எழுதத் கையலாகாம, இந்தப் பதிவுக்குப்போய் லேபிள்ல “மொக்கை”னு போடப்போறியே அது சுத்தமா பிடிக்கலை. //

மொக்கையா எல்லாப் ப‌திவும் எழுதிட்டு இதுக்கு ம‌ட்டும் மொக்கைன்னு லேபிள் போட‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல//

இடுகைய‌ ஒரு த‌ட‌வை ப‌டிக்க‌ற‌துக்கே நாங்க‌ க‌ஷ்டப்ப்டறோம்ன்னு தெரிஞ்சும் மீள் இடுகை வேற‌ போட‌றீங்க‌ளே.. அந்த‌க் கொல‌வெறி என‌க்குப் பிடிக்க‌ல‌.

இதெல்லாம் என்னன்னு தெளிவா புரியலன்னா இங்க போயிப் பாருங்க‌

.

பொஸசிவ் பெற்றோரா நீங்கள்?

Friday, January 1, 2010
நம் உறவுகளும்,நட்புகளும் நம் மீதும் அன்பைப் பொழிவதென்பவது மிக அருமையான ஒரு விஷயம்.அத்தகைய ஒரு விஷயமும் சில நேரங்களில் சிலரது வாழ்வைப் பந்தாடிவிடுகிறது. அந்த பாசத்தினால் சூழ்நிலைக் கைதிகளாகி அச்சிறையிலிருந்து மீள முடியாமல் பாதாளத்திற்கே போகும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
அப்படியான ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை இது.

என் தோழி ஒருத்தி.. தமிழகத்தின் ஒரு சிறு நகரில் பிறந்து,வாழும் ஒரு சராசரிப் பெண். பெற்றோருக்கு ஒரே பெண். அதனால் வீட்டில் கிடைக்கும் அன்பும் கவனிப்பும் மிக மிக அதிகம். மகளின் அனைத்து நடவடிக்கைகளிலும் பெற்றோரின் தலையீடு இருக்கும். அவள் பிரஷ் செய்யும் பேஸ்ட் தொடங்கி,தூங்கும் பெட் வரை பெற்றோரின் தேர்வாகவே இருக்கும். இவளது விருப்பங்களை வெளிப்படுத்தினாலும் அவை "உனக்கு அது நல்லதல்ல.நாங்க உன் மேல உயிரையே வச்சிருக்கோம்..உனக்குத் தீங்கு செய்வோமா? சொல்வதை கேள்" என அடக்கப்படுவாள். அவர்கள் அவளுக்கு தேர்ந்தெடுப்பவை பெஸ்ட் ஆகவே இருக்கும் என்பதும் உண்மை.
அவளுக்குள்ளே ஆயிரம் திறமைகள் ஒளிந்திருந்தன. படிப்பா,விளையாட்டா,ஓவியமா,கோலமா அனைத்திலும் முன் நிற்பாள்.ஆனால் படிப்பைத்தவிர வேறு எதிலும் அவள் பெற்றோர் அவளை ஊக்குவிக்கவில்லை. விளையாட்டில் கலந்துகொண்டால் ஏதாவது அடிபட்டு விடும். பனியில கோலம் போட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது போன்ற பலப்பல காரணங்கள் அவள் பெற்றோரிடம் இருந்தது.

அவளின் சின்ன சின்ன ஆசைகளை(அந்த வயதில் அதெல்லாம் மிகப்பெரிய ஆசைகளாய்த் தோன்றும்) யும் நாங்கள் எங்களால் முடிந்தவரை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் நிறைவேற்றுவோம்.
பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக் காலம் வந்ததும் நாங்கள் எல்லோரும் தகுதிக்கேற்றக் கல்லூரியைத் தேடி கிளம்பிவிட்டோம்.ஆனால் அவள் வசித்த ஊரில் கல்லூரி இல்லை என்பதால், தன் மகளை வெளியூருக்கு படிக்க அனுப்ப பயந்த பெற்றோர் அவளைக் கல்லூரியில் சேர்க்கவேயில்லை. அங்கேயே இருந்த ஒரு கணினி கல்விக்கூடத்தில் சேர்ந்தாள்.இத்தனைக்கும் பள்ளியில் அவள் பெற்ற மதிப்பெண் 90%.பெற்றோர் அங்கும் அவளைக் குழந்தை போலவே நடத்தியிருக்கிறார்கள்.அவளை அழைத்துச் சென்று கல்விக்கூடத்தில் விட்டு,வகுப்பு முடியும்வரை காத்திருந்து பின் வீட்டுக்கு அழைத்துப் போவது எனத் தொடர்ந்திருக்கிறது.அந்நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியததால், அப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பழித்தும், அவள் பெற்றோர் அப்படி இருப்பது இவளின் ஒழுக்கத்தின் மீதான நம்பிக்கையின்மையால்தான் எனக் கதை உலவத் தொடங்கியிருக்கிறது.

அதைப் பற்றி கவலையுறாமல் படிப்பை நல்ல படியாகவே முடித்தாள்.வழக்கம் போல வேலைக்குப் போவதும் எதிர்க்கப் பட்டது.அதனால் வீட்டிலேயே முடங்கினாள்.

திருமணத்திற்கு வரன் பார்த்தார்கள்.அவர்கள் ஊரிலேயே வரன் வேண்டும் எனத்தேடினார்கள். அது சிறிய ஊர்.அங்கிருந்த படித்தவர் எல்லாம் வெளியூரிலேயே இருந்தனர்.அதனால் அந்த ஊரிலேயே இருந்த‌, எந்த வேலையிலும் இல்லாத‌ ஒருவருக்கு மணம் செய்வித்தனர்.
திருமணம் முடிந்து சில காலத்தில், அவளது கணவருக்குத் தானும் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றி வேலை தேடத் தொடங்கினார்.100km தொலைவிலுள்ள ஒரு ஊரில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் அவளது பெற்றோருக்கு மகளை அவருடன் அனுப்ப மனமில்லை.தனியே வெளியூரில் தங்கி வேலைப் பார்த்த அவருக்குத் தன் மனைவியைத் தன்னுடன் வைத்துக்கொள்ளும் ஆசையால் இவளை வற்புறுத்தி அழைத்திருக்கிறார்.இவள் மனதில் ஆசை இருப்பினும் பெற்றோரை மீற முடியாமல் மறுத்து விட்டாள்.தனிமரமாகவே நிற்கிறாள்.அவள் கணவர் மனைவியைப் பிரிந்து,இத்தனைப் பிரச்சினைகளால் பலத் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டாராம்.இது பெற்றோருக்குத் தெரிந்தால் விவாகரத்து வரை போய்விடுமோ எனப் பயத்தில் இருக்கிறாள் தோழி.

இப்போது யாருக்கும் நிம்மதி இல்லை.ஆனால் அவர்கள் எல்லோரும் நினைப்பது " நான் செய்வதே சரி.என் பக்கமே நியாயம்
"
இத்தனைப் பேரின் நிம்மதி தொலைந்தது, மனிதர்கள் குற்றமா? அல்லது மனிதர்கள் ஒருவர்மேல் ஒருவர் வைத்த அன்பின் குற்றமா?

ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்வது மனநிறைவைத் தருகிறதா?

Monday, July 27, 2009
இன்றைய அவசர உலகில் ஒரு குடும்பத்தில் இருக்கும் 3,4 பேர்களது, தேவையைப் பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கும் காலகட்டத்தில்,எண்ணிக்கையில் அதிகமான ஆதரவற்றோரைப் பராமரிக்கும் இல்லங்கள் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதே கஷ்டம்தான். இதை உணர்ந்து நம்மில் பலர், பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆதரவற்றோர் வாழும் இல்லங்களுக்குப் போவதும் அவர்களுக்கு உதவிகள் தருவதும் வாடிக்கையாகக் கொண்டிரருக்கின்றனர்.அத்தகைய செயல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளது,அவர்களது அடிப்படைத்தேவைகள் நிறைவேறுகின்றன‌ என்றாலும்,அதுஅவ்ர்களுக்கு மனநிறைவு தரும் செயலாக இருக்குமா?
அதனை மன நிறைவுதரும் செயலாக எப்படி மாற்றலாம்?
1.அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் முதலில் தொடர்பு கொண்டு அவர்களின் தேவை என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதை விட, அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பது சிறந்தது.

2.இனிப்பு,பழவகைகள் அல்லது ஏதேனும் பொருட்களை வரிசையில் நிறுத்தி கொடுக்காதீர்கள்.அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகவே பகிர்ந்தளியுங்கள்.முன்பின் தெரியாத ஒருவரிடம் அவ்வாறு வாங்குவது அவர்களின் தன்மானத்தை காயப்படுத்தலாம்

3.பழைய ஆடைகள், பழைய நோட்டுகள் போன்றவற்றைத் தரும்போது அவை உபயோகிக்கும் நிலையில் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆடைகளைத் துவைத்து, கிழிந்திருப்பின் அவற்றைத் தைத்துக் கொடுங்கள்.பல நோட்டுகளில் இருக்கும் உபயோகப்படுத்தாத பக்கங்களை ஒரே நோட்டாக பைண்ட் செய்தோ அல்லது தைத்தோ கொடுங்கள்.

4.தீபாவளி,பொங்கல்,புது வருடம் போன்ற பண்டிகை நாட்களில் ஸ்பான்சர் செய்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். நன்கொடைகளும் கிடைக்கும். அதனால் நீங்கள் ஏதேனும் கொடுப்பதையோ அல்லது அந்த இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் பொழுதைக் களிப்பதையோ சாதாரண நாட்களில் வைத்துக் கொள்ளுங்கள்

5.அங்கே செல்லும்போது, படாடோபமான உடைகளைத் தவிர்த்து,முடிந்தவரை எளிமையாய்ச் செல்லுங்கள்
6.அங்கு குழந்தைகள் இருப்பின், அவர்களுடன் உங்கள் குழந்தகளை விளையாட அனுமதியுங்கள்

7.நீங்கள் கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும். எனவே அவர்களுடன், சிறிது நேரமாவது செலவிடுங்கள்

8.அங்குள்ளவர்களது சிறு,சிறு தேவைகளைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய முயலுங்கள்

9.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு இல்லங்களுக்குச் செல்வதை விட ஒரே இல்லத்திற்கு அடிக்கடி‌ செல்வது ஒரு அந்நியோன்யத்தை அவர்களிடம் உண்டாக்கும்

10.நீங்கள் ஏதேனும் ஸ்பான்சர் செய்யும் நேரங்களில் மட்டும் தான் அங்கு செல்ல வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யலாம்.

இவற்றைப் பின்பற்றினால் அவர்களது ஏக்கங்களும் ஒரு முடிவுக்கு வரும்.நமக்கும் உறவுகளின் எண்ணிககை அதிகரித்ததைப் போன்ற ஒரு தெம்பைத் தரும்.

எனக்குத் தோணுணத சொல்லிட்டேன்.ஏதேனும் வழி விட்டுப்போயிருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
பதிவு பயனுள்ளதாக இருந்தால்,தமிழ்மணம்,தமிழிஷ்ல ஓட்டுப் போட்டிடுங்க. நிறைய பேர் படிக்கட்டும்

.

காமெடி சேனல்களுக்கு ஒரு கேள்வி..

Saturday, July 25, 2009
தொலைக்காட்சி,சினிமா போன்ற ஊடகங்கள் அதிகமாய் என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பதில்லை.இப்போது இருக்கும் பலப் பல சேனல்களில் அவ்வபோது காமெடி சேனல்கள் மட்டும் பார்ப்பதுண்டு.அப்படிப் பார்த்த ஒரு காமெடி சேனலில் நிகழ்ச்சி இடைவெளிகளில் ஒரு புரோகிராம் போடுகிறார்கள்.
அதில்.. சேனலைச் சேர்ந்த 2,3 பேர் சேர்ந்து, பார்க்,பீச் அல்லது ரோடில் செல்பவர்களை ஏமாற்றும் ஏதோ ஒரு செயலைச் செய்வது.அவர்கள் ஏமாந்து விழிப்பதை பதிவு செய்து ஒலிபரப்புவது.இது எந்த‌ அள‌வுக்கு நாக‌ரீக‌மான செய‌ல் என‌ என‌க்குத் தெரிய‌வில்லை.

அப்படி நான் பார்த்த சிலவும் எனக்குள் தோன்றிய கேள்விகளும்..
1.பேய் முக‌மூடியைப் போட்டுக் கொண்டு ரோடில் செல்லும் ஒருவ‌ர் முன் திடீரென‌ப் போய் குதிப்ப‌து, அவ‌ர் ப‌ய‌ந்து அல‌றுவ‌தை அப்ப‌டியே ஒலிபரப்புவ‌து..
கேள்வி:
ரோடில் போன‌வ‌ர் இத‌ய‌ம் ப‌ல‌வீன‌மாக‌ இருப்ப‌வ‌ராக‌ இருந்தால் என்ன‌ ஆவ‌து?

2.ரோடில் ந‌ட‌ந்துவ‌ருப‌வ‌ரின் எதிர்திசையிலும், பின்தொட‌ர்ந்தும் வ‌ரும் இருவ‌ர்,திடீரென ஒருவ‌ரை நோக்கி ஒருவ‌ர் ஓடி வ‌ந்து க‌ட்டிப் பிடித்து அள‌வ‌ளாவிக் கொள்வ‌து..அந்த‌ ம‌னித‌ர் தம்மை நோக்கி ஓடிவருவதாய் நினைத்து ஒரு நொடி புரியாம‌ல் திகைப்பார்.சில‌ ச‌ம‌ய‌ம் ட‌க்கென‌ ரோடின் ம‌றுப‌க்க‌ம் ஒதுங்குவார்.
கேள்வி:
அப்ப‌டி ரோடின் ப‌க்க‌ம் பயந்து ஓடும்போது அவ‌ருக்கு ஏதேனும் விப‌த்து ஏற்ப‌ட்டால் யார் பொறுப்பு?


3.ரோடில் பெரிய பெட்டி ஒன்றைத் தூக்கமுடியாமல் தூக்கி கொண்டு இருப்பர்.அப்போது வழியில் செல்லும் யாரோ ஒருவரை உதவி செய்ய அழைப்பர்.அவர் வந்து பெட்டியைத் தூக்க உதவ முயல்கையில்,அப்பெட்டியில் மறைந்திருக்கும் ஒருவர்,திடீரென அவர் காலைச் சுரண்டுவார்.
4.ரோடில் போகும் ஒருவர் பர்சைத் தவற விடுவார்.(அறியாமல் போடுவதைப் போல,வேண்டுமென்றே கீழே போடுவார்.) பின்னால் வரும் யாரோ ஒரு அப்பாவி, அதை எடுத்து அவரிடம் கொடுக்க கையில் எடுத்தால், எங்கிருந்தோ வரும் மற்றொருவர்(தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்) "உங்க பர்சை இவர் எடுத்துகிட்டு ஓடறார்" என்பது போல சீன் கிரியேட் பண்ணி அந்த அப்பாவியை டென்சனாக்கி ஓட ஓட விரட்டுவார்
5.கண் பார்வை இல்லாதவர் போல் நடித்து, ரோடில் போகும் ஒருவரிடம் ரோடை கடந்து போக உதவி கேட்பார் ஒருவர்.அந்த அப்பாவி மனிதர் இவரை ரோடை கடந்து கொண்டுபோய் விடும் நேரத்தில்,எதிர் திசையில் வருபவர்(தொலைக்காட்சியை சேர்ந்தவர்) ஏதோ ஒரு அட்ரஸ்க்கு வழி கேட்பார்.அவர் குனிந்து அட்ரஸைப் படிக்கும் வேளையில், கண் தெரியாதவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை இவர் எடுத்து விடுவார். பின்னர் இருவரும் சேர்ந்து,அந்த அப்பாவி மனிதரிடம் பணத்தை குடுங்கள் என கலாட்டா செய்வார்கள்.

கேள்வி(3,4,5): உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களைக் கூட, இவர்கள் நடிக்கிறார்களோ என்ற சந்தேகக் கண் கொண்டு பார்க்க வழி இருக்கிறது அல்லவா?இவற்றால் மனிதனுக்கு மனிதன் சிறு உதவிகள் செய்யும் எண்ணம் தடைப்படாதா?


இவை அனைத்து நகைச்சுவைக்காகத்தான் எடுக்கப்பட்டது என்றாலும், நம் உறவினர்களையோ,நண்பர்களையோ,மதிக்கும் பெரியோரையோ, வெளியில் செல்லும்போது, இப்படி முகம் தெரியாத சிலர் கலாட்டா செய்வதையும், அதை தொலைக்காட்சியில் ஒலிபரப்புவதையும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியுமா?

இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க மக்களே.

.

தேவை என்ன‌?

Tuesday, June 30, 2009
ச‌க்திமான் ஸ்டீல்ஸ் அவ்வூரிலேயே புக‌ழ்பெற்ற இரும்பு பொருள் த‌யாரிக்கும் தொழிற்சாலை.அத‌ன் நிறுவ‌ன‌ர் ச‌க்திவேல்.அவ்வூரின் புக‌ழ்பெற்ற விஐபி.அவர‌து குடும்ப‌த்தின் குல‌ தெய்வ‌த்தின் முன் சோக‌மே உருவாக‌ நின்றிருந்தார்.கார‌ண‌ம் ஏற‌த்தாழ‌ கால் நூற்றாண்டாக‌ ஏறுமுக‌த்திலேயே இருந்த‌ க‌ம்பெனி சில‌ ஆண்டுக‌ளாக‌ அடி வாங்குகிற‌து.த‌யாரித்த‌ பொருட்க‌ள் பாதிக்கு மேல் தேங்கி கிட‌க்கிற‌து.இத‌னால் க‌ம்பெனியின் கையிருப்பு ப‌ண‌ம் குறைந்துவிட்ட‌து. ஷேர்க‌ள் ம‌திப்பு குறைய‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து.க‌டவுளே ..ஏன் இந்த‌ சோத‌னை.க‌ம்பெனி இனிமேல் அவ்வ‌ள‌வுதானா.? வாங்கிய‌ க‌ட‌ன்க‌ளுக்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌து?.இத‌ற்குமேல் என் கையில் ஏதும் இல்லை.ஏதாவ‌து வ‌ழிகாட்டு.இல்லைன்னா வீதிக்குதான் போக‌ணும்.என‌ புல‌ம்பிக் கொண்டிருந்தார்.க‌ண்க‌ளில் க‌ண்ணீர் எட்டிப்பார்க்கும் நிலையில் இருந்த‌து.

சிறிது ஆசுவாச‌ப்ப‌டுத்திக் கொண்டு,கோயிலின் ஒரு மூலையில் அம‌ர்ந்தார்.அப்போது ஒரு பெரிய‌வ‌ர் அவ‌ரிட‌ம் வ‌ந்தார்.
த‌ம்பி! ஏதோ பிர‌ச்சினைல‌ இருக்கீங்க‌ போல‌ இருக்கு? என்கிட்ட‌ சொல்லுங்க‌.என்னால‌ ஏதாவ‌து உத‌வி ப‌ண்ண முடியுமான்னு பாக்க‌றேன்


ஐயா.. நான் ஒரு தொழில‌திப‌ர்.ச‌க்திமான் ஸ்டீல்ஸ் தொழிற்சாலை என்னோட‌துதான்.க‌ம்பெனில‌ கொஞ்ச‌ம் பிர‌ச்சினை.அத‌னால‌ க‌ட‌வுள்கிட்ட‌ முறையிட்டாலாவ‌து வ‌ழி பிற‌க்குமான்னு வ‌ந்திருக்கேன்


ஓ..அப்ப‌டியா..க‌வ‌லைப்ப‌டாதீங்க‌.க‌ட‌வுள் வ‌ழி காட்டுவார்.இப்போ உங்க‌ளுக்கு ப‌ண‌ம் தானே பிர‌ச்சினை.ப‌ண‌த்துக்கு வ‌ழி நான் செய்றேன்.இருங்க‌ என்று சொல்லிவிட்டு,எங்கேயோ போய்விட்டு,சில‌ நிமிட‌ங்க‌ளில் ஒரு "செக்"உட‌ன் வ‌ந்தார்.

இந்தாங்க‌,இதை வ‌ச்சிகிட்டு உங்க‌ பிஸின‌ஸை டெவ‌ல‌ப் ப‌ண்ணுங்க‌ என்றார்.


வாங்கிப் பார்த்தால்,அதில் 5,00,000 ரூபாய் எழுதியிருந்த‌து.இவ‌ர் ஆச்ச‌ரிய‌மாய் பார்த்தார்.

என்ன‌ பாக்க‌றீங்க‌. நான் தான் இந்த‌ ஊரின் பெரும் ப‌ண‌க்கார‌ர்க‌ளில் ஒருவ‌னான‌ சோம‌சுந்த‌ர‌ம்.என்னோட‌ ப‌ண‌த்தால‌ நீங்க‌ முன்னேறினா என‌க்கு ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்‌ ..


ஐயா..ரொம்ப‌ ந‌ன்றி. என்னோட‌ இன்றைய‌ நிலையில் இந்த‌ப் ப‌ண‌ம் நிச்ச‌ய‌மாய் என் வாழ்வை மீட்டெடுக்கும்.இந்த‌ ப‌ண‌த்தை எப்ப‌டி உங்க‌கிட்ட‌ திருப்பி த‌ர்ற‌து?

இன்னும் ஒரு வ‌ருஷ‌ம் க‌ழிச்சி இதே இட‌த்துக்கு வாங்க‌.உங‌க‌ளால‌ எவ்ளோ ப‌ண‌ம் திருப்பி த‌ர‌ முடியுமோ குடுங‌க‌..

என்று கூறி விட்டு வேக‌மாய் அவ்விட‌த்தை விட்டு அக‌ன்று விட்டார்.

குல‌தெய்வ‌மே மானிட‌ உருவில் வ‌ந்து உத‌விய‌தாய் எண்ணி ச‌க்திவேல் ம‌கிழ்ந்தார்.அச்செக்கை ப‌த்திர‌ப்ப‌டுத்திக் கொண்டார்.


ஆனால் அந்த‌ செக்கில் ப‌ண‌த்தை எடுக்காம‌ல் அவ‌ரிட‌மிருந்த‌ ப‌ண‌த்தை வைத்தே மீண்டும் தொழிலில் ப‌ழைய‌ நிலையை அடைந்தார்.அவ‌ரிட‌மிருந்த‌ அந்த‌ செக் எத்த‌கைய‌ ரிஸ்க் எடுக்க‌வும் அவ‌ருக்கு தைரிய‌த்தை அளித்த‌து. ந‌ம்மிட‌ம் 5,00,000 ரூபாய் இருக்கிற‌து என்னும் நினைவே அவ‌ருக்கு புது தெம்பை த‌ந்த‌து.


ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து,அந்த‌ப் பெரிய‌வ‌ருக்கு நான்றி சொல்ல‌ அதே கோயிலுக்கு விரைந்தார்.கையில் அப்பெரிய‌வ‌ர் கொடுத்த‌ செக் அப்ப‌டியே இருந்த‌து.


அப்பெரிய‌வ‌ர் ம‌ல‌ர்ந்த‌ முக‌த்துட‌ன் இவ‌ர‌ருகே வ‌ந்தார்.அப்போது ஒரு பெண்ம‌ணி, அந்த‌ப் பெரிய‌வ‌ரை விர‌ட்டி அடித்தார்.அவ‌ரும் ப‌ய‌ந்து ஓடி விட்டார்.

ச‌க்திவேல் ச‌ற்று கோப‌த்துட‌னே அப்பெண்ணிட‌ம் கேட்டார்.என்ன‌ம்மா ..அவ‌ரை ஏன் துர‌த்துறீங்க‌.பெரிய‌வ‌ங்கிட்ட‌ எப்ப‌டி ந‌ட‌ந்துக்க‌னும்ன்னு தெரியாதா ?



அய்யா..அது ஒரு லூசுங்க‌.அஞ்சாறு வ‌ருஷ‌மா இந்த‌ ப‌க்க‌ம் சுத்திட்டு இருக்கு.‌வர்ற‌வ‌ங்க‌ போற‌வ‌ங்க‌ கிட்ட‌யெல்லாம் நான் தான் இ ந்த‌ உல‌க‌த்திலேயே பெரிய‌ ப‌ண‌க்கார‌ன்,உன‌க்கு ப‌ண‌ம் வேணும்னா சொல்லு நான் த‌ர்றேன்னு,ஒரு செக் புக்கை வேற‌ கைல‌ வ‌ச்சிகிட்டு சுத்தும். என்று கூறிவிட்டு போய்விட்டார் அப்பெண்..


ச‌க்திவேல் குழ‌ம்பிபோனார்.பின்ன‌ர்தான் புரிந்த‌து.ஓராண்டிற்குமுன் அவ‌ருக்கு தேவைப்ப‌ட்ட‌து ப‌ணம் அல்ல‌..த‌ன்ன‌ம்பிக்கை.


Note:என‌க்கு வ‌ந்த‌ ஒரு மின்ன‌ஞ்ச‌லைக் கொண்டு எழுதிய‌து.

.

தாய்மொழியில் ம‌ட்டுமே பேசுவ‌து ச‌ரியா?

Sunday, June 28, 2009
ஒரு வெளிநாட்டை சேர்ந்த‌ வ‌ர‌லாற்று ஆராய்ச்சி மாணாவ‌ர் ஒருவ‌ர் இந்தியாவைப் ப‌ற்றி ஆராய்ச்சி செய்ய‌ முடிவு செய்தார்.இ ந்தியாவைப் ப‌ற்றி அறிய‌ இந்தியா வ‌ந்தார்.வ‌ ந்திற‌ங்கிய‌து மும்பை விமான‌ நிலைய‌ம்.

மும்பைக்கு வ‌ந்த‌ அவ‌ர் நேரா போன‌து கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு..சில‌ ம‌ணி நேர‌ம் சுற்றி பார்த்து விட்டு அங்கிருந்த‌வ‌ரிட‌ம் இங்கிலீஷில் கேட்டார்."Who bulit this great structure?". (ந‌ம்ம‌ ஹிந்திகார‌ங்களைப் ப‌த்திதான் தெரியுமே..இங்கிலீஷ் தெரிஞ்சாலும் ஹிந்தில‌ தான் ப‌தில் சொல்லுவாங்க‌)..அங்கிருந்த‌வ‌ருக்கு ப‌தில் தெரிய‌ல‌..அத‌னால் அவ‌ர் சொன்னார் " ந‌ஹி மாலும் ஜி" (தெரியாதுங்க‌)..
அந்த‌ வெளிநாட்டுக்கார‌ர்..கேட் வே ஆஃப் இந்தியாவை க‌ட்டிய‌வ‌ர் பெய‌ர் " ந‌ஹி மாலும் ஜி" என‌ குறித்துக் கொண்டார்.


பின்ன‌ர் அங்கிருந்து குதுப்மினார் பார்க்க‌ போனார்.அங்கேயும் குதுப்மினாரைக் க‌ட்டியவார் பேரைக் அருகிலிருந்த‌வ‌ரிட‌ம் கேட்டார்.அங்கிருந்த‌வ‌ருக்கும் ப‌தில் தெரிய‌ல‌..அத‌னால் அவ‌ர் சொன்னார் " ந‌ஹி மாலும் ஜி" .அந்த‌ வெளிநாட்டுக்கார‌ர்..ஆஹா..இதையும் ந‌ஹி மாலும் ஜி தான் க‌ட்டினாரா..அவ‌ர் பெரிய‌ ஆள் போல‌ இருக்கே என‌ ம‌ன‌துக்குள் பாராட்டி குறித்துக் கொண்டார்.

பின்ன‌ர் அங்கிருந்து ஆக்ரா சென்றார். அங்கேயும் இதே க‌தை.அவ‌ருக்கு ஒரே ஆச்ச‌ரிய‌ம். இந்தியாவில் எவ்ளோ பெரிய‌ ம‌னித‌ர்க‌ள் எல்லாம் வாழ் ந்திருக்காங்க‌.ஒரே ம‌னித‌ர் இத்த‌னை இட‌ங்க‌ளில் இவ்ளோ பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ளையெல்லாம் க‌ட்டியிருக்க‌றாரே என‌ இந்திய‌ர்க‌ளைப் ப‌ற்றி மிக‌ உய‌ர்வாய் எண்ணினார்.


பின்ன‌ர் ஒரு நாள் காசியின் வீதிக‌ளில் போய் கொண்டிருந்தார்.அங்கே ஒரு இற‌ந்த‌ ச‌ட‌ல‌த்தை ந‌க‌ராட்சிப் ப‌ணியாளார்க‌ள் தூக்கிப் போய் கொண்டிருந்தார்க‌ள். அதைக் க‌ண்ட‌ இவ‌ர் அ ந்த‌ ந‌க‌ராட்சிப் ப‌ணியாளாரிட‌ம் கேட்டார்."Who is this?" அவ‌ர் சொன்னார்.. "ந‌ஹி மாலும் ஜி"


இவ‌ருக்கு வ‌ந்த‌தே ஆத்திர‌ம்.காச் மூச்ன்னு க‌த்திட்டு போய்ட்டார். பின்ன‌ர் அவ‌ர் ரிப்போர்ட் எழுதினார்..இந்திய‌ர்க‌ள் ந‌ன்றி கெட்ட‌வ‌ர்க‌ள். ந‌ஹி மாலும் ஜி என்ப‌வ‌ர் இந்தியாவில் ஒரு மிக‌ப்பெரிய‌ ம‌னித‌ர். ப‌ல‌ புக‌ழ்பெற்ற க‌ட்டிட‌ங்க‌ளைக் க‌ட்டிய‌வ‌ர். இந்தியாவின் புக‌ழுக்கு கார‌ண‌மான‌ ப‌ல‌ நினைவுச்சின்ன‌ங்க‌ளை எழுப்பிய‌வ‌ர். அவ‌ருக்கு யாரும் உரிய‌ ம‌ரியாதை த‌ருவ‌தில்லை.அவ‌ர‌து இறுதி ஊர்வ‌ல‌த்தில் கூட‌ யாருமே க‌ல‌ந்து கொள்ளவில்லை.இந்திய‌ர்க‌ள் மிக‌ மோச‌மான‌வ‌ர்க‌ள்..


குறிப்பு: இது சிரிக்க‌ ம‌ட்டுமே..சிந்திக்க‌ அல்ல‌....ஹி..ஹி..ஹி..
சிரிச்சிட்டு அப்ப‌டியே த‌மிழ்மண‌த்தில் ஒரு ஓட்டு போட்டுடுங்க.
இந்த க‌தையை நானும் உரையாட‌ல் போட்டிக்கு அனுப்பிட்டேனே
.