தொலைக்காட்சி,சினிமா போன்ற ஊடகங்கள் அதிகமாய் என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பதில்லை.இப்போது இருக்கும் பலப் பல சேனல்களில் அவ்வபோது காமெடி சேனல்கள் மட்டும் பார்ப்பதுண்டு.அப்படிப் பார்த்த ஒரு காமெடி சேனலில் நிகழ்ச்சி இடைவெளிகளில் ஒரு புரோகிராம் போடுகிறார்கள்.
அதில்.. சேனலைச் சேர்ந்த 2,3 பேர் சேர்ந்து, பார்க்,பீச் அல்லது ரோடில் செல்பவர்களை ஏமாற்றும் ஏதோ ஒரு செயலைச் செய்வது.அவர்கள் ஏமாந்து விழிப்பதை பதிவு செய்து ஒலிபரப்புவது.இது எந்த அளவுக்கு நாகரீகமான செயல் என எனக்குத் தெரியவில்லை.
அப்படி நான் பார்த்த சிலவும் எனக்குள் தோன்றிய கேள்விகளும்..
1.பேய் முகமூடியைப் போட்டுக் கொண்டு ரோடில் செல்லும் ஒருவர் முன் திடீரெனப் போய் குதிப்பது, அவர் பயந்து அலறுவதை அப்படியே ஒலிபரப்புவது..
கேள்வி:
ரோடில் போனவர் இதயம் பலவீனமாக இருப்பவராக இருந்தால் என்ன ஆவது?
2.ரோடில் நடந்துவருபவரின் எதிர்திசையிலும், பின்தொடர்ந்தும் வரும் இருவர்,திடீரென ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வந்து கட்டிப் பிடித்து அளவளாவிக் கொள்வது..அந்த மனிதர் தம்மை நோக்கி ஓடிவருவதாய் நினைத்து ஒரு நொடி புரியாமல் திகைப்பார்.சில சமயம் டக்கென ரோடின் மறுபக்கம் ஒதுங்குவார்.
கேள்வி:
அப்படி ரோடின் பக்கம் பயந்து ஓடும்போது அவருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
3.ரோடில் பெரிய பெட்டி ஒன்றைத் தூக்கமுடியாமல் தூக்கி கொண்டு இருப்பர்.அப்போது வழியில் செல்லும் யாரோ ஒருவரை உதவி செய்ய அழைப்பர்.அவர் வந்து பெட்டியைத் தூக்க உதவ முயல்கையில்,அப்பெட்டியில் மறைந்திருக்கும் ஒருவர்,திடீரென அவர் காலைச் சுரண்டுவார்.
4.ரோடில் போகும் ஒருவர் பர்சைத் தவற விடுவார்.(அறியாமல் போடுவதைப் போல,வேண்டுமென்றே கீழே போடுவார்.) பின்னால் வரும் யாரோ ஒரு அப்பாவி, அதை எடுத்து அவரிடம் கொடுக்க கையில் எடுத்தால், எங்கிருந்தோ வரும் மற்றொருவர்(தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்) "உங்க பர்சை இவர் எடுத்துகிட்டு ஓடறார்" என்பது போல சீன் கிரியேட் பண்ணி அந்த அப்பாவியை டென்சனாக்கி ஓட ஓட விரட்டுவார்
5.கண் பார்வை இல்லாதவர் போல் நடித்து, ரோடில் போகும் ஒருவரிடம் ரோடை கடந்து போக உதவி கேட்பார் ஒருவர்.அந்த அப்பாவி மனிதர் இவரை ரோடை கடந்து கொண்டுபோய் விடும் நேரத்தில்,எதிர் திசையில் வருபவர்(தொலைக்காட்சியை சேர்ந்தவர்) ஏதோ ஒரு அட்ரஸ்க்கு வழி கேட்பார்.அவர் குனிந்து அட்ரஸைப் படிக்கும் வேளையில், கண் தெரியாதவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை இவர் எடுத்து விடுவார். பின்னர் இருவரும் சேர்ந்து,அந்த அப்பாவி மனிதரிடம் பணத்தை குடுங்கள் என கலாட்டா செய்வார்கள்.
கேள்வி(3,4,5): உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களைக் கூட, இவர்கள் நடிக்கிறார்களோ என்ற சந்தேகக் கண் கொண்டு பார்க்க வழி இருக்கிறது அல்லவா?இவற்றால் மனிதனுக்கு மனிதன் சிறு உதவிகள் செய்யும் எண்ணம் தடைப்படாதா?
இவை அனைத்து நகைச்சுவைக்காகத்தான் எடுக்கப்பட்டது என்றாலும், நம் உறவினர்களையோ,நண்பர்களையோ,மதிக்கும் பெரியோரையோ, வெளியில் செல்லும்போது, இப்படி முகம் தெரியாத சிலர் கலாட்டா செய்வதையும், அதை தொலைக்காட்சியில் ஒலிபரப்புவதையும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியுமா?
இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க மக்களே.
.
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
இந்தக் கேண்டிட் கேமிரா என்னும் லூசுத்தனமான நிகழ்ச்சிப் பற்றி நானும் எழுதலாம்னு இருந்தேன். இம்மாதிரி நிகழ்ச்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டு சேனல்கள் எல்லாம் ஒரு முறையாவது போகோவில் வரும் ஜஸ்ட் ஃபார் லாஃப் பார்க்கனும்.. அவங்களும் தான் இங்க நிகழ்ச்சிப் பண்றாங்க.. ஆனா நம்ம தமிழ் சேனல்ஸ் மாதிரி முட்டாள்த் தனமா இருக்கிறதில்லை.
\\\அப்படிப் பார்த்த ஒரு காமெடி சேனலில் நிகழ்ச்சி இடைவெளிகளில் ஒரு புரோகிராம் போடுகிறார்கள்.\\\
அது எந்த சேனல்னா ஆதித்யா..
அந்த சேனல் கூட பார்க்கூறீங்களா...
அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியுமா?]]
கஷ்ட்டம்தான் ...
Sanjai - u r wrong.. even in pogo just for laughs there are more public inconvenience... in fact some of the ideas like hiding in a box and trying to frighten a person is something taken as it is directly from gags-juz for laughs..
இதைச் சுட்டி நான் இட்ட இடுகை இதோ: http://dondu.blogspot.com/2009/07/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
சஞ்ஜய் சொன்னதுக்கு ரிப்பீட்டேய்
சில வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.. பல கடுப்பேற்றுகிறது..(நான் இந்த நிகழ்ச்சியை சொன்னேன்!!!)
லூசுத்தனமான நிகழ்ச்சி
sadistic pleasure!
ஏதாவது விபரீதமாக நடந்து விட்டால் கூட சமாளித்து விடுவார்கள்.காரணம்?
செயபவர்களுக்கு “......”சப்போர்ட் தைரியம்.பயப்படுபவர்களுக்கு”......”
பார்த்து எதிர்க்க பயம்.
அதுல அடுத்தவரை பார்க்கும்போது பரவசம்..
ஆனால், அது நாமாயிருந்தால் என்னவாகும்?
அடுத்தவரை முட்டாளாக்கி சிரிப்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று
ரொம்ப கேவலமான நிகழ்ச்சிகள், காமெடி சேனல்கள் எல்லாம் பார்க்காத நாங்க விட்டு ரொம்ப காலம் ஆகிடுச்சி, மனுசன சிரிக்க வைக்கிறதுக்கு பதிலா டென்ஷன் தான் பண்ணுறாங்க, தாங்க முடியல இவங்க அலப்பறை
nalla than iruku kelvi - sila samayangalil namake payam varavaikum approach - vayasana aalungaluku ethachum aachuna ????
:(
அதை பார்க்கும் போது பல பேர் மனதில் தோன்றும் கேள்வி இது.
ஆனாலும் இரசிக்க தான் தோன்றுகிறது.
மனம் புண்படாத வகையில் அதை ஒளிபரப்பினால் சரிதான். போகோவில் ஒளிபரப்புவது எல்லை மீறின செயலாக இருக்காதென்று நினைக்கிறேன்
இப்படி கேள்விக்கேட்க யாரவது இருந்தால் இது மாதிரி லூசுத்தனமான கேளிக்கைகளை தவிர்த்துவிடலாம்.
அடுத்தவர் இருக்கும்போது சிரிக்கிறோம், அதுவே நாமாக இருந்தால்..........????? கொலவெறி வரும்லே......
இந்த சம்பவத்தை வைத்து குடைக்குள் மழை படம் எடுக்கப்பட்டது... அதுலே சொல்லப்பட்ட விதம் போதாதா
எல்லாம் லூசுப்பயலுக தோழி.. நான் இதைப் பார்ப்பதே இல்லை..
this should be stopped, when these scenes comes I change the channel.
நல்லா சொல்லியிருக்கீங்க இயற்கை..
டி.வி இருக்கு அப்படிங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் காட்டாலாம்ன்ய் நெனைக்கிறாங்க... அத மக்களும் பாக்குறாங்க.. என்ன பண்ண??
மனம் புண்படாத வகையில் சிரிக்க வைக்கலாம்:-)
மனிதன் ஒரு Sadist..ஒருவர் கீழே விழுந்தால்..முதலில் நமக்கு உடன் சிரிப்பு வருகிறது.பின்னரே அவருக்கு உதவிக்கு செல்கிறோம்.அதேபோன்ற நிகழ்ச்சியே இது.பிறரை காயப்படுத்தாதவரை ரசிக்கலாம்.
i agree with u saravanan.. but compare with our tamil channels, pogo is much better.. i just told those lines in this sense only.. in pogo - 20% worst.. but in tamil - 100% bullshit.
இந்தியாவில் இந்த நிகழ்சிகளை எப்படி எடுக்கின்றார்கள் என தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டு படமாக்கப்படுகின்றது. அதாவது இந்த நிகழ்சியில் ஏமாறுபவர்களாக நடிப்பவர்களும் நடிகர்களே. அவர்களுக்கே தெரியாமல் யாரும் ஏமாறுவதில்லை. அவர்களுக்கே தெரியாமல் இது படமாக்கப்படுவதில்லை.
இது தான் நிஜம். எனவே அதை ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை போல திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட நகைச்சுவை காட்சியாக தான் பார்க்கிறோம். ( எப்படி வடிவேலு அடிவாங்கினாலும் சிரிக்கிறோமோ அப்படி)
காட்சியில் சம்பந்தப்பட்டவர் அறியாமல் படம்பிடிப்பது என்பது சாதாரன விசயமில்லை. அந்த காட்சிகளில் ஏமாறுபவர்களது மேக் அப்பை நன்கு கவனியுங்கள். அதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அது திட்டமிடப்பட்ட காட்சியா அல்லது யாருக்கும் தெரியாமல் எடுக்கப்பட்டதா என்று.
பட் உங்க சமூக அக்கறை எனக்கு புடிச்சுருக்குங்க.
காட்சியில் சம்பந்தப்பட்டவர் அறியாமல் படம்பிடிப்பது என்பது சாதாரன விசயமில்லை. அந்த காட்சிகளில் ஏமாறுபவர்களது மேக் அப்பை நன்கு கவனியுங்கள். அதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அது திட்டமிடப்பட்ட காட்சியா அல்லது யாருக்கும் தெரியாமல் எடுக்கப்பட்டதா என்று.
முகபாவத்தையும் கவனிக்கவும் அதில்செயற்கைக்கும் இயற்கைக்கும்
இருக்கும் வித்தியாசம் தெரியும்.
சிரிப்பெல்லாம் வரலை. முட்டாள்தனமா தெரிஞ்சது! :-(
நிறைய சேனல வச்சுகிட்டு என்ன பண்றதுன்னு அவங்களுக்கே தெரியல...அதன் விளைவு தான் இது மாதிரி நிகழ்ச்சிகள்...
விருது வாங்க வாங்க.
http://tharanipriyacbe.blogspot.com/2009/07/blog-post_26.html
சில ஆங்கிலச் சேனல்களைப் பார்த்து இவர்களும் இப்படி செய்கிறார்கள். இதுக் கண்டிக்கக் கூடியதே!
இது போன்ற ஆபத்தான கேளிக்கைகளுக்கு நம் அரசாங்கம் எப்பொழுது தடை உத்தரவு போடும் தெரியுமா?
இந்த நிகழ்ச்சி மூலம் யாராவது ஆபத்தின் எல்லைக்குப் போனபின்தான்
Alum katchi nataththum oru channelthaan romba mosama natakkuthu.silasamayam aditya oknu thonuthu
இந்த கடிதம் நீங்க எழுதும்போது உங்களுக்கு எதாவது நடதுவிட்டா! 'பழமொழியை ரசிகனும் ஆராயிந்து பார்க்க கூடாது'.
அதுபோல ஜோக்க ஜோக்கா எடுதுங்கங்க
Post a Comment