விடுமுறையில் வீடு

Sunday, March 29, 2009


கிறுக்கலில்லாத சுவர்கள்
கீறல் இல்லாத டிவி ரிமோட்
ஃப்ரிஜில் நிறைந்து வழியும் சாக்லேட்டுகள்
சேற்றுக் கால்கள் பதியாத தரை

கசங்காத படுக்கை விரிப்பு
விரிசல் இல்லாத வரவேற்பறை பூ ஜாடி
பேச்சின் பாதியில் பறிக்கப்படா செல்போன்

கலையாத பீரோ,இறைக்காத சோறு
உடையாத ஜன்னல்,தொங்காத தொட்டில்
கலங்காத தண்ணீர் குடம்
பறித்து எறியப்படாத தோட்டத்து மலர்கள்

நீயில்லாமல் அலங்காரமாயிருக்குறது நம் வீடு
ஆனால் அழகாயில்லை


(எங்க‌ வீட்டு செல்ல‌ம்ஸ், எங்க‌ அண்ணா குட்டீஸ் ஊருக்குப் போன‌ சோக‌த்துல‌ எழுதின‌து.எப்ப‌டி இருக்குன்னு சொல்லுங்க‌ ம‌க்க‌ளே)

.

இந்த‌ தேர்த‌லில் வாக்க‌ளிப்ப‌து க‌ட்டாய‌ம்

Saturday, March 28, 2009


உல‌கின் மிக‌ப் பெரும் தேர்த‌ல் இன்று ந‌ட‌க்கிற‌து.இந்த‌ தேர்த‌லில் உல‌க‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் வாக்க‌ளிக்க‌லாம்.

வேட்பாள‌ர்க‌ள்
1.புவியின் அதிக‌ரிக்கும் வெப்ப‌ம்
2.புவியைக் காக்கும் முய‌ற்சி.

வாக்குப்ப‌திவு நேர‌ம்
8.30PM to 9.30PM (அவ‌ர‌வ‌ர் நாட்டு நேர‌ம்)

வாக்குப்ப‌திவு நாள் 28 மார்ச் 2009 (அனைத்து ஆண்டுக‌ளும்)

வாக்குப்ப‌திவு இட‌ம்
அவ‌ர‌வ‌ர் அலுவ‌ல‌க‌ம்,வீடு அல்ல‌து அந்த‌ நேர‌த்தில் நீங்க‌ள் இருக்கும் இட‌ம்

ஓட்ட‌ளிக்கும் முறை
மின்சாத‌ன‌ங்க‌ள் அனைத்தையும் switch off செய்வ‌து

இதில் யார் வெற்றி பெற்றால் ந‌ம‌க்கு ந‌ல்ல‌து என்ப‌தையும், வெற்றிபெற‌ வேண்டிய‌வ‌ர் தோற்ப‌தின் விளைவுக‌ளையும் சிந்தித்து வாக்க‌ளியுங்க‌ள்

மேலும் விவ‌ர‌ங்க‌ளுக்கு கீழே கிளிக்குங்க‌ள்
Earth hour
Puvinaeram

.

ப‌ட்டாம்பூச்சி விருது த‌ந்த‌ ப‌துமை

Friday, March 27, 2009
எப்போதும் ம‌யில்தோகை ந‌ட்பு த‌ரும் தோழி Aiz இடமிருந்து இப்போது ப‌ட்டாம்பூச்சி விருதும் கிடைத்துள்ள‌து.
அவ‌ளுக்கு ந‌ன்றியோடு சின்ன‌க் க‌விதையும் ......




ம‌ழை முடிந்த‌ மாலையிலே எங்கிருந்தோ தோன்றும்
ப‌ட்டாம்பூச்சியின் த‌ரும் சிலிர்ப்பைத் த‌ருவ‌து உன் ந‌ட்பு


தொட்டுண‌ர்கையில் ப‌ட்டாம்பூச்சியின் ப‌ட்டித‌ழ்க‌ள்
த‌ரும் மென்மை சுக‌ம் த‌ருவ‌து உன் ந‌ட்பு.

ஸ்ப‌ரிசிக்கும் விர‌லில் அறியாம‌லே ஒட்டிக் கொள்ளும்
ப‌ட்டாம்பூச்சியின் வ‌ண்ண‌ம்
த‌ரும் விய‌ப்பைத் த‌ருவ‌து உன் ந‌ட்பு


அந் ந‌ட்பு த‌ந்த‌ ப‌ட்டாம்பூச்சி விருதுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

இந்த‌ விருதை யாருக்காவ‌து த‌ர‌ணுமே...ஹ்ம்ம்ம்ம்..
வ‌லையுல‌க‌த்துல‌ எல்லாரும் வாங்கிட்டாங்க‌ளே...அத‌னால‌ வெளியுல‌க‌த்திற்கு த‌ர‌லாமா?..ஹ்ம்ம்ம்ம்
ம்ம்..அபிஅப்பாவுக்கு த‌ந்துடலாம்...
கார‌ண‌ம்..?!!?!!??!??? அவ‌ர் போட‌ற‌ மொக்கைக்கா? அல்ல‌...
க்யூட்டான ந‌ட்ராஜ்க்கும் அபிக்கும்...என் ப‌ரிசாக‌ த‌ருகிறேன்.

ஸ்பெச‌லா வ‌லையுல‌கின‌ரின் வீட்டு குட்டிச் செல்ல‌ங்க‌ள் எல்லார்க்கும் விளையாட்டுத் தோழியாக‌ இந்த‌ ப‌ட்டாம்பூச்சியைப் ப‌ரிச‌ளிக்கிறேன்.அப்பா..அம்மா..அங்கிள், ஆண்ட்டிங்க‌ எல்லாம் க‌ரெக்டா குட்டீஸ்கிட்ட‌ சேத்துடுங்க‌

.

நான் க‌ட‌வுள்

Thursday, March 19, 2009



பிற‌ந்த‌ போது அர‌வ‌ணைக்கும் அம்மாவின் கைக‌ள் சொன்ன‌து " நான் க‌ட‌வுள்"
வ‌ளரும்போது உழைக்கும் அப்பாவின் கால்க‌ள் சொன்ன‌து " நான் க‌ட‌வுள்"
க‌ல்லூரிப் ப‌ருவ‌த்தில் ந‌ட்பு சொன்ன‌து " நான் க‌ட‌வுள்"
உழைக்கும் ப‌ருவ‌த்தில் உய‌ர்வு சொன்ன‌து " நான் க‌ட‌வுள்"
உய‌ர்ந்த‌ நிலையில் ம‌ன‌ம‌கிழ்வு சொன்ன‌து " நான் க‌ட‌வுள்"
ஓய்ந்த நிலையில் ம‌ன‌அமைதி‌ சொன்ன‌து " நான் க‌ட‌வுள்"
இத்த‌னை க‌ட‌வுள்க‌ளிடையே யார் உண்மைக் க‌ட‌வுளென‌ நான் த‌வித்த‌ வேளையில் அங்கே ம‌றைந்திருந்த‌ ஒன்று சொன்ன‌து கால‌ங்க‌ள் மாற‌க் க‌ட‌வுள்க‌ள் மாற‌லாம்.
ஆனால் அனைத்திலும் உள்ளிருப்ப‌து நானே..
ஆம்.. நான்தான் "அன்பு"
நான் அனைத்துக் க‌ட‌வுள‌ரின் அடிப்ப‌டை..

ஆத‌லால் என்றென்றும் " நானே க‌ட‌வுள்"


(இந்த‌ த‌லைப்பில் க‌விதை எழுத‌ சொன்ன‌து ம‌கா தாங்க‌.அத‌னால் இதை ப‌டிச்சி ஆக‌ற‌ டேமேஜ் க்கு எல்லாம் அவ‌ங்க‌தான் பொறுப்பு) :-))

.

சுய‌ ப‌ரிசோத‌னை!!!

Friday, March 13, 2009
(இமெயிலில் வ‌ந்தது)
கீழே உள்ள‌ கேள்விக‌ளுக்கு ப‌தில்க‌ளை த‌னியாக‌ குறித்துக்கொள்ளுங்க‌ள்.
க‌டைசியாக‌ கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ம‌திப்பெண்க‌ளை வைத்து உங்க‌ளின் ம‌திப்பெண்ணை க‌ண்டுபிடியுங்க‌ள்.
மொத்த‌ ம‌திப்பெண்க‌ளை வைத்து உங்க‌ளை அள‌விடுங்க‌ள்.

கேள்விக‌ள்
1. When do you feel at your best?
A) in the morning
B) during the afternoon and early evening
C) late at night

2. You usually walk.....
A) fairly fast, with long steps
B) fairly fast, with little steps
C) less fast head up, looking the world in the Face
D) less fast, head down
E) very slowly

3. When talking to people, you...
A) stand with your arms folded
B ) have your hands clasped
C) have one or both your hands on your hips Or in pockets
D) touch or push the person to whom you are Talking
E) play with your ear, touch your chin or Smooth your hair

4. When relaxing, you sit with...
A) your knees bent with your legs neatly side By side
B) your legs crossed
C) your legs stretched out or straight
D) one leg curled under you

5. When something really amuses you,
You react with...
A) a big appreciated laugh
B) a laugh, but not a loud one
C) a quiet chuckle
D) a sheepish smile


6. When you go to a party or social
Gathering, you...
A) make a loud entrance so everyone notices You
B) make a quiet entrance, looking around for Someone you know
C) make the quietest entrance, trying to stay Unnoticed

7. When you're working or concentrating
Very hard, and you're interrupted, you...
A) welcome the break
B) feel extremely irritated
C) vary between these two extremes

8. Which of the following colors do
You like most?
A) Red or orange b) black
C) yellow or light blue d) green
E) dark blue or purple f) white
G) brown or gray

9. When you are in bed at night, in those
Last few moments before going to sleep,
You lie...
A) stretched out on your back
B) stretched out face down on your stomach
C) on your side, slightly curled
D) with your head on one arm
E) with your head under the covers

10. You often dream that you are...
A) falling
B) fighting or struggling
C) searching for something or
Somebody
D) flying or floating
E) you usually have dreamless sleep
F) your dreams are always pleasant


விடைக்கான‌ ம‌திப்பெண்க‌ள்:

1. (a) 2 (b) 4 (c) 6
2. (a) 6 (b) 4 (c) 7 (d) 2 (e) 1
3. (a) 4 (b) 2 (c) 5 (d) 7 (e) 6
4. (a) 4 (b) 6 (c) 2 (d) 1
5. (a) 6 (b) 4 (c) 3 (d) 5 (e) 2
6. (a) 6 (b) 4 (c) 2
7. (a) 6 (b) 2 (c) 4
8. (a) 6 (b) 7 (c) 5 (d)4 (e) 3 (f) 2 (g) 1
9. (a) 7 (b) 6 (c) 4 (d) 2 (e) 1
10. (a) 4 (b) 2 (c) 3 (d) 5 (e) 6 (f) 1

உங்களைப் ப‌ற்றி
51 TO 60 POINTS
Others see you as an exciting, highly
Volatile, rather impulsive personality; a
Natural leader, one who's quick to make
Decisions, though not always the right ones.
They see you as bold and adventuresome,
Someone who will try anything once;
Someone who takes chances and enjoys an
Adventure. They enjoy being in your
Company because of the excitement you
Radiate.

41 TO 50 POINTS
Others see you as fresh, lively, charming,
Amusing, practical and always interesting;
Someone who's constantly in the center of
Attention, but sufficiently well-balanced not to
Let it go to their head. They also see you as
Kind, considerate, and understanding;
Someone who'll always cheer them up and
Help them out.

31 TO 40 POINTS
Others see you as sensible, cautious,
Careful and practical. They see you as
Clever, gifted, or talented, but modest. Not a
Person who makes friends too quickly or
Easily, but someone who's extremely loyal
To friends you do make and who expect the
Same loyalty in return. Those who really get
To know you realize it takes a lot to shake
Your trust in your friends, but equally that it
Takes you a long time to get over it if that
Trust is ever broken.

21 TO 30 POINTS
Your friends see you as painstaking and
Fussy. They see you as very cautious,
Extremely careful, a slow and steady plodder.
It would really surprise them if you ever did
Something impulsively or on the spur of the
Moment, expecting you to examine everything
Carefully from every angle and then usually
Decide against it. They think this reaction is
Caused partly by your careful nature.

UNDER 21 POINTS
People think you are shy, nervous, and
Indecisive, someone who needs looking
After, who always wants someone else to
Make the decisions and who doesn't
Want to get involved with anyone or
Anything! They see you as a worrier who
Always sees problems that don't exist.
Some people think you're boring. Only
Those who know you well know that you
Aren't.



.

பெண்க‌ளின் அப்பாக்க‌ளே! ச‌கோத‌ர‌ர்க‌ளே! தோழ‌ர்க‌ளே! க‌ண‌வ‌ர்க‌ளே! ம‌க‌ன்க‌ளே

Sunday, March 8, 2009

அனைவ‌ருக்கும் ம‌க‌ளிர் தின‌ வாழ்த்துக்க‌ள்.என்ன‌ இது..ம‌க‌ளிர்க்கு ம‌ட்டும் தானே சொல்ல‌ணும்ன்னு பாக்க‌றீங்க‌ளா?....ஆணோ,பெண்ணோ இருவ‌ர் உல‌க‌மும் பிண்ணிப் பிணைந்த‌துதானே?இதுல‌ ம‌க‌ளிரை ம‌ட்டும் ஏங்க‌ பிரிச்சி எடுக்க‌ணும்?அத‌னால‌ தான் எல்லார்க்கும் சொல்லிட்டேன்:‍)

பெண்க‌ள் ந‌ம்ம‌ளை நாம‌ளே வாழ்த்திக்க‌ற‌தை விட‌ இந்த‌ நாளை ந‌ம‌க்கு என்னிக்கும் ப‌ல‌ வ‌டிவ‌ங்க‌ள்ல‌ உறுதுணையா இருக்க‌ற‌ ஆண்க‌ள் க்கு ந‌ன்றி சொல்ற‌ வாய்ப்பா ப‌ய‌ன்ப‌டுத்திக்க‌லாம்ன்னு பாக்க‌றேன்.

வாழ்க்கைல‌ நாம‌ மொத‌ மொத‌ல்ல‌ ச‌ந்திக்க‌ற‌ ஆண் அப்பா.அப்பாக்க‌ள்கிட்ட‌யும் அவ‌ங்க‌ பொண்ணுங்க‌ளுக்கு க‌ண்டிப்பா ஸ்பெச‌ல் இட‌ம் உண்டு.அப்பாக்க‌ள் நாம‌ வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ ந‌ம்ம‌ கூட‌வே அவ‌ங்க‌ளையும் வ‌ள‌ர்த்திக்குவாங்க‌. ந‌ம‌க்கு ஈக்வ‌லா அப் டு டேட் ஆ இருப்பாங்க‌.
அப்பாக்க‌ள் ஒரு ஆண் குழ‌ந்தைக்கு கொடுக்க‌ற‌ கேர் அ விட‌ பெண் குழ‌ந்தைக்கு கொடுக்கிற‌ கேர் க‌ண்டிப்பா அதிக‌ம்.இது அப்பாக்க‌ளுக்கும்,அவ‌ர்க‌ளின் பெண்க‌ளுக்குமான‌ தேவ‌ ர‌க‌சிய‌ம்.((க‌ட‌வுளே...என் அண்ண‌ன் இந்த‌ லைனைப் ப‌டிச்ச‌ உட‌னே ம‌ற‌ந்திட‌ணும்..சாமி...ப்ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்)....பொண்ணு பொற‌ந்திட்டா ஆண்க‌ளோட‌ லைஃப் ஸ்டைலே மாறிடுதுங்க‌..இந்த‌ வ‌ய‌சுல‌யே நாம ஆட்டிப்ப‌டைக்க‌ ஆர‌ம்பிச்சுட‌றோம்!!!!:‍)))))

அடுத்து ந‌ம்ம‌கிட்ட‌ வ‌ச‌மா சிக்க‌ற‌து அண்ணாவோ த‌ம்பியோ..அண்ணாக்க‌ளோட‌ க‌ட‌மை முக்கிய‌த்துவ‌ம் அடைய‌ற‌து, நாம‌ வீட்டை விட்டு வெளில‌ போக‌ ஆர‌ம்பிக்கும்போது தான்...அவ‌ங்க‌ விளையாட‌ப் போனா நாம‌ளும் பின்னாடியே கெள‌ம்புவோம். ந‌ம‌க்கு அந்த‌ ஸ்டேஜ் ல‌ ஃப்ர‌ண்ட்ஸ் யாரும் இருக்க‌ மாட்டாங்க‌.ஸோ அண்ணாவோட‌ ஃப்ர‌ண்ட்ஸ் தான் ந‌ம‌க்கும்.அந்த‌ குரூப்ல‌ நாம‌ தாங்க‌ தேவ‌தை...(ஒரே ச‌ம‌ய‌த்துல‌ அத்த‌னை அண்ணாக்க‌ள் கிடைப்பாங்க‌...) நாம‌ சின்ன‌ பொண்ணா இருக்க‌ற‌தால‌ அவ‌ங்க‌ விளையாட‌ற‌ விளையாட்டெல்லாம் நாம விளையாட‌ முடியாது.அத‌னால ந‌ம‌க்காக‌ அவ‌ங்க‌ விளையாட‌ற‌ விளையாட்டுக‌ளையே ந‌ம‌க்காக‌ மாத்திக்கு வாங்க‌. இந்த‌ ஸ்டேஜ்ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌ அவ‌ங்க‌ விட்டுக் கொடுத்த‌ல் லைஃப் லாங் க‌ண்டின்யூ ஆகும்.

அடுத்து த‌ம்பி.. நெஜ‌ம்மாவே பாவ‌ம்.சின்ன‌ வ‌ய‌சுல‌ நாம வீட்ல‌ ப‌ண்ற‌ த‌ப்பையெல்லாம் தன் த‌லைல‌ போட்டுக்க‌ற‌ ஜீவ‌ன்.அப்போ அவ‌ன் ந‌ம்மால வாங்க‌ ஆர‌ம்பிக்க‌ற‌ திட்டு எப்போ முடியுதுன்னு க‌ட‌வுளுக்குத் தாங்க‌ தெரியும். அவ‌னை நாம‌ தான் சின்ன‌ பைய‌ன்னு ம‌திக்க‌ற‌தில்லைன்னு பார்த்தா.. ந‌ம்ம‌ குழ‌ந்தைக‌ளும் அதே மாதிரி தான் ட்ரீட் ப‌ண்ணும்.ந‌ம்ம‌ கிட்ட‌ ம‌ட்டுமில்லாம ந‌ம்ம‌ அடுத்த‌ த‌லைமுறை கிட்ட‌யும் அட்ஜெஸ்ட் ப‌ண்ண‌ற‌து த‌ம்பிங்க‌ தான் ..


இது ம‌ட்டுமில்லாம‌ ப‌ருவ‌ வ‌ய‌தில் வெளி உல‌கில் நாம் ச‌ந்திக்க‌ற‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு காண்ற‌து ச‌கோத‌ர‌ர்க‌ள் தான்.


அப்புற‌ம் தோழ‌ர்க‌ள்..அவங்க‌ளைப் ப‌த்தி சொல்லிகிட்டே போக‌லாம்..சுருக்க‌மா சொன்னா ..யாதுமாகி நிற்ப‌வ‌ர்க‌ள்.. நாம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இழுப‌ட்டு,த‌ட்டுத் த‌டுமாறினாலும்..புன்ன‌கை மாறாத‌வ‌ர்க‌ள்.

எல்லாம் சேர்ந்து க‌ண‌வ‌ர் ங்கிற‌ ஒருத்த‌ர மாட்டி விட்டுட‌றாங்க‌. நாம‌ ச‌மைய‌ல் க‌த்துக்கற‌துல‌ ஆர‌ம்பிச்சி.. ந‌ம்ம‌ பொண்ணுங்க‌ ச‌மைய‌ல் க‌த்துக்க‌ற‌து வ‌ரைக்கும் எல்லாத்துக்கும்
டெஸ்ட் பீஸ்ஆய் இருந்து... நாம் திரும‌ண‌ம் என்ற‌ பெய‌ரில் பிரியும்..த‌ந்தையாய்..த‌மைய‌னாய்..தோழனாய்..அனைத்து அவ‌தார‌மும் எடுத்து ந‌ம்மை ம‌கிழ்விப்ப‌வ‌ர்க‌ள்.

அடுத்து ம‌க‌ன் என்னும் பொக்கிஷ‌ம்.அனைத்து ம‌க‌ன்க‌ளுக்கும் பெண்க‌ளின் அள‌வுகோல் த‌ன் தாய்..அம்மா செய்வ‌து அனைத்தும் ம‌க‌ன்க‌ளுக்கு ச‌ரியாய் தான்ப‌டும். தாயை தெய்வ‌த்துக்கு நிக‌ரான நிலையில் தான் ம‌க‌ன்க‌ள் எப்ப‌வும் வ‌ச்சிருப்பாங்க‌.

நான் எழுதி இருக்க‌ற‌து ஆண்க‌ளோட‌ விட்டுக்கொடுத்த‌ல்ல‌ ரொம்ப‌ கொஞ்ச‌ம் தான்.
ஆண்க‌ளின் குட்டி தேவ‌தையாய் உல‌கினுள் நுழையும் நாம் தெய்வ‌த்துக்கு நிக‌ரான‌ நிலைவ‌ரை உய‌ர்த்த‌ப்ப‌டுவ‌து ஆண்க‌ளால் தான்..இந்த‌ மாதிரி எல்லா நிலைக‌ளிலும் ந‌ம‌க்காக‌வே வாழும் ஆண்க‌ளுக்கு ந‌ன்றி சொல்வோம்..இந்ந‌ன்னாளில்

//***.தேர்த‌ல் வ‌ர‌ப்போகுது.அங்க‌ போய் த‌ப்பில்லாம‌ ஓட்டு போட‌ மொத‌ல்ல‌ இங்க‌ த‌மிழிஷ் ல‌யும் த‌மிழ்ம‌ண‌ம்லயும் ஓட்டு போட்டு ப‌ழ‌குங்க‌***//

.

யூத்ஃபுல் விக‌ட‌னும் சில‌ ப‌திவ‌ர்க‌ளும்

Friday, March 6, 2009
புராஜ‌க்ட் ரிப்போர்ட்டும்,ரெகார்ட் நோட் புக்கும் அப்போ அப்போ கொஞ்ச‌ம் கிளாஸ் நோட்ஸ் ம்ன்னு எழுத்துன்னா அது இங்கிலீஷ்... இண்ட‌ர்நெட்ன்னா அது என் துறை சார்ந்த‌ ட‌வுன்லோடுக்கு என்று இருந்த‌ என‌க்கு இப்ப‌டி ஒரு வ‌லையுல‌க‌ம் இருக்கிற‌து என்ப‌தை அறிமுக‌ம் செய்த‌து ஏதோ ஒரு கூகுல் ச‌ர்ச் ல் திற‌ந்த‌ ச‌ஞ்ச‌யின் இந்த‌ வ‌லைப்ப‌திவு.எல்லாரும் எழுதுவ‌தைப் ப‌டித்து நம‌க்கும் த‌மிழ்ல‌ எழுத‌வ‌ருமான்னு முய‌ற்சிப்போமே என்ற எடுத்த‌ முய‌ற்சி தான் என் வ‌லைப்பூ.வ‌லைப்பூ ன்னா என்ன‌ன்னே தெரியாத‌ கால‌த்துல‌ ஆர‌ம்பிச்ச‌தால‌ க‌மெண்ட் போட‌ற‌து எப்ப‌டின்னு கூட‌த் தெரியாம‌ இருந்தேன். நான் அப்போ அப்போ கேக்க‌ற‌ சின்ன‌ப்புள்ளத்த‌ன‌மான ச்ந்தேக‌த்தையெல்லாம் தீர்க்கிற‌ ச‌ஞ்ச‌ய்க்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌:‍)

இந்த‌ வ‌லையுல‌கில் நுழைந்த‌தில் நான் பெற்ற‌ த‌மிழ் அறிவும், ந‌ட்புக‌ளும் நிச்ச‌ய‌மாய் ஏராள‌ம்.இத‌ற்கு முழுமுத‌ல் கார‌ண‌ம் தாராள‌மாய் நீங்க‌ள் எல்லோரும் கொடுத்த‌ ஊக்க‌ம். அனைவ‌ருக்கும் ந‌ன்றி.

இனிமேலும் உங்க‌ளையெல்லாம் கொடுமைப‌டுத்த‌னுமா.. பிளாக்கை மூடி உங்க‌ளையெல்லாம் காப்பாத்திட‌லாமான்னு பூவா த‌லையா போட்டிட்டுருந்த‌ நேர‌த்தில் தேவா வ‌லைச்ச‌ர‌த்தில் என்னை அறிமுக‌ம் செய்தார்.(மிக்க‌ ந‌ன்றி தேவா).உட‌னே "ஆஹா..இய‌ற்கை.. நீ நெஜ‌ம்மாவே ந‌ல்லா எழுதற‌"ன்னு என்னை நானே த‌ட்டி குடுத்திட்டு பிளாக்கை மூட‌ற‌ முடிவை த‌ள்ளி வ‌ச்சிட்டேன்.அப்போ வான‌த்துல‌ ப‌ற‌க்க‌ ஆர‌ம்பிச்ச‌தே இன்னும் நிலைவ‌ந்து சேர‌ல‌.


இந்த‌ அழ‌குல‌ யூத்ஃபுல் விக‌ட‌ன் குட் பிளாக்ல‌ வேற‌ என்னோட‌‌ "ஏன் இந்த‌ மாற்ற‌ம் என்னுள்ளே" ங்கிற‌ க‌விதையை போட்டுட்டாங்க‌(அந்த‌ செய்தியைச் சொன்ன‌ ஜ‌மாலுக்கு ந‌ன்றி).அத‌னால‌ இப்போ வான‌த்தையும் தாண்டி ப‌ற‌க்க‌ ஆர‌ம்பிச்சுட்டேன்.

நான் இவ்ளோ ப‌ண்ணினாலும்,ஒரு போஸ்டாவ‌து ந‌ல்லா போடாம‌ விட‌மாட்டோம்ன்னு சில‌,ப‌ல‌ பேர் என் பிளாக்குக்கு Followersஆ வேற‌ இருக்காங்க‌.அவ‌ங்க‌ளோட‌ பொறுமைக்கு ஸ்பெச‌ல் ந‌ன்றிக‌ள்.ஒரு நாளாவ‌து,உருப்ப‌டியா ஏதாவது எழுதி உங்க‌ எல்லார் ஆசையையும் நிறைவேத்த‌ க‌ண்டிப்பா முய‌ற்சி ப‌ண்றேன்.

ம‌க்க‌ளே! என் ப‌டைப்புக‌ள்கிற‌ பேர்ல‌ நான் ப‌ண்ற‌ கொடுமைக்கெல்லாம் நான் ம‌ட்டும் கார‌ண‌ம் அல்ல‌.என்னை இந்த‌ மாதிரி ஊக்க‌ப்ப‌டுத்த‌ற‌வ‌ங்க‌ளுக்குப் பெரும்‌ ப‌ங்கு இருக்கு.
அதுக்காக‌ப் யாரும் அவ‌ங்க‌மேல‌யெல்லாம் கோப‌ப்ப‌ட்டுக்காதீங்க‌.அவ‌ங்க‌ளே பாவ‌ம் என் கொடுமையைத் தாங்க‌வும் முடியாம‌,வெளில‌ சொல்ல‌வும் முடியாம‌ ம‌ன‌சுக்குள்ள‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டுட்டு இருக்காங்க‌..

அவ‌ங்க‌ மேல‌ பாவ‌ப்ப‌ட்டு நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்..(யார் அது..பிளாக்கை மூட‌ப்போறியான்னு கேக்க‌ற‌து)...அந்த‌ முடிவு என்ன‌ன்னா.... அவ‌ங்க‌ளுக்கும்,உங்க‌ளுக்கும் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி சொல்லிக்கிற‌து..ந‌ன்றி...ந‌ன்றி...ந‌ன்றி


.

ஏன் இந்த‌ மாற்ற‌ம் என்னுள்ளே:‍)

Wednesday, March 4, 2009

நேற்று வ‌ரை அம்மாவின் க‌த்த‌லுக்கு
எட்டு ம‌ணிக்கும் அசையாத‌ என் தூக்கம்
இன்று ம‌ட்டும் அதிகாலையிலேயே
வில‌கி ஓடிய‌து எப்ப‌டி?

நேற்று வ‌ரை துவைக்காத‌ ஜீன்ஸையே
என் ஆடையாய் தேர்ந்தெடுத்த‌ என் ம‌ன‌ம்
இன்று ம‌ட்டும் ம‌டிப்பு க‌லையாத‌
ஃபார்ம‌ல்ஸை(formals) தேடுவ‌து ஏன்?

நேற்று வ‌ரை பேருந்து நிறுத்த‌த்தைக் க‌ட‌ந்த‌பின்
துர‌த்திச் சென்று தாவி ஏறும் என் கால்க‌ள்
இன்று ம‌ட்டும் அரைமணி முன்ன‌தாக‌வே
நிறுத்த‌த்தில் காத்திருப்ப‌து யாருக்கு?

நேற்று வ‌ரை புத்த‌க‌த்தின் வாச‌னையையே
தேர்வு நேர‌ங்க‌ளில் ம‌ட்டும் நுக‌ர்ந்த‌ என் நாசி
இன்று ம‌ட்டும் புத்த‌க‌க் காற்றையே
மூச்சுக் காற்றாய் கொண்ட‌து எத‌னால்?

நேற்று வ‌ரை க‌ல்லூரி வ‌ருவ‌து எதிர்ப்புற‌ ம‌க‌ளிர் க‌ல்லூரியை
க‌ண்காணிக்க‌த்தான் என்றிருந்த‌ என் க‌ண்க‌ள்
இன்று ம‌ட்டும் அக் க‌ல்லூரி ப‌க்க‌மே
திரும்ப‌ ம‌றுப்ப‌து ஏன்?


விடை தெரியா வினாக்க‌ள் இதேபோல் நீள‌,
உன்னைக் க‌ண்டேன்..ம‌கிழ்ந்தேன்..
என் மாற்ற‌ங்க‌ளின் ம‌ர்ம‌ம் கேட்டேன்...
நீ சொன்னாய்..
தோழா ...இன்று நீ புதிதாய் பெற்ற‌ ஒன்றுதான் இத‌ற்கான‌ கார‌ண‌ம்..என‌ச் சிரித்தாய்



ஆம்.. நேற்று வ‌ரை நீ க‌ல்லூரியின் மாண‌வ‌ன்..
இன்று அதே க‌ல்லூரியின் ஆசிரிய‌ன்
உண‌ர்ந்தேன்.மாற்ற‌ங்க‌ளால் நிறைந்தேன்:-)

.

பிப்ர‌வ‌ரி 1,2019?

Tuesday, March 3, 2009
பிப்ர‌வ‌ரி 1,2019ம் நாள் உல‌க‌ளாவிய‌ விடுமுறை நாளா?
இச்செய்தி உண்மையானால் பிப்ர‌வ‌ரி 1,2019ம் க்குப் பின் நாம் யாரும் உழைக்கும் தேவை இருக்காது?
கீழே உள்ள‌ ப‌ட‌ங்க‌ளை கிளிக்கிப் பாருங்க‌ள்.


ஆம்.அந்த‌ நாள‌ன்று மிக‌ப் பெரிய‌ விண்க‌ல் 2002NT7 பூமியைத் தாக்கும் சாத்திய‌க்கூறுக‌ள் உள்ள‌து என்ப‌து NASA செய்தி.அந்நிக‌ழ்வால் புவியைச் சுற்றிய‌ வ‌ளிம‌ண்ட‌ல‌த்தில் கீழே உள்ள‌வாறு நிக‌ழும் என அச்செய்தி கூறுகிற‌து.



இது நிக‌ழ்ந்தால்?!?! புவியின் வாழ்நாள் அத்துட‌ன் முடியுமாம்:-((

Link:http://www.merinews.com/catFull.jsp?title=The%20world%20will%20end%20in%202012,%20say%20experts&articleID=139440

http://www.greatdreams.com/2012.htm

Thanks Aiz

.

வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ள்

Sunday, March 1, 2009
வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ளைப்ப‌த்தி எழுத‌ சொல்லி தேவா கூப்பிட்டுருக்கார்.ந‌ன்றி தேவா:-)

கொஞ்ச‌ நாளாவே இது வ‌லைப்பூக்க‌ள்ல‌ பிர‌ப‌ல‌மானதா இருக்கு.ம‌ற்ற‌ வ‌லைப்பூக்க‌ள்ல‌ பாக்கும்போது சுல‌ப‌மான‌தாதான் தோணிச்சி.ஆனா என்னை எழுத‌ சொன்னதும் ஒரு வார்த்தை கூட‌ கிடைக்க‌லை.

ச‌ரி.. யார் கால்ல‌யாவ‌து விழ‌ வேண்டிய‌துதான்னு முடிவு ப‌ண்ணி,த‌மிழ் அறிவு என்னைவிட‌ (கொஞ்ச‌மே கொஞ்ச‌ம்)அதிக‌மா இருக்க‌ற‌(தா அவ‌ நினைச்சிட்டு இருக்க‌ற‌) தோழிகிட்ட‌ போய்......."இந்த‌ மாதிரி பிளாக்ல‌ எழுத‌ ஒருத்த‌ர் இன்வைட் ப‌ண்ணி இருக்கார்.என‌க்கு வேர்ட்ஸ் ஏதாவ‌து சொல்லு" ன்னு கேட்டேன்.அவ‌ ..முறைச்சாலே ஒரு முறை.முறைச்ச‌துமில்லாம‌ "ஏண்டி ..இதை கேக்க‌றதுக்கே..இத்த‌னை ஆங்கில‌ வார்த்தை க‌ல‌க்க‌றே.... நீ த‌மிழ‌ப‌த்தி எழுத‌ போறியா..என்ன‌ கொடுமை இது அப்ப‌டின்னு வேற‌ கேட்டுட்டா:‍(

இந்த‌ அவ‌மான‌த்துக்க‌ப்புற‌மும் அவ‌ளை கேக்க‌ணுமான்னு எகிறி குதிச்ச‌ ம‌ன‌சாட்சி த‌ன்மான‌ சிங்க‌த்தை பிஸ்க‌ட் போட்டு தூங்க‌ வ‌ச்சிட்டு..."ஏய்..ப்ளீஸ் சொல்லுப்பா.அவ‌ர் இன்வைட் ப‌ண்ணி ரொம்ப‌ நாள் ஆயிடிச்சி"ன்னு திரும்ப‌ கேட்டேன்.அவ‌ ஒரு 4,5 வார்த்தைங்க‌ சொன்னா...ஆனா அது எல்லாம் ஏற்க‌னவே யாராவ‌து எழுதின‌ வார்த்தையாவே இருந்திச்சி.போடின்னு சொல்லிட்டு நானே தேட‌ ஆர‌ம்பிச்சுட்டேன்.
கொஞ்ச‌ வார்த்தைங்க‌ கெடைச்சுது.அவை கீழே.

தூரிகை -பிர‌ஷ்

பனுவல்-நூல்,புத்த‌க‌ம்

தூவ‌ல்- பேனா

புரிசை- ம‌தில்

மேழி - ஏர்

வ‌துவை-ம‌ண‌மாலை

ம‌தி-நில‌வு

சாளர‌ம்-ஜ‌ன்ன‌ல்

க‌ட‌வுச்சீட்டு-பாஸ்போர்ட்

சல்லியம்-சிறுச‌ண்டை

ச‌ர‌க்குந்து-லாரி

சால‌ம்-மாஜிக்

சுழியம்-பூஜ்ய‌ம்

சிலாகித்த‌ல் ஆன‌ந்த‌ப்ப‌ட‌ல்

ந‌ற‌வு தேன்

ந‌ர‌லுத‌ல் ஒலித்த‌ல்

நுத‌ல் நெற்றி


இதுல‌ருந்து என‌க்கு என்ன‌ தெரிஞ்சிதுன்னா..இப்ப‌டியே நம்ம‌ பேச்சு வ‌ழ‌க்கு இருந்த‌துன்னா..த‌ங்கிலீஷ்ன்னு ஒரு மொழி உருவாகி நிலைச்சுடும்.த‌மிழ் வ‌ள‌ர‌ இந்த‌ மாதிரி வ‌லைப்பூக்க‌ள்ல‌ எழுத‌ற‌து ம‌ட்டும் இல்லாம‌ல் பேச்சுத்த‌மிழ் வ‌ள‌ர‌வும் ஏதாவ‌து செய்ய‌ வேண்டும்.

ஓ...ம‌ற‌ந்திட்டேன்.யாரையாவ‌து தொட‌ர் ப‌திவுக்கு கூப்பிட‌ணுமாமே.ம்ம்.... ந‌ம்மால‌ எவ்ளோ பேரை மாட்டிவிட‌முடியுமோ....செஞ்சிடுவோம்:-))

1.பொடிய‌ன் ச‌ஞ்ச‌ய்
2.ப‌துமை-Aiz
3.அன்புட‌ன் அருணா
4.அப்துல்லா
5.sureஷ்
6.புதுகைச் சாரல்
7. சீமாச்சு
8.அனுப‌வ‌ம்
9.கார்த்திகைப் பாண்டிய‌ன்
10.தேனியார்
11.இவ‌ன்
12.மகா


.