விடுமுறையில் வீடு

Sunday, March 29, 2009


கிறுக்கலில்லாத சுவர்கள்
கீறல் இல்லாத டிவி ரிமோட்
ஃப்ரிஜில் நிறைந்து வழியும் சாக்லேட்டுகள்
சேற்றுக் கால்கள் பதியாத தரை

கசங்காத படுக்கை விரிப்பு
விரிசல் இல்லாத வரவேற்பறை பூ ஜாடி
பேச்சின் பாதியில் பறிக்கப்படா செல்போன்

கலையாத பீரோ,இறைக்காத சோறு
உடையாத ஜன்னல்,தொங்காத தொட்டில்
கலங்காத தண்ணீர் குடம்
பறித்து எறியப்படாத தோட்டத்து மலர்கள்

நீயில்லாமல் அலங்காரமாயிருக்குறது நம் வீடு
ஆனால் அழகாயில்லை


(எங்க‌ வீட்டு செல்ல‌ம்ஸ், எங்க‌ அண்ணா குட்டீஸ் ஊருக்குப் போன‌ சோக‌த்துல‌ எழுதின‌து.எப்ப‌டி இருக்குன்னு சொல்லுங்க‌ ம‌க்க‌ளே)

.

37 comments:

வியா (Viyaa) said...

nice poems..
me the 1st

பழமைபேசி said...

//நீயில்லாமல் அலங்காரமாயிருக்குறது நம் வீடு
ஆனால் அழகாயில்லை
//

இதைக் கவிதையில் வடிக்க
வலையகம் அழகுற்றது!!

பாரதி said...

எங்கள் வீடிலும்தான்

sarathy said...

அழகு...

நட்புடன் ஜமால் said...

அருமை வரிகள்

அலங்காரமாயிருக்கு

வா
வந்து

அலங்-கோலப்படுத்து

ஷண்முகப்ரியன் said...

//நீயில்லாமல் அலங்காரமாயிருக்குறது நம் வீடு
ஆனால் அழகாயில்லை//

கவிதையைப் பாராட்டினாலே அந்த உணர்வு மாசு பட்டு விடுகிறது.எனக்கு உங்களை மாசு படுத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.நீங்கள் ஏன் என் கன்னிகாவைப் படிக்கக் கூடாது?

தாரணி பிரியா said...

கவிதை வரிகள் அலங்காரமா இல்லை. ஆனா கவிதை அழகா இருக்கு

தாரணி பிரியா said...

கவிதை வரிகள் அலங்காரமா இல்லை. ஆனா கவிதை அழகா இருக்கு

Mohan R said...

Nice kavidhai Kulandhaigal irundha ulagame alaga theriyudhula :)

புதியவன் said...

//நீயில்லாமல் அலங்காரமாயிருக்குறது நம் வீடு
ஆனால் அழகாயில்லை//

வாவ்...மிக அழகாக இந்த வரிகள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை அழகு..எல்லாருக்குமே குட்டீஷ்னா ரொம்ப பிடிக்கும் இல்லையா..(புது டெம்ப்ளேட்டும் நல்லா இருக்குங்க.. )

Anonymous said...

அழகு, எங்க வீட்டு குட்டிய நானும் மிஸ் பண்றேன் :(
கலைஞ்சிருந்தா தான் வீடு

சந்தனமுல்லை said...

ஹேய்..மிக அழகான கவிதை! நல்லா சொல்லியிருக்கீங்க..கண் முன் காட்சி விரியறா மாதிரி!

சந்தனமுல்லை said...

உங்க டெம்ப்ளேட் அழகு! என்ன லோட் ஆகத்தான் கொஞ்சம் டைம் ஆகுது போல!

வெற்றி said...

வெரி வெரி நைஸ்,

எனக்கு இதே சிந்தனை உண்டு, ஆனால் கவிதையாய் இல்லாமல் கட்டுரையாய்.

அருமை.

*இயற்கை ராஜி* said...

Thanks Viyaa.Thanks for the visit and comment

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ ப‌ழ‌மைபேசி.உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளின் ஊக்க‌ம் தான் க‌விதைக‌ளிக்கு உயிர் நீர்:-)

*இயற்கை ராஜி* said...

//பாரதி said...
எங்கள் வீடிலும்தான்//

வாங்க‌ பார‌தி
வீட்டுக்கு வீடு வாச‌ப்ப‌டி:‍))

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ sarathy :-)

Poornima Saravana kumar said...

நீயில்லாமல் அலங்காரமாயிருக்குறது நம் வீடு
ஆனால் அழகாயில்லை
//

அருமைங்க!!!

சொல்ல வார்த்தைகளேயில்லை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகு...அருமை...

Vijay said...

அஅஅதூ... ச்சரிரிரி

இது பதிவுக்கு போட்ட கமெண்ட் இல்ல. ”இது”க்கு போட்டது. ம்ம்ம்.... ம்..

//க‌மெண்ட் போடாம‌ போக‌ மாட்டீங்க‌ன்னு தெரியும்.ஆனாலும் நியாப‌க‌ப்ப‌டுத்த‌றது என் க‌ட‌மை.:-)//

எப்புடி எல்லாலாலாம் யோசிக்கிறாங்கபா!!!!!

Anonymous said...

கவிதை அழகு இயற்கை ;-)

*இயற்கை ராஜி* said...

நட்புடன் ஜமால் said...
அருமை வரிகள்

அலங்காரமாயிருக்கு

வா
வந்து

அலங்-கோலப்படுத்து//



வாங்க‌ ஜ‌மால்.ஹாஜ‌ர் கொஞ்ச‌ம் வ‌ள‌ந்த‌தும் அல‌ங்கோல‌ப்ப‌டுத்துவாங்க‌.இருங்க‌:‍:-))

*இயற்கை ராஜி* said...

நட்புடன் ஜமால் said...
அருமை வரிகள்

அலங்காரமாயிருக்கு

வா
வந்து

அலங்-கோலப்படுத்து
//

வாங்க‌ ஜ‌மால்.ஹாஜ‌ர் கொஞ்ச‌ம் வ‌ள‌ந்த‌தும் அல‌ங்கோல‌ப்ப‌டுத்துவாங்க‌.இருங்க‌:‍:-)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ ஷண்முகப்ரியன் சார்.க‌ண்டிப்பா க‌ன்னிகாவை ப‌டிக்கிறேன்

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ தார‌ணி. ந‌ன்றி..

*இயற்கை ராஜி* said...

உண்மைங்க‌ மோக‌ன் @ இவ‌ன்.

*இயற்கை ராஜி* said...

புதியவன் ந‌ன்றிங்க‌

Anonymous said...

nalla erukku kavithai.

*இயற்கை ராஜி* said...

@கார்த்திகைப் பாண்டியன் ந‌ன்றி தோழா

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

its very correct.
with love,
jagadeeswarn
http://jagadeesktp.blogspot.com/

Sanjai Gandhi said...

கவிதை ரொம்ப நல்லா தான் ராஜி இருக்கு. ஆனா டிஸ்கி செம ஏமாத்து வேலை. நீங்க ஒரு வாரம் வெளியூர் போய்ட்டு வந்து வீட்டுல நுழைஞ்சதும் எழுதின மாதிரி இருக்கு. :))

*இயற்கை ராஜி* said...

ஹி..ஹி..எங்க‌ அண்ணி ப‌டிச்சிட்டு சொன்ன‌ க‌மெண்ட் இதுதான் அப்ப‌டிங்க‌ற‌தை நான் சொல்ல‌ மாட்டேன் ச‌ஞ்ச‌ய்

விக்னேஷ்வரி said...

உங்கள் வரிகள் அலங்காரமாயிருக்கு, அழகாவும் இருக்கு.

இரசிகை said...

intha kavithai lables yellaame vaasiththen..

azhagu:)

Bharathi Annamalai said...

very nice and poetric words................. keep it up