புராஜக்ட் ரிப்போர்ட்டும்,ரெகார்ட் நோட் புக்கும் அப்போ அப்போ கொஞ்சம் கிளாஸ் நோட்ஸ் ம்ன்னு எழுத்துன்னா அது இங்கிலீஷ்... இண்டர்நெட்ன்னா அது என் துறை சார்ந்த டவுன்லோடுக்கு என்று இருந்த எனக்கு இப்படி ஒரு வலையுலகம் இருக்கிறது என்பதை அறிமுகம் செய்தது ஏதோ ஒரு கூகுல் சர்ச் ல் திறந்த சஞ்சயின் இந்த வலைப்பதிவு.எல்லாரும் எழுதுவதைப் படித்து நமக்கும் தமிழ்ல எழுதவருமான்னு முயற்சிப்போமே என்ற எடுத்த முயற்சி தான் என் வலைப்பூ.வலைப்பூ ன்னா என்னன்னே தெரியாத காலத்துல ஆரம்பிச்சதால கமெண்ட் போடறது எப்படின்னு கூடத் தெரியாம இருந்தேன். நான் அப்போ அப்போ கேக்கற சின்னப்புள்ளத்தனமான ச்ந்தேகத்தையெல்லாம் தீர்க்கிற சஞ்சய்க்கு நன்றிகள் பல:)
இந்த வலையுலகில் நுழைந்ததில் நான் பெற்ற தமிழ் அறிவும், நட்புகளும் நிச்சயமாய் ஏராளம்.இதற்கு முழுமுதல் காரணம் தாராளமாய் நீங்கள் எல்லோரும் கொடுத்த ஊக்கம். அனைவருக்கும் நன்றி.
இனிமேலும் உங்களையெல்லாம் கொடுமைபடுத்தனுமா.. பிளாக்கை மூடி உங்களையெல்லாம் காப்பாத்திடலாமான்னு பூவா தலையா போட்டிட்டுருந்த நேரத்தில் தேவா வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தார்.(மிக்க நன்றி தேவா).உடனே "ஆஹா..இயற்கை.. நீ நெஜம்மாவே நல்லா எழுதற"ன்னு என்னை நானே தட்டி குடுத்திட்டு பிளாக்கை மூடற முடிவை தள்ளி வச்சிட்டேன்.அப்போ வானத்துல பறக்க ஆரம்பிச்சதே இன்னும் நிலைவந்து சேரல.
இந்த அழகுல யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்ல வேற என்னோட "ஏன் இந்த மாற்றம் என்னுள்ளே" ங்கிற கவிதையை போட்டுட்டாங்க(அந்த செய்தியைச் சொன்ன ஜமாலுக்கு நன்றி).அதனால இப்போ வானத்தையும் தாண்டி பறக்க ஆரம்பிச்சுட்டேன்.
நான் இவ்ளோ பண்ணினாலும்,ஒரு போஸ்டாவது நல்லா போடாம விடமாட்டோம்ன்னு சில,பல பேர் என் பிளாக்குக்கு Followersஆ வேற இருக்காங்க.அவங்களோட பொறுமைக்கு ஸ்பெசல் நன்றிகள்.ஒரு நாளாவது,உருப்படியா ஏதாவது எழுதி உங்க எல்லார் ஆசையையும் நிறைவேத்த கண்டிப்பா முயற்சி பண்றேன்.
மக்களே! என் படைப்புகள்கிற பேர்ல நான் பண்ற கொடுமைக்கெல்லாம் நான் மட்டும் காரணம் அல்ல.என்னை இந்த மாதிரி ஊக்கப்படுத்தறவங்களுக்குப் பெரும் பங்கு இருக்கு.
அதுக்காகப் யாரும் அவங்கமேலயெல்லாம் கோபப்பட்டுக்காதீங்க.அவங்களே பாவம் என் கொடுமையைத் தாங்கவும் முடியாம,வெளில சொல்லவும் முடியாம மனசுக்குள்ள கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க..
அவங்க மேல பாவப்பட்டு நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்..(யார் அது..பிளாக்கை மூடப்போறியான்னு கேக்கறது)...அந்த முடிவு என்னன்னா.... அவங்களுக்கும்,உங்களுக்கும் மனமார்ந்த நன்றி சொல்லிக்கிறது..நன்றி...நன்றி...நன்றி
.
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
வாழ்த்துகள்
மற்றும்
நன்றிகள்
\\நான் இவ்ளோ பண்ணினாலும்,ஒரு போஸ்டாவது நல்லா போடாம விடமாட்டோம்ன்னு சில,பல பேர் என் பிளாக்குக்கு Followersஆ வேற இருக்காங்க.அவங்களோட பொறுமைக்கு ஸ்பெசல் நன்றிகள்.\\
தன்னடக்கம் ...
ஆஹா!!! ஓஹோ!!!
1000 பதிவுகள் போட வாந்த்துக்கள்!!
வாழ்த்துகள் இயற்கை. எழுத வந்து இம்மா நாளாகியும் நானெல்லாம் இன்னும் அதுல வரல. நீங்க உண்மையிலேயே நல்லா எழுதுறீங்கன்னு அர்த்தம். தொடருங்கள். பாராட்டுகள்
:)
கலக்குங்க. வாழ்த்துக்கள்.
போஸ்டை ரீபப்ளிஷ் செய்ததால் முன்னர் வந்த கமெண்ட்களை திரும்ப நானே போட்டுட்டேன்
Pls Don 't mistake thevanmayam,எம்.எம்.அப்துல்லா and மணிகண்டன்
---
இயற்கை.
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் தோழா தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தோழி..
//கமெண்ட் போடாம போக மாட்டீங்கன்னு தெரியும்.ஆனாலும் நியாபகப்படுத்தரது என் கடமை.:-)//
ஆமாமா! நல்ல வேளையா ஞாபகப் படுத்தினீங்ங்க!
நல்லாருக்கு தொடர்ந்து கொடுமைப்படுத்துங்க. சாரி எழுதுங்க.
வாழ்த்துக்கள் இயற்கை, எனக்கும் தெரியப்படுத்தியதற்கு என் நன்றி.
இயற்கை வாழ்த்துகள்ப்பா!
"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com/
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்
வாங்க ஜமால். நன்றி:-)
//thevanmayam said...
ஆஹா!!! ஓஹோ!!!
1000 பதிவுகள் போட வாந்த்துக்கள்!!//
1000 பதிவுகள் ஆஆஆஆஆஆஅ!!!!சரி..சரி..கஷ்டப்பட நீங்களே தயாரா இருக்கும் போது எனக்கு என்ன பிரச்சினை..போட்டுடுவோம்:-)))))
//எம்.எம்.அப்துல்லா said...
வாழ்த்துகள் இயற்கை. எழுத வந்து இம்மா நாளாகியும் நானெல்லாம் இன்னும் அதுல வரல. நீங்க உண்மையிலேயே நல்லா எழுதுறீங்கன்னு அர்த்தம். தொடருங்கள். பாராட்டுகள்//
நன்றிங்க அப்துல்லா அண்ணா.. உங்க லெவல் எல்லாம் இதுக்கும் மேலேங்க..
வாங்க மணிகண்டன்..நன்றிங்க :-)
வாங்க...நன்றிங்க kanchana Radhakrishnan :-)
வாங்க அப்பாவி தமிழன்.
//அப்பாவி தமிழன் said...
வாழ்த்துக்கள் தோழா தொடர்ந்து எழுதுங்கள்//
தோழா அல்ல..தோழி
நன்றிங்க Sriram
போதும் நிப்பாட்டுங்க.. நல்ல வேளை என் அட்ரஸை இங்க போடல.. இல்லைனா இந்நேரம் எவ்ளோ ஆட்டோ , லாரிகள் எல்லாம் ஆசிட் பாட்டிலோட வந்திருக்குமோ? :))
சரி சரி.. யூத் விகடன்ல வந்ததற்கு வாழ்த்துக்கள்.. விரைவில் விகடன் வரவேற்பறையில் வர வாழ்த்துக்கள். குரு பேரை காப்பாத்தனும் சிஷ்யையே..
( என்னாது.. குருவுக்கு ஏது பேரா? பிச்சிபுடுவேன் பிச்சி..)
//SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...
போதும் நிப்பாட்டுங்க.. நல்ல வேளை என் அட்ரஸை இங்க போடல.. இல்லைனா இந்நேரம் எவ்ளோ ஆட்டோ , லாரிகள் எல்லாம் ஆசிட் பாட்டிலோட வந்திருக்குமோ? :))//
ஓ ஓ..போட்டிருகணுமோ.. நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டேனோ:-))))?
வாழ்த்துக்கள் இய்ற்கை! சீக்கிரமே விகடன் வரவேற்பறைலயும் இடம் பிடிங்க!
நன்றிங்க புதுகைத் தென்றல்
@ கார்த்திகைப் பாண்டியன்
நன்றி தோழா
//நாமக்கல் சிபி said...
வாழ்த்துக்கள்!//
ஆஹா!! இயற்கை..பெரிய பதிவர்கள் எல்லாம் உன் பிளாக் பக்கம் வந்திருக்காங்க:))இனிமே நானும் (ரவுடி )தான்னு சொல்லிக்கலாம்:-))))
வாங்க சிபி...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
:)) வாழ்த்துக்கள் :))
கண்டிப்பா கொடுமைப்படுத்தறேங்க..ச்ச...சாரி..எழுதறேங்க மகா:-))
@தேனியார்
நன்றி அண்ணா:-))
வாழ்த்துக்கள்...!
//அபி அப்பா said...
இயற்கை வாழ்த்துகள்ப்பா!//
வாங்க அபிஅப்பா
பெரும் பெரும் பதிவர் என் பிளாக்குக்கு வந்ததுக்கு நன்றி
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
//மகா said...
"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com///
வருகிறேன் மகா
நன்றி Divyapriya
நன்றி கவின்
//நாமக்கல் சிபி said...
வாழ்த்துக்கள் இய்ற்கை! சீக்கிரமே விகடன் வரவேற்பறைலயும் இடம் பிடிங்க!
//
நன்றிங்க சிபி.முயற்சிக்கிறேன்
நன்றிங்க ஸ்ரீமதி
நன்றிங்க தமிழன்-கறுப்பி...
Post a Comment