இந்த தேர்தலில் வாக்களிப்பது கட்டாயம்
Saturday, March 28, 2009
உலகின் மிகப் பெரும் தேர்தல் இன்று நடக்கிறது.இந்த தேர்தலில் உலக மக்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.
வேட்பாளர்கள்
1.புவியின் அதிகரிக்கும் வெப்பம்
2.புவியைக் காக்கும் முயற்சி.
வாக்குப்பதிவு நேரம்
8.30PM to 9.30PM (அவரவர் நாட்டு நேரம்)
வாக்குப்பதிவு நாள் 28 மார்ச் 2009 (அனைத்து ஆண்டுகளும்)
வாக்குப்பதிவு இடம்
அவரவர் அலுவலகம்,வீடு அல்லது அந்த நேரத்தில் நீங்கள் இருக்கும் இடம்
ஓட்டளிக்கும் முறை
மின்சாதனங்கள் அனைத்தையும் switch off செய்வது
இதில் யார் வெற்றி பெற்றால் நமக்கு நல்லது என்பதையும், வெற்றிபெற வேண்டியவர் தோற்பதின் விளைவுகளையும் சிந்தித்து வாக்களியுங்கள்
மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக்குங்கள்
Earth hour
Puvinaeram
.
Labels:
விழிப்புணர்வு
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
என்னாங்கோ!
சூப்பர், கண்டிப்பா செஞ்சுடலாம். ஆனா என்னை விட ஆற்காடு வீராசாமி தான் இந்த விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருப்பாரு:-))
உலகின் மிகப் பெரும் தேர்தல் இன்று நடக்கிறது.இந்த தேர்தலில் உலக மக்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.
///
இப்பத்தான் எனக்குப்புரியுது!!!
நம்ம தெர்தல்ன்னு நினைத்து மேலே பின்னூட்டமிட்டு விட்டேன்!!
//சூப்பர், கண்டிப்பா செஞ்சுடலாம். ஆனா என்னை விட ஆற்காடு வீராசாமி தான் இந்த விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருப்பாரு:-))//
ஹிஹி.. அபிஅப்பா.. அம்மணி குடுத்திருக்கிற என்னோட பதிவின் லின்கை அமுக்கிப் போய் பாருங்க.. நானும் ஆற்காட்டாரை மைல்டா வாரி இருக்கிறேன். :))
ஒளியின் உபயோகத்தையும், அதன் பயனையும் தெரிந்துக்கொள்ள யத்தனிக்கும் ஒரு விடயம். சிட்டியில் உள்ள மக்கள் அவ்வளவாக அனுபவிப்பதில்லை, ஒருமணிநேரம் எலெக்ட்ரிக் பவர் இல்லியேல் என்ன கதி என்பதை நினைவுகூரும்
எங்க ஊருல இ.பி.காரங்க உங்க பதிவை படிச்சு இருப்பாங்க போல. கரெக்டா 8.30க்கு பவர்கட்டுங்க.
நாமதான் தினமும் ஓட்டுப் போடுறொம்ல. (என்னைக்குங்க நமக்கு ஒழுங்கா கரெண்டு வந்திருக்கு).
வாங்க ஜமால்:-)
//அபி அப்பா said...
சூப்பர், கண்டிப்பா செஞ்சுடலாம். ஆனா என்னை விட ஆற்காடு வீராசாமி தான் இந்த விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருப்பாரு:-))//
ஒரு உடன்பிறப்பு மாதிரியா பேசறீங்க....உங்களையெல்லாம் நம்பி கலைஞர் என்ன பண்ணபோறாரோ பாவம்:))
thevanmayam said...
உலகின் மிகப் பெரும் தேர்தல் இன்று நடக்கிறது.இந்த தேர்தலில் உலக மக்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.
///
இப்பத்தான் எனக்குப்புரியுது!!!
நம்ம தெர்தல்ன்னு நினைத்து மேலே பின்னூட்டமிட்டு விட்டேன்!!/////
இதுக்குத்தான் படிக்காம பின்னூட்டம் போடகூடாதுன்னு சொல்றது:)))))
///Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//சூப்பர், கண்டிப்பா செஞ்சுடலாம். ஆனா என்னை விட ஆற்காடு வீராசாமி தான் இந்த விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருப்பாரு:-))//
ஹிஹி.. அபிஅப்பா.. அம்மணி குடுத்திருக்கிற என்னோட பதிவின் லின்கை அமுக்கிப் போய் பாருங்க.. நானும் ஆற்காட்டாரை மைல்டா வாரி இருக்கிறேன். :))
///
ஜஞ்ஜயி....உங்க கட்சியோட முக்கிய கொள்கையே கூட்டணி கட்சிய கலாய்க்கிறதா?
//தாரணி பிரியா said...
எங்க ஊருல இ.பி.காரங்க உங்க பதிவை படிச்சு இருப்பாங்க போல. கரெக்டா 8.30க்கு பவர்கட்டுங்க.
//
என்னங்க பண்றது..கோயம்புத்தூர் காரங்க அவ்ளோ வெவரமானவிங்க
உண்மைங்க அபுஅஃப்ஸர்
ஒரு வழியா என் பிளாக் வந்திடீங்களா மகா:-)))
Post a Comment