ஏன் இந்த‌ மாற்ற‌ம் என்னுள்ளே:‍)

Wednesday, March 4, 2009

நேற்று வ‌ரை அம்மாவின் க‌த்த‌லுக்கு
எட்டு ம‌ணிக்கும் அசையாத‌ என் தூக்கம்
இன்று ம‌ட்டும் அதிகாலையிலேயே
வில‌கி ஓடிய‌து எப்ப‌டி?

நேற்று வ‌ரை துவைக்காத‌ ஜீன்ஸையே
என் ஆடையாய் தேர்ந்தெடுத்த‌ என் ம‌ன‌ம்
இன்று ம‌ட்டும் ம‌டிப்பு க‌லையாத‌
ஃபார்ம‌ல்ஸை(formals) தேடுவ‌து ஏன்?

நேற்று வ‌ரை பேருந்து நிறுத்த‌த்தைக் க‌ட‌ந்த‌பின்
துர‌த்திச் சென்று தாவி ஏறும் என் கால்க‌ள்
இன்று ம‌ட்டும் அரைமணி முன்ன‌தாக‌வே
நிறுத்த‌த்தில் காத்திருப்ப‌து யாருக்கு?

நேற்று வ‌ரை புத்த‌க‌த்தின் வாச‌னையையே
தேர்வு நேர‌ங்க‌ளில் ம‌ட்டும் நுக‌ர்ந்த‌ என் நாசி
இன்று ம‌ட்டும் புத்த‌க‌க் காற்றையே
மூச்சுக் காற்றாய் கொண்ட‌து எத‌னால்?

நேற்று வ‌ரை க‌ல்லூரி வ‌ருவ‌து எதிர்ப்புற‌ ம‌க‌ளிர் க‌ல்லூரியை
க‌ண்காணிக்க‌த்தான் என்றிருந்த‌ என் க‌ண்க‌ள்
இன்று ம‌ட்டும் அக் க‌ல்லூரி ப‌க்க‌மே
திரும்ப‌ ம‌றுப்ப‌து ஏன்?


விடை தெரியா வினாக்க‌ள் இதேபோல் நீள‌,
உன்னைக் க‌ண்டேன்..ம‌கிழ்ந்தேன்..
என் மாற்ற‌ங்க‌ளின் ம‌ர்ம‌ம் கேட்டேன்...
நீ சொன்னாய்..
தோழா ...இன்று நீ புதிதாய் பெற்ற‌ ஒன்றுதான் இத‌ற்கான‌ கார‌ண‌ம்..என‌ச் சிரித்தாய்ஆம்.. நேற்று வ‌ரை நீ க‌ல்லூரியின் மாண‌வ‌ன்..
இன்று அதே க‌ல்லூரியின் ஆசிரிய‌ன்
உண‌ர்ந்தேன்.மாற்ற‌ங்க‌ளால் நிறைந்தேன்:-)

.

49 comments:

வெற்றி said...

இயற்கை எப்படி இப்படியெல்லாம். கலக்கல். கடைசி வரி வரை சஸ்பென்ஸாக இருந்தது
மற்றுமொரு அருமையானப் பதிவு.

நட்புடன் ஜமால் said...

அட கடைசில அப்படியே மாத்திட்டீங்களே

இருப்பினும் மிகவும் அருமை

இரசித்தேன்.

நட்புடன் ஜமால் said...

மீண்டும் ஒரு முறை படித்து இரசித்தேன்.

Mohan R said...

மீண்டும் ஒரு முறை படித்து இரசித்தேன்.

repeat pls

Divyapriya said...

பட்டாசு கவிதை :)) கடைசி வரைக்கும் என்னவோ ஏதோன்னு நினைச்சுட்டு, கடைசியில ’அட’ போட வச்சுட்டீங்க :))

அப்துல்மாலிக் said...

அருமையான வரிகள்

எப்படியோ சென்ற வரிகளை கடைசியில் இப்படி ஆகிடுச்சே

கலக்கல் எழுத்தோட்டம்

Anonymous said...

அருமை

புதியவன் said...

//நேற்று வ‌ரை நீ க‌ல்லூரியின் மாண‌வ‌ன்..
இன்று அதே க‌ல்லூரியின் ஆசிரிய‌ன்//

யூகிக்க முடியாத முடிவு...கவிதை அருமை...

Anonymous said...

அட்டகாசமா இருக்கு.

Mohan said...

நல்லா இருக்கு உங்கள் கவிதை! யாரோ ஒரு பெண்ணால்தான் இந்த மாற்றம் என்று நம்பி படித்த என்னை கடைசியில் வேலையே இதற்கு காரணம் என்று முடித்து விட்டீர்கள்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அற்புதம். மாறினாலும் எண்ணங்களின் வித்தியாசத்தை தெரிந்து அனைத்தையும் உள்வாங்கி மகளிர் கல்லூரியை தவிர்க்க நினைத்து மகளிரை தவிர்க்க முடியாமல் அற்புதம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது இயற்கை...

Anonymous said...

Soooppperrrr

Anonymous said...

nalla kavidai..sariyana twist:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

அட சாமி.. இது எங்களுக்கு வச்ச ஆப்பா.. அவ்வ்வ்வ்.. ஆனா.. உண்மை தோழி.. சத்தியமாக இப்படித்தான் இருக்கிறோம்..

நட்புடன் ஜமால் said...

யூத் விகடன் வாழ்த்துகள்

Anonymous said...

haiii.naanum ippo than paakaren.thank you very much Jamal:-)

Anonymous said...

விகடன்ல இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.. :)

Anonymous said...

வாழ்த்துக்கள்.

மாசற்ற கொடி said...

Very nice and different one ! Congratulations for youth Vikatan.

Anbudan
Masatra Kodi.

FunScribbler said...

கலக்கீட்டீங்க போங்க....ரொம்ப நல்லா இருந்துச்சு! கடைசில இருந்த டிவிஸ்ட் சூப்பர்!:)

*இயற்கை ராஜி* said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அட சாமி.. இது எங்களுக்கு வச்ச ஆப்பா.. அவ்வ்வ்வ்.. ஆனா.. உண்மை தோழி.. சத்தியமாக இப்படித்தான் இருக்கிறோம்..//

தெரிஞ்சுதானே போட்டேன் தோழா

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி ச‌ஞ்ச‌ய், ச‌ங்கீதா:-)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி Massattra Kodi

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி Thamizhmaangani

காரணம் ஆயிரம்™ said...

கிட்டத்தட்ட, மறுநாளே மாணவனிலிருந்து ஆசிரியனாக மாறிய என் கதை மாதிரிதான் இருக்கிறது.. :))நன்றாகயிருந்தது...
வாழ்த்துக்கள்.. :)

அன்புடன்,
கார்த்திக்

*இயற்கை ராஜி* said...

//தேனியார் said...
இயற்கை எப்படி இப்படியெல்லாம். கலக்கல். கடைசி வரி வரை சஸ்பென்ஸாக இருந்தது
மற்றுமொரு அருமையானப் பதிவு.//க‌விதை ரொம்ப‌தான் ந‌ல்லா வந்திருச்சோ அண்ணா:)

*இயற்கை ராஜி* said...

திரும்ப‌ திரும்ப‌ ப‌டியுங்க‌ ஜமால்:-)).. ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ இவன்:-)

*இயற்கை ராஜி* said...

@இவன்...உங்க‌ க‌விதைக‌ளும் அழ‌குதான் மோக‌ன்:-)

*இயற்கை ராஜி* said...

Thanks Geethakkka:-))

*இயற்கை ராஜி* said...

//புதியவன் said...
//நேற்று வ‌ரை நீ க‌ல்லூரியின் மாண‌வ‌ன்..
இன்று அதே க‌ல்லூரியின் ஆசிரிய‌ன்//

யூகிக்க முடியாத முடிவு...கவிதை அருமை...//

ஒரு க‌விஞ‌ர் பாராட்டுவ‌தில் பெருமை என‌க்கு

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ மகா :-))

*இயற்கை ராஜி* said...

ந‌ல்லா ஏமாந்தீங்க‌ளா மோக‌ன்:-))))))

*இயற்கை ராஜி* said...

க‌மெண்டையே ஒரு க‌விதை மாதிரி போட்டிருக்கீங்க‌. ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

க‌மெண்டையே ஒரு க‌விதை மாதிரி போட்டிருக்கீங்க‌. ந‌ன்றிங்க‌ SUREஷ்

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ அபுஅஃப்ஸர்

*இயற்கை ராஜி* said...

நீங்க‌ க‌தைக‌ள்ல‌ போட‌வைக்கிற‌ "அட" அள‌வுக்கு இல்லைங்க‌. Divyapriya ந‌ன்றி

Unknown said...

சூப்பர்.
கடைசில ஒரு திருப்பம்.எல்லோருமே
காதல்னுதான நினைப்பாங்க.(not out of box thinking)ஆனா இந்த வரிகள்
கொஞ்சம் குழப்பியது.
//இன்று ம‌ட்டும் புத்த‌க‌க் காற்றையே
மூச்சுக் காற்றாய் கொண்ட‌து எத‌னால்?//

*இயற்கை ராஜி* said...

கார்த்திகேயன் ந‌ன்றிங்க‌:-)

*இயற்கை ராஜி* said...

//கே.ரவிஷங்கர் said...
சூப்பர்.
கடைசில ஒரு திருப்பம்.எல்லோருமே
காதல்னுதான நினைப்பாங்க.(not out of box thinking)ஆனா இந்த வரிகள்
கொஞ்சம் குழப்பியது.
//இன்று ம‌ட்டும் புத்த‌க‌க் காற்றையே
மூச்சுக் காற்றாய் கொண்ட‌து எத‌னால்?////

மாண‌வ‌னாயிருக்கும் போது தேர்வு நேர‌த்தில்,தேர்வுக்குரிய‌தை ம‌ட்டும் ப‌டித்தால் போதும்.ஆனால் ஆசிரிய‌ர் எந் நேர‌மும் updated ஆக‌ இருக்க‌வேண்டும்.மாண‌வ‌ன் எந்த‌ நேர‌த்திலும் எதைப்ப‌ற்றியும் ச‌ந்தேக‌ம் கேட்க‌லாமே!!!மேலும் தின‌மும் வ‌குப்பு எடுக்க‌ தின‌மும் ப‌டித்தாக‌ வேண்டிய‌து க‌ட்டாய‌ம்

நாமக்கல் சிபி said...

:)

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ சிபி:‍)

சந்துரு said...

நல்ல வார்த்தைகள், நல்ல திருப்பம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ சந்துரு

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா இருக்கு. எல்லோரும் சொல்ற காதல்னு தான் நீங்களும் முடிப்பீங்கன்னு எதிர்பார்த்து, அது இல்லைனதும் நல்லா இருக்கு.

*இயற்கை ராஜி* said...

vangka விக்னேஷ்வரி..nandri ngka

Venkatesh Kumaravel said...

உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html

Indhu said...

simply superb..I didnt expect the last line.
When i was reading the last line I forget myself& clap my hands.

I really wonder,great ....