Showing posts with label விக‌ட‌ன். Show all posts
Showing posts with label விக‌ட‌ன். Show all posts

யூத்ஃபுல் விக‌ட‌னும் சில‌ ப‌திவ‌ர்க‌ளும்

Friday, March 6, 2009
புராஜ‌க்ட் ரிப்போர்ட்டும்,ரெகார்ட் நோட் புக்கும் அப்போ அப்போ கொஞ்ச‌ம் கிளாஸ் நோட்ஸ் ம்ன்னு எழுத்துன்னா அது இங்கிலீஷ்... இண்ட‌ர்நெட்ன்னா அது என் துறை சார்ந்த‌ ட‌வுன்லோடுக்கு என்று இருந்த‌ என‌க்கு இப்ப‌டி ஒரு வ‌லையுல‌க‌ம் இருக்கிற‌து என்ப‌தை அறிமுக‌ம் செய்த‌து ஏதோ ஒரு கூகுல் ச‌ர்ச் ல் திற‌ந்த‌ ச‌ஞ்ச‌யின் இந்த‌ வ‌லைப்ப‌திவு.எல்லாரும் எழுதுவ‌தைப் ப‌டித்து நம‌க்கும் த‌மிழ்ல‌ எழுத‌வ‌ருமான்னு முய‌ற்சிப்போமே என்ற எடுத்த‌ முய‌ற்சி தான் என் வ‌லைப்பூ.வ‌லைப்பூ ன்னா என்ன‌ன்னே தெரியாத‌ கால‌த்துல‌ ஆர‌ம்பிச்ச‌தால‌ க‌மெண்ட் போட‌ற‌து எப்ப‌டின்னு கூட‌த் தெரியாம‌ இருந்தேன். நான் அப்போ அப்போ கேக்க‌ற‌ சின்ன‌ப்புள்ளத்த‌ன‌மான ச்ந்தேக‌த்தையெல்லாம் தீர்க்கிற‌ ச‌ஞ்ச‌ய்க்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌:‍)

இந்த‌ வ‌லையுல‌கில் நுழைந்த‌தில் நான் பெற்ற‌ த‌மிழ் அறிவும், ந‌ட்புக‌ளும் நிச்ச‌ய‌மாய் ஏராள‌ம்.இத‌ற்கு முழுமுத‌ல் கார‌ண‌ம் தாராள‌மாய் நீங்க‌ள் எல்லோரும் கொடுத்த‌ ஊக்க‌ம். அனைவ‌ருக்கும் ந‌ன்றி.

இனிமேலும் உங்க‌ளையெல்லாம் கொடுமைப‌டுத்த‌னுமா.. பிளாக்கை மூடி உங்க‌ளையெல்லாம் காப்பாத்திட‌லாமான்னு பூவா த‌லையா போட்டிட்டுருந்த‌ நேர‌த்தில் தேவா வ‌லைச்ச‌ர‌த்தில் என்னை அறிமுக‌ம் செய்தார்.(மிக்க‌ ந‌ன்றி தேவா).உட‌னே "ஆஹா..இய‌ற்கை.. நீ நெஜ‌ம்மாவே ந‌ல்லா எழுதற‌"ன்னு என்னை நானே த‌ட்டி குடுத்திட்டு பிளாக்கை மூட‌ற‌ முடிவை த‌ள்ளி வ‌ச்சிட்டேன்.அப்போ வான‌த்துல‌ ப‌ற‌க்க‌ ஆர‌ம்பிச்ச‌தே இன்னும் நிலைவ‌ந்து சேர‌ல‌.


இந்த‌ அழ‌குல‌ யூத்ஃபுல் விக‌ட‌ன் குட் பிளாக்ல‌ வேற‌ என்னோட‌‌ "ஏன் இந்த‌ மாற்ற‌ம் என்னுள்ளே" ங்கிற‌ க‌விதையை போட்டுட்டாங்க‌(அந்த‌ செய்தியைச் சொன்ன‌ ஜ‌மாலுக்கு ந‌ன்றி).அத‌னால‌ இப்போ வான‌த்தையும் தாண்டி ப‌ற‌க்க‌ ஆர‌ம்பிச்சுட்டேன்.

நான் இவ்ளோ ப‌ண்ணினாலும்,ஒரு போஸ்டாவ‌து ந‌ல்லா போடாம‌ விட‌மாட்டோம்ன்னு சில‌,ப‌ல‌ பேர் என் பிளாக்குக்கு Followersஆ வேற‌ இருக்காங்க‌.அவ‌ங்க‌ளோட‌ பொறுமைக்கு ஸ்பெச‌ல் ந‌ன்றிக‌ள்.ஒரு நாளாவ‌து,உருப்ப‌டியா ஏதாவது எழுதி உங்க‌ எல்லார் ஆசையையும் நிறைவேத்த‌ க‌ண்டிப்பா முய‌ற்சி ப‌ண்றேன்.

ம‌க்க‌ளே! என் ப‌டைப்புக‌ள்கிற‌ பேர்ல‌ நான் ப‌ண்ற‌ கொடுமைக்கெல்லாம் நான் ம‌ட்டும் கார‌ண‌ம் அல்ல‌.என்னை இந்த‌ மாதிரி ஊக்க‌ப்ப‌டுத்த‌ற‌வ‌ங்க‌ளுக்குப் பெரும்‌ ப‌ங்கு இருக்கு.
அதுக்காக‌ப் யாரும் அவ‌ங்க‌மேல‌யெல்லாம் கோப‌ப்ப‌ட்டுக்காதீங்க‌.அவ‌ங்க‌ளே பாவ‌ம் என் கொடுமையைத் தாங்க‌வும் முடியாம‌,வெளில‌ சொல்ல‌வும் முடியாம‌ ம‌ன‌சுக்குள்ள‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டுட்டு இருக்காங்க‌..

அவ‌ங்க‌ மேல‌ பாவ‌ப்ப‌ட்டு நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்..(யார் அது..பிளாக்கை மூட‌ப்போறியான்னு கேக்க‌ற‌து)...அந்த‌ முடிவு என்ன‌ன்னா.... அவ‌ங்க‌ளுக்கும்,உங்க‌ளுக்கும் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி சொல்லிக்கிற‌து..ந‌ன்றி...ந‌ன்றி...ந‌ன்றி


.