தேவை என்ன‌?

Tuesday, June 30, 2009
ச‌க்திமான் ஸ்டீல்ஸ் அவ்வூரிலேயே புக‌ழ்பெற்ற இரும்பு பொருள் த‌யாரிக்கும் தொழிற்சாலை.அத‌ன் நிறுவ‌ன‌ர் ச‌க்திவேல்.அவ்வூரின் புக‌ழ்பெற்ற விஐபி.அவர‌து குடும்ப‌த்தின் குல‌ தெய்வ‌த்தின் முன் சோக‌மே உருவாக‌ நின்றிருந்தார்.கார‌ண‌ம் ஏற‌த்தாழ‌ கால் நூற்றாண்டாக‌ ஏறுமுக‌த்திலேயே இருந்த‌ க‌ம்பெனி சில‌ ஆண்டுக‌ளாக‌ அடி வாங்குகிற‌து.த‌யாரித்த‌ பொருட்க‌ள் பாதிக்கு மேல் தேங்கி கிட‌க்கிற‌து.இத‌னால் க‌ம்பெனியின் கையிருப்பு ப‌ண‌ம் குறைந்துவிட்ட‌து. ஷேர்க‌ள் ம‌திப்பு குறைய‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து.க‌டவுளே ..ஏன் இந்த‌ சோத‌னை.க‌ம்பெனி இனிமேல் அவ்வ‌ள‌வுதானா.? வாங்கிய‌ க‌ட‌ன்க‌ளுக்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌து?.இத‌ற்குமேல் என் கையில் ஏதும் இல்லை.ஏதாவ‌து வ‌ழிகாட்டு.இல்லைன்னா வீதிக்குதான் போக‌ணும்.என‌ புல‌ம்பிக் கொண்டிருந்தார்.க‌ண்க‌ளில் க‌ண்ணீர் எட்டிப்பார்க்கும் நிலையில் இருந்த‌து.

சிறிது ஆசுவாச‌ப்ப‌டுத்திக் கொண்டு,கோயிலின் ஒரு மூலையில் அம‌ர்ந்தார்.அப்போது ஒரு பெரிய‌வ‌ர் அவ‌ரிட‌ம் வ‌ந்தார்.
த‌ம்பி! ஏதோ பிர‌ச்சினைல‌ இருக்கீங்க‌ போல‌ இருக்கு? என்கிட்ட‌ சொல்லுங்க‌.என்னால‌ ஏதாவ‌து உத‌வி ப‌ண்ண முடியுமான்னு பாக்க‌றேன்


ஐயா.. நான் ஒரு தொழில‌திப‌ர்.ச‌க்திமான் ஸ்டீல்ஸ் தொழிற்சாலை என்னோட‌துதான்.க‌ம்பெனில‌ கொஞ்ச‌ம் பிர‌ச்சினை.அத‌னால‌ க‌ட‌வுள்கிட்ட‌ முறையிட்டாலாவ‌து வ‌ழி பிற‌க்குமான்னு வ‌ந்திருக்கேன்


ஓ..அப்ப‌டியா..க‌வ‌லைப்ப‌டாதீங்க‌.க‌ட‌வுள் வ‌ழி காட்டுவார்.இப்போ உங்க‌ளுக்கு ப‌ண‌ம் தானே பிர‌ச்சினை.ப‌ண‌த்துக்கு வ‌ழி நான் செய்றேன்.இருங்க‌ என்று சொல்லிவிட்டு,எங்கேயோ போய்விட்டு,சில‌ நிமிட‌ங்க‌ளில் ஒரு "செக்"உட‌ன் வ‌ந்தார்.

இந்தாங்க‌,இதை வ‌ச்சிகிட்டு உங்க‌ பிஸின‌ஸை டெவ‌ல‌ப் ப‌ண்ணுங்க‌ என்றார்.


வாங்கிப் பார்த்தால்,அதில் 5,00,000 ரூபாய் எழுதியிருந்த‌து.இவ‌ர் ஆச்ச‌ரிய‌மாய் பார்த்தார்.

என்ன‌ பாக்க‌றீங்க‌. நான் தான் இந்த‌ ஊரின் பெரும் ப‌ண‌க்கார‌ர்க‌ளில் ஒருவ‌னான‌ சோம‌சுந்த‌ர‌ம்.என்னோட‌ ப‌ண‌த்தால‌ நீங்க‌ முன்னேறினா என‌க்கு ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்‌ ..


ஐயா..ரொம்ப‌ ந‌ன்றி. என்னோட‌ இன்றைய‌ நிலையில் இந்த‌ப் ப‌ண‌ம் நிச்ச‌ய‌மாய் என் வாழ்வை மீட்டெடுக்கும்.இந்த‌ ப‌ண‌த்தை எப்ப‌டி உங்க‌கிட்ட‌ திருப்பி த‌ர்ற‌து?

இன்னும் ஒரு வ‌ருஷ‌ம் க‌ழிச்சி இதே இட‌த்துக்கு வாங்க‌.உங‌க‌ளால‌ எவ்ளோ ப‌ண‌ம் திருப்பி த‌ர‌ முடியுமோ குடுங‌க‌..

என்று கூறி விட்டு வேக‌மாய் அவ்விட‌த்தை விட்டு அக‌ன்று விட்டார்.

குல‌தெய்வ‌மே மானிட‌ உருவில் வ‌ந்து உத‌விய‌தாய் எண்ணி ச‌க்திவேல் ம‌கிழ்ந்தார்.அச்செக்கை ப‌த்திர‌ப்ப‌டுத்திக் கொண்டார்.


ஆனால் அந்த‌ செக்கில் ப‌ண‌த்தை எடுக்காம‌ல் அவ‌ரிட‌மிருந்த‌ ப‌ண‌த்தை வைத்தே மீண்டும் தொழிலில் ப‌ழைய‌ நிலையை அடைந்தார்.அவ‌ரிட‌மிருந்த‌ அந்த‌ செக் எத்த‌கைய‌ ரிஸ்க் எடுக்க‌வும் அவ‌ருக்கு தைரிய‌த்தை அளித்த‌து. ந‌ம்மிட‌ம் 5,00,000 ரூபாய் இருக்கிற‌து என்னும் நினைவே அவ‌ருக்கு புது தெம்பை த‌ந்த‌து.


ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து,அந்த‌ப் பெரிய‌வ‌ருக்கு நான்றி சொல்ல‌ அதே கோயிலுக்கு விரைந்தார்.கையில் அப்பெரிய‌வ‌ர் கொடுத்த‌ செக் அப்ப‌டியே இருந்த‌து.


அப்பெரிய‌வ‌ர் ம‌ல‌ர்ந்த‌ முக‌த்துட‌ன் இவ‌ர‌ருகே வ‌ந்தார்.அப்போது ஒரு பெண்ம‌ணி, அந்த‌ப் பெரிய‌வ‌ரை விர‌ட்டி அடித்தார்.அவ‌ரும் ப‌ய‌ந்து ஓடி விட்டார்.

ச‌க்திவேல் ச‌ற்று கோப‌த்துட‌னே அப்பெண்ணிட‌ம் கேட்டார்.என்ன‌ம்மா ..அவ‌ரை ஏன் துர‌த்துறீங்க‌.பெரிய‌வ‌ங்கிட்ட‌ எப்ப‌டி ந‌ட‌ந்துக்க‌னும்ன்னு தெரியாதா ?



அய்யா..அது ஒரு லூசுங்க‌.அஞ்சாறு வ‌ருஷ‌மா இந்த‌ ப‌க்க‌ம் சுத்திட்டு இருக்கு.‌வர்ற‌வ‌ங்க‌ போற‌வ‌ங்க‌ கிட்ட‌யெல்லாம் நான் தான் இ ந்த‌ உல‌க‌த்திலேயே பெரிய‌ ப‌ண‌க்கார‌ன்,உன‌க்கு ப‌ண‌ம் வேணும்னா சொல்லு நான் த‌ர்றேன்னு,ஒரு செக் புக்கை வேற‌ கைல‌ வ‌ச்சிகிட்டு சுத்தும். என்று கூறிவிட்டு போய்விட்டார் அப்பெண்..


ச‌க்திவேல் குழ‌ம்பிபோனார்.பின்ன‌ர்தான் புரிந்த‌து.ஓராண்டிற்குமுன் அவ‌ருக்கு தேவைப்ப‌ட்ட‌து ப‌ணம் அல்ல‌..த‌ன்ன‌ம்பிக்கை.


Note:என‌க்கு வ‌ந்த‌ ஒரு மின்ன‌ஞ்ச‌லைக் கொண்டு எழுதிய‌து.

.

தாய்மொழியில் ம‌ட்டுமே பேசுவ‌து ச‌ரியா?

Sunday, June 28, 2009
ஒரு வெளிநாட்டை சேர்ந்த‌ வ‌ர‌லாற்று ஆராய்ச்சி மாணாவ‌ர் ஒருவ‌ர் இந்தியாவைப் ப‌ற்றி ஆராய்ச்சி செய்ய‌ முடிவு செய்தார்.இ ந்தியாவைப் ப‌ற்றி அறிய‌ இந்தியா வ‌ந்தார்.வ‌ ந்திற‌ங்கிய‌து மும்பை விமான‌ நிலைய‌ம்.

மும்பைக்கு வ‌ந்த‌ அவ‌ர் நேரா போன‌து கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு..சில‌ ம‌ணி நேர‌ம் சுற்றி பார்த்து விட்டு அங்கிருந்த‌வ‌ரிட‌ம் இங்கிலீஷில் கேட்டார்."Who bulit this great structure?". (ந‌ம்ம‌ ஹிந்திகார‌ங்களைப் ப‌த்திதான் தெரியுமே..இங்கிலீஷ் தெரிஞ்சாலும் ஹிந்தில‌ தான் ப‌தில் சொல்லுவாங்க‌)..அங்கிருந்த‌வ‌ருக்கு ப‌தில் தெரிய‌ல‌..அத‌னால் அவ‌ர் சொன்னார் " ந‌ஹி மாலும் ஜி" (தெரியாதுங்க‌)..
அந்த‌ வெளிநாட்டுக்கார‌ர்..கேட் வே ஆஃப் இந்தியாவை க‌ட்டிய‌வ‌ர் பெய‌ர் " ந‌ஹி மாலும் ஜி" என‌ குறித்துக் கொண்டார்.


பின்ன‌ர் அங்கிருந்து குதுப்மினார் பார்க்க‌ போனார்.அங்கேயும் குதுப்மினாரைக் க‌ட்டியவார் பேரைக் அருகிலிருந்த‌வ‌ரிட‌ம் கேட்டார்.அங்கிருந்த‌வ‌ருக்கும் ப‌தில் தெரிய‌ல‌..அத‌னால் அவ‌ர் சொன்னார் " ந‌ஹி மாலும் ஜி" .அந்த‌ வெளிநாட்டுக்கார‌ர்..ஆஹா..இதையும் ந‌ஹி மாலும் ஜி தான் க‌ட்டினாரா..அவ‌ர் பெரிய‌ ஆள் போல‌ இருக்கே என‌ ம‌ன‌துக்குள் பாராட்டி குறித்துக் கொண்டார்.

பின்ன‌ர் அங்கிருந்து ஆக்ரா சென்றார். அங்கேயும் இதே க‌தை.அவ‌ருக்கு ஒரே ஆச்ச‌ரிய‌ம். இந்தியாவில் எவ்ளோ பெரிய‌ ம‌னித‌ர்க‌ள் எல்லாம் வாழ் ந்திருக்காங்க‌.ஒரே ம‌னித‌ர் இத்த‌னை இட‌ங்க‌ளில் இவ்ளோ பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ளையெல்லாம் க‌ட்டியிருக்க‌றாரே என‌ இந்திய‌ர்க‌ளைப் ப‌ற்றி மிக‌ உய‌ர்வாய் எண்ணினார்.


பின்ன‌ர் ஒரு நாள் காசியின் வீதிக‌ளில் போய் கொண்டிருந்தார்.அங்கே ஒரு இற‌ந்த‌ ச‌ட‌ல‌த்தை ந‌க‌ராட்சிப் ப‌ணியாளார்க‌ள் தூக்கிப் போய் கொண்டிருந்தார்க‌ள். அதைக் க‌ண்ட‌ இவ‌ர் அ ந்த‌ ந‌க‌ராட்சிப் ப‌ணியாளாரிட‌ம் கேட்டார்."Who is this?" அவ‌ர் சொன்னார்.. "ந‌ஹி மாலும் ஜி"


இவ‌ருக்கு வ‌ந்த‌தே ஆத்திர‌ம்.காச் மூச்ன்னு க‌த்திட்டு போய்ட்டார். பின்ன‌ர் அவ‌ர் ரிப்போர்ட் எழுதினார்..இந்திய‌ர்க‌ள் ந‌ன்றி கெட்ட‌வ‌ர்க‌ள். ந‌ஹி மாலும் ஜி என்ப‌வ‌ர் இந்தியாவில் ஒரு மிக‌ப்பெரிய‌ ம‌னித‌ர். ப‌ல‌ புக‌ழ்பெற்ற க‌ட்டிட‌ங்க‌ளைக் க‌ட்டிய‌வ‌ர். இந்தியாவின் புக‌ழுக்கு கார‌ண‌மான‌ ப‌ல‌ நினைவுச்சின்ன‌ங்க‌ளை எழுப்பிய‌வ‌ர். அவ‌ருக்கு யாரும் உரிய‌ ம‌ரியாதை த‌ருவ‌தில்லை.அவ‌ர‌து இறுதி ஊர்வ‌ல‌த்தில் கூட‌ யாருமே க‌ல‌ந்து கொள்ளவில்லை.இந்திய‌ர்க‌ள் மிக‌ மோச‌மான‌வ‌ர்க‌ள்..


குறிப்பு: இது சிரிக்க‌ ம‌ட்டுமே..சிந்திக்க‌ அல்ல‌....ஹி..ஹி..ஹி..
சிரிச்சிட்டு அப்ப‌டியே த‌மிழ்மண‌த்தில் ஒரு ஓட்டு போட்டுடுங்க.
இந்த க‌தையை நானும் உரையாட‌ல் போட்டிக்கு அனுப்பிட்டேனே
.

உங்க‌ள் வேலை எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌மான‌து என்ப‌தை க‌ண்ட‌றிய ஒரு குவிஸ்

Friday, June 26, 2009
நீங்க‌ செய்யும் வேலையில் இருக்கும் க‌ஷ்ட‌ங்க‌ள் உங்க‌ளுக்கு தெரியும்.எந்த‌ அள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை நீங்க‌ வேலைல‌ அனுப‌விக்க‌றீங்க‌ன்னு தெரிய‌னுமா?கீழே வ‌ரும் கேள்விக்கெல்லாம் ப‌தில் சொல்லுங்க‌.எவ்ளோ அதிக‌மான‌ கேள்விக்கு "ஆம்" ப‌தில் சொல்றீங்க‌ன்னு நோட் ப‌ண்ணிக்கோங்க‌.

உங்க‌ள் வேலைப் ப‌ளு இதை விட‌ அதிக‌மா?




ஆஃபீஸில் ஏசி,ஃபேன் அடிக்க‌டி ம‌க்க‌ர் ப‌ண்ணுதா? டெம்ப்ரேச்ச்ர் இவ‌ர்க‌ள் வேலையிட‌த்தை விட‌ அதிக‌மாய் போகுதா?




உங்க‌ ஆஃபீஸ் ரூமை ச‌ரியா ஸ்வீப்ப‌ர்ஸ் கிளீன் ப‌ண்ற‌தே இல்லையா?இதை விட‌ குப்பையாவா இருக்கு உங‌க‌ ஆஃபீஸ் ரூம்?



இதில் இருக்கும் ரிஸ்க்கை விட‌வா உங்க‌ லைஃப்ல‌ ரிஸ்க் அதிக‌ம்?



உங்க‌ள் பேச்சுக்கு ஆஃபீஸ்ல‌ யாரும் ச‌ரியா ரெஸ்பான்ஸ் த‌ர்றது இல்லை,இக்னோர் ப‌ண்றாங்க‌ன்னு குறைப்ப‌ட‌ரீங்க‌ளா..இ ந்த‌ சிறுமியை விட‌ அதிக‌மாவா புற‌க்க‌ணிக்கப்ப‌ட‌றீங்க‌‌?




நிச்ச‌ய‌மாய்த் தெரியும்.ஒரு கேள்விக்கும் ஆம்ன்னு ப‌தில் சொல்லி இருக்க‌மாட்டீங்க‌.


உல‌கில் எவ்ளோ ம‌க்க‌ள் ந‌ம்ம‌ளைவிட‌ தாழ்ந்த‌ நிலைல‌ இருக்காங்க‌ன்னு தெரிஞ்சிகிட்டீங்க‌ளா..க‌வ‌லைக‌ளைத் தூக்கி தூர‌ப் போட்டுட்டு வேலையை பாருங்க‌.முடிஞ்சா க‌ஷ்ட‌ப‌ட‌ற‌வ‌ங்க‌ளுக்கு ஏதாவ‌து உத‌வி ப‌ண்ண முடியுமான்னு பாருங‌க‌

என்ன‌ருகே நீ இருந்தும்.....(5)

Monday, June 22, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 4ம் ப‌குதி



இதைப் போன்ற‌ கேள்விக‌ள் எங்க‌ளைப் பார்க்கும் ப‌ல‌ரிடமிருந்தும் வ‌ந்த‌ன‌. நான் யோசிக்க‌ ஆர‌ம்பித்தேன் இதுவ‌ரை யோசித்திராத‌ புது கோண‌த்தில். இந்நாட்க‌ளில் எக்ஸாம் ஆர‌ம்பித்த‌தால் அவ‌ள் ப‌டிப்பில் பிஸி ஆகிவிட்டாள். நாங்க‌ள் ஒன்றாய் க‌ழிக்கும் நேர‌ம் மிக‌க் குறைந்த‌து.அவ‌ளை ப‌ல‌ வ‌ருடங்க‌ளாய்காணாத‌ போது இருந்த‌ வேத‌னையை விட‌க் க‌டும்வேத‌னையை உணர்ந்தேன்.இனியொரு முறை அவ‌ளைப் பிரிய‌ நேரிட்டால், அது உயிர் பிரியும் வேத‌னையைத் தான் த‌ரும் என்ப‌து நித‌ர்ச‌ன‌மாய்த் தெரிந்த‌து
ப‌ல‌ நாள் யோச‌னைக்குப் பின் ஒரு முடிவுக்கு வ‌ந்தேன்.
அம்முடிவை அவ‌ளிட‌ம் வெளிப்ப‌டுத்தினால் ஏற்ப‌டும் விளைவுக‌ள் என்ன‌ என‌ அனுமானிக்க‌ முடிய‌வில்லை..சொன்னால் கோப‌ப்ப‌டுவாளோ.. ஏத்துக்குவாளோ..கோப‌ப்ப‌ட்டால் எப்ப‌டி ச‌மாளிப்ப‌து..அவ‌ள் முக‌த்தில் எப்ப‌டி விழிப்ப‌து?
எண்ண‌ அலைக‌ள் எப்போதும் என்னைச் சூழ்ந்த‌ன‌.

அவ‌ள் தேர்வுக‌ள் முடிந்த‌ நாளும் வ‌ந்த‌து.அவ‌ள் வீடு நோக்கி விரைந்தேன்.அவ‌ளுக்கு முன் வீட்டில் இருந்தேன்.

அவ‌ள் அம்மா க‌த‌வைத் திற‌ந்தாங்க‌.

ஆன்ட்டி எப்ப‌டி இருக்கீங்க‌?


ம்ம்.. ந‌ல்லா இருக்கேன். நீ எப்ப‌டி க‌ண்ணு இருக்கே?வீட்டு ப‌க்க‌மே ஆள‌க் காணோம்?


கொஞ்ச‌ம் வேலை ஆன்ட்டி.அதான் இப்போ வ‌ந்துட்டேனே.ஜ‌ன‌னி இன்னும் வ‌ர‌லியா?

இன்னும் இல்லை..ப‌ஸ் எல்லாம் ரொம்ப‌ ர‌ஷ் ஆ இருக்கு..லேட்டா கிள‌ம்பி வ‌ர்றேன்னு இப்போதான் போன் ப‌ண்ணினா..

ஓ..அப்ப‌டியா..ச‌ரி ஆன்ட்டி.. நான் போய் அவ‌ளை கூட்டிட்டு வ‌ந்துட‌றேன்..எங்க‌ இருக்கா?

அவ‌ பிர‌ண்ட் க‌விதா வீட்ல‌.. லேட் ஆகுது.. நீ சாப்பிடு..அப்புற‌ம் போலாம்..


இல்லை ஆன்ட்டி..அவ‌ளையும் போய் கூட்டிட்டு வ‌ந்துட‌றேன் ..சேர்ந்து சாப்டுக்க‌லாம்
நீங்க‌ அவ‌ளுக்கு போன் ப‌ண்ணி காலேஜ் என்ட்ர‌ன்ஸ்க்கு வ‌ர‌ச் சொல்லிடுங்க‌

ச‌ரி..போய்ட்டு வா..

கிள‌ம்பி போய் அவ‌ளை அழைத்து வ‌ந்து சாப்பிட்டு எவ்வ‌ள‌வோ க‌தைக‌ள் பேசியும் என் எண்ணத்தை வெளிப்ப‌டுத்தும் தைரிய‌ம் இல்லாம‌லே வீட்டைவிட்டு கிள‌ம்பினேன்.

கிள‌ம்பும்போது..
ஏய்..ம‌யிலு..இன்னிக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா?

ஏன் கேக்க‌றே?

சொல்லும்மா..ஃப்ரீயா..இல்லையா?

ஃப்ரீதான்..

ச‌ரி..அப்போ ஈவினிங் ரெடியா இரு..அம்மா ப‌ர்த்டேக்கு ஒரு சாரி வாங்க‌ணும்.வ‌ந்து செல‌க்ட் ப‌ண்ணுவியாம்..


ஓ..அடுத்த‌ வார‌ம் ..ஆன்ட்டி ப‌ர்த்டே வ‌ருதில்லே...ம‌ற‌ந்திட்டேன்..ச‌ரி போலாம்..எப்போ வ‌ருவே?

Around 6...அதுக்குமேல‌ லேட்டா போனா அங்கிள் கிட்ட‌ உதைதான் விழும்...

ஒகே..I will be waiting for you


அப்போது தெரிய‌வில்லை என‌க்கு என் எண்ண‌த்தை வெளிப்ப‌டுத்தும் தைரிய‌ம் ஈவினிங் வ‌ரும் என்று

((இந்த‌ ப‌குதி ஒரு மீள் ப‌திவு))
(தொட‌ரும்)

.

மெடிக்க‌ல்,எஞ்சினிய‌ரிங் சேர்க்கை ந‌ட‌ப்ப‌து என்ன‌?

Sunday, June 21, 2009
இன்றைய‌ தேதில‌ ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ள் எல்லாரோட‌ குறிக்கோளாவும் இருக்க‌ற‌து தொழிற்க‌ல்வி.
அதாவ‌து மெடிக்க‌ல் அல்ல‌து எஞ்சினிய‌ரிங்.இக்க‌ல்லூரிக‌ளில் சேர்வ‌தென்ப‌து க‌ட்ஆஃப் முத‌ல் க‌வுன்சிலிங் வ‌ரை ப‌ல‌ நிலைக‌ளை உள்ளட‌க்கியுள்ள‌து.அதெல்லாம் என்ன‌ என்ன‌ன்னு சொல்றேன்.தெரியாத‌வ‌ங்க‌ தெரிஞ்சிக்க‌..தெரிஞ்ச‌வ‌ங்க‌ த‌ப்பு ஏதும் இருந்தா பின்னூட்ட‌த்துல‌ சொல்லுங்க‌.

எக்ஸாம் எழுதும்போதே நாம‌ எப்ப‌டி எழுதி இருக்கோம் எவ்ளோ மார்க் வ‌ரும்ன்னு ஓர‌ள‌வுக்கு தெரிஞ்சிடும்.உட‌னே நாம் முடிவு ப‌ண்ண‌வேண்டிய‌து, ரிச‌ல்ட்க்காக‌ காத்திருந்து, வ‌ர்ற‌ மார்க்குக்கு ஏத்த‌ கோர்ஸ்ல‌ க‌வ‌ர்மெண்ட் கோட்டால‌ சேர‌ப்போரோமா இல்ல‌ மானேஜ்மெண்ட் கோட்டால‌ ந‌ம‌க்கு விருப்ப‌மான‌ க‌ல்லூரில‌ சேர‌ப்பொறோமான்னுதான்.
மானேஜ்மெண்ட் கோட்டான்னு முடிவு ப‌ண்ணிட்டீங்க‌ன்னா, எதைப்ப‌த்தியும் க‌வ‌லைப்ப‌டாம‌ நீங்க‌ விரும்ப‌ற‌ காலேஜ‌ சீக்கிர‌ம் அப்ரோச் ப‌ண்ணி அட்மிஷ‌ன் வாங்கிகோங்க‌.லேட் ப‌ண்ணினீங்க‌ன்னா,டிமாண்ட் அதிக‌மாகி கேபிடேஷ‌ன் ஃபீஸ் அதிக‌மானாலும் ஆக‌லாம்.

க‌வ‌ர்மெண்ட் கோட்டான்னு முடிவு ப‌ண்ணா,
1. ரிச‌ல்ட் வ‌ர்ற‌ வ‌ரை வெய்ட் ப‌ண்ணிடிருங்க‌.
2. நீங்க‌ விரும்ப‌ற‌ கோர்ஸ்க்கு அப்ளிகேஷ‌ன் எப்போ கிடைக்குதுன்னு பாத்து அப்ளிகேஷ‌ன் போட்டிருங்க‌.
3.க‌ட் ஆஃப்: இப்போ தான் ஆர‌ம்பிக்குது.க‌ட் ஆஃப் கால்குலெஷ‌ன். க‌ட் ஆஃப் மார்க்கை வ‌ச்சே உங்க‌ளுக்கு எந்த‌ காலேஜ் கிடைக்கும்ன்னு ஓர‌ள‌வுக்கு தெரிஞ்சிக்க‌லாம்.


க‌ட் ஆஃப் மார்க் (எஞ்சினிய‌ரிங்)=பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,ல‌ நீங்க‌ வாங்கின‌ மார்க்கை 50 க்கு க‌ன்வ‌ர்ட் ப‌ண்ணிகோங்க‌.


மாத்ஸ் மார்க்கை 100க்கு க‌ன்வ‌ர்ட் ப‌ண்ணிகோங்க‌. இ ந்த‌ ரெண்டோட‌ கூட்ட‌ல் தான் க‌ட் ஆஃப் மார்க் எஞ்சினிய‌ரிங் சேர்க்கைக்கு.

இதே ம‌ருத்துவ‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ப‌டிப்புன்னா

பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,ல‌ நீங்க‌ வாங்கின‌ மார்க்கை 50 க்கு க‌ன்வ‌ர்ட் ப‌ண்ணிகோங்க‌.

ப‌யால‌ஜி மார்க்கை 100க்கு க‌ன்வ‌ர்ட் ப‌ண்ணிகோங்க‌. இந்த‌ ரெண்டோட‌ கூட்ட‌ல் தான் க‌ட் ஆஃப் மார்க் ம‌ருத்துவ‌ம் சார்ந்த‌ ப‌டிப்பு சேர்க்கைக்கு.

இ ந்த‌ ஸ்டேஜ்க்கு அப்புற‌ம் ம‌ருத்துவ‌ம்,பொறியிய‌ல் சேர்க்கைக்கு வ‌ழிமுறைக‌ள் ஒரே மாதிரிதான்.

4.ரேங்க் லிஸ்ட்: வ‌ர்ற‌ அப்ளிகேஷ‌ன்ஸ வ‌ச்சி, மருத்துவ‌ம்,பொறியிய‌ல் ரெண்டுக்கும் த‌னித் த‌னி ரேங்க் லிஸ்ட் போடுவாங்க‌.


அப்ளை ப‌ண்ண‌துல‌ ப‌ல‌ மாண‌வ‌ர்க‌ள் ஒரே மார்க் வாங்கி இருந்தா அவ‌ங்க‌ளோட‌ பிற‌ பாட‌ ம‌திப்பெண்க‌ள்,பிற‌ந்த‌தேதி(மூத்த‌வ‌ருக்கே முன்னுரிமை)இதை வச்சி லிஸ்ட் போடுவாங்க‌.

இதில‌யும் ஒரே மாதிரி வ‌ர்ற‌வ‌ங்க‌ளுக்கு க‌ம்ப்யூட்ட‌ர் வச்சி ரேண்ட‌ம் ந‌ம்ப‌ர் அலாட் ப‌ண்ணுவாங்க‌.
இதையெல்லாம் வ‌ச்சிதான் ரேங்க் லிஸ்ட் போடுவாங்க‌.இந்த‌ லிஸ்ட்ப‌டிதான் க‌வுன்சிலிங் கூப்பிடுவாங்க‌.


5.க‌வுன்சிலிங்: க‌வுன்சிலிங்ல‌ நீங்க‌ ஹால்க்குள்ள‌ வெளில‌யே அன்றைய‌ சீட்க‌ளின் நிலை டிஸ்பிளே ப‌ண்ணீருப்பாங்க.
க‌வுன்சிலிங் ஹாலுக்குள்ள‌ மாண‌வ‌ர் கூட‌ யாராவ‌து(பேர‌ண்ட்(அ)கார்டிய‌ன்)ஒருத்த‌ரைத்தான் அனும‌திப்பாங்க‌.
நீங்க‌ உள்ள போன‌ உட‌னே,எந்த‌ க‌ல்லூரிக‌ள்ல‌ எந்த‌ துறைல‌ சீட் இருக்குங்க‌ற‌ விவ‌ர‌ம் க‌ம்ப்யூட்ட‌ர்ல‌ காட்டுவாங்க‌. அதுல‌ உங்க‌கிட்ட‌ 3 ஆப்ஷ‌ன் கேப்பாங்க‌.உங்க‌ளை அலாட்மெண்ட் டேபுள்க்கு அனுப்புவாங்க‌

அங்க‌ நீங்க‌ த‌ந்த‌ 3 ஆப்ஷ‌ன்ல‌ எது அவெய்ல‌பில் ஆ இருக்கோ அந்த‌ சீட் உங்க‌ளுக்கு அலாட் ப‌ண்ணி ஆர்ட‌ர் த‌ந்திடுவாங்க‌..
அப்புற‌ம் என்ன‌..ஜாலியா கிள‌ம்பிபோய் காலேஜ்ல‌ க‌ல‌க்க‌ வேண்டிய‌துதான்

என்ன‌ருகே நீ இருந்தும்...(4)

Tuesday, June 9, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 3ம் ப‌குதி

நாட்க‌ள் உருண்ட‌ன‌.அவ‌ர்க‌ள் வீடு என‌து ம‌ருத்துவ‌ம‌னைக்கு அருகிலேயே இருந்த‌தால் நான் என் ரூமிற்குப் போவ‌தென்ப‌தே அரிதான‌து.இருவ‌ரும் சேர்ந்து சமைப்ப‌து,வீட்டை சுத்த‌ப்ப‌டுத்துவ‌து என‌ விடுமுறைக‌ளில் வீட்டையே இர‌ணக‌ள‌ப்படுத்திக் கொண்டிருந்தோம்.

என‌க்குப் பெண் தேட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.என‌க்கென்ன‌வோ அதில் ஒரு இன்ட்ரெஸ்ட் வ‌ர‌வில்லை.எத்தனையோ வ‌ர‌ன்க‌ள்,ஜாத‌கங்க‌ள்,போட்டோக்க‌ள்.என் அப்பாவின் அபார‌ ஜோதிட‌ ந‌ம்பிக்கையை பூர்த்தி செய்யும் ஜாதக‌ம் கிடைப்ப‌து குதிரை கொம்பான‌து.என‌க்கென்ன‌மோ ஜாலியாய்தான் இருந்த‌து. போட்டோவில் finalise செய்யும் வேலையை என் அம்மா ம‌யிலிட‌ம் கொடுத்தார்.என் அப்பா ஒன்றிர‌ண்டு ஜாத‌க‌ங்க‌ள் சேர்வ‌தாய்ச் சொன்னால் , அந்த‌ பெண்க‌ளின் போட்டோக‌ளில் இவ‌ள் திருப்திப்ப‌ட‌வில்லை.

ஜெம்மு..உன‌க்கு ஏத்த‌ மேட்ச் இல்ல‌ப்பா..இந்த‌ பொண்ணு..வேணாம்..


அடிப்பாவி..நீயும் எங்க‌ப்பாவும் சேர்ந்தா என‌க்கு டைர‌க்டா அறுப‌தாம் க‌ல்யாண‌ம்தான்

அலையாத‌ப்பா..அப்பா,அம்மா முன்னாடி interest இல்லைங்கிற‌து..அப்புற‌ம் த‌னியா அலைய‌ற‌து..ச‌ரியான‌ அல்ப‌ம்ஸ் நீ

நீ தாண்டி அல்ப‌ம்..உன‌க்கு க‌ல்யாண‌ம் ஆக‌ற‌ வ‌ரைக்கும் என‌க்கும் ஆக‌க்கூடாதுன்னு ம‌ன‌சில‌ ஏதும் பிளான் வ‌ச்சிருக்கியா சொல்லிடு..உன‌க்கும் மாப்பிள்ளை பாக்க‌ சொல்றேன்..அதுக்காக‌ என் வாழ்கைல‌ வெளையாட‌த‌..

டேய்..போடா லூசு..என‌க்கு எப்போ மாப்பிள்ளை பாக்க‌ சொல்ல‌னுன்னு என‌க்கு தெரியும்.. நீ ஒண்ணும் ரெக‌ம‌ண்ட் ப‌ண்ண‌ வேணாம்..இரு..இப்போவே ஊருக்கு போன் ப‌ண்ணி ஆன்ட்டிகிட்ட‌ நீ எவ்ளோ பெரிய அலைஞ்சான்னு சொல்றேன்

இப்போ ம‌ட்டும் போன் ப‌ண்ணிண‌ ....அப்புற‌ம் ந‌ட‌க்க‌ற‌தே வேற

அடுத்த‌ ச‌ண்டை ஆர‌ம்பித்த‌து.
இப்ப‌டியே நொடிக்கொரு ச‌ண்டையும், ம‌ணிக்கொரு அடித‌டியுமாய் நாட்க‌ள் ந‌க‌ர் ந்த‌ன‌..


நான் அப்பா அம்மாவைப் பார்க்க‌ ஊருக்கு போவ‌து குறைந்து அவ‌ர்க‌ள் இங்கு வ‌ருவ‌து அதிக‌ரித்த‌து

ஒருமுறை ஊருக்கு வ‌ ந்த‌ அம்மாவிட‌ம் கேட்டேன்.
ஏம்மா..இப்ப‌டி இவ‌ கைல‌ என் த‌லைவிதியை எழுத‌ வைக்கிறே..

உன்னோட‌ டேஸ்ட் எங்க‌ளை விட‌ ஜ‌ன‌னிக்குத் தெரியுண்டா..அத‌னால‌தான்..அவ‌ selection எப்ப‌வுமே ச‌ரியாருக்கும்.

என்ன‌மோ போம்மா..இதை வ‌ச்சிகிட்டு அவ‌ ப‌ண்ர‌ அலும்பு தாங்க‌ல‌

ஏங்க‌ண்ணு..ஒண்ணு கேட்டா கோச்சிக்க‌ மாட்ட‌யே?


என்ன‌ம்மா? சொல்லு..என்ன‌மோ ஏங்கிட்ட‌ ப‌ய‌ ந்து ந‌டுங்க‌றா மாதிரி பில்ட‌ப் குடுக்க‌றே..

இல்லாடா... உன் ம‌ன‌சில‌ ஜ‌னனி ப‌த்தி ஏதாவ‌து நென‌ப்பு வ‌ச்சிருக்கியா?


அப்ப‌டில்லாம் இல்ல‌ம்மா..உன் ம‌ன‌சில‌ ஏதாவ‌து நென‌ப்பு இரு ந்தா அதுக்கு என் த‌லையை உருட்டாத‌..ஆமா..ஏன் திடீர்னு இப்பிடி கேக்கிறே?

இல்ல‌ க‌ண்ணு...பொண்ணு பாக்க‌ற‌துல‌ ஒரு இன்ட்ரெஸ்டே காமிக்க‌ மாட்டீங்கிறியே ..அதான் கேட்டேன்.என் ம‌ன‌சில‌ என்ன‌ நென‌ப்பு இரு ந்து என்ன‌டா ப‌ண்ற‌து..அதான் உங்க‌ ரெண்டு பேரு ஜாத‌க‌மும் ஒத்து போல‌யே:‍(

யாரு ஜாத‌க‌ம்மா? ஜ‌ன‌னியோட‌தா? பாத்தீங்க‌ளா..

ஆமா க‌ண்ணு..உன‌க்கு பொண்ணு பாக்க‌ ஆர‌ம்பிச்ச‌தே மொத‌ மொத‌ பாத்த‌தே அவ‌ ஜாத‌க‌ந்தான்..என்ன‌ ப‌ண்ற‌து..ஒத்து போல‌..

அப்பாடா.தேங்க் காட்..இல்ல‌ன்னா அந்த‌ ராட்ஷ‌சிகிட்ட‌ சிக்கி இருப்பேனா...

டேய் ..சும்மா பேசாத‌..அவ‌ ரொம்ப‌ ந‌ல்ல‌ புள்ளைடா..உன்மேல‌ உசுரையே வ‌ச்சிருக்கா

ஆமா...ஏற்க‌ன‌வே திமிர்புடிச்சி ஆட‌றா. நீ வேற‌ ஏத்தி விடாத‌ அவ‌ளை.போம்மா..போய் வேலையைப் பாரு..

அம்மாவின் முக‌த்தில் சிறு வ‌ருத்த‌த்தை க‌ண்டேன்
ஒரு நாள் அங்கிளும்,ஆன்ட்டியும் ஊருக்குப் போய்விட‌ த‌னியாய் இருக்க‌ ப‌ய‌ந்து,ப‌க்க‌த்திலேயே இருந்த‌ அவ‌ள் சித்த‌ப்பா வீட்டிற்கும் போக‌ ம‌றுத்து, நைட் டியூட்டிக்கு ஹாஸ்பிட‌ல் போக‌ இருந்த‌ என்னுட‌ன் ஒட்டிக் கொண்டாள்.


அன்று இர‌வு ஹாஸ்பிட‌ல் முழுக்க‌ அவ‌ள் ராஜ்ஜிய‌ம்தான்.சீரிய‌ஸ் ஆன‌ கேஸ் எதுவும் ஹாஸ்பிட‌லில் இல்லாத‌தால் எல்லோருக்கும் ஜாலியாக‌வே போன‌து பொழுது.அன்றிலிருந்து என் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரும் அவ‌ளுக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் ஆயின‌ர்.

ஒரு நாள் என் ந‌ண்ப‌ன் கேச‌வ்சொன்னான்...

ராஜ்.. நீயும் ஜ‌ன‌னியும் made for each other மாதிரி இருக்கீங்க‌ப்பா..பேசாம‌ அவ‌ங்க‌ளையே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம் இல்ல‌..


இல்ல‌ கேச‌வ்.அப்ப‌டி ஏதும் எங்க‌ளுக்குள்ள இல்லை..

இதுவ‌ரைக்கும் இல்லாட்டி என்ன‌..யோசிச்சிபாரு.. இதுக்கு உங்க‌ வீடுக‌ள்ல‌யும் எந்த‌ பிர‌ச்சினையும் வ‌ராது..வேற‌ஏதோ ஒரு பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ணினா அந்த‌ பொண்ணு உங்க‌ளை புரிஞ்சிக்குமா? இந்த‌ ரிலெஷ‌ன்ஷிப் க‌ன்டினியூ ப‌ண்ண முடியுமா?

No கேச‌வ்.No more discussions regarding this pls.

ok pa..sorry if i am wrong..

its ok..leave it..lets go for a coffee now:-)
என‌ அவ‌ன் வாயை அடைத்தேன்

என்ன‌ருகே நீ இருந்தும் 5ம் ப‌குதி(தொட‌ரும்)
.

என்ன‌ருகே நீ இருந்தும்...(3)

Sunday, June 7, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 2ம் ப‌குதி

அவ‌ள் என் பார்வையில் ப‌டும்ப‌டியான‌ ஒரு இட‌த்தில் அம‌ர்ந்தேன்.அவ‌ளிட‌ம் போய் எப்ப‌டிப் பேச‌லாம் என ம‌ன‌துக்குள் ஒத்திகை பார்த்த‌ நேர‌ம்..வந்தார்..கேண்டீன் முத‌லாளி ..

வ‌ண‌க்க‌ம் டாக்ட‌ர்...நைட் டூயுட்டிங்க‌ளா? இங்கியே வ‌ந்திட்டீங்க‌?ரூம் ச‌ர்வீஸ் சொல்ல‌லிங்க‌ளா.?.

ஓ..வ‌ண‌க்க‌ங்க‌..வீட்டுக்கு கிள‌ம்பிட்டேன்‌..அப்ப‌டியே சாப்ர‌லாம்ன்னு வ‌ந்தேன்

ச‌ந்தோஷ‌ங்க‌..என்ன‌ சாப்ட‌ரீங்க‌..

ஊத்த‌ப்ப‌ம் கொண்டுவ‌ர‌ச் சொல்லுங்க‌..

ச‌ரிங்க‌ .. என‌ ஒரு வ‌ழியாய் ந‌க‌ர்ந்தார் அவ‌ர்.

வ‌ந்த‌ ஊத்த‌ப்ப‌த்தில் ஒரு சிறு ப‌குதியைப் எடுத்து சாம்பாரில் தோய்த்து த‌னியாக வைத்தேன்.அது ஜ‌ன‌னியின் ப‌ங்கு.இது நாங்க‌ள் இருவ‌ரும் சிறுவ‌ய‌தில் ப‌ழ‌கிய‌ ப‌ழ‌க்க‌ம். நான் அவ‌ளுக்கும்,அவ‌ள் என‌க்குமான ப‌ங்கை சாப்பிடும்முன் எடுத்து வைப்ப‌து அந்த‌ ப‌ழ‌க்க‌ம் இன்று வ‌ரை என்னில் தொட‌ர்கிற‌து.இந்த‌ ப‌ழ‌க்க‌த்தால் ந‌ண்ப‌ர்க‌ளிடையே எவ்வ‌ள‌வோ முறை சிக்கி சின்னாபின்ன‌ப்ப‌ட்டிருக்கேன்.ஆனாலும் ப‌ழ‌க்க‌த்தை விட‌வில்லை.

இப்போது என்னில் ஒரு ஆவ‌ல்.அவ‌ளும் அந்த‌ ப‌ழ‌க்க‌த்தை வைத்திருக்கிறாளா என்று.... அவ‌ள் த‌ட்டைப் பார்த்தேன்.அங்கேயும் அதே போல் ஒரு துண்டு ச‌ப்பாத்தி த‌னியாக‌ இருந்த‌து.
ம‌ன‌ம் ஆன‌ந்த‌க் கூத்தாடிய‌து.ச‌ந்தோஷ‌த்துட‌னே சாப்பிட்டு முடித்தேன்.

அத‌ற்குள் அவ‌ள் கேண்டீனை விட்டுக் கிள‌ம்பிவிட்டாள்.கேண்டீன் வெளியே நின்று தொலைபேசிக் கொண்டிருந்தாள்.பேசி முடித்துவிட்டு ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தாள்.

Excuse me Miss.Janani என்றேன். நின்றாள்.திரும்பினாள்.Yes Doctor என்றாள்

உங்க‌ பேர் ம‌யிலுதானே என்றேன்.
(அது அவ‌ளை நான் ம‌ட்டும் கூப்பிடும் பேர். )

க‌ண்க‌ள் விரிய‌, சிரித்துக் கொண்டே ..அப்போ நீங்க‌ பாண்டிய‌னா? அட‌ச்சே..GEMஆ?
(GEM-இது அவ‌ள் என்னைத் திட்டும் பெய‌ர் (Ginger Eating Monkey))

அப்பா காலைல‌யே சொன்னாங்க‌ நீங்க‌ இங்க‌தான் இருக்கீங்க‌ன்னு.. நான் எப்போ பாப்போம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்..என‌ துள்ளிக் குதித்தாள்.

உன்னைப் பார்ப்பேனான்னு இருந்தேன் ம‌யிலு.10 years க்கு மேல‌ ஆச்சு நாம‌ பார்த்து.ம்ம்ம்..Now i am very very happy ...ச‌ரி அங்கிள் எங்க‌? என்றேன்.

அப்பா,சித்த‌ப்பா வீட்ல‌ இருக்காங்க‌.என‌க்கு அம்மாவை விட்டுட்டு இருக்க‌ முடிய‌ல‌..அத‌னால‌ நான் ICUல‌யே இருந்துக்கறேன்னு சொல்லிட்டு வ‌ ந்துட்டேன்.

பேசிக்கொண்டே ICU- Doctors Roomக்கு வ‌ந்தோம்.

வா GEM.போய் அம்மாவை பாக்க‌லாம்.

நான் இப்போதான் aunty condition check ப‌ண்ணிட்டு வ‌ந்தேன்.She is improving.

oh..Thanks.நான் போய் பாத்துட்டு வ‌ரேன் இரு .

அவ‌ள் சீஃப்ன் relative என்ப‌தால் த‌டுப்ப‌வ‌ர் எவ‌ருமில்லாம‌ல் ICU.வினுள் நுழைந்தாள்.

திரும்பி வ‌ந்த‌ அவ‌ள் முக‌த்தில் என்னைக் க‌ண்ட‌போதிருந்த உற்சாக‌ம் மிஸ்ஸிங்.

என்ன‌ம்மா ஆச்சு? ஏன் ட‌ல் ஆயிட்டே?

ஒண்ணும் இல்லை ..அம்மாவை இப்ப‌டி பாக்க க‌ஷ்ட‌மாயிருக்கு..

it's ok ...nothing serious .we are here na..நான் பாத்துக்க‌றேன்

என‌ ஆர‌ம்பித்த‌ எங்க‌ள் உரையாட‌ல்.. நாங்க‌ள் meet ப‌ண்ணியிருக்காத‌ அந்த‌ 10 வ‌ருட‌ங்க‌ளையும் உள்ளட‌க்கிய‌து.
காலை 6 ம‌ணிக்கு வீட்டிலிருந்து அவ‌ளுக்கு கார் வ‌ந்த‌பின் தான் நாங்க‌ள் கால‌த்தை உண‌ர் ந்தோம்.

அவ‌ள் வீட்டிற்கு கிள‌ம்பினாள். நான் சில‌ ச‌ர்ஜ‌ரிக்க‌ள் இருந்த‌தால் அங்கேயே refresh செய்து கொண்டு என் அன்றைய‌ ப‌ணியை ஆர‌ம்பித்தேன்.

அடுத்த‌ நாள் ஆன்ட்டி ICUலிருந்து ரூமுக்கு மாற்றப்ப‌ட்டார்.ஜ‌ன‌னியும் அங்கிளும் ஹாஸ்பிட‌லிலேயே த‌ங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.டியூட்டி இல்லாத‌ என் நேர‌ம் அனைத்தும் அவ‌ர்க‌ளுக்காய் ஆன‌து. எங்க‌ள் விட்டுப் போன‌ ந‌ட்பு, மீண்டும் துளிர் விட்ட‌து.

ஆன்ட்டி discharge ஆகி சில‌ வார‌ங்க‌ளில் அங்கிளுக்கு நான் இருந்த‌ ஊருக்கே மாறுத‌ல் வ‌ந்த‌து.அவ‌ளும் அதே ஊரில் முதுநிலைப் ப‌டிப்பில் சேர்ந்தாள்.

(தொட‌ரும்)
என்ன‌ருகே நீ இருந்தும் 4ம் ப‌குதி
.

என்ன‌ருகே நீ இருந்தும்...(2)

Friday, June 5, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் முத‌ல் ப‌குதி


சிஸ்ட‌ர்..இவ‌ங்க‌ கூட‌ வ‌ந்த‌வ‌ங்க‌ எங்க‌?இங்க‌ கூட்டிட்டு வாங்க‌..
ப‌ட‌ப‌ட‌ப்பான‌ சில‌ நிமிட‌ங்க‌ளுக்குப்பின்..

சார்..அவ‌ங்க‌ சீஃப் ரூம்ல‌ இருக்காங்க‌ என‌ ப‌தில் வ‌ந்த‌து..
oh..ok..நான் சீஃப் ரூம் வ‌ரைக்கும் போய்ட்டு வ‌ரேன்.தியேட்ட‌ருக்கு இன்ஃபார்ம் ப‌ண்ணீ கேஸ் ரெடி ப‌ண்ண‌ சொல்லுங்க‌.
சீஃப் ரூமிற்குள் நுழைந்தால்..
.. வாங்க‌ ராஜ்.Meet my brother Mr.Srinivasan.அங்கிருந்த‌வ‌ர் ப‌க்க‌ம் திரும்பி..
அண்ணா..இவ‌ர்தான் Dr.ராஜேஸ்வ‌ர‌ன்.ந‌ம்ம‌ ஹாஸ்பிட‌லோட‌ young and energetic chap.
என் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ரைப் பார்க்க‌ இன்ப‌ அதிர்ச்சி
சார்.. அங்கிளை என‌க்கு இன்ட்ர‌ட்யூஸ் ப‌ண்ண‌னுமா? அங்கிள்..என்னைத் தெரிய‌லியா.. பாண்டிய‌ன் அங்கிள் நான்..ஆன்ட்டியை ஐசியுவில‌ பாத்த‌தும் உங்க‌ளைத் தேடிட்டுதான் ஓடி வ‌ந்தேன்.
பாண்டியா...எப்ப‌டி க‌ண்ணு இருக்கே ..ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மா இருக்குப்பா உன்னைப் பார்க்க‌..அப்பா அம்மால்லாம் ந‌ல்லா இருக்காங்க‌ளா...
(பாண்டிய‌ன் என்ப‌து என் வீட்டில் கூப்பிடும் பெய‌ர்)

ம்ம்..எல்லாம் ந‌ல்லா இருக்காங்க‌ அங்கிள்.

ஓஓ... ரெண்டுபேரும் ஏற்க‌ன‌வே தெரிஞ்ச‌வ‌ங்க‌ளா...ச‌ந்தோஷ‌ம்.ச‌ரி அண்ணா..ஜ‌ன‌னி எங்கே?.என்ற‌து சீஃப் இன் குரல்..
வெளில‌தான் இருக்கா..ரிஷ‌ப்ஷ‌ன்ல‌ உக்காந்திருக்கா..பாவ‌ம் பொண்ணு ரொம்ப‌ சோர்ந்து போச்சி.. நான் தான் அம்மாவை வ‌ர‌ச்சொல்லி ஆக்ஸிடெண்ட்ல‌ மாட்டி விட்டுட்டேன்னு பொல‌ம்பிட்டு இருக்கா..

oh..so Sad ..அது என்ன ப‌ண்ணும் பாவ‌ம்..அவ‌ளை ஏன் அண்ணா த‌னியா விட்டீங்க‌..இருங்க‌ உள்ள கூப்பிட‌லாம்....
சிஸ்ட‌ர்... ஜ‌ன‌னின்னு ஒரு பொண்ணு ரிஷ‌ப்ஷ‌ன்ல‌ இருக்கும் கூட்டிட்டு வாம்மா..
அனைவ‌ரும் ஜ‌ன‌னிக்காய் காத்திருக்க‌...நானும் என் செல்ல‌ தேவ‌தையைக் காணும் சந்தோஷ‌த் த‌விப்பில் வினாடிக‌ளை விழுங்க‌
வேக‌மாய் திற‌ந்த‌ க‌த‌வினுள் அவ‌ச‌ர‌மாய் நுழைந்த ந‌ர்ஸ்..டாக்ட‌ர்..ஐசியு 2 ல‌ 5th bed patient க்கு திரும்ப‌ pain வ‌ந்திருச்சி..என‌ப் ப‌தைக்க‌,நான் இன்ட‌ர்ன‌ல் வே வ‌ழியா ஐசியுவுக்கு விரைய‌,வெளிக்க‌த‌வைத் திற‌ந்து என் தேவ‌தை சீஃப் ரூமினுள் பிர‌வேசிக்கிறாள்.
ஹ்ம்ம்ம்ம்..ஜ‌ன‌னியைக் காணாம‌லே என் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ நிமிட‌ங்க‌ள் ஆர‌ம்பித்த‌ன‌.
ஐசியு,ச‌ர்ஜ‌ரி என‌ என் ம‌ணித்துளிக‌ள் ம‌ர‌ணித்தாலும் ம‌ன‌தை நிறைத்த‌ என் ம‌யில்தேவ‌தையை ம‌றுக்க‌முடிய‌வில்லை:-(
என‌க்காய்ச் சில‌ நிமிட‌ம் கூட‌ இல்லாம‌ல் என்ன‌ வாழ்க்கை என‌ என்றுமில்லாச் ச‌லிப்பு என் தொழில்மீதே வ‌ந்த‌து.ஆனாலும் வேறுவ‌ழியின்றி.. ச‌ர்ஜ‌ன்ஸ் மீட்டிங்கிற்கு சீஃப் டாக்ட‌ருட‌ன் கிளம்பிய‌ நேர‌ம்,சீஃப் டாக்ட‌ரின் காரிலிருந்து காலையில் என் ம‌ன‌தைக் க‌லைத்த‌ பெண் இற‌ங்கிச் சென்றாள்.

அப்போ..அதுதான் ஜ‌ன‌னியா.. என் ம‌யில்குட்டியா!!!! ப‌ழைய‌ ந‌ட்பும்,அன்பும்தான் என்னைத் த‌டுமாற‌ வைத்த‌தா??

சார் ஜ‌ன‌னிதானே அது..ஆவ‌லை அட‌க்க‌ முடியாம‌ல் சீஃப் இட‌மே கேட்டுவிட்டேன்..
அவ‌ர், ஆமாம் ராஜ்..உங்க‌ளுக்கு அடையாள‌ம் தெரிய‌லையா...சின்ன‌ப் பொண்ணுல‌ பார்த்த‌தோ.கா‌லைல‌ருந்து இன்னும் அதுகிட்ட‌ பேச‌லையா...அண்ணா உங்க‌ ஃப்ர‌ண்ட்ஷிப் ப‌த்தி சொன்னார்.திக் ஃப்ர‌ண்ஸாமே..பிரிய‌வே மாட்டீங்க‌ளாம்..

ஆமாம் சார்..காலைல‌ இருந்து வ‌ந்த‌ கிரிடிக‌ல் கேஸ்க‌ளால பேச‌க்கூட‌முடியாம‌ போச்சு :-(.

anyway my dear boy..you should spare time for such important things.ஒரு டாக்ட‌ர்க்கு எந்த‌ அள‌வுக்கு profession முக்கிய‌மோ அதே அள‌வுக்கு personal lifeம் முக்கிய‌ம்..இல்லைன்னா லைஃப்ல‌ ஒரு ச‌லிப்பு வ‌ந்திடும்

ok sir.I will follow your advice.Now we have reached the meeting hall..

மீட்டிங் முடிந்து இர‌வு உட‌ல் ஓய்வைக் கேட்டாலும்,ம‌ன‌ம் ஆன்ட்டியின் உட‌ல் நிலையை ப‌ரிசோதிக்க‌ சொல்லிய‌து..ஓர‌த்தில் ஜ‌ன‌னியை ச‌ந்திக்கும் சாத்திய‌க்கூறுக‌ளையும் ஆராய்ந்த‌து.

so again back to hospital.

ஆன்ட்டியின் க‌ண்டிஷ‌ன் பார்த்து திருப்திய‌டைந்த‌ வேளையில்,கைபேசி ஒலித்த‌து.
அறை ந‌ண்ப‌னின் SMS
Cooking women didn't come today.Have dinner outside.
என்ற‌து.

ok.என‌ ரிப்ளை செய்துவிட்டு கேண்டீன் நோக்கி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினேன்
கேண்டீனில் மிக‌ச்சில‌ரே இருந்த‌ன‌ர்.அங்கே த‌னியாய் சோக‌மே உருவாய் அம‌ர்ந்திருந்தாள் ஜ‌னனி.
(தொட‌ரும்)

என்ன‌ருகே நீ இருந்தும் 3ம் ப‌குதி

.

என்ன‌ருகே நீ இருந்தும்...

Wednesday, June 3, 2009
"காத‌ல் வ‌ந்தால் சொல்லிய‌னுப்பு

உயிரோடிருந்தால் வ‌ருகிறேன்"


காரின் ஸ்பீக்க‌ரிலிருந்து க‌சியும் என் ஃபேவ‌ரிட் பாட‌ல் எப்போதும் போல‌ ம‌ன‌தை ம‌ய‌க்க‌ காரைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.இந்த‌ பாட்டு ரிலீஸ் ஆன‌துல‌ இருந்து ஒரு 100 முறையாவ‌து கேட்டிருப்பேன்.ஆனாலும் ச‌லிக்க‌வில்லை.பாட்டு முடிய‌ற‌துக்குள்ள‌ என்னைப் ப‌த்தி ஒரு ரீகேப் பாருங்க‌.

நான்.. ந‌க‌ரின் புக‌ழ் பெற்ற‌ ஒரு ஹாஸ்பிட‌லின் டாக்ட‌ர்.போன‌ வ‌ருட‌ம் தான் மருத்துவ‌ மேல் ப‌டிப்பை இங்கிலாந்தின் புக‌ழ்பெற்ற‌ க‌ல்லூரியில் முடித்திருந்தேன்.ம‌ருத்துவ‌த்துறையில் ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌தே வாழ்நாள் சாத‌னையாய் எண்ணுப‌வ‌ன்.


ஹாஸ்பிட‌ல் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு,போய் என் சீட்டுக்கு உட‌லைக் கொடுத்து,கேஸ் ஹிஸ்ட‌ரிக்க‌ளை புர‌ட்ட‌ ஆர‌ம்பித்த நேர‌ம்,கைபேசி ஒலித்த‌து.யாராய் இருக்கும் என‌ யோச‌னையோடு எடுத்தால்...சீஃப் காலிங்..எழுத்துக்க‌ள் மின்னின‌..

குட்மார்னிங் சார்..
குட்டே ராஜ். ஹேவ் யு ரீச்டு ஹாஸ்பிட‌ல்?
யெஸ் சார்.ஜ‌ஸ்ட் ந‌வ்
ஒகே..குட்..மை க‌ஸின் பிர‌த‌ர்ஸ் வொய்ப் மெட் வித் ஏன் ஆக்ஸிடெண்ட் அன்ட் அட் கிரிட்டிக‌ல் பொசிஷ‌ன்.தே டுக் ஃப‌ர்ஸ்ட் எய்ட் அட் சேல‌ம் அன்ட் க‌மிங் டு அஸ் ஃபார் ஃபர்த‌ர் டிரிட்மெண்ட்..தே வில் ரீச் தேர் இன் 10 மினிட்ஸ்..டேக் கேர் ஆஃப் தெம்..ஐ வில் க‌ம் இன் 15 மினிட்ஸ்..
ஓகே சார்...மே ஐ நோ த‌ பேஷ‌ண்ட் நேம்?
ம்ம்ம்ம்...பார்வ‌தி ..ஹர் ஹ‌ஸ்பெண்ட் ஈஸ் சீனிவாச‌ன்.யு பி வித் தெம் டில் இ ரீச்..
ஓகே.சார்.ஐ வில் டேக் அட் மோஸ்ட் கேர்.

போனை வைத்து விட்டு இண்ட‌ர்காமில் ரிஷ‌ப்ஷ‌னைக் கூப்பிட்டு குறிப்பிட்ட‌ பேஷ‌ண்ட் வ‌ந்தால் மினி தியேட்ட‌ருக்கு கொண்டு வ‌ந்து, என‌க்குத் தெரிவிக்க‌ச் சொல்லிவிட்டு,ஜ‌ன்ன‌லில் வேடிக்கை பார்க்க‌த் தொட‌ங்கினேன்..
சில‌ நிமிட‌ங்க‌ளில் பேஷ‌ண்ட் வ‌ந்துவிட்ட‌தாய் த‌க‌வ‌ல் வ‌ர‌..மினி தியேட்ட‌ரை நோக்கி அவ‌ச‌ர‌மாய் ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன்.அப்போது ரிஷ‌ப்ஷ‌ன்,விஸிட்ட‌ர்ஸ் லான்ஜ்ல் அம‌ர்ந்திருந்த‌ ஒரு பெண் என் க‌வ‌ன‌த்தை க‌வ‌ர்ந்தாள்

எவ்வ‌ள‌வோ பேர‌ழ‌கிக‌ள் கூட‌ இன்று வ‌ரை என் க‌வ‌ன‌த்தைக் இப்ப‌டிக் க‌வ‌ர்ந்த‌தில்லை. எந்த‌ப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத‌ சாமியார் என‌ பேர் வாங்கிய‌வ‌ன் நான் ஆனால் இன்று....ஒரு நிமிட‌ம் த‌ட‌ம் மாறிய‌ சிந்தனையைத் .."அடேய்..என்னாச்சு உன‌க்கு?."..என‌ த‌லையில் த‌ட்டி நிக‌ழ்வுல‌குக்கு வ‌ந்தேன்.

பேஷ‌ண்ட் அருகில் சென்று பார்த்தால் ...அவ‌ர் ம‌ய‌க்க‌மாய் இருந்தார்.இப்போது ம‌ன‌ம் இன்னும் க‌ட்டுப்பாட்டை இழ‌ந்து குதித்தது....ம‌ன‌தைக் க‌ட்டுப்ப‌டுத்தி க‌ண்டிஷ‌ன் அன‌லைஸ் ப‌ண்றதுக்குள்ள‌ சீஃப் வ‌ ந்துட்டார்.அவ‌ரின் சிகிச்சை முறைக‌ளை க‌வ‌னித்து விட்டு,பேஷ‌ண்டை ஐசியுவிற்கு அனுப்பிவிட்டு வெளியே அந்த‌ பேஷ‌ண்டுட‌ன் வ‌ந்த‌வ‌ர்க‌ளைத் தேடினேன்


இத‌ன் தொட‌ர்ச்சியைப் ப‌டிக்க‌ இங்கே கிளிக்க‌வும்( தொட‌ரும்)

.