என்னருகே நீ இருந்தும் 3ம் பகுதி
நாட்கள் உருண்டன.அவர்கள் வீடு எனது மருத்துவமனைக்கு அருகிலேயே இருந்ததால் நான் என் ரூமிற்குப் போவதென்பதே அரிதானது.இருவரும் சேர்ந்து சமைப்பது,வீட்டை சுத்தப்படுத்துவது என விடுமுறைகளில் வீட்டையே இரணகளப்படுத்திக் கொண்டிருந்தோம்.
எனக்குப் பெண் தேட ஆரம்பித்தனர்.எனக்கென்னவோ அதில் ஒரு இன்ட்ரெஸ்ட் வரவில்லை.எத்தனையோ வரன்கள்,ஜாதகங்கள்,போட்டோக்கள்.என் அப்பாவின் அபார ஜோதிட நம்பிக்கையை பூர்த்தி செய்யும் ஜாதகம் கிடைப்பது குதிரை கொம்பானது.எனக்கென்னமோ ஜாலியாய்தான் இருந்தது. போட்டோவில் finalise செய்யும் வேலையை என் அம்மா மயிலிடம் கொடுத்தார்.என் அப்பா ஒன்றிரண்டு ஜாதகங்கள் சேர்வதாய்ச் சொன்னால் , அந்த பெண்களின் போட்டோகளில் இவள் திருப்திப்படவில்லை.
ஜெம்மு..உனக்கு ஏத்த மேட்ச் இல்லப்பா..இந்த பொண்ணு..வேணாம்..
அடிப்பாவி..நீயும் எங்கப்பாவும் சேர்ந்தா எனக்கு டைரக்டா அறுபதாம் கல்யாணம்தான்
அலையாதப்பா..அப்பா,அம்மா முன்னாடி interest இல்லைங்கிறது..அப்புறம் தனியா அலையறது..சரியான அல்பம்ஸ் நீ
நீ தாண்டி அல்பம்..உனக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் எனக்கும் ஆகக்கூடாதுன்னு மனசில ஏதும் பிளான் வச்சிருக்கியா சொல்லிடு..உனக்கும் மாப்பிள்ளை பாக்க சொல்றேன்..அதுக்காக என் வாழ்கைல வெளையாடத..
டேய்..போடா லூசு..எனக்கு எப்போ மாப்பிள்ளை பாக்க சொல்லனுன்னு எனக்கு தெரியும்.. நீ ஒண்ணும் ரெகமண்ட் பண்ண வேணாம்..இரு..இப்போவே ஊருக்கு போன் பண்ணி ஆன்ட்டிகிட்ட நீ எவ்ளோ பெரிய அலைஞ்சான்னு சொல்றேன்
இப்போ மட்டும் போன் பண்ணிண ....அப்புறம் நடக்கறதே வேற
அடுத்த சண்டை ஆரம்பித்தது.
இப்படியே நொடிக்கொரு சண்டையும், மணிக்கொரு அடிதடியுமாய் நாட்கள் நகர் ந்தன..
நான் அப்பா அம்மாவைப் பார்க்க ஊருக்கு போவது குறைந்து அவர்கள் இங்கு வருவது அதிகரித்தது
ஒருமுறை ஊருக்கு வ ந்த அம்மாவிடம் கேட்டேன்.
ஏம்மா..இப்படி இவ கைல என் தலைவிதியை எழுத வைக்கிறே..
உன்னோட டேஸ்ட் எங்களை விட ஜனனிக்குத் தெரியுண்டா..அதனாலதான்..அவ selection எப்பவுமே சரியாருக்கும்.
என்னமோ போம்மா..இதை வச்சிகிட்டு அவ பண்ர அலும்பு தாங்கல
ஏங்கண்ணு..ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டயே?
என்னம்மா? சொல்லு..என்னமோ ஏங்கிட்ட பய ந்து நடுங்கறா மாதிரி பில்டப் குடுக்கறே..
இல்லாடா... உன் மனசில ஜனனி பத்தி ஏதாவது நெனப்பு வச்சிருக்கியா?
அப்படில்லாம் இல்லம்மா..உன் மனசில ஏதாவது நெனப்பு இரு ந்தா அதுக்கு என் தலையை உருட்டாத..ஆமா..ஏன் திடீர்னு இப்பிடி கேக்கிறே?
இல்ல கண்ணு...பொண்ணு பாக்கறதுல ஒரு இன்ட்ரெஸ்டே காமிக்க மாட்டீங்கிறியே ..அதான் கேட்டேன்.என் மனசில என்ன நெனப்பு இரு ந்து என்னடா பண்றது..அதான் உங்க ரெண்டு பேரு ஜாதகமும் ஒத்து போலயே:(
யாரு ஜாதகம்மா? ஜனனியோடதா? பாத்தீங்களா..
ஆமா கண்ணு..உனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சதே மொத மொத பாத்ததே அவ ஜாதகந்தான்..என்ன பண்றது..ஒத்து போல..
அப்பாடா.தேங்க் காட்..இல்லன்னா அந்த ராட்ஷசிகிட்ட சிக்கி இருப்பேனா...
டேய் ..சும்மா பேசாத..அவ ரொம்ப நல்ல புள்ளைடா..உன்மேல உசுரையே வச்சிருக்கா
ஆமா...ஏற்கனவே திமிர்புடிச்சி ஆடறா. நீ வேற ஏத்தி விடாத அவளை.போம்மா..போய் வேலையைப் பாரு..
அம்மாவின் முகத்தில் சிறு வருத்தத்தை கண்டேன்
ஒரு நாள் அங்கிளும்,ஆன்ட்டியும் ஊருக்குப் போய்விட தனியாய் இருக்க பயந்து,பக்கத்திலேயே இருந்த அவள் சித்தப்பா வீட்டிற்கும் போக மறுத்து, நைட் டியூட்டிக்கு ஹாஸ்பிடல் போக இருந்த என்னுடன் ஒட்டிக் கொண்டாள்.
அன்று இரவு ஹாஸ்பிடல் முழுக்க அவள் ராஜ்ஜியம்தான்.சீரியஸ் ஆன கேஸ் எதுவும் ஹாஸ்பிடலில் இல்லாததால் எல்லோருக்கும் ஜாலியாகவே போனது பொழுது.அன்றிலிருந்து என் நண்பர்கள் பலரும் அவளுக்கும் நண்பர்கள் ஆயினர்.
ஒரு நாள் என் நண்பன் கேசவ்சொன்னான்...
ராஜ்.. நீயும் ஜனனியும் made for each other மாதிரி இருக்கீங்கப்பா..பேசாம அவங்களையே கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல..
இல்ல கேசவ்.அப்படி ஏதும் எங்களுக்குள்ள இல்லை..
இதுவரைக்கும் இல்லாட்டி என்ன..யோசிச்சிபாரு.. இதுக்கு உங்க வீடுகள்லயும் எந்த பிரச்சினையும் வராது..வேறஏதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணினா அந்த பொண்ணு உங்களை புரிஞ்சிக்குமா? இந்த ரிலெஷன்ஷிப் கன்டினியூ பண்ண முடியுமா?
No கேசவ்.No more discussions regarding this pls.
ok pa..sorry if i am wrong..
its ok..leave it..lets go for a coffee now:-)
என அவன் வாயை அடைத்தேன்
என்னருகே நீ இருந்தும் 5ம் பகுதி(தொடரும்)
.
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
அடுத்த எபிசோட் ஜனனிய பத்தியா...??
கடைசில காதல் வந்துரும் போல இருக்கே?
enna ippadi pannittaan gemu??
எதுவா இருந்தாலும் ரெண்டு பேருக்கும்
வலியில்ல்லாமல் இருக்கணுமே!
எதுவா இருந்தாலும் ரெண்டு பேருக்கும்
வலியில்ல்லாமல் இருக்கணுமே!
குறும்புகளோடு இந்தப் பகுதியும் நல்லா வந்திருக்கு...
//கடைக்குட்டி said...
அடுத்த எபிசோட் ஜனனிய பத்தியா...??///
ஜனனி பத்தி நெறைய சொல்லியாச்சிங்க..போன எபிசோட்லயே
//கடைக்குட்டி said...
அடுத்த எபிசோட் ஜனனிய பத்தியா...??///
ஜனனி பத்தி நெறைய சொல்லியாச்சிங்க..போன எபிசோட்லயே
யாருப்பா இது..அழிச்சி அழிச்சி விளையாடி இருக்கறது:-(
// கார்த்திகைப் பாண்டியன் said...
கடைசில காதல் வந்துரும் போல இருக்கே?//
வரக்கூடாதா தோழா
//Divyapriya said...
enna ippadi pannittaan gemu??
//
:-)
//அன்புடன் அருணா said...
எதுவா இருந்தாலும் ரெண்டு பேருக்கும்
வலியில்ல்லாமல் இருக்கணுமே!//
வலியும் ஒரு விதத்தில் சுகம் தானே அக்கா
//புதியவன் said...
குறும்புகளோடு இந்தப் பகுதியும் நல்லா வந்திருக்கு...
//
நன்றி கவிஞரே:-)
டயலாக்ஸ் நல்லாயிருக்கு இயற்கை...அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்....
:)))
குறும்பு! இஃகிஃகி!!
ஆஹா:))
Hi இயற்கை,
I read all 4 posts now in a flow...
Sema continuity...
Nalla poguthu...
Next Kesav loves Jananiya? twist ethavathu? :P
Keep writing... :)
regards,
Muthu
http://muthumalla.blogspot.com/search/label/thedal
Next part please :) :):)
ம்ம்ம் கோயிங் வெரி இண்ட்ரெஸ்டிங்
காதல் வந்துரும்போல இருக்கே ஜெம்முக்கு
Post a Comment