என்னருகே நீ இருந்தும் 2ம் பகுதி
அவள் என் பார்வையில் படும்படியான ஒரு இடத்தில் அமர்ந்தேன்.அவளிடம் போய் எப்படிப் பேசலாம் என மனதுக்குள் ஒத்திகை பார்த்த நேரம்..வந்தார்..கேண்டீன் முதலாளி ..
வணக்கம் டாக்டர்...நைட் டூயுட்டிங்களா? இங்கியே வந்திட்டீங்க?ரூம் சர்வீஸ் சொல்லலிங்களா.?.
ஓ..வணக்கங்க..வீட்டுக்கு கிளம்பிட்டேன்..அப்படியே சாப்ரலாம்ன்னு வந்தேன்
சந்தோஷங்க..என்ன சாப்டரீங்க..
ஊத்தப்பம் கொண்டுவரச் சொல்லுங்க..
சரிங்க .. என ஒரு வழியாய் நகர்ந்தார் அவர்.
வந்த ஊத்தப்பத்தில் ஒரு சிறு பகுதியைப் எடுத்து சாம்பாரில் தோய்த்து தனியாக வைத்தேன்.அது ஜனனியின் பங்கு.இது நாங்கள் இருவரும் சிறுவயதில் பழகிய பழக்கம். நான் அவளுக்கும்,அவள் எனக்குமான பங்கை சாப்பிடும்முன் எடுத்து வைப்பது அந்த பழக்கம் இன்று வரை என்னில் தொடர்கிறது.இந்த பழக்கத்தால் நண்பர்களிடையே எவ்வளவோ முறை சிக்கி சின்னாபின்னப்பட்டிருக்கேன்.ஆனாலும் பழக்கத்தை விடவில்லை.
இப்போது என்னில் ஒரு ஆவல்.அவளும் அந்த பழக்கத்தை வைத்திருக்கிறாளா என்று.... அவள் தட்டைப் பார்த்தேன்.அங்கேயும் அதே போல் ஒரு துண்டு சப்பாத்தி தனியாக இருந்தது.
மனம் ஆனந்தக் கூத்தாடியது.சந்தோஷத்துடனே சாப்பிட்டு முடித்தேன்.
அதற்குள் அவள் கேண்டீனை விட்டுக் கிளம்பிவிட்டாள்.கேண்டீன் வெளியே நின்று தொலைபேசிக் கொண்டிருந்தாள்.பேசி முடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
Excuse me Miss.Janani என்றேன். நின்றாள்.திரும்பினாள்.Yes Doctor என்றாள்
உங்க பேர் மயிலுதானே என்றேன்.
(அது அவளை நான் மட்டும் கூப்பிடும் பேர். )
கண்கள் விரிய, சிரித்துக் கொண்டே ..அப்போ நீங்க பாண்டியனா? அடச்சே..GEMஆ?
(GEM-இது அவள் என்னைத் திட்டும் பெயர் (Ginger Eating Monkey))
அப்பா காலைலயே சொன்னாங்க நீங்க இங்கதான் இருக்கீங்கன்னு.. நான் எப்போ பாப்போம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்..என துள்ளிக் குதித்தாள்.
உன்னைப் பார்ப்பேனான்னு இருந்தேன் மயிலு.10 years க்கு மேல ஆச்சு நாம பார்த்து.ம்ம்ம்..Now i am very very happy ...சரி அங்கிள் எங்க? என்றேன்.
அப்பா,சித்தப்பா வீட்ல இருக்காங்க.எனக்கு அம்மாவை விட்டுட்டு இருக்க முடியல..அதனால நான் ICUலயே இருந்துக்கறேன்னு சொல்லிட்டு வ ந்துட்டேன்.
பேசிக்கொண்டே ICU- Doctors Roomக்கு வந்தோம்.
வா GEM.போய் அம்மாவை பாக்கலாம்.
நான் இப்போதான் aunty condition check பண்ணிட்டு வந்தேன்.She is improving.
oh..Thanks.நான் போய் பாத்துட்டு வரேன் இரு .
அவள் சீஃப்ன் relative என்பதால் தடுப்பவர் எவருமில்லாமல் ICU.வினுள் நுழைந்தாள்.
திரும்பி வந்த அவள் முகத்தில் என்னைக் கண்டபோதிருந்த உற்சாகம் மிஸ்ஸிங்.
என்னம்மா ஆச்சு? ஏன் டல் ஆயிட்டே?
ஒண்ணும் இல்லை ..அம்மாவை இப்படி பாக்க கஷ்டமாயிருக்கு..
it's ok ...nothing serious .we are here na..நான் பாத்துக்கறேன்
என ஆரம்பித்த எங்கள் உரையாடல்.. நாங்கள் meet பண்ணியிருக்காத அந்த 10 வருடங்களையும் உள்ளடக்கியது.
காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து அவளுக்கு கார் வந்தபின் தான் நாங்கள் காலத்தை உணர் ந்தோம்.
அவள் வீட்டிற்கு கிளம்பினாள். நான் சில சர்ஜரிக்கள் இருந்ததால் அங்கேயே refresh செய்து கொண்டு என் அன்றைய பணியை ஆரம்பித்தேன்.
அடுத்த நாள் ஆன்ட்டி ICUலிருந்து ரூமுக்கு மாற்றப்பட்டார்.ஜனனியும் அங்கிளும் ஹாஸ்பிடலிலேயே தங்க ஆரம்பித்தனர்.டியூட்டி இல்லாத என் நேரம் அனைத்தும் அவர்களுக்காய் ஆனது. எங்கள் விட்டுப் போன நட்பு, மீண்டும் துளிர் விட்டது.
ஆன்ட்டி discharge ஆகி சில வாரங்களில் அங்கிளுக்கு நான் இருந்த ஊருக்கே மாறுதல் வந்தது.அவளும் அதே ஊரில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தாள்.
(தொடரும்)
என்னருகே நீ இருந்தும் 4ம் பகுதி
.
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன்
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன்//
repeateyyy
அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன்னு நானும் சொல்லிகிடுறேனுங்க...
(Ginger Eating Monkey)\\
ஹா ஹா ஹா
எப்புடிங்க இது ...
கதை அழகு
சரளமான நடை
நன்றாக இருக்கிறது அக்கா
அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன்..
என்ன தோழி.. ஆர்வத்தோட படிச்சா சடார்னு முடிச்சுட்டீங்க.. சீக்கிரமா அடுத்த பாகத்தப் போடுங்க..
interesting...appram enna aachu?
கதை அழகா போகுதுங்க...
//(GEM-இது அவள் என்னைத் திட்டும் பெயர் (Ginger Eating Monkey))//
நல்லா இருக்கு இந்த விளக்கம்...
அப்போ இந்த பகுதி நல்லா இல்லியா?:-(
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன்//
அப்போ இந்த பகுதி நல்லா இல்லியா?
//T.V.Radhakrishnan said...
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன்//
repeateyyy//
சுரேஷ்க்குப் போட்ட கமெண்ட் உங்களுக்கும் repeateyyy
//பழமைபேசி said...
அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன்னு நானும் சொல்லிகிடுறேனுங்க...//
நீங்களுமா..சரி..சரி..அடுத்த பகுதி போட்டாச்சி..சீக்கிரம் படிச்சி கமெண்ட போடுங்க
//நட்புடன் ஜமால் said...
(Ginger Eating Monkey)\\
ஹா ஹா ஹா
எப்புடிங்க இது ...//
அதெல்லாம் அப்புடிதானுங்க..தானா வருது
//sakthi said...
கதை அழகு
சரளமான நடை
//
நன்றி அக்கா
//anbudan said...
நன்றாக இருக்கிறது அக்கா
அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன்..
//
நன்றி Anbu.. அடுத்த பகுதி போட்டாச்சி.
கார்த்திகைப் பாண்டியன் said...
//என்ன தோழி.. ஆர்வத்தோட படிச்சா சடார்னு முடிச்சுட்டீங்க.. சீக்கிரமா அடுத்த பாகத்தப் போடுங்க..//
போட்டாச்சி தோழா:-)
//Divyapriya said...
interesting...appram enna aachu?
//
solren..wait pls:-)
//புதியவன் said...
கதை அழகா போகுதுங்க...
//(GEM-இது அவள் என்னைத் திட்டும் பெயர் (Ginger Eating Monkey))//
நல்லா இருக்கு இந்த விளக்கம்...//
நன்றி :-))
நல்லாப்போயிட்டு இருக்கு...... இன்னும் கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கலாம் ஜெம் மயிலு சந்திப்பை.......
Post a Comment