இன்றைய தேதில பள்ளி மாணவர்கள் எல்லாரோட குறிக்கோளாவும் இருக்கறது தொழிற்கல்வி.
அதாவது மெடிக்கல் அல்லது எஞ்சினியரிங்.இக்கல்லூரிகளில் சேர்வதென்பது கட்ஆஃப் முதல் கவுன்சிலிங் வரை பல நிலைகளை உள்ளடக்கியுள்ளது.அதெல்லாம் என்ன என்னன்னு சொல்றேன்.தெரியாதவங்க தெரிஞ்சிக்க..தெரிஞ்சவங்க தப்பு ஏதும் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.
எக்ஸாம் எழுதும்போதே நாம எப்படி எழுதி இருக்கோம் எவ்ளோ மார்க் வரும்ன்னு ஓரளவுக்கு தெரிஞ்சிடும்.உடனே நாம் முடிவு பண்ணவேண்டியது, ரிசல்ட்க்காக காத்திருந்து, வர்ற மார்க்குக்கு ஏத்த கோர்ஸ்ல கவர்மெண்ட் கோட்டால சேரப்போரோமா இல்ல மானேஜ்மெண்ட் கோட்டால நமக்கு விருப்பமான கல்லூரில சேரப்பொறோமான்னுதான்.
மானேஜ்மெண்ட் கோட்டான்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா, எதைப்பத்தியும் கவலைப்படாம நீங்க விரும்பற காலேஜ சீக்கிரம் அப்ரோச் பண்ணி அட்மிஷன் வாங்கிகோங்க.லேட் பண்ணினீங்கன்னா,டிமாண்ட் அதிகமாகி கேபிடேஷன் ஃபீஸ் அதிகமானாலும் ஆகலாம்.
கவர்மெண்ட் கோட்டான்னு முடிவு பண்ணா,
1. ரிசல்ட் வர்ற வரை வெய்ட் பண்ணிடிருங்க.
2. நீங்க விரும்பற கோர்ஸ்க்கு அப்ளிகேஷன் எப்போ கிடைக்குதுன்னு பாத்து அப்ளிகேஷன் போட்டிருங்க.
3.கட் ஆஃப்: இப்போ தான் ஆரம்பிக்குது.கட் ஆஃப் கால்குலெஷன். கட் ஆஃப் மார்க்கை வச்சே உங்களுக்கு எந்த காலேஜ் கிடைக்கும்ன்னு ஓரளவுக்கு தெரிஞ்சிக்கலாம்.
கட் ஆஃப் மார்க் (எஞ்சினியரிங்)=பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,ல நீங்க வாங்கின மார்க்கை 50 க்கு கன்வர்ட் பண்ணிகோங்க.
மாத்ஸ் மார்க்கை 100க்கு கன்வர்ட் பண்ணிகோங்க. இ ந்த ரெண்டோட கூட்டல் தான் கட் ஆஃப் மார்க் எஞ்சினியரிங் சேர்க்கைக்கு.
இதே மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புன்னா
பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,ல நீங்க வாங்கின மார்க்கை 50 க்கு கன்வர்ட் பண்ணிகோங்க.
பயாலஜி மார்க்கை 100க்கு கன்வர்ட் பண்ணிகோங்க. இந்த ரெண்டோட கூட்டல் தான் கட் ஆஃப் மார்க் மருத்துவம் சார்ந்த படிப்பு சேர்க்கைக்கு.
இ ந்த ஸ்டேஜ்க்கு அப்புறம் மருத்துவம்,பொறியியல் சேர்க்கைக்கு வழிமுறைகள் ஒரே மாதிரிதான்.
4.ரேங்க் லிஸ்ட்: வர்ற அப்ளிகேஷன்ஸ வச்சி, மருத்துவம்,பொறியியல் ரெண்டுக்கும் தனித் தனி ரேங்க் லிஸ்ட் போடுவாங்க.
அப்ளை பண்ணதுல பல மாணவர்கள் ஒரே மார்க் வாங்கி இருந்தா அவங்களோட பிற பாட மதிப்பெண்கள்,பிறந்ததேதி(மூத்தவருக்கே முன்னுரிமை)இதை வச்சி லிஸ்ட் போடுவாங்க.
இதிலயும் ஒரே மாதிரி வர்றவங்களுக்கு கம்ப்யூட்டர் வச்சி ரேண்டம் நம்பர் அலாட் பண்ணுவாங்க.
இதையெல்லாம் வச்சிதான் ரேங்க் லிஸ்ட் போடுவாங்க.இந்த லிஸ்ட்படிதான் கவுன்சிலிங் கூப்பிடுவாங்க.
5.கவுன்சிலிங்: கவுன்சிலிங்ல நீங்க ஹால்க்குள்ள வெளிலயே அன்றைய சீட்களின் நிலை டிஸ்பிளே பண்ணீருப்பாங்க.
கவுன்சிலிங் ஹாலுக்குள்ள மாணவர் கூட யாராவது(பேரண்ட்(அ)கார்டியன்)ஒருத்தரைத்தான் அனுமதிப்பாங்க.
நீங்க உள்ள போன உடனே,எந்த கல்லூரிகள்ல எந்த துறைல சீட் இருக்குங்கற விவரம் கம்ப்யூட்டர்ல காட்டுவாங்க. அதுல உங்ககிட்ட 3 ஆப்ஷன் கேப்பாங்க.உங்களை அலாட்மெண்ட் டேபுள்க்கு அனுப்புவாங்க
அங்க நீங்க தந்த 3 ஆப்ஷன்ல எது அவெய்லபில் ஆ இருக்கோ அந்த சீட் உங்களுக்கு அலாட் பண்ணி ஆர்டர் தந்திடுவாங்க..
அப்புறம் என்ன..ஜாலியா கிளம்பிபோய் காலேஜ்ல கலக்க வேண்டியதுதான்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
சூப்பர் பதிவு....ஆன்லைன் கவுன்சலிங்க் கூட இருக்கே அதைப் பற்றியும் சொல்லலாமே????
/மானேஜ்மெண்ட் கோட்டான்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா, எதைப்பத்தியும் கவலைப்படாம நீங்க விரும்பற காலேஜ சீக்கிரம் அப்ரோச் பண்ணி அட்மிஷன் வாங்கிகோங்க///
ரொம்ப கரீக்ட்டு!
முன்னாடி ஓடிப்போய் புடிக்கிறவங்களுக்கு நார்மல் ரேட்ல சீட் கிடைச்சுடும் ! சில பேர் கவர்ன்மெண்ட் கோட்டால கிடைக்கும் அப்படி இல்லாட்டி கடைசியில போய் தட்டிடலாம்ன்னு நினைப்பாங்க காலமும் வேஸ்டாகிடும் & காசும் ரொம்ப அதிகமாகிடும்!
//அங்க நீங்க தந்த 3 ஆப்ஷன்ல எது அவெய்லபில் ஆ இருக்கோ அந்த சீட் உங்களுக்கு அலாட் பண்ணி ஆர்டர் தந்திடுவாங்க..///
இந்த மேட்டர்ல கொஞ்சம் ஹோம் ஒர்க் செஞ்சுட்டு போங்க!
முதல்ல டாப் டென் காலேஜ்ஸ்ன்னு நீங்களே ஒரு லிஸ்ட் எடுத்துவைச்சுங்கோங்க!
பிறகு ஊரை சுத்தி இருக்கற பெஸ்ட் காலேஜ் லிஸ்ட் ஒண்ணும் வைச்சுக்கோங்க
டிபார்மெண்ட்ஸ் சம்பந்தமா ஒரு லிஸ்ட்
ச்சும்மா கவுன்சிலிங்க்ல போய் உக்காந்துக்கிட்டு கவுன்சில் பண்ணுறவரு ஒண்ணு கேக்க நீங்க ஒண்ணு சொல்லன்னு எல்லாம் முடிஞ்ச பிறகு ஃபீல் பண்ணாதீங்க
வாழ்த்துக்கள் - கல்லூரி வாழ்க்கையில் நுழையும் அனைவருக்கும்!
கவுன்சலின்ங் பற்றி நல்ல பதிவு!
ஒரு ஓட்டு தமிழ்மணத்தில் போட்டுவிட்டேன்
மாண்வர்களுக்குப் பயனுள்ள பதிவு.
விண்ணப்ப படிவம் எழுதித் தந்தால் கல்லூரி நுழைவு என்ற பொற்காலம் மீண்டும் திரும்பட்டும்.
அருமையான உபயோகமான பதிவு....
எளிமையா விளக்கி இருக்கீங்க இயற்கை. அருமை.
தொடரட்டும் உங்கள் சேவை...
மோசமான காலேஜ்களில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்க்கு டிப்ஸ் தரலாமே...
//அன்புடன் அருணா said...
சூப்பர் பதிவு....ஆன்லைன் கவுன்சலிங்க் கூட இருக்கே அதைப் பற்றியும் சொல்லலாமே????//
நன்றி அருணா அக்கா..எழுதிடலாம்
@ஆயில்யன்
பாஸ் நொம்ப நொம்ப டேங்ஸூ.... நான் எழுத சோம்பேறிதனமா விட்டதையும் கமெண்ட் ல சொன்னதுக்கு
@ thevanmayam
நன்றி Dr ..ஓட்டுக்கும் கமெண்டுக்கும்
@ ஷண்முகப்ரியன் .....நன்றி
//ராஜ நடராஜன் said...
விண்ணப்ப படிவம் எழுதித் தந்தால் கல்லூரி நுழைவு என்ற பொற்காலம் மீண்டும் திரும்பட்டும்.//
இதே எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் பெருகினால் அந்நிலை விரைவில் வரும்
நன்றி
@ T.V.Radhakrishnan
@ sakthi Akka
@ SK
முயல்கிறேன் கடைக்குட்டி:-)
Post a Comment