சக்திமான் ஸ்டீல்ஸ் அவ்வூரிலேயே புகழ்பெற்ற இரும்பு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை.அதன் நிறுவனர் சக்திவேல்.அவ்வூரின் புகழ்பெற்ற விஐபி.அவரது குடும்பத்தின் குல தெய்வத்தின் முன் சோகமே உருவாக நின்றிருந்தார்.காரணம் ஏறத்தாழ கால் நூற்றாண்டாக ஏறுமுகத்திலேயே இருந்த கம்பெனி சில ஆண்டுகளாக அடி வாங்குகிறது.தயாரித்த பொருட்கள் பாதிக்கு மேல் தேங்கி கிடக்கிறது.இதனால் கம்பெனியின் கையிருப்பு பணம் குறைந்துவிட்டது. ஷேர்கள் மதிப்பு குறைய ஆரம்பித்துவிட்டது.கடவுளே ..ஏன் இந்த சோதனை.கம்பெனி இனிமேல் அவ்வளவுதானா.? வாங்கிய கடன்களுக்கு என்ன பதில் சொல்வது?.இதற்குமேல் என் கையில் ஏதும் இல்லை.ஏதாவது வழிகாட்டு.இல்லைன்னா வீதிக்குதான் போகணும்.என புலம்பிக் கொண்டிருந்தார்.கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கும் நிலையில் இருந்தது.
சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு,கோயிலின் ஒரு மூலையில் அமர்ந்தார்.அப்போது ஒரு பெரியவர் அவரிடம் வந்தார்.
தம்பி! ஏதோ பிரச்சினைல இருக்கீங்க போல இருக்கு? என்கிட்ட சொல்லுங்க.என்னால ஏதாவது உதவி பண்ண முடியுமான்னு பாக்கறேன்
ஐயா.. நான் ஒரு தொழிலதிபர்.சக்திமான் ஸ்டீல்ஸ் தொழிற்சாலை என்னோடதுதான்.கம்பெனில கொஞ்சம் பிரச்சினை.அதனால கடவுள்கிட்ட முறையிட்டாலாவது வழி பிறக்குமான்னு வந்திருக்கேன்
ஓ..அப்படியா..கவலைப்படாதீங்க.கடவுள் வழி காட்டுவார்.இப்போ உங்களுக்கு பணம் தானே பிரச்சினை.பணத்துக்கு வழி நான் செய்றேன்.இருங்க என்று சொல்லிவிட்டு,எங்கேயோ போய்விட்டு,சில நிமிடங்களில் ஒரு "செக்"உடன் வந்தார்.
இந்தாங்க,இதை வச்சிகிட்டு உங்க பிஸினஸை டெவலப் பண்ணுங்க என்றார்.
வாங்கிப் பார்த்தால்,அதில் 5,00,000 ரூபாய் எழுதியிருந்தது.இவர் ஆச்சரியமாய் பார்த்தார்.
என்ன பாக்கறீங்க. நான் தான் இந்த ஊரின் பெரும் பணக்காரர்களில் ஒருவனான சோமசுந்தரம்.என்னோட பணத்தால நீங்க முன்னேறினா எனக்கு ரொம்ப சந்தோஷம் ..
ஐயா..ரொம்ப நன்றி. என்னோட இன்றைய நிலையில் இந்தப் பணம் நிச்சயமாய் என் வாழ்வை மீட்டெடுக்கும்.இந்த பணத்தை எப்படி உங்ககிட்ட திருப்பி தர்றது?
இன்னும் ஒரு வருஷம் கழிச்சி இதே இடத்துக்கு வாங்க.உஙகளால எவ்ளோ பணம் திருப்பி தர முடியுமோ குடுஙக..
என்று கூறி விட்டு வேகமாய் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார்.
குலதெய்வமே மானிட உருவில் வந்து உதவியதாய் எண்ணி சக்திவேல் மகிழ்ந்தார்.அச்செக்கை பத்திரப்படுத்திக் கொண்டார்.
ஆனால் அந்த செக்கில் பணத்தை எடுக்காமல் அவரிடமிருந்த பணத்தை வைத்தே மீண்டும் தொழிலில் பழைய நிலையை அடைந்தார்.அவரிடமிருந்த அந்த செக் எத்தகைய ரிஸ்க் எடுக்கவும் அவருக்கு தைரியத்தை அளித்தது. நம்மிடம் 5,00,000 ரூபாய் இருக்கிறது என்னும் நினைவே அவருக்கு புது தெம்பை தந்தது.
ஒரு வருடம் கழித்து,அந்தப் பெரியவருக்கு நான்றி சொல்ல அதே கோயிலுக்கு விரைந்தார்.கையில் அப்பெரியவர் கொடுத்த செக் அப்படியே இருந்தது.
அப்பெரியவர் மலர்ந்த முகத்துடன் இவரருகே வந்தார்.அப்போது ஒரு பெண்மணி, அந்தப் பெரியவரை விரட்டி அடித்தார்.அவரும் பயந்து ஓடி விட்டார்.
சக்திவேல் சற்று கோபத்துடனே அப்பெண்ணிடம் கேட்டார்.என்னம்மா ..அவரை ஏன் துரத்துறீங்க.பெரியவங்கிட்ட எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியாதா ?
அய்யா..அது ஒரு லூசுங்க.அஞ்சாறு வருஷமா இந்த பக்கம் சுத்திட்டு இருக்கு.வர்றவங்க போறவங்க கிட்டயெல்லாம் நான் தான் இ ந்த உலகத்திலேயே பெரிய பணக்காரன்,உனக்கு பணம் வேணும்னா சொல்லு நான் தர்றேன்னு,ஒரு செக் புக்கை வேற கைல வச்சிகிட்டு சுத்தும். என்று கூறிவிட்டு போய்விட்டார் அப்பெண்..
சக்திவேல் குழம்பிபோனார்.பின்னர்தான் புரிந்தது.ஓராண்டிற்குமுன் அவருக்கு தேவைப்பட்டது பணம் அல்ல..தன்னம்பிக்கை.
Note:எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலைக் கொண்டு எழுதியது.
.
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
me the first
கலக்கல் அக்கா....
பின்னீட்டிங்க...
நல்ல இடுகை தோழி...
மனிதனின் பெரும்பலம் தன்னம்பிக்கை தான் பணம் காசு அல்ல என்ற கருத்து அருமை.
மீண்டும் யூத் விகடன் குட் ப்ளாக்கில் உங்கள் இடுகை "தாய்மொழியில் மட்டுமே பேசுவது சரியா?" வந்திருக்கிறது...வாழ்த்துகள் தோழி...
wondrefull post
keep going hats of to u all the best
பூங்கொத்து!!
பூங்கொத்து!!
நல்ல குட்டி கதை..
\\சின்ன திருத்தம்.
பகையிருப்பு பணம்- கையிருப்பு பணம்.\\
இயற்கை கலக்கிவிட்டீர்!!1
அய்யா..அது ஒரு லூசுங்க.அஞ்சாறு வருஷமா இந்த பக்கம் சுத்திட்டு இருக்கு.வர்றவங்க போறவங்க கிட்டயெல்லாம் நான் தான் இ ந்த உலகத்திலேயே பெரிய பணக்காரன்,உனக்கு பணம் வேணும்னா சொல்லு நான் தர்றேன்னு,ஒரு செக் புக்கை வேற கைல வச்சிகிட்டு சுத்தும். என்று கூறிவிட்டு போய்விட்டார் அப்பெண்..
///
இவ்வளவு தொகையை செக் தரும்போதே நார்மல் நபர் இல்லை என்பது புரியுது....
ம்..என்ன சொல்வது..அருமை..
நிறைய எழுதுங்கள் இயற்கை
அட ரொம்ப நல்லா இருக்குங்க !
//எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலைக் கொண்டு எழுதியது.//
ம்ம் நாங்கெல்லாம் ஜஸ்ட் லைக் தட் பார்வேர்டிங்க் ஒன்லி! பரவாயில்ல நீங்க கொஞ்சம் யோசிக்கிறீங்க குட் இதைஅப்படியே மெயிண்ட்டென் பண்ணுங்க !:))
தங்காச்சி! சத்தியமா சத்தியமா சொல்றேன், எனக்கு உடம்பு ஒரு தடவை சிலிர்த்தது உண்மை! நிதர்சனமான உண்மை! தன்னம்பிக்கை மாத்திரம் இருந்தா போதும் நாம மேல வந்துடலாம். நான் வாழ்க்கையில் பலதடவை சறுக்கி விழுந்து என் மனைவி என்னும் தன்னம்பிக்கை தெய்வத்தால் மேலே வந்திருக்கேன். இதை சொல்ல வெட்கப்படவில்லை!
அருமையான பதிவு இயற்கை !
சூப்பர் 'கதை'
தன்னம்பிக்கைதான் எப்பவும் கூடவே வரும் மூன்றாவது கை.
அருமையா வந்துருக்கு அபி அப்பா
நல்லா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்!
அருமையான எழுத்து நடை!
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!
/ஆயில்யன் said...
அட ரொம்ப நல்லா இருக்குங்க !/
Repeattuuuuu...!
/ஆயில்யன் said...
//எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலைக் கொண்டு எழுதியது.//
ம்ம் நாங்கெல்லாம் ஜஸ்ட் லைக் தட் பார்வேர்டிங்க் ஒன்லி! பரவாயில்ல நீங்க கொஞ்சம் யோசிக்கிறீங்க குட் இதைஅப்படியே மெயிண்ட்டென் பண்ணுங்க !:))/
Repeattuuuuuu.....!
/வாங்கிப் பார்த்தால்,அதில் 5,00,000 ரூபாய் எழுதியிருந்தது/
/அந்த செக் எத்தகைய ரிஸ்க் எடுக்கவும் அவருக்கு தைரியத்தை அளித்தது. நம்மிடம் 50,00,000 ரூபாய் இருக்கிறது /
என்னது எக்ஸ்ட்ட்ரா ஒரு சைபர் இருக்கு....:)
தன்னம்பிக்கை வித்து ...
இயற்கை அது தானே ...
நல்லா சொல்லியிருக்கீங்க ...
நல்லா இருக்கு. அருமை இயற்கை.
ஆமா அந்த குலசாமி கோவில் எங்கன இருக்கு.? நமக்கு ஒரு பிளாங்க் செக் தேவப்படுது.. எல்லாம் ஒரு தன்னம்பிக்கைக்கு தான். :)
நல்லா இருக்கு. அருமை இயற்கை.
ஆமா அந்த குலசாமி கோவில் எங்கன இருக்கு.? நமக்கு ஒரு பிளாங்க் செக் தேவப்படுது.. எல்லாம் ஒரு தன்னம்பிக்கைக்கு தான். :)
அருமையான கருத்து...எதை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்க கூடாது என்பதற்கு இக்கதை நல்ல உதாரணம்.
வாழ்த்துக்கள் தோழி
உண்மையிலயே நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் மட்டுமே பலர் பல விசயங்களை இழந்திருப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
அருமையா எழுதியிருக்கீங்க.
NICE THOUGHTS
KEEP IT UP
சக்திவேல் குழம்பிபோனார்.பின்னர்தான் புரிந்தது.ஓராண்டிற்குமுன் அவருக்கு தேவைப்பட்டது பணம் அல்ல..தன்னம்பிக்கை.
அருமை
ரியலி நைஸ் மா.....
//Anbu on June 30, 2009 6:41 PM said...
me the first
Anbu on June 30, 2009 6:44 PM said...
கலக்கல் அக்கா....
பின்னீட்டிங்க...//
வாங்க அன்பு. நீங்க தான் ஃப்ர்ஸ்ட்..
நன்றி
இங்கிலீஷ்காரன் on June 30, 2009 6:47 PM said...
நல்ல இடுகை தோழி...
மனிதனின் பெரும்பலம் தன்னம்பிக்கை தான் பணம் காசு அல்ல என்ற கருத்து அருமை.//
நன்றிங்க...உண்மைதானே அது
//இங்கிலீஷ்காரன் on June 30, 2009 6:56 PM said...
மீண்டும் யூத் விகடன் குட் ப்ளாக்கில் உங்கள் இடுகை "தாய்மொழியில் மட்டுமே பேசுவது சரியா?" வந்திருக்கிறது...வாழ்த்துகள் தோழி...//
செய்திக்கு நன்றி:-)
//ithayathirudan on June 30, 2009 7:18 PM said...
wondrefull post
keep going hats of to u all the best//
Thanks
//அன்புடன் அருணா on June 30, 2009 7:27 PM said...
பூங்கொத்து!!//
உங்ககிட்ட இருக்கற எல்லா பூங்கொத்தும் வாங்காம விடறாதில்லைன்னு முடிவு பண்ணி இருக்கேன்
//sarathy on June 30, 2009 7:35 PM said...
நல்ல குட்டி கதை.//.
நன்றிங்க சாரதி
\\சின்ன திருத்தம்.
பகையிருப்பு பணம்- கையிருப்பு பணம்.\\
@ sarathy மாத்திடேங்க..
//thevanmayam on June 30, 2009 7:46 PM said...
இயற்கை கலக்கிவிட்டீர்!!1
//
நன்றி.. நன்றி
//thevanmayam on June 30, 2009 7:48 PM said...
அய்யா..அது ஒரு லூசுங்க.அஞ்சாறு வருஷமா இந்த பக்கம் சுத்திட்டு இருக்கு.வர்றவங்க போறவங்க கிட்டயெல்லாம் நான் தான் இ ந்த உலகத்திலேயே பெரிய பணக்காரன்,உனக்கு பணம் வேணும்னா சொல்லு நான் தர்றேன்னு,ஒரு செக் புக்கை வேற கைல வச்சிகிட்டு சுத்தும். என்று கூறிவிட்டு போய்விட்டார் அப்பெண்..
///
இவ்வளவு தொகையை செக் தரும்போதே நார்மல் நபர் இல்லை என்பது புரியுது....
//
he..he..he..he..he.
T.V.Radhakrishnan on June 30, 2009 8:18 PM said...
ம்..என்ன சொல்வது..அருமை..
நிறைய எழுதுங்கள் இயற்கை//
உங்களைப் போன்றோரின் ஊக்கத்தால்.. நிச்சயமாய் எழுதுகிறேன்
Post a Comment