
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.என்ன இது..மகளிர்க்கு மட்டும் தானே சொல்லணும்ன்னு பாக்கறீங்களா?....ஆணோ,பெண்ணோ இருவர் உலகமும் பிண்ணிப் பிணைந்ததுதானே?இதுல மகளிரை மட்டும் ஏங்க பிரிச்சி எடுக்கணும்?அதனால தான் எல்லார்க்கும் சொல்லிட்டேன்:)
பெண்கள் நம்மளை நாமளே வாழ்த்திக்கறதை விட இந்த நாளை நமக்கு என்னிக்கும் பல வடிவங்கள்ல உறுதுணையா இருக்கற ஆண்கள் க்கு நன்றி சொல்ற வாய்ப்பா பயன்படுத்திக்கலாம்ன்னு பாக்கறேன்.
வாழ்க்கைல நாம மொத மொதல்ல சந்திக்கற ஆண் அப்பா.அப்பாக்கள்கிட்டயும் அவங்க பொண்ணுங்களுக்கு கண்டிப்பா ஸ்பெசல் இடம் உண்டு.அப்பாக்கள் நாம வளர வளர நம்ம கூடவே அவங்களையும் வளர்த்திக்குவாங்க. நமக்கு ஈக்வலா அப் டு டேட் ஆ இருப்பாங்க.
அப்பாக்கள் ஒரு ஆண் குழந்தைக்கு கொடுக்கற கேர் அ விட பெண் குழந்தைக்கு கொடுக்கிற கேர் கண்டிப்பா அதிகம்.இது அப்பாக்களுக்கும்,அவர்களின் பெண்களுக்குமான தேவ ரகசியம்.((கடவுளே...என் அண்ணன் இந்த லைனைப் படிச்ச உடனே மறந்திடணும்..சாமி...ப்ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்)....பொண்ணு பொறந்திட்டா ஆண்களோட லைஃப் ஸ்டைலே மாறிடுதுங்க..இந்த வயசுலயே நாம ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சுடறோம்!!!!:)))))
அடுத்து நம்மகிட்ட வசமா சிக்கறது அண்ணாவோ தம்பியோ..அண்ணாக்களோட கடமை முக்கியத்துவம் அடையறது, நாம வீட்டை விட்டு வெளில போக ஆரம்பிக்கும்போது தான்...அவங்க விளையாடப் போனா நாமளும் பின்னாடியே கெளம்புவோம். நமக்கு அந்த ஸ்டேஜ் ல ஃப்ரண்ட்ஸ் யாரும் இருக்க மாட்டாங்க.ஸோ அண்ணாவோட ஃப்ரண்ட்ஸ் தான் நமக்கும்.அந்த குரூப்ல நாம தாங்க தேவதை...(ஒரே சமயத்துல அத்தனை அண்ணாக்கள் கிடைப்பாங்க...) நாம சின்ன பொண்ணா இருக்கறதால அவங்க விளையாடற விளையாட்டெல்லாம் நாம விளையாட முடியாது.அதனால நமக்காக அவங்க விளையாடற விளையாட்டுகளையே நமக்காக மாத்திக்கு வாங்க. இந்த ஸ்டேஜ்ல ஆரம்பிக்கற அவங்க விட்டுக் கொடுத்தல் லைஃப் லாங் கண்டின்யூ ஆகும்.
அடுத்து தம்பி.. நெஜம்மாவே பாவம்.சின்ன வயசுல நாம வீட்ல பண்ற தப்பையெல்லாம் தன் தலைல போட்டுக்கற ஜீவன்.அப்போ அவன் நம்மால வாங்க ஆரம்பிக்கற திட்டு எப்போ முடியுதுன்னு கடவுளுக்குத் தாங்க தெரியும். அவனை நாம தான் சின்ன பையன்னு மதிக்கறதில்லைன்னு பார்த்தா.. நம்ம குழந்தைகளும் அதே மாதிரி தான் ட்ரீட் பண்ணும்.நம்ம கிட்ட மட்டுமில்லாம நம்ம அடுத்த தலைமுறை கிட்டயும் அட்ஜெஸ்ட் பண்ணறது தம்பிங்க தான் ..
இது மட்டுமில்லாம பருவ வயதில் வெளி உலகில் நாம் சந்திக்கற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்றது சகோதரர்கள் தான்.
அப்புறம் தோழர்கள்..அவங்களைப் பத்தி சொல்லிகிட்டே போகலாம்..சுருக்கமா சொன்னா ..யாதுமாகி நிற்பவர்கள்.. நாம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இழுபட்டு,தட்டுத் தடுமாறினாலும்..புன்னகை மாறாதவர்கள்.
எல்லாம் சேர்ந்து கணவர் ங்கிற ஒருத்தர மாட்டி விட்டுடறாங்க. நாம சமையல் கத்துக்கறதுல ஆரம்பிச்சி.. நம்ம பொண்ணுங்க சமையல் கத்துக்கறது வரைக்கும் எல்லாத்துக்கும்
டெஸ்ட் பீஸ்ஆய் இருந்து... நாம் திருமணம் என்ற பெயரில் பிரியும்..தந்தையாய்..தமையனாய்..தோழனாய்..அனைத்து அவதாரமும் எடுத்து நம்மை மகிழ்விப்பவர்கள்.
அடுத்து மகன் என்னும் பொக்கிஷம்.அனைத்து மகன்களுக்கும் பெண்களின் அளவுகோல் தன் தாய்..அம்மா செய்வது அனைத்தும் மகன்களுக்கு சரியாய் தான்படும். தாயை தெய்வத்துக்கு நிகரான நிலையில் தான் மகன்கள் எப்பவும் வச்சிருப்பாங்க.
நான் எழுதி இருக்கறது ஆண்களோட விட்டுக்கொடுத்தல்ல ரொம்ப கொஞ்சம் தான்.
ஆண்களின் குட்டி தேவதையாய் உலகினுள் நுழையும் நாம் தெய்வத்துக்கு நிகரான நிலைவரை உயர்த்தப்படுவது ஆண்களால் தான்..இந்த மாதிரி எல்லா நிலைகளிலும் நமக்காகவே வாழும் ஆண்களுக்கு நன்றி சொல்வோம்..இந்நன்னாளில்
//***.தேர்தல் வரப்போகுது.அங்க போய் தப்பில்லாம ஓட்டு போட மொதல்ல இங்க தமிழிஷ் லயும் தமிழ்மணம்லயும் ஓட்டு போட்டு பழகுங்க***//
.