
|
ஏஞ்சல் வந்தாளே என்னிடமும்.. அனுப்பி வைத்த மேனகாசத்யாவுக்கு நன்றி..
முதல்ல நான் வேண்டிக்கறது என்னன்னா.. என் தொல்லை தாங்காம ஏஞ்சல் ஓடிப் போயிடக்கூடாது..( இது அவுட் ஆஃப் சிலபஸ் வேண்டுதல்)..
ஓகே..இப்போ சிலபஸ்குள்ள போயி வேண்டுதல்களைப் பட்டியலிடுவோம்..
1. இப்போது இருக்கும் என் உறவுகளும், நட்புகளும் என்றும் பிரியாமல் இதே அன்போடு நிலைத்திருக்க வேண்டும்
2.நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்
3.யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தி வேண்டும்
4.தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்
5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்
6.போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும்
7. தனிமையில் ஏங்கும் நிலையோ, உணவுக்காக ஏங்கும் நிலையோ யாருக்கும் வரக்கூடாது
8.குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது
9.பசும் வயல்களும், அடர் கானகமும் அழியாமல் நிலைத்திருக்க வேண்டும்
10.இத்தனை வரங்கள் தந்த தேவதையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும்
இன்னும்சில பேருக்கு இந்த ஏஞ்சலை அனுப்பி வைக்கணுமாம்..அனுப்பிடுவோம்..ஏஞ்சல் வந்து சேர்ந்ததும் நீங்களும்(நேரமும், விருப்பமும் இருந்தால்)உங்க வரங்களைக் கேட்டுட்டு அடுத்தவங்களுக்கு அனுப்பி வச்சிடுங்க..
ஜோசப் பால்ராஜ்
காயத்ரி
ரங்கா
சிவனேஸ்
தாரணிபிரியா
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் ரங்கா என்னும் ரங்க ராஜனுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
.