என்னருகே நீ இருந்தும் 4ம் பகுதி
இதைப் போன்ற கேள்விகள் எங்களைப் பார்க்கும் பலரிடமிருந்தும் வந்தன. நான் யோசிக்க ஆரம்பித்தேன் இதுவரை யோசித்திராத புது கோணத்தில். இந்நாட்களில் எக்ஸாம் ஆரம்பித்ததால் அவள் படிப்பில் பிஸி ஆகிவிட்டாள். நாங்கள் ஒன்றாய் கழிக்கும் நேரம் மிகக் குறைந்தது.அவளை பல வருடங்களாய்காணாத போது இருந்த வேதனையை விடக் கடும்வேதனையை உணர்ந்தேன்.இனியொரு முறை அவளைப் பிரிய நேரிட்டால், அது உயிர் பிரியும் வேதனையைத் தான் தரும் என்பது நிதர்சனமாய்த் தெரிந்தது
பல நாள் யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தேன்.
அம்முடிவை அவளிடம் வெளிப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என அனுமானிக்க முடியவில்லை..சொன்னால் கோபப்படுவாளோ.. ஏத்துக்குவாளோ..கோபப்பட்டால் எப்படி சமாளிப்பது..அவள் முகத்தில் எப்படி விழிப்பது?
எண்ண அலைகள் எப்போதும் என்னைச் சூழ்ந்தன.
அவள் தேர்வுகள் முடிந்த நாளும் வந்தது.அவள் வீடு நோக்கி விரைந்தேன்.அவளுக்கு முன் வீட்டில் இருந்தேன்.
அவள் அம்மா கதவைத் திறந்தாங்க.
ஆன்ட்டி எப்படி இருக்கீங்க?
ம்ம்.. நல்லா இருக்கேன். நீ எப்படி கண்ணு இருக்கே?வீட்டு பக்கமே ஆளக் காணோம்?
கொஞ்சம் வேலை ஆன்ட்டி.அதான் இப்போ வந்துட்டேனே.ஜனனி இன்னும் வரலியா?
இன்னும் இல்லை..பஸ் எல்லாம் ரொம்ப ரஷ் ஆ இருக்கு..லேட்டா கிளம்பி வர்றேன்னு இப்போதான் போன் பண்ணினா..
ஓ..அப்படியா..சரி ஆன்ட்டி.. நான் போய் அவளை கூட்டிட்டு வந்துடறேன்..எங்க இருக்கா?
அவ பிரண்ட் கவிதா வீட்ல.. லேட் ஆகுது.. நீ சாப்பிடு..அப்புறம் போலாம்..
இல்லை ஆன்ட்டி..அவளையும் போய் கூட்டிட்டு வந்துடறேன் ..சேர்ந்து சாப்டுக்கலாம்
நீங்க அவளுக்கு போன் பண்ணி காலேஜ் என்ட்ரன்ஸ்க்கு வரச் சொல்லிடுங்க
சரி..போய்ட்டு வா..
கிளம்பி போய் அவளை அழைத்து வந்து சாப்பிட்டு எவ்வளவோ கதைகள் பேசியும் என் எண்ணத்தை வெளிப்படுத்தும் தைரியம் இல்லாமலே வீட்டைவிட்டு கிளம்பினேன்.
கிளம்பும்போது..
ஏய்..மயிலு..இன்னிக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா?
ஏன் கேக்கறே?
சொல்லும்மா..ஃப்ரீயா..இல்லையா?
ஃப்ரீதான்..
சரி..அப்போ ஈவினிங் ரெடியா இரு..அம்மா பர்த்டேக்கு ஒரு சாரி வாங்கணும்.வந்து செலக்ட் பண்ணுவியாம்..
ஓ..அடுத்த வாரம் ..ஆன்ட்டி பர்த்டே வருதில்லே...மறந்திட்டேன்..சரி போலாம்..எப்போ வருவே?
Around 6...அதுக்குமேல லேட்டா போனா அங்கிள் கிட்ட உதைதான் விழும்...
ஒகே..I will be waiting for you
அப்போது தெரியவில்லை எனக்கு என் எண்ணத்தை வெளிப்படுத்தும் தைரியம் ஈவினிங் வரும் என்று
((இந்த பகுதி ஒரு மீள் பதிவு))
(தொடரும்)
.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அதானே பார்த்தேன்...படித்திருக்கிறேனே என நினைத்துக் கொண்டே படித்தேன்!
அது எப்படிங்க
எழுதுறது தொடர்கதை
இதுல எப்படி மீள் பதிவு
ஒன்னும் புரியலை
எது எப்படியோ
எழுத்து சுவாரஸ்யமா இருக்கு
//சூப்பர் அக்கா நீங்க..கண்டுபிடிச்சிடீங்களே//
சூப்பர் அக்கா நீங்க..கண்டுபிடிச்சிடீங்களே
நட்புடன் ஜமால் said...
அது எப்படிங்க
//எழுதுறது தொடர்கதை
இதுல எப்படி மீள் பதிவு
ஒன்னும் புரியலை
எது எப்படியோ
எழுத்து சுவாரஸ்யமா இருக்கு//
அது ஒண்ணுமில்லீங்க ஜமால் அண்ணா...
போன பதிவை தவறிபோய் Delete பண்ணிட்டேன்..
அதனாலதான் மீள் பதிவு:((
adutha part potrupeengannu paathaa, repeataa? sekkram next part podunga...
Innum ethirpaakarom!! :)
@ Divyapriya..
கற்பனைக் குதிரை கொஞ்சம் சண்டித்தணம் பண்ணுது திவ்யா..சீக்கிரம் எழுதறேன்
Thanks muthu
போன பகுதியின் லிங்க் வேலை செய்யல
பட் திஸ் பார்ட் போர்////////
Post a Comment