நான் கடவுள்
Thursday, March 19, 2009
பிறந்த போது அரவணைக்கும் அம்மாவின் கைகள் சொன்னது " நான் கடவுள்"
வளரும்போது உழைக்கும் அப்பாவின் கால்கள் சொன்னது " நான் கடவுள்"
கல்லூரிப் பருவத்தில் நட்பு சொன்னது " நான் கடவுள்"
உழைக்கும் பருவத்தில் உயர்வு சொன்னது " நான் கடவுள்"
உயர்ந்த நிலையில் மனமகிழ்வு சொன்னது " நான் கடவுள்"
ஓய்ந்த நிலையில் மனஅமைதி சொன்னது " நான் கடவுள்"
இத்தனை கடவுள்களிடையே யார் உண்மைக் கடவுளென நான் தவித்த வேளையில் அங்கே மறைந்திருந்த ஒன்று சொன்னது காலங்கள் மாறக் கடவுள்கள் மாறலாம்.
ஆனால் அனைத்திலும் உள்ளிருப்பது நானே..
ஆம்.. நான்தான் "அன்பு"
நான் அனைத்துக் கடவுளரின் அடிப்படை..
ஆதலால் என்றென்றும் " நானே கடவுள்"
(இந்த தலைப்பில் கவிதை எழுத சொன்னது மகா தாங்க.அதனால் இதை படிச்சி ஆகற டேமேஜ் க்கு எல்லாம் அவங்கதான் பொறுப்பு) :-))
.
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
இவ்ளோ அழகா எழுதிட்டு, பயப்படலாமா?
பிரமாதம் இயற்கை.
//காலங்கள் மாறக் கடவுள்கள் மாறலாம்.
ஆனால் அனைத்திலும் உள்ளிருப்பது நானே..
ஆம்.. நான்தான் "அன்பு"
நான் அனைத்துக் கடவுளரின் அடிப்படை..
ஆதலால் என்றென்றும் " நானே கடவுள்//
சூப்பரோ சூப்பர்.
romba azhaga iruku..
kadhal, kavithai, kanavu, kadavul pola
கொஞ்சம் கஷ்டமான தலைப்புத்தான்.. நல்லா எழுதி இருக்கீங்க தோழி.. வாழ்த்துக்கள்..
//ஆனால் அனைத்திலும் உள்ளிருப்பது நானே..
ஆம்.. நான்தான் "அன்பு"
நான் அனைத்துக் கடவுளரின் அடிப்படை..//
எனக்கு மிகவும் பிடித்த வரிகள். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று சொல்லுவார்கள். அதற்க்கான ஒரு விளக்கம் இதுவும்தாங்க..
//(இந்த தலைப்பில் கவிதை எழுத சொன்னது மகா தாங்க.அதனால் இதை படிச்சி ஆகற டேமேஜ் க்கு எல்லாம் அவங்கதான் பொறுப்பு) //
நன்றி மகா..
:)
காலம் மாற கடவுள் மாறலாம்.உங்க கவிதையும் கூட
தோழி.. பரிசலின் பெயரைச் சொல்லி யாரோ விளையாண்டு இருக்காங்க.. நம்ப வேண்டாம்..
இயற்கை...
மேல உள்ள கமெண்ட் நான் போடல.
கார்த்திகைப் பாண்டியன் மிக்க நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள் தோழி... யாரோ என்னைக் குறிவைத்து என் பெயரில் இப்படி விளையாடுகிறார்கள். இதோ.. இந்தக் கமெண்டில் பெயருக்கருகில் ப்ளாக்கர் என்ப்தற்கான B சிம்பல் வரும். ஆனால் அந்தக் கமெண்டில் அது இருக்காது. கவனிக்கவும்
புரிந்துகொண்டமைக்கு நன்றி!
ராஜி, மேல போட்டிருக்கும் கமெண்ட் என்னோடது இல்லை. வேறு யாரோ போட்டிருக்காங்க. பரிசல்காரன் பேர்ல இருக்கிறதும் அவரில்லை. அவர் விளக்கம் குடுக்கலைனாலும் புரிஞ்சிருக்கும். அவர் அந்த மாதிர் ஆள் இல்லை. கூகுள் ஐடியில் மட்டும் கமெண்ட் போடற மாதிரி செட்டிங்க் மாத்துங்க. இல்லைனா மாடரேட் பண்ணுங்க.
தேனியார் said...
இவ்ளோ அழகா எழுதிட்டு, பயப்படலாமா?
பிரமாதம் இயற்கை.
//காலங்கள் மாறக் கடவுள்கள் மாறலாம்.
ஆனால் அனைத்திலும் உள்ளிருப்பது நானே..
ஆம்.. நான்தான் "அன்பு"
நான் அனைத்துக் கடவுளரின் அடிப்படை..
ஆதலால் என்றென்றும் " நானே கடவுள்//
சூப்பரோ சூப்பர்.//
நன்றிங்க அண்ணா
நன்றிங்க இராகவன்
வாங்க கவின்
//சொல்லரசன் said...
காலம் மாற கடவுள் மாறலாம்.உங்க கவிதையும் கூட//
ம்ம்..உண்மை
@கார்த்திகைப் பாண்டியன்
மிக நன்றி தோழா
@பரிசல்காரன்
புரிந்து கொண்டேன் பரிசல்காரரே....வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி
நன்றி சஞ்சய்
இயற்கை, இயற்கையா இருக்கு!
//நியாபகப்படுத்தரது//
நியாபகப்படுத்தறது
அழகு :-)
கவிதை நல்லா இருக்குங்க:)
nandringka palamai paesi..maathitten:-)
nandringka punitha
nandringka Poornima
Fantastic
Thanks Sriram
நானே கடவுள்
good. kalakkal kavithaipa. thanks 4 response and ur wishes.
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
நானே கடவுள்//
பொழச்சு போங்க:-)
Thanks மகா:-)
unga kavithai Romba supera irukku.vaazhga tamil valarga ungalin kavithai
Post a Comment