வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ள்

Sunday, March 1, 2009
வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ளைப்ப‌த்தி எழுத‌ சொல்லி தேவா கூப்பிட்டுருக்கார்.ந‌ன்றி தேவா:-)

கொஞ்ச‌ நாளாவே இது வ‌லைப்பூக்க‌ள்ல‌ பிர‌ப‌ல‌மானதா இருக்கு.ம‌ற்ற‌ வ‌லைப்பூக்க‌ள்ல‌ பாக்கும்போது சுல‌ப‌மான‌தாதான் தோணிச்சி.ஆனா என்னை எழுத‌ சொன்னதும் ஒரு வார்த்தை கூட‌ கிடைக்க‌லை.

ச‌ரி.. யார் கால்ல‌யாவ‌து விழ‌ வேண்டிய‌துதான்னு முடிவு ப‌ண்ணி,த‌மிழ் அறிவு என்னைவிட‌ (கொஞ்ச‌மே கொஞ்ச‌ம்)அதிக‌மா இருக்க‌ற‌(தா அவ‌ நினைச்சிட்டு இருக்க‌ற‌) தோழிகிட்ட‌ போய்......."இந்த‌ மாதிரி பிளாக்ல‌ எழுத‌ ஒருத்த‌ர் இன்வைட் ப‌ண்ணி இருக்கார்.என‌க்கு வேர்ட்ஸ் ஏதாவ‌து சொல்லு" ன்னு கேட்டேன்.அவ‌ ..முறைச்சாலே ஒரு முறை.முறைச்ச‌துமில்லாம‌ "ஏண்டி ..இதை கேக்க‌றதுக்கே..இத்த‌னை ஆங்கில‌ வார்த்தை க‌ல‌க்க‌றே.... நீ த‌மிழ‌ப‌த்தி எழுத‌ போறியா..என்ன‌ கொடுமை இது அப்ப‌டின்னு வேற‌ கேட்டுட்டா:‍(

இந்த‌ அவ‌மான‌த்துக்க‌ப்புற‌மும் அவ‌ளை கேக்க‌ணுமான்னு எகிறி குதிச்ச‌ ம‌ன‌சாட்சி த‌ன்மான‌ சிங்க‌த்தை பிஸ்க‌ட் போட்டு தூங்க‌ வ‌ச்சிட்டு..."ஏய்..ப்ளீஸ் சொல்லுப்பா.அவ‌ர் இன்வைட் ப‌ண்ணி ரொம்ப‌ நாள் ஆயிடிச்சி"ன்னு திரும்ப‌ கேட்டேன்.அவ‌ ஒரு 4,5 வார்த்தைங்க‌ சொன்னா...ஆனா அது எல்லாம் ஏற்க‌னவே யாராவ‌து எழுதின‌ வார்த்தையாவே இருந்திச்சி.போடின்னு சொல்லிட்டு நானே தேட‌ ஆர‌ம்பிச்சுட்டேன்.
கொஞ்ச‌ வார்த்தைங்க‌ கெடைச்சுது.அவை கீழே.

தூரிகை -பிர‌ஷ்

பனுவல்-நூல்,புத்த‌க‌ம்

தூவ‌ல்- பேனா

புரிசை- ம‌தில்

மேழி - ஏர்

வ‌துவை-ம‌ண‌மாலை

ம‌தி-நில‌வு

சாளர‌ம்-ஜ‌ன்ன‌ல்

க‌ட‌வுச்சீட்டு-பாஸ்போர்ட்

சல்லியம்-சிறுச‌ண்டை

ச‌ர‌க்குந்து-லாரி

சால‌ம்-மாஜிக்

சுழியம்-பூஜ்ய‌ம்

சிலாகித்த‌ல் ஆன‌ந்த‌ப்ப‌ட‌ல்

ந‌ற‌வு தேன்

ந‌ர‌லுத‌ல் ஒலித்த‌ல்

நுத‌ல் நெற்றி


இதுல‌ருந்து என‌க்கு என்ன‌ தெரிஞ்சிதுன்னா..இப்ப‌டியே நம்ம‌ பேச்சு வ‌ழ‌க்கு இருந்த‌துன்னா..த‌ங்கிலீஷ்ன்னு ஒரு மொழி உருவாகி நிலைச்சுடும்.த‌மிழ் வ‌ள‌ர‌ இந்த‌ மாதிரி வ‌லைப்பூக்க‌ள்ல‌ எழுத‌ற‌து ம‌ட்டும் இல்லாம‌ல் பேச்சுத்த‌மிழ் வ‌ள‌ர‌வும் ஏதாவ‌து செய்ய‌ வேண்டும்.

ஓ...ம‌ற‌ந்திட்டேன்.யாரையாவ‌து தொட‌ர் ப‌திவுக்கு கூப்பிட‌ணுமாமே.ம்ம்.... ந‌ம்மால‌ எவ்ளோ பேரை மாட்டிவிட‌முடியுமோ....செஞ்சிடுவோம்:-))

1.பொடிய‌ன் ச‌ஞ்ச‌ய்
2.ப‌துமை-Aiz
3.அன்புட‌ன் அருணா
4.அப்துல்லா
5.sureஷ்
6.புதுகைச் சாரல்
7. சீமாச்சு
8.அனுப‌வ‌ம்
9.கார்த்திகைப் பாண்டிய‌ன்
10.தேனியார்
11.இவ‌ன்
12.மகா


.

42 comments:

பழமைபேசி said...

இத்தொடரை துவக்கி வைத்த நண்பர் Sriram அவர்களுக்கும், கலந்து சிறப்புச் செய்த உங்களுக்கும் நன்றி!!!

சொல்லரசன் said...

வழக்கொழிந்த‌சொற்கள் அருமை

நட்புடன் ஜமால் said...

\\"ஏண்டி ..இதை கேக்க‌றதுக்கே..இத்த‌னை ஆங்கில‌ வார்த்தை க‌ல‌க்க‌றே.... நீ த‌மிழ‌ப‌த்தி எழுத‌ போறியா..என்ன‌ கொடுமை இது அப்ப‌டின்னு வேற‌ கேட்டுட்டா:‍(\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\ஓ...ம‌ற‌ந்திட்டேன்.யாரையாவ‌து தொட‌ர் ப‌திவுக்கு கூப்பிட‌ணுமாமே.ம்ம்.... ந‌ம்மால‌ எவ்ளோ பேரை மாட்டிவிட‌முடியுமோ....செஞ்சிடுவோம்:-))\\

யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

நட்புடன் ஜமால் said...

\\ந‌ற‌வு தேன்

ந‌ர‌லுத‌ல் ஒலித்த‌ல்\\

இது இரண்டும் தெரியாது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வேண்டாம்....

அழுதுருவேன்..........

☀நான் ஆதவன்☀ said...

நீங்க சொல்ற தமிழ் சொற்கள் எல்லாம் வழக்கொழிந்து பல நூற்றாண்டாயிருக்கும் போலயே....

//பூந்தோட்ட‌வாசிக‌ள்//

அட என்னங்க நான் விளையாட்டா சொன்னத சீரியஸா எடுத்துகிட்டு மாற்றிடீங்க??

Unknown said...

யம்மாடி..... ஆத்தாடி....

எம்.எம்.அப்துல்லா said...

அழைப்புக்கு நன்றி சகோதரி. ஏற்கனவே சிங்கைத் தொடர் மற்றும் சில பதிவுகள் முழுமை பெறாமல் இருக்கு. இருக்கின்ற ஆணியில் இணையம் பக்கம் வந்து படிப்பதே சமீப காலங்களில் சாதனை ஆகிவிட்டது. இதில் எழுதுவது பற்றி சொல்லவே வேணாம்!!! சிறிது சமயம் குடுங்கள். விரைவில் எழுதுகின்றேன். மீண்டும் நன்றி. :)

வெற்றி said...

இந்த தொடர்பதிவ மொத முறப்பாத்தப்ப, இதென்ன பிரமாதமுன்னு நெனச்சேன். இப்ப நீங்க என் பேர சொன்னதும், அடடா இது இவ்ளோ கஷ்டமான்னு தோனுது.

சொல்றது ஈஸிங்ணா, ஆனா செய்றது பேஜார்ங்ணான்னு ஒங்களமாதி பெருசுங்க??!!!! சொன்னா சும்மாவா இருக்கும்.

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ பழமைபேசி:-)

*இயற்கை ராஜி* said...

சொற்க‌ளைப் ப‌ற்றிய‌ ப‌திவுக்கு சொல்லரசன் கிட்ட‌ இருந்து பாராட்டா... ந‌ன்றிங்க‌..:-)

*இயற்கை ராஜி* said...

ஹி..ஹி..ஹி..@ஜமால்

*இயற்கை ராஜி* said...

//SUREஷ் said...
வேண்டாம்....

அழுதுருவேன்..........//

இப்பிடிதான் நான் கூட‌ நெனைச்சேன்.அழைப்பை பார்த்து

*இயற்கை ராஜி* said...

அதைவிட‌ இது ந‌ல்லா இருக்க‌ற‌தா தோணிச்சிங்க‌ ஆத‌வ‌ன்.... ந‌ன்றி

Anonymous said...

அறியாத வார்தைகள்
:)

*இயற்கை ராஜி* said...

வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌ புதுகைச் சாரல் :-)

*இயற்கை ராஜி* said...

நேர‌ம் கிடைக்கும் போது எழுதுங்க‌ள் அப்துல்லாஅண்ணா.அவ‌ச‌ர‌மில்லை.
வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி:-)

அன்புடன் அருணா said...

நீங்களும் கூப்பிட்டாச்சா??? வரேன்...வரேன்..
அன்புடன் அருணா

தாரணி பிரியா said...

நிறைய புது சொற்களை அறிமுகப்படுத்தி இருக்கிங்க இயற்கை. வாழ்த்துகளும் நன்றிகளும்

தாரணி பிரியா

தாரணி பிரியா said...

நிறைய புது சொற்களை அறிமுகப்படுத்தி இருக்கிங்க இயற்கை. வாழ்த்துகளும் நன்றிகளும்

தாரணி பிரியா

Anonymous said...

ஏங்க உங்களுக்கு இந்த ந்ல்லெண்ணம் என்னை மாட்டி விட்டுட்டீங்களே.

Anonymous said...

அச்சோ.. நான் இதிலெல்லாம் ரொம்ப வீக்.. ;)

எனினும் முயற்சிக்கிறேன் தோழி.

Anonymous said...

முயற்சிக்கிறேன் தோழி..
அழைப்புக்கு நன்றி சகி

Anonymous said...

நீங்க கொடுத்த ஹோஒர்க்க நான் க்ரெக்டா செஞ்சிட்டேன்.
சரியா இருக்கான்னு வந்து பார்த்து செக் பண்ணிக்கோங்க.
http://mahawebsite.blogspot.com/2009/03/blog-post.html

Anonymous said...

நீங்க கொடுத்த ஹோஒர்க்க நான் க்ரெக்டா செஞ்சிட்டேன்.
சரியா இருக்கான்னு வந்து பார்த்து செக் பண்ணிக்கோங்க.
http://mahawebsite.blogspot.com/2009/03/blog-post.html

தேவன் மாயம் said...

வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ளைப்ப‌த்தி எழுத‌ சொல்லி தேவா கூப்பிட்டுருக்கார்.ந‌ன்றி தேவா:-)///

நன்றி இயற்கை!!!

தேவன் மாயம் said...

இந்த‌ மாதிரி பிளாக்ல‌ எழுத‌ ஒருத்த‌ர் இன்வைட் ப‌ண்ணி இருக்கார்.என‌க்கு வேர்ட்ஸ் ஏதாவ‌து சொல்லு" ///

ஆமாம் நிறைய ஆங்கிலம்!!!

தேவன் மாயம் said...

பனுவல்-நூல்,புத்த‌க‌ம்

தூவ‌ல்- பேனா

புரிசை- ம‌தில்

மேழி - ஏர்

வ‌துவை-ம‌ண‌மாலை
//
புது சொற்கள்தான்!!!நல்லாத்தேடியிருக்கீங்க!!

தேவன் மாயம் said...

த‌ங்கிலீஷ்ன்னு ஒரு மொழி உருவாகி நிலைச்சுடும்.த‌மிழ் வ‌ள‌ர‌ இந்த‌ மாதிரி வ‌லைப்பூக்க‌ள்ல‌ எழுத‌ற‌து ம‌ட்டும் இல்லாம‌ல் பேச்சுத்த‌மிழ் வ‌ள‌ர‌வும் ஏதாவ‌து செய்ய‌ வேண்டும்.//
ஆமாம் ஆராய்ச்சி பலமா இருக்கு!1

Sanjai Gandhi said...

//ந‌ம்மால‌ எவ்ளோ பேரை மாட்டிவிட‌முடியுமோ....செஞ்சிடுவோம்:-))//

ஆமா.. நீங்க யாரு? :(

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ அருணா மேட‌ம்.காத்திருக்கிறேன்

*இயற்கை ராஜி* said...

நன்றி தாரணி

*இயற்கை ராஜி* said...

//பதுமை said...
அச்சோ.. நான் இதிலெல்லாம் ரொம்ப வீக்.. ;)//



Aiz..ஓவ‌ரா தெரில்ல‌ இதெல்லாம்?

*இயற்கை ராஜி* said...

//மகா said...
நீங்க கொடுத்த ஹோஒர்க்க நான் க்ரெக்டா செஞ்சிட்டேன்.
சரியா இருக்கான்னு வந்து பார்த்து செக் பண்ணிக்கோங்க.//

செக் ப‌ண்ணிட்டேங்க‌ ம‌கா...வெரி குட்

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி தேவா..:-))

*இயற்கை ராஜி* said...

//thevanmayam said...
த‌ங்கிலீஷ்ன்னு ஒரு மொழி உருவாகி நிலைச்சுடும்.த‌மிழ் வ‌ள‌ர‌ இந்த‌ மாதிரி வ‌லைப்பூக்க‌ள்ல‌ எழுத‌ற‌து ம‌ட்டும் இல்லாம‌ல் பேச்சுத்த‌மிழ் வ‌ள‌ர‌வும் ஏதாவ‌து செய்ய‌ வேண்டும்.//
ஆமாம் ஆராய்ச்சி பலமா இருக்கு!1//

ஹி..ஹி...ஹி

*இயற்கை ராஜி* said...

//SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...
//ந‌ம்மால‌ எவ்ளோ பேரை மாட்டிவிட‌முடியுமோ....செஞ்சிடுவோம்:-))//

ஆமா.. நீங்க யாரு? :(//

நான் யாருன்னு தெரியாட்டி போகுது.. நான் சொன்ன‌ வேலையை ஒழுங்கா முடியுங்க‌..அது போதும்

*இயற்கை ராஜி* said...

thanks for the visit and comment charles

அனுபவம் said...

//யாரையாவ‌து தொட‌ர் ப‌திவுக்கு கூப்பிட‌ணுமாமே.ம்ம்.... ந‌ம்மால‌ எவ்ளோ பேரை மாட்டிவிட‌முடியுமோ....செஞ்சிடுவோம்//

நம்மளயும் மாட்டி விட்டீங்களா? வாங்க எல்லாரும் சேர்ந்து இழுப்பம்.

//இப்ப‌டியே நம்ம‌ பேச்சு வ‌ழ‌க்கு இருந்த‌துன்னா..த‌ங்கிலீஷ்ன்னு ஒரு மொழி உருவாகி நிலைச்சுடும்.த‌மிழ் வ‌ள‌ர‌ இந்த‌ மாதிரி வ‌லைப்பூக்க‌ள்ல‌ எழுத‌ற‌து ம‌ட்டும் இல்லாம‌ல் பேச்சுத்த‌மிழ் வ‌ள‌ர‌வும் ஏதாவ‌து செய்ய‌ வேண்டும்//
இது என் ஒள்ளுப்பம் என்ர பங்கு.
அப்பப்போதான் வருவன். கோச்சிக்க்க்கூடா. இப்படித்தான் எழுதுவன் விரும்பினா சொல்லுங்க. உதாரணத்துக்கு

1.கரைச்சல்= தொந்தரவு
2.ஒண்ணா=இயலாது
3.மறுகா=பிறகு
4.கொப்பா=அப்பா(ஒருவர் மற்றவரது அப்பாவை அவரிடம் பேசும்போது)
5.தெப்பிராட்டியம்=ஏமாற்று

அப்ப நான் மறு(வா)கா வாறன்.

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ அனுப‌வ‌ம்.....இங்க‌யே ஒரு ப‌திவு போட்டாச்சி போல‌:-))

veluads said...

thank you salarm word