நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்

Friday, July 17, 2009
ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
தொலைந்து போன‌ இள‌மைக்காய் ஏங்கி விட்டு
ப‌ச்சிள‌ம் பாலகர்களை ப‌ள்ளியில் சேர்ப்போம்
கல்வி கற்பிப்பதை சேவையில் சேர்த்து விட்டு
கட்டணத்தின் பெயரால் கோடிகளை குவிப்போம்

ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
வ‌ரதட்சணை வாங்குதல் ஈனச் செயல் எனப் பேசி
சீர் என்னும் பெயரால் செழிப்போம்
ஆணுக்குப் பெண் ச‌ம‌மென‌ப் பேசிவிட்டு
வீட்டுப் பெண்க‌ளுக்கு வாய்ப் பூட்டு போடுவோம்

ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
தெய்வீகத்தனமானது என‌க் கூறி விட்டு
காத‌லிலும் க‌ய‌மைத்த‌ன‌ம் புரிவோம்
சாதியை ஒழிக்க‌ணும் என‌ முழ‌ங்கி விட்டு
சாக்காட்டிலும் சாதிச் சுடுகாடு கேட்போம்
ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்

.

20 comments:

நட்புடன் ஜமால் said...

சாதியை ஒழிக்க‌ணும் என‌ முழ‌ங்கி விட்டு
சாக்காட்டிலும் சாதிச் சுடுகாடு கேட்போம்]]


நச் நச்

Mohan R said...

nalla irukkku kavidhai...

நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
தொலைந்து போன‌ இள‌மைக்காய் ஏங்கி விட்டு
ப‌ச்சிள‌ம் பாலகர்களை ப‌ள்ளியில் சேர்ப்போம்

Sooper

ப்ரியமுடன் வசந்த் said...

//வ‌ரதட்சணை வாங்குதல் ஈனச் செயல் எனப் பேசி
சீர் என்னும் பெயரால் செழிப்போம்
ஆணுக்குப் பெண் ச‌ம‌மென‌ப் பேசிவிட்டு
வீட்டுப் பெண்க‌ளுக்கு வாய்ப் பூட்டு போடுவோம்//

உண்மைதாங்க....

கவிதை அருமை.....

na.jothi said...

வாய்பேச்சு ஒன்னு செயல் வேறன்னு

நல்லா இருக்குங்க

உங்களுக்கு என்னோட பதிவில் விருது
காத்திருக்கு

Mohan said...

கவிதை நன்றாக உள்ளது!
முரண்பாடுகள் என்ற தலைப்பில் டிசம்பர் 2008 இல் நான் எழுதிய சில வரிகளை நேரம் கிடைக்கும் பட்சத்தில் படித்துப் பாருங்கள்!

Anonymous said...

நல்லா இருக்குங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல கவிதை தோழி..

SK said...

நிறைய நல்ல வார்த்தைகள். நல்ல கருத்து.

விக்னேஷ்வரி said...

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.

சுசி said...

தட்டிக் குடுக்கிறா மாதிரியே த(கொ)ட்டிக் கேட்ட விதம் அருமை.

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல சிந்தனைகள். இன்னும் சில குறைகளை சுட்டிக்காட்டியிருக்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கவிதை

kanagu said...

/*வ‌ரதட்சணை வாங்குதல் ஈனச் செயல் எனப் பேசி
சீர் என்னும் பெயரால் செழிப்போம்
ஆணுக்குப் பெண் ச‌ம‌மென‌ப் பேசிவிட்டு
வீட்டுப் பெண்க‌ளுக்கு வாய்ப் பூட்டு போடுவோம்*/

உண்மை உண்மை.. அனைத்தும் உண்மை :(

தேவன் மாயம் said...

தொலைந்து போன‌ இள‌மைக்காய் ஏங்கி விட்டு
ப‌ச்சிள‌ம் பாலகர்களை ப‌ள்ளியில் சேர்ப்போம்//

ஆரம்பமே நெத்தி அடி!!

தேவன் மாயம் said...

கல்வி கற்பிப்பதை சேவையில் சேர்த்து விட்டு
கட்டணத்தின் பெயரால் கோடிகளை குவிப்போம்
//

இது பற்றி கட்டுரை எழுத இருந்தேன். இரண்டு வரியில் பின்னீட்டிங்க

தேவன் மாயம் said...

வ‌ரதட்சணை வாங்குதல் ஈனச் செயல் எனப் பேசி
சீர் என்னும் பெயரால் செழிப்போம்//

புட்டு புட்டு வைக்கிறீங்களே!

தேவன் மாயம் said...

ஆணுக்குப் பெண் ச‌ம‌மென‌ப் பேசிவிட்டு
வீட்டுப் பெண்க‌ளுக்கு வாய்ப் பூட்டு போடுவோம்
//
சில பேர் வீட்டையே பூட்டிட்டுப் போகிறார்கள்!

தேவன் மாயம் said...

தெய்வீகத்தனமானது என‌க் கூறி விட்டு
காத‌லிலும் க‌ய‌மைத்த‌ன‌ம் புரிவோம்//

கயவர் எங்குதான் இல்லை!!

தேவன் மாயம் said...

சாதியை ஒழிக்க‌ணும் என‌ முழ‌ங்கி விட்டு
சாக்காட்டிலும் சாதிச் சுடுகாடு கேட்போம்
ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
//

உங்களை மன்னிக்க முடியாது... இப்படிஒரு கவிதைக்கு வாழ்த்தத்தான் முடியும்!!

அபி அப்பா said...

அருமையான கவிதை!!!