ச்சும்மா ஒரு கடிதம்.. படிச்சுட்டு திட்டக்கூடாது

Sunday, May 1, 2011
ச்சும்மா ஒரு கடிதம்.. படிச்சுட்டு திட்டக்கூடாது

மாமா நலம் நலமறிய ஆவல்.

இந்த ஒரு வரி இந்தக் கடிதம்க்கு தேவையில்லைன்னு நினைக்கிறேன்.ஏன்னா நீங்க நல்லா இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். நான் எப்படி இருக்கேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

உங்களின் ஒவ்வோரு செயலும்,சொல்லும் எனக்கு கத்துக் குடுத்தது நிறைய. நீங்க சொல்லித்தர கூட இல்லாத நேரங்களில் கூட இந்த மாதிரி சூழ்நிலைல நீங்க கூட இருந்தா என்ன முடிவு சொல்வீங்கன்னு யோசனை பண்ணிதான் நான் நெறைய முடிவு எடுத்து இருக்கேன்.அப்படி முடிவெடுத்த விஷயங்கள் எதுலயும் நான் தோத்ததில்லை

மாமா.. நீங்க எப்போவும் சொல்வீங்களே.. " நீ சித்தார்த்தன் மாதிரி.. வாழ்க்கைல உனக்குத் தெரியாத விஷயங்கள்,கஷ்டங்கள், எவ்ளவோ இருக்கு..அதெல்லாம் தெரியும்போது உனக்கு என்னோட வார்த்தைகளின்,செயல்களின் அர்த்தம் புரியும்..என் நிலைல இருந்தா நீயும் அப்படிதான் நடந்துக்குவே"அப்படின்னு..

உங்களப் பிரிஞ்ச இந்த 11 வருஷத்துல அந்த மாதிரி நெறைய விஷயங்கள் கடந்திருக்கேன்..கத்துக்கிட்டிருக்கேன். ஆனாலும் நீங்க எனக்குப் புரியாத புதிராத்தான் இன்னிக்கும் இருக்கீங்க.. உங்களோட புகைப்படங்களையோ, காணொளிகளையோ,உறவுகள் உங்களைப் பற்றிப் பேசும் புரணிகளையும்,உங்களக் குறை சொன்னா என்னோட பதில் எப்படி இருக்குன்னு செக் பண்றதுக்குன்னே உண்டாக்கப்பட்ட சூழ்நிலைகளையும் புன்னகையுடன் கடக்கும் அளவுக்கு நான் தயாராகிட்டேன்.ஆனாலும் உங்களை நேருக்கு நேராகப் பார்க்கும் போதும் யாரோன்னு உண்ர்ச்சியற்ற வெற்றுப் பார்வையை வீசுமளவுக்கு நான் பக்குவப்படவில்லை.. நிச்சயமாய் எனக்குத் தெரியும் ..அது இறுதி மூச்சு வரை என்னால் முடியக் கூடிய விஷயமல்ல.


உனக்கு இதுதான் சந்தோஷம்ன்னு சொல்லிச் சொல்லியே நிறைய சோகங்களைத் தந்துருக்கீங்க மாமா..அதுல ஒண்ணு உங்க பிரிவு.. எதிர்கால வாழ்க்கைக்குச் சந்தோஷம்ன்னு சொல்லி இன்னிக்கு நிமிஷத்தை நரகமாக்கிட்டிருக்கேன் நான்..

ப்ளீஸ் மாமா.. இதுக்கும் மேலயும் என்னால பொறுக்க முடியாது.. "எங்க வீட்டு ராஜகுமாரி..எங்க குலதெய்வம்" ன்னு பெருமிதப்படுவீங்களே அந்தத் திரு மாமா எனக்கு வேணும்..

எவ்ளோ கஷ்டமான பிரச்சினைகளுக்கு நடுவுல இருந்தப்போவும் என்கிட்ட மட்டும் சந்தோஷ முகத்தை மட்டுமே காட்டும் என் திரு மாமா எனக்கு வேணும்.

மாமா எனக்கு போதி மரமும் வேணாம்.. நான் புத்தராகவும் வேணாம்.. உங்களோட பாசத்துக்குரிய செல்லமா மட்டும் இருந்தா போதும்.. நாம பேசிக்கறதால வர்ற பிரச்சினைகளைத் தாங்கிக்கிற தெம்பு எனக்கு இப்போ இருக்கு மாமா..ஆனால் உங்கள அடையாளம் தெரியாத மாதிரி கடந்து போகற தெளிவுதான் இல்லை.

ப்ளீஸ் மாமா... என்னைப் பார்க்க வருவீங்களா? முன்ன மாதிரி என் கூடப் பேசுவீங்களா? :‍(


.

6 comments:

அபி அப்பா said...

\\\ நீ சித்தார்த்தன் மாதிரி.. வாழ்க்கைல உனக்குத் தெரியாத விஷயங்கள்\\ யாரு நம்ம காயத்ரி மாப்ள சித்தார்த்தா?

ஈரோடு கதிர் said...

இதைப் படிப்பாரா?

அகல்விளக்கு said...

அவர் படித்தால் சந்தோஷம்...

ரணங்களை மயிலிறகு தீண்டுவது போல் இந்த பதிவும் அதன் கருவும்...

:-)

*இயற்கை ராஜி* said...

@அபி அப்பா..

நீங்க மாறவே மாட்டீங்களே..:)

*இயற்கை ராஜி* said...

@ஈரோடு கதிர் படிக்க மாட்டாங்க‌கிற தைரியத்துலதானே எழுதினேன்

*இயற்கை ராஜி* said...

@அகல்விளக்கு

நன்றி ராஜா