மூனு ரெண்டு ஒன்னு....

Wednesday, May 4, 2011
அசல் இங்கே இருக்கு.. இது நகல் மட்டுமே

எல்லா உணவுப் பண்டங்களிலும்
யாரோ ஒருவரின் பசி
ஒளிந்துதான் கிடக்கிறது
சிலசமயம் அவர் அறிந்து
பலசமயம் அறியாமல்
__________________________________________________________________


பசித்திருப்பதின்
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
பசித்திருத்தலில் மட்டுமே
அறிய முடிகிறது
_________________________________________________________________
யாரோ செய்துபார்த்த
ஏதோ ஒரு கைமணம்
எல்லா உணவிலும்
கரண்டி நீட்டிப் படுத்திருக்கிறது
தீய‌வைப்பதோ
வேகாமல் எடுப்பதோ
உப்புக்கரிப்பதோ
சப்பென இருப்பதோ
சமையல்காரர் மூடைப்பொருத்து


.

13 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதசத்தலான கவிதை....

மணமும், சுவையும் பசியின் அளவைப் பொருத்தும் மாறுப்படும்...

ஒரு சீனப் பழமொழி..
எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள் ஆனால் அன்போடு பரிமாறுங்கள்

நசரேயன் said...

பாலா அண்ணனுக்கு வேலை மிச்சமா ?

vasu balaji said...

/நசரேயன் said...

பாலா அண்ணனுக்கு வேலை மிச்சமா ?/

ஆமாண்ணே. தொழிலே சுத்தமா படுத்திருச்சி:))

சி.பி.செந்தில்குமார் said...

>>எல்லா உணவுப் பண்டங்களிலும்
யாரோ ஒருவரின் பசி
ஒளிந்துதான் கிடக்கிறது

நுண்ணிய பார்வை..

விஜி said...

கலீட்டரு, ஆரம்பிச்சுட்டியா? :)))0

kathir said...

ராஜி
இனிமே நீ முதல்ல
எதிர்கவித எழுது

அப்புறமா நான்
நேர் (அல்லது காந்தி) கவிதை
எழுதிப் பொழச்சுக்குறேன்

---
உண்மையிலேயே கவிதை அழகு

*இயற்கை ராஜி* said...

@# கவிதை வீதி # சௌந்தர் said...

நன்றிங்க

*இயற்கை ராஜி* said...

@நசரேயன்
ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியம்.. ஆளுக்கு ஒரு கையா போட்டாத்தானேங்க மேக்ஸிமம் டேமேஜ் கதிர் அண்ணாவைப் பண்ண முடியும்:-)))

*இயற்கை ராஜி* said...

@வானம்பாடிகள் said...

பெரிய மொதலாளி பிளாட்பாரக் கடையப் பார்த்து தொழில் படுத்துருச்சின்னு சொல்லக்கூடாது:-))

*இயற்கை ராஜி* said...

சி.பி.செந்தில்குமார் //

சாப்பாட்டு விஷயமாச்சே:-))

*இயற்கை ராஜி* said...

@விஜி..

ஹி.ஹி.. :-))

*இயற்கை ராஜி* said...

@கதிர்
ம்ம்.. இப்ப்டில்லாம் சொல்லிட்ட்டா மட்டும் தப்பிச்சிடலாம்ன்னு நெனைக்காதீங்க அண்ணா

Unknown said...

nice poems