கணக்கு சொல்லித்தரேன்..வாங்க..Part 3

Wednesday, May 4, 2011
கணக்கு சொல்லித்தரேன்னு ஒரு தொடர் ஆரம்பிச்சேன்..சில பல காரணங்களால் அது அப்படியே நின்னு போச்சு..அதைத் திரும்பவும் ஆரம்பிக்கப் போறேன்..

கணக்கு கசக்கறவங்க எல்லாம் அப்படியே ஒரு அட்டன்டன்ஸ் போட்டுட்டு ஓடிப் போயிருங்க..
நான் சொல்லப் போறதெல்லாம் ரொம்ப அடிப்படையான எளிதான கணித வழிமுறைகள் தான்.. ரொம்ப நல்லா கண்க்குத் தெரிஞ்சவங்க படிச்சுட்டு இவ்ளோ சிம்பிள் கணக்குக்கு போஸ்ட் போட்டிருக்கேனேன்னு ஃபீல் பண்ணி அழுவக்கூடாது

ஒரு எண் வேற சில எண்களால் வகுபடுமான்னு கண்டுபிடிக்க எளிய சில வழிமுறைகள்

2 ஆல் வகுபடும் தன்மை

ஒரு எண்ணின கடைசி ஸ்தானம் 2 ஆல் வகுபட்டால் அந்த எண் இரண்டால் வகுபடும்
உதாரணமாக 346
6 , 2 ஆல் வகுபடும். அதனால் 346 ஆல் வகுபடும்.
(0,2,4,6,8)இவற்றில் முடியும் எண்கள் 2 ஆல் வகுபடும்

3 ஆல் வகுபடல்

ஒரு எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகை 3 ஆல் வகுபட்டால் அந்த எண் 3 ஆல் வகுபடும்
உதாரணமாக 453

4+5+3=12 12 3 ஆல் வகுபடும்.அதனால் 453 3 ஆல் வகுபடும்

4ஆல் வகுபடல்

ஒரு எண்ணின் கடைசி 2 இலக்கங்கள் 4 ஆல் மீதியின்றி வகுபட்டால் அந்த எண் 4 ஆல் வகுபடும்

உதாரணமாக 3465624
கடைசி 2 இலக்கங்கள் 24. இது 4 ஆல் மீதியின்றி வகுபடும்.
3465624 என்னும் எண் 4 ஆல் மீதியின்றி வகுபடும்

5ஆல் வகுபடல்

ஒரு எண் 0 அல்லது 5 ல் முடிந்தால் அந்த எண் 5 ஆல் வகுபடும்.

6 ஆல் வகுபடல்

2ஆலும் 3 ஆலும் மீதமின்றி வகுப‌டும் எண்கள் 6ஆல் மீதமின்றி வகுபடும்

7 ஆல் வகுபடும் தன்மை

எண்ணின் கடைசி இலக்கத்தை இரண்டால் பெருக்கி அதனை கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணிலிருந்து கழிக்கவும்.
கிடைக்கும் விடை 7 ஆல் வகுபட்டால் அந்த எண் 7ஆல் வகுபடும்
உதாரணமாக 868
86‍ (8 *2) =70
868 7ஆல் வகுபடும்..
பெரிய எண்களுக்கு இதே வழிமுறையை பல முறை பின்பற்றிச் சிறிய எண்ணாக்கி பின்னர் வகுபடலைக் காணலாம்.

8ஆல் வகுபடும் தன்மை

எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் 8ஆல் மீதமின்றி வகுபட்டால் அந்த எண்ணும் மீதமின்றி வகுபடும்

9ஆல் வகுபடும் தன்மை
எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9ஆல் வகுபட்டால் அந்த எண் 9 ஆல் வகுபடும்

11ஆல் வகுபடல்

ஒரு எண் 11 ஆல் மீதமின்றி வகுபடுமா என அறிய‌


x=அந்த எண்ணின் ஒன்று ஸ்தானத்திலிருந்து,ஒற்றைப் படை ஸ்தானங்களின் இலக்கங்களின் கூடுதல்‍ ‍‍‍‍
y=அந்த எண்ணின் ஒன்று ஸ்தானத்திலிருந்து,இரட்டைப் படை ஸ்தானங்களின் இலக்கங்களின் கூடுதல்‍ ‍‍‍‍
X-Y 11ஆல் வகுபட்டால் அந்த எண் 11 ஆல் வகுபடும்
உதாரணமாக 256729

9+7+5 =21
2+6+2 =10
21-10 =11
இந்த எண் 11 ஆல் வகுபடும்

12 ஆல் வகுபடல்
4 மற்றும் 3 ஆல் வகுபடும் எண்கள் 12 ஆல் வகுபடும்

13 ஆல் வகுபடல்
எண்ணின் கடைசி இலக்கத்தை 4 ஆல் பெருக்கி கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணுடன் கூட்டவும். வரும் விடை 13 ஆல் வகுபட்டால், அந்த எண் 13 ஆல் வகுபடும்
உதாரணமாக 18967
1896+28 =1924
192+16 = 208
20+32 =52
52 13 ஆல் மீதியின்றி வகுபடும்

18967 என்னும் எண் 13 ஆல் மீதியின்றி வகுபடும்



14 ஆல் வகுபடல்
7 மற்றும் 2 ஆல் வகுபடும் எண்கள் 14 ஆல் வகுபடும்

15 ஆல் வகுபடல்


3 மற்றும் 5 ஆல் வகுபடும் எண்கள் 15 ஆல் வகுபடும்

16 ஆல் வகுபடல்
8 மற்றும் 2 ஆல் வகுபடும் எண்கள் 16 ஆல் வகுபடும்

17 ஆல் வகுபடல்
எண்ணின் கடைசி இலக்கத்தை 5 ஆல் பெருக்கி கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணிலிருந்து கழிக்கவும். வரும் விடை 17 ஆல் வகுபட்டால், அந்த எண் 17 ஆல் வகுபடும்
உதாரணமாக 2975
297‍ 25 =272
27 10 = 17

17, 17 ஆல் மீதியின்றி வகுபடும்
2975 என்னும் எண் 17 ஆல் மீதியின்றி வகுபடும்

18 ஆல் வகுபடல்9 மற்றும் 2 ஆல் மீதமின்றி வகுபடும் அனைத்து எண்களும் 18ஆல் மீதமின்றி வகுபடும்

19 ஆல் வகுபடல்
எண்ணின் கடைசி இலக்கத்தை 2 ஆல் பெருக்கி கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணுடன் கூட்டவும். வரும் விடை 19 ஆல் வகுபட்டால், அந்த எண் 19 ஆல் வகுபடும்
உதாரணமாக 27702
2770+4 =2774
277+8 = 285
28+10 =38
38 19 ஆல் மீதியின்றி வகுபடும்
27702 19 ஆல் மீதமின்றி வகுபடும்

20 ஆல் வகுபடல்

10 மற்றும் 2 ஆல் வகுபடும் அனைத்து எண்களும் 20 ஆல் வகுபடும்


அல்லோ என்ன யாரும் சவுண்டே காணோம்
என்ன மக்களே.. தூக்கம் வந்துருச்சா.. ம்ம்..எழுந்துக்கோங்க.. கிளாஸ் முடிஞ்சு போச்சு..

அப்புறமா வந்து பாக்கறேன்..
இப்போதைக்கு பை பை


.

15 comments:

மனசாலி said...

105
10-(5*2)
10-(10)
10-10=0

சமுத்ரா said...

nice

Radha N said...

good, continue the class.

சி.பி.செந்தில்குமார் said...

>>>
அல்லோ என்ன யாரும் சவுண்டே காணோம்
என்ன மக்களே.. தூக்கம் வந்துருச்சா.. ம்ம்..எழுந்துக்கோங்க.. கிளாஸ் முடிஞ்சு போச்சு..

இந்தப்பதிவில் என்னைக்கவர்ந்த வரிகள்.. ஹி ஹி

*இயற்கை ராஜி* said...

@MANASAALI

மீதியாக 0 வந்தாலும் அந்த எண்ணால் வகுபடும்

ஈரோடு கதிர் said...

ப்ரசெண்ட் மிஸ்!

ஹுஸைனம்மா said...

பயனுள்ள பதிவுங்க. இப்பத்தான், ஏழால் வகுபடுமான்னு கண்டுபிடிக்கத் தெரிஞ்சுகிட்டேன்.(சிரிக்கக்கூடாது, 1-10, 7 தவிர எனக்கும் தெரியும்)11-20ம் புதுசு. ரொம்ப நன்றிங்க.

*இயற்கை ராஜி* said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சமுத்ரா

*இயற்கை ராஜி* said...

@நாகு.. Thanks.class will continue for sure.

*இயற்கை ராஜி* said...

@சி.பி.செந்தில்குமார்

ஹி..ஹி எனக்குக்கூட அந்த வரிகள்தாங்க ரொம்ப பிடிச்சுது

*இயற்கை ராஜி* said...

@ஈரோடு கதிர்
ம்ம்..அட்டன்டண்ஸ் நோட்டட்.. நெக்ஸ்ட் கிளாஸ்ல கேள்வி கேப்பேன்

*இயற்கை ராஜி* said...

நன்றிங்க ஹுசைனம்மா.. நீங்க புதுசா தெரிஞ்சுகிட்டதுல ரொம்ப சந்தோஷம்

Yousufkashifi said...

நல்ல பதிவு
பதிவேற்றம் செய்து பல வருடங்கள் கழித்து படித்துள்ளேன்.

#20 ஆல் வகுபடல்

10 மற்றும் 2 ஆல் வகுபடும் அனைத்து எண்களும் 20 ஆல் வகுபடும்#
10 மற்றும் 4 ஆல் என்பதற்கு பதிலாக தவறுதலாக 2 ஆல் என்று குறிப்பிட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
10 மற்றும் 2 ஆல் வகுபடும் அனைத்து எண்களும் 20 ஆல் வகுபடும் என்றால் 30 ம் 20 ஆல் வகுபடும்.
நன்றி

Unknown said...

மிக அருமை

G.S.Saravanan said...

Superb