வணக்கம் மக்களே..

Saturday, April 30, 2011
வணக்கம் மக்களே.. எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
ரொம்ப நாளா நான் இல்லாம நிம்மதியா இருந்தீங்களா?
வாழ்க்கைன்னா கொஞ்சம் பயம், திரில் எல்லாம் இருந்தாத்தானேங்க நல்லா இருக்கு..அதனால நான் திரும்பவும் உங்களை எல்லாம் தொல்லை பண்ண வந்துட்டேன்:‍))

லெட்ஸ் ஸ்டார்ட் வித் எ கவிதை..

ஈரோடு கதிர் அவர்கள் அருமையான ஒரு கவிதை எழுதி இருக்காங்க..அதை அருமையாவே இருக்கவிட்டுட்டா வரலாறு நம்மளை பழிக்கும்.. அதனால என்னோட கைங்கர்யம்:‍)

ஒரிஜினலுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க‌

வெறும் வயிற்றோடு

ஒவ்வொரு வருகையிலும்
ட்ரீட்செலவுக்கான
உன் பயத்தை
என் காலி வயிறு
வழிந்தோடும் வரை
நீர்ச் சொட்டுகளால்
நிரப்பிப் போகிறாய்


நிரப்ப மறந்த
தினங்களில்
கத்திக் கொண்டேருக்கும்
காலி வயிற்றின் பசி
இடம்பெயர்ந்து
காலியாவதற்கான‌ குறிப்புரையை
நண்பனின் பர்ஸில்
செதுக்கிவிட்டுச் செல்கிறது

பிடிபடாமல் சட்டெனபிடிபட்ட
உன் பிறந்த நாளின் நினைவாய்

ட்ரீட் கேக்க மறந்த‌
புதிய ஹோட்டல் உணவின் சுவையாய்
காற்றில் கலந்துவந்து
தாளிக்கும் சாப்பாட்டின் வாசமாய்
ஒவ்வொரு நொடியும்
எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கிறாய்

எட்டிய தொலைவுக்கு
தட்டிக்கொடுக்கவும்
எட்டும் இலக்குக்கு
முடுக்கிவிடவும்
என் பாதையின் ஓரம்
மைல்கற்கள் மேல்
ட்ரீட்டுக்கான அழைப்புடன்
காத்துக்கிடக்கிறாய்.

.

10 comments:

vasu balaji said...

எம்பொழப்ப நீங்க பறிச்சிட்டா நானெங்க போறது..அவ்வ்வ்.

*இயற்கை ராஜி* said...

@ வானம்பாடிகள்

உங்க அளவுக்கு நான் போட்டிப் போட முடியுங்களா சார்.. இதெல்லாம் ச்சும்மா ஜூஜூபி.. நீங்க கலக்குங்க :)

ஆயில்யன் said...

//லெட்ஸ் ஸ்டார்ட் வித் எ கவிதை//

வாவ்!

அருமை!

அருமை!!

அகல்விளக்கு said...

அற்புதம்...
அற்புதம்...

சி.பி.செந்தில்குமார் said...

>>.அதை அருமையாவே இருக்கவிட்டுட்டா வரலாறு நம்மளை பழிக்கும்.


நல்ல மனம் வாழ்க.. நாடு போற்ற வாழ்க..

ஹா ஹா

ஈரோடு கதிர் said...

இப்படி எதாச்சும் பண்ணித்தான்
உன்னை எழுத வைக்கவேண்டியிருக்கு

*இயற்கை ராஜி* said...

@ஆயில்யன்

ஹி.ஹி.. எப்டி பாஸ் இவ்ளோ அருமையா ரசிக்கறீங்க.. உங்க ரசிப்புத் தன்மைக்குத் தலைவணங்கறேன்

*இயற்கை ராஜி* said...

@ராஜா.. அவ்வ்வ்வ்வ்வ்

*இயற்கை ராஜி* said...

@சி.பி.செந்தில்குமார்
நன்றிங்க..வருகைக்கும் கருத்துக்கும்

*இயற்கை ராஜி* said...

@ஈரோடு கதிர்

உங்களோட நிலமைய நெனச்சா... ஹி..ஹி.. ஜந்தொஜமா இருக்கு அண்ணா