ஈரோடு கதிரிடம் எனக்குப் பிடிக்காதவை

Sunday, May 30, 2010
//1. நானும் பதிவு எழுதறேன், வலைப்பூவில எழுதறேன்னு சம்பளப் பணத்துல நெட் கனெக்சனும், லோன் போட்டு புதுசா லேப்டாப்பும் வாங்கினையே, முதல்ல அது பிடிக்கலை.//

இதே சாக்குல‌ நீங்க‌ லேப்டாப் வ‌ச்சிருக்கீங்க‌ன்னு த‌ம்ப‌ட்டம் அடிக்கிறீங்க‌ளே அது என‌க்கு பிடிக்க‌ல

//2. வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.//

அவ்ளோ போட்டோ வ‌ச்சிருந்தும் ப‌த்தாம் கிளாஸ்ல‌யும் அஞ்சாம் கிளாஸ்ல‌யும் எடுத்த‌ போட்டோவைப் போட்டுட்டு இருக்கீங்க்ளா அது பிடிக்க‌ல‌

//3. நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.//

அதுக்க‌ப்புற‌ம் ப‌டிச்சியா அதப் ப‌த்தி உன்னோட‌ க‌ருத்து என்ன‌னு கேட்க‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌
//4. நீயே ஒரு ஹிட் கவுண்டர் செட் பண்ணிட்டு தினமும் குறைஞ்சது 200லிருந்து 300 வாட்டி பிரவுசரை Refresh பண்ணிறியே அது பிடிக்கலை.//

அந்த‌ ஹிட்ட‌ வ‌ச்சி நானும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்ன்னு பீலா உட‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//5. யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.//

அந்த‌ப் பின்னூட்ட‌த்துல‌ வ‌ந்த‌ பாராட்டைப் ப‌த்தி கான்ப்ர‌ண்ஸ் கால் போட்டு மணிக்கணக்குல பேச‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//6. போன வாரம் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில “வலைப்பூ புகழ்”னு லேப்டாப் முன்னாலே நீ உட்காந்திருக்கிற மாதிரி போட்டோ போட்டு பிளக்ஸ் பேனர் வைச்சிருந்தியே அது பிடிக்கலை.//

அந்த பேனரை கோயிலுக்கு ச‌ம்ப‌ந்த‌மே இல்லாத‌ ர‌யில்வே ஸ்டேஷ‌ன் ப‌க்க‌ம் வ‌ச்சிருந்தீங்க‌ளே..அதுல‌ இருக்க‌ உள்குத்து என‌க்குப் பிடிக்க‌ல‌

//7. “சிறந்த வலைப்பதிவு சிங்கம்”னு எம்ராய்டரிங் பண்ணின பிட்டுத் துணிய தினமும் சட்டைப்பையில் குண்டூசி வைச்சு குத்திட்டு, நெஞ்ச நிமிர்த்திட்டு போயி ரோட்ல கிடந்த கல்லுல கால் நகத்தை பேத்துக்கிட்டியே அது என‌க்குப் பிடிக்கலை.//

அந்தக் கல்லுகிட்ட போயி... என் வலைப்பு பத்தி தெரியுமா இன்னிக்கு போஸ்ட் படிச்சியான்னு கருத்து கேட்டுட்டு இருந்தீங்களே அது என‌க்குப் பிடிக்கல‌

//8. வேலை செய்ற கம்பெனியில உன் பேரு போட்டு கொடுத்த விசிட்டிங் கார்டுல வலைப்பூ முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குத்திட்டு, மார்கெட்டிங் போற இடத்திலெல்லாம் வலைப்பூ பத்தியே பேசுறியே அது பிடிக்கலை.//

இதுபோதாதுன்ன்னு ஐடி கார்டுல கூட வலைப்பூ பேர் வேணும்ன்னு க‌ம்பெனிய‌ டார்ச்ச‌ர் ப‌ண்றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//9. பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.//

கல்யாணம் நடந்து பல வருஷன் ஆயும் பொண்ணு பாக்கற தொடர்ந்து ஜாத‌க‌ம் குடுக்க‌ற சாக்குலபொண்ணு பார்த்து வ‌லைப்பூவை மார்க்கெட்டிங் ப‌ண்றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//10. சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.//

இப்பிடி நீங்க‌ ஒரு நாளாவ‌து சொல்ல‌மாட்டீங்க‌ளான்னு நாங்க‌ எதிர்பாக்க‌றோம்ன்னு தெரிஞ்சும் தெரியாத‌ மாதிரி ந‌டிக்க‌றீங்க‌ளே அந்த‌ அறிவாளித்த‌ன‌ம் என‌க்குப் பிடிக்க‌ல‌

//11. பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.//

எப்பிடியும் கும்முவோம்ன்னு தெரிஞ்சும் 10க்கு பதிலா 13 எழுதி என் வேலைய அதிகப்ப்டுத்துறீங்களே அது என‌க்குப் பிடிக்க‌ல

//12. கடைசியா, இத்தனை நாளா கஷ்டப்பட்டு, ஒரு மொக்கை கூட எழுதத் கையலாகாம, இந்தப் பதிவுக்குப்போய் லேபிள்ல “மொக்கை”னு போடப்போறியே அது சுத்தமா பிடிக்கலை. //

மொக்கையா எல்லாப் ப‌திவும் எழுதிட்டு இதுக்கு ம‌ட்டும் மொக்கைன்னு லேபிள் போட‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல//

இடுகைய‌ ஒரு த‌ட‌வை ப‌டிக்க‌ற‌துக்கே நாங்க‌ க‌ஷ்டப்ப்டறோம்ன்னு தெரிஞ்சும் மீள் இடுகை வேற‌ போட‌றீங்க‌ளே.. அந்த‌க் கொல‌வெறி என‌க்குப் பிடிக்க‌ல‌.

இதெல்லாம் என்னன்னு தெளிவா புரியலன்னா இங்க போயிப் பாருங்க‌

.

74 comments:

ஈரோடு கதிர் said...

//இதே சாக்குல‌ நீங்க‌ லேப்டாப் வ‌ச்சிருக்கீங்க‌ன்னு //

டேபிள் மேலதானே வச்சிருக்கேன், சாக்கு பையிலயா வச்சிருந்தேன்..

இது செல்லாது

ஈரோடு கதிர் said...

//ப‌த்தாம் கிளாஸ்ல‌யும் அஞ்சாம் கிளாஸ்ல‌யும் எடுத்த‌ போட்டோவைப் போட்டுட்டு //

பிரசவ ஆஸ்பத்திரியில எடுத்த போட்டோவ சிலர் போடுறாங்க... அத நிறுத்தச் சொல்லு... அப்போதான் நானும் நிறுத்துவேன்

ஈரோடு கதிர் said...

//அதுக்க‌ப்புற‌ம் ப‌டிச்சியா அதப் ப‌த்தி உன்னோட‌ க‌ருத்து என்ன‌னு கேட்க‌றீங்க‌ளே//

புரியாம தப்பிச்சிடக்கூடாதேன்னு ஒரு நல்லெண்ணம்தான்

ஈரோடு கதிர் said...

//அந்த‌ ஹிட்ட‌ வ‌ச்சி நானும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்ன்னு பீலா உட‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌//

பிரபல பதிவரா!!!!???? அவ்வ்வ்வ்

ஊர்ல கேட்டுப்பாரும்மா... பிராபள பதிவர்னு எல்லாரும் சொல்வாங்க

ஈரோடு கதிர் said...

//அந்த‌ப் பின்னூட்ட‌த்துல‌ வ‌ந்த‌ பாராட்டைப் ப‌த்தி கான்ப்ர‌ண்ஸ் கால் போட்டு மணிக்கணக்குல பேச‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌//

எதையும் காண்பிரஸ் போட்டுதான் டிஸ்கஸ் பண்ணனும்.. அதனாலதான்

ஈரோடு கதிர் said...

//அந்த பேனரை கோயிலுக்கு ச‌ம்ப‌ந்த‌மே இல்லாத‌ ர‌யில்வே ஸ்டேஷ‌ன் ப‌க்க‌ம் வ‌ச்சிருந்தீங்க‌ளே..அதுல‌ இருக்க‌ உள்குத்து என‌க்குப் பிடிக்க‌ல‌//

மம்தா பானார்ஜி... ரயில்வே மாடலா கேட்டிருந்தாங்க... அதனால... வேணும்னா வானம்பாடிகிட்டே கேட்டுப்பாருங்க

ஈரோடு கதிர் said...

//அந்தக் கல்லுகிட்ட போயி... என் வலைப்பு பத்தி தெரியுமா இன்னிக்கு போஸ்ட் படிச்சியான்னு கருத்து கேட்டுட்டு இருந்தீங்களே //

உங்களவிட அந்தக் கல்லே ”மேல்”னுதான்..

இஃகிஃகி நீங்க ஃபீமேல் தானே

எப்ப்ப்ப்பூடி

ஈரோடு கதிர் said...

//இதுபோதாதுன்ன்னு ஐடி கார்டுல கூட வலைப்பூ பேர் வேணும்ன்னு க‌ம்பெனிய‌ டார்ச்ச‌ர் ப‌ண்றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌//

எங்க மொதலாளி... லெட்டர் பேடு கூட அடிச்சிக்கொடுத்திருக்காருங்க

ஈரோடு கதிர் said...

//தொடர்ந்து ஜாத‌க‌ம் குடுக்க‌ற சாக்குலபொண்ணு பார்த்து //

ஏன்... ராஜி... சாக்குனா ரொம்ப பிடிக்குமா..

ஓ மத்தியானச் சோத்து டிபன்பாக்ஸ சாக்குலதான் கொண்டு வர்றீங்கன்னு... திருச்செங்கோடு பக்கம் பேசிக்கிட்டாங்க

ஈரோடு கதிர் said...

//இப்பிடி நீங்க‌ ஒரு நாளாவ‌து சொல்ல‌மாட்டீங்க‌ளான்னு நாங்க‌ எதிர்பாக்க‌றோம்ன்னு தெரிஞ்சும் //

சொல்ல்ல்ல்ல்ல மாட்டோம்ள

ஈரோடு கதிர் said...

//எப்பிடியும் கும்முவோம்ன்னு தெரிஞ்சும் 10க்கு பதிலா 13 எழுதி என் வேலைய அதிகப்ப்டுத்துறீங்களே//

இப்படின்னு தெரிஞ்சிருந்தா ஒரு 27 பாயிண்ட் எழுதியிருப்பேனே

ஈரோடு கதிர் said...

//மொக்கையா எல்லாப் ப‌திவும் எழுதிட்டு//

அடச்ச்ச்ச்ச்சே.... கம்பெனி சீக்ரெட் வெளியில வந்துடுச்சா

ஈரோடு கதிர் said...

//
இடுகைய‌ ஒரு த‌ட‌வை ப‌டிக்க‌ற‌துக்கே நாங்க‌ க‌ஷ்டப்ப்டறோம்ன்னு //

ஒரு தடவ படிக்கிறக்கே கஷ்டம்னா... நானேல்லாம் எத்தன வாட்டி என்னோட இடுகைய படிக்கிறேன்... அப்போ நான் தானே அதிக பாவம்

நிஜமா நல்லவன் said...

ஹா...ஹா...ஹா...

Unknown said...

கதிர் அண்ணே இங்கயே எதிர்வினையா நடத்துங்க ,..

நிஜமா நல்லவன் said...

கதிர் அண்ணே...உங்களை நல்லா நீங்களே கும்மிக்கிறதை பார்த்தா வேற யாரும் கும்மிட கூடாதுன்னு எண்ணமா???

நிஜமா நல்லவன் said...

/
ஈரோடு கதிர் said...

//இதே சாக்குல‌ நீங்க‌ லேப்டாப் வ‌ச்சிருக்கீங்க‌ன்னு //

மேலதானே வச்சிருக்கேன், சாக்கு பையிலயா வச்சிருந்தேன்../


ஓ...சாக்கு பையிலே வச்சி டேபிள் மேல வச்சிருக்கீங்களா:)))

நிஜமா நல்லவன் said...

/
அவ்ளோ போட்டோ வ‌ச்சிருந்தும் ப‌த்தாம் கிளாஸ்ல‌யும் அஞ்சாம் கிளாஸ்ல‌யும் எடுத்த‌ போட்டோவைப் போட்டுட்டு இருக்கீங்க்ளா அது பிடிக்க‌ல‌/

அவ்வ்வ்வ்....இப்போ கதிர் அண்ணா ப்ரோபைல போட்டு இருக்கிற போட்டோ பத்தாம் கிளாஸ் போட்டோவா?????அப்போவே இப்படின்னா....இப்ப கதிர் அண்ணா என்ன 90+ஆஆஆஆ:)))))

நிஜமா நல்லவன் said...

/ அதுக்க‌ப்புற‌ம் ப‌டிச்சியா அதப் ப‌த்தி உன்னோட‌ க‌ருத்து என்ன‌னு கேட்க‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌/

தான் மட்டும் கருத்து கந்தசாமிய இல்லாமா கூட்டம் வேற சேர்க்கிறாரா...:))

நிஜமா நல்லவன் said...

/

ஈரோடு கதிர் said...

//அந்த‌ ஹிட்ட‌ வ‌ச்சி நானும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்ன்னு பீலா உட‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌//

பிரபல பதிவரா!!!!???? அவ்வ்வ்வ்

ஊர்ல கேட்டுப்பாரும்மா... பிராபள பதிவர்னு எல்லாரும் சொல்வாங்க/

அண்ணே...நின்னுட்டீங்க...உங்க நேர்மை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு:)

அனு said...

ஆஹா... இங்கயும் ஆரம்பிச்சாச்சா? என்ன தான் நடக்குது இங்க?? ஒரு க்ருப்பா தான்யா அலையுறாய்ங்க...

//அந்தக் கல்லுகிட்ட போயி... என் வலைப்பு பத்தி தெரியுமா இன்னிக்கு போஸ்ட் படிச்சியான்னு கருத்து கேட்டுட்டு இருந்தீங்களே அது என‌க்குப் பிடிக்கல‌//

இந்த பிடிக்கலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

நிஜமா நல்லவன் said...

அடுத்த எதிர்ப்பதிவில் இன்னும் எதிர்பார்க்கிறோம்...!


இவண்
கசியும் மௌனத்தை அலறவிடுவோர் சங்கம்

சுசி said...

சூப்பர் ராஜி..

சிரிச்சு படிச்சேன்.

Mahi_Granny said...

i like this

butterfly Surya said...

you too Raji...

Super..

அபி அப்பா said...

ராஜி இதுக்கு பேர் தான் பிரிச்சு மேய்வதா? அசத்திட்ட போ:-))))

படிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன். தவிர பதிவுக்கு கதிர் பதில் பின்னூட்டமும் கலக்குது.

Iyappan Krishnan said...

இன்னும் பதினைந்து இருவது வருடங்களுக்கு எதிர் பதிவுகள் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டேன் என்பதை இதன் மூலம் தெரியப் படுத்துகிறேன்

நன்றி நன்றி நன்றி

( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் )

Sanjai Gandhi said...

லேடி குசும்பி.. சான்சே இல்ல.. :)))


கதிர் எவ்லோ பாவம் செஞ்சிருந்தா அவருக்கு இப்டி ஒரு தங்கச்சி இருப்பாங்க? :)))

தங்கச்சி பதிவு போடுவாங்களாம்.. மொத்த கமெண்டும் அண்ணனே போடுவாராம்.. என்ன பேமிலி இது?

Sanjai Gandhi said...

//இப்ப கதிர் அண்ணா என்ன 90+ஆஆஆஆ:)))))//

இப்போல்லாம் அவர் 2 ஃபுல் அடிக்கிறார் ப்ரதர் :))

ஈரோடு கதிர் said...

சஞ்சய்... நீங்க டேமேஜ் பண்றதுக்கு முன்னாடி நாங்களே சட்டைய கிழிச்சிட்டு நின்னா... பாவம்னு விட்டுருவீங்களேன்னுதான்

ஈரோடு கதிர் said...

// SanjaiGandhi™ said...

இப்போல்லாம் அவர் 2 ஃபுல் அடிக்கிறார் ப்ரதர் :))//

இந்தப் பொய் எனக்குப் பிடிக்கல...

ஒன்னரை தான் நம்ம கெபாக்குட்டி

Sanjai Gandhi said...

கதிர், அதெல்லாம் இங்க செல்லாது.. நாங்க மோத்திஸ்ல புது சட்டை வாங்கி குடுத்து அதையும் கிழிப்போம்.. பாவமாவது புண்ணியமாவது.. :)

Sanjai Gandhi said...

ஒன்னரை லிட்டரா? 2 ஃபுல் என்பதே 1500 மிலி தானே.. நான் சொன்னதும் சரி தானே :))

ஈரோடு கதிர் said...

(சஞ்சய் அடங்குறமாதிரி தெரியல...)

சஞ்சய் சார்... ஒரு இண்டர்வியூ கொடுங்களேன்

Sanjai Gandhi said...

//சஞ்சய் சார்... ஒரு இண்டர்வியூ கொடுங்களேன் //

அடப்பாவி மக்கா, 2 நாள் முன்னாடி இதை கேட்டிருக்கக் கூடாதா.. இப்போ இதுக்கு வேணும், வேணான்னு பதில் சொன்னாக் கூடா அரசியலாக்கிடுவாங்களே.. வட போச்சே.. :(

*இயற்கை ராஜி* said...

சஞ்ச்ய் ஏன் இப்பிடி பயப்படறீங்க..அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் ஜுஜுபி இல்ல?

*இயற்கை ராஜி* said...

கதிர் அண்ணா .. மொதல்ல உங்ககிட்ட ஒரு இன்டர்வியூ எடுக்கணுமே.. இங்கயே கேக்கவா கேள்விகளை

Sanjai Gandhi said...

யம்மா, இந்த சிக்க வைக்கிர வேலை எல்லாம் இங்க வேணாம்.. பொது அரசியல்ல எதையும் எதிர்கொள்ள்லாம்.. பதிவு அரசியல்ல தாக்கு பிடிக்கிற திறமை எல்லாம் எனக்கு இல்லை.. ஆள உடு தாயி :(

*இயற்கை ராஜி* said...

ஆஹா ..சஞ்சய் பட்சி உஷாராயிடுச்சே.. கதிர் அண்ணா உங்க வசதி எப்பிடி

இராகவன் நைஜிரியா said...

ஆஹா...

கதிர் அண்ணே இதைப் பத்தி போன் பண்ணி சொல்லவேயில்ல.

சொல்லியிருந்தீங்கன்னா.. நானும் கொஞ்சம் கும்மி இருப்பேன் இல்ல.

செ.சரவணக்குமார் said...

நல்லா கும்மு கும்முன்னு கும்மியிருக்கீங்க..

கதிர் அண்ணே... இந்த தடவ அடி கொஞ்சம் ஓவரோ???

Unknown said...

Semma Mokkai

priyamudanprabu said...

ஹா...ஹா...ஹா.
..
நல்லாத்தான் இருக்கு
நடக்கட்டும்

Anonymous said...

Very Nice Raji :)

ரோகிணிசிவா said...

super raaji ., ethavathuthu seiyanumae unaku ., love u raaji ., this is u r best .,

Sanjai Gandhi said...

டாக்டர், ராஜி கல்யாணத்துக்கு அவங்களுக்கு ஒரு ஒட்டியானம் செஞ்சிடுங்க.. அதுக்கு வசதியா இப்போவே ஒரு தங்க சுரங்கம் புக் பண்ணிடுங்க..

நிஜமா நல்லவன் said...

/
இராகவன் நைஜிரியா said...
ஆஹா...

கதிர் அண்ணே இதைப் பத்தி போன் பண்ணி சொல்லவேயில்ல.

சொல்லியிருந்தீங்கன்னா.. நானும் கொஞ்சம் கும்மி இருப்பேன் இல்ல./

இப்போ எல்லாம் கதிர் அண்ணா யாரையும் எதிர்பார்க்கிறது இல்ல....அவரே அவரை கும்மிக்கிறாரு:))

ஆரூரன் விசுவநாதன் said...

இதுக்குமேல கதிர கிழிக்க முடியாது....
உட்டுடு தாயி.... பாவம் பொழச்சுப் போறார்........

Anonymous said...

நான் ரொம்ப‌ ந‌ல்ல‌பிள்ளை எந்த‌ வ‌ம்புக்கும் போக‌ மாட்டேன். அவ்வ்வ்வ்வ்..

*இயற்கை ராஜி* said...

//ஈரோடு கதிர் said...
//அந்த பேனரை கோயிலுக்கு ச‌ம்ப‌ந்த‌மே இல்லாத‌ ர‌யில்வே ஸ்டேஷ‌ன் ப‌க்க‌ம் வ‌ச்சிருந்தீங்க‌ளே..அதுல‌ இருக்க‌ உள்குத்து என‌க்குப் பிடிக்க‌ல‌//

மம்தா பானார்ஜி... ரயில்வே மாடலா கேட்டிருந்தாங்க... அதனால... வேணும்னா வானம்பாடிகிட்டே கேட்டுப்பாருங்க
//

ரயிலுக்கு திருஷ்டி பொம்மைக்கா

*இயற்கை ராஜி* said...

//ஈரோடு கதிர் said...
//இதுபோதாதுன்ன்னு ஐடி கார்டுல கூட வலைப்பூ பேர் வேணும்ன்னு க‌ம்பெனிய‌ டார்ச்ச‌ர் ப‌ண்றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌//

எங்க மொதலாளி... லெட்டர் பேடு கூட அடிச்சிக்கொடுத்திருக்காருங்க
//

இந்தக் கொடுமை வேறயா எனக்குத் தெரியாம போச்சே

*இயற்கை ராஜி* said...

ஈரோடு கதிர் said...
//
இடுகைய‌ ஒரு த‌ட‌வை ப‌டிக்க‌ற‌துக்கே நாங்க‌ க‌ஷ்டப்ப்டறோம்ன்னு //

ஒரு தடவ படிக்கிறக்கே கஷ்டம்னா... நானேல்லாம் எத்தன வாட்டி என்னோட இடுகைய படிக்கிறேன்... அப்போ நான் தானே அதிக பாவம்
//

நீங்க உங்க இடுகைய படிக்கறீங்க.. அதையும் நாங்க நம்பணுமா

*இயற்கை ராஜி* said...

நிஜமா நல்லவன் said...
/
அவ்ளோ போட்டோ வ‌ச்சிருந்தும் ப‌த்தாம் கிளாஸ்ல‌யும் அஞ்சாம் கிளாஸ்ல‌யும் எடுத்த‌ போட்டோவைப் போட்டுட்டு இருக்கீங்க்ளா அது பிடிக்க‌ல‌/

அவ்வ்வ்வ்....இப்போ கதிர் அண்ணா ப்ரோபைல போட்டு இருக்கிற போட்டோ பத்தாம் கிளாஸ் போட்டோவா?????....இப்ப கதிர் அண்ணா என்ன 90+ஆஆஆஆ//


இது பத்தாம் கிளாஸ் போட்டோன்னு சொன்னேன்.. அவர் பத்தாம் கிளாஸ் எந்த வயசுல முடிச்சார்ர்னு சொன்னேனா..அதுக்குள்ள எதுக்குண்ணா தப்பு தப்பா வயச கால்குலேட் பண்றீங்க‌

Anonymous said...

superb... :-)

*இயற்கை ராஜி* said...

நிஜமா நல்லவன் said...
/

ஈரோடு கதிர் said...

//அந்த‌ ஹிட்ட‌ வ‌ச்சி நானும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்ன்னு பீலா உட‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌//

பிரபல பதிவரா!!!!???? அவ்வ்வ்வ்

ஊர்ல கேட்டுப்பாரும்மா... பிராபள பதிவர்னு எல்லாரும் சொல்வாங்க/

அண்ணே...நின்னுட்டீங்க...உங்க நேர்மை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு:)
//

:-))

*இயற்கை ராஜி* said...

நன்றிங்க.. அனு,சுசி (அடுத்து உங்க பதிவுதான் வெயிட்டிங்ல இருக்குங்க மேடம்),கே.ஆர்.பி.செந்தில் ,Mahi_Granny

*இயற்கை ராஜி* said...

//butterfly Surya said...
you too Raji...

Super..
//


சூர்யா சார்.. ஊரே எங்க அண்ணன கலாய்க்கும்போது நான் மட்டும் விட்டுவைப்பேனா என்ன....

*இயற்கை ராஜி* said...

//அபி அப்பா said...
ராஜி இதுக்கு பேர் தான் பிரிச்சு மேய்வதா? அசத்திட்ட போ:-))))

படிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன். தவிர பதிவுக்கு கதிர் பதில் பின்னூட்டமும் கலக்குது.
//

ஒரு பாராட்டை ஒழுங்கா என்னை வாங்கிக்க உடறாரா இந்தக் கதிரண்ணா.. இங்க பின்னூட்டதிலயும் வந்து பின்னி பேர் வாங்கறார்..ஹ்ம்ம்.. நடக்கட்டும்

*இயற்கை ராஜி* said...

ஜீவ்ஸ் அண்ணா... இந்தப் பக்கம் வந்திட்டீங்க‌ல்ல.. அவ்ளோதான் ஆட்டத்துல சேர்த்தாச்சு உங்களயும்.. இனிமேல் எஸ்கேப் ஆக முடியாது

*இயற்கை ராஜி* said...

நன்றி சஞ்சய்.. உங்களுக்கு ஏன் எங்க அண்ணன் தங்கச்சி பாசத்தைப் பார்த்து ஆல்வேஸ் ஸ்டமக் பர்னிங்

*இயற்கை ராஜி* said...

ராகவன் அண்ணா.. கதிரண்ணா நைஜீரியா வரைக்கும் போன் பண்ண ஆரம்பிச்சிட்டாரா... நீங்களும் மாட்டிகிட்டீங்களா

வருகைக்கு நன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

செ.சரவணக்குமார் said...
நல்லா கும்மு கும்முன்னு கும்மியிருக்கீங்க..

கதிர் அண்ணே... இந்த தடவ அடி கொஞ்சம் ஓவரோ???
//

இந்த அடிக்கல்லாம் அசருவாருங்கறீங்க..ம்ஹூம்.. நோ சான்ஸ்.. தொடச்சிவுட்டுட்டு சும்மா கில்லி மாதிரி அடுத்த பிளக்ஸ் பேனர்க்கு ஆர்டர் குடுக்க பிளான் போடுவாரு

*இயற்கை ராஜி* said...

//பாஸ்கரன் சுப்ரமணியன் said...
Semma Mokkai
//

:-) நன்றி

*இயற்கை ராஜி* said...

//பிரியமுடன் பிரபு said...
ஹா...ஹா...ஹா.
..
நல்லாத்தான் இருக்கு
நடக்கட்டும்
//

நடத்திருவோம்:)

*இயற்கை ராஜி* said...

//சின்ன அம்மிணி said...
Very Nice Raji :)
//

Thank You:-)

*இயற்கை ராஜி* said...

//ரோகிணிசிவா said...
super raaji ., ethavathuthu seiyanumae unaku ., love u raaji ., this is u r best
//


வாங்க டாக்டர் மேடம்... நன்றி..:‍) ஒரே ஒரு கமெண்டா.. ம்ஹூம்.. சரியில்ல... நம்ம‌ சங்கத்துல‌ இருந்து தூக்க வேண்டியதுதான்....

*இயற்கை ராஜி* said...

சஞ்சயீயீயீயீ வேணாம்..அக்கவுண்டு ஏறிகிட்டே போகுது..அப்புறம் எதிர் வினை படு பயங்கரமா இருக்கும்.. பீ கேர் புல்

*இயற்கை ராஜி* said...

//ஆரூரன் விசுவநாதன் said...
இதுக்குமேல கதிர கிழிக்க முடியாது....
உட்டுடு தாயி.... பாவம் பொழச்சுப் போறார்........
//

என்ன தல இப்படி பொசுக்குனு சொல்லிப்போட்டீங்க.. நம்மூரு புள்ள நல்லா காரியம் பண்றாளேன்னு பாராட்டறத விட்டுப் போட்டு....................

*இயற்கை ராஜி* said...

//MAHA said...
நான் ரொம்ப‌ ந‌ல்ல‌பிள்ளை எந்த‌ வ‌ம்புக்கும் போக‌ மாட்டேன். அவ்வ்வ்வ்வ்..
//

மஹா.... அப்போ நான் ரொம்ப கெட்ட புள்ளயா.. இருங்க.. உங்களுக்கு ஒரு போஸ்ட் போடறேன்

*இயற்கை ராஜி* said...

நன்றி கதிர் அண்ணா.. நி.ந. அண்ணா:-)

வால்பையன் said...

இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சிருக்கு!

பிரேமா மகள் said...

இப்படி எல்லா கமெண்டுகளையும் கதிர் அங்கிளே போட்டு, அலப்பறை பண்ணராரே அது பிடிக்கலை.

*இயற்கை ராஜி* said...

//வால்பையன் said...
இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சிருக்கு!
.//

நன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

//பிரேமா மகள் said...
இப்படி எல்லா கமெண்டுகளையும் கதிர் அங்கிளே போட்டு, அலப்பறை பண்ணராரே அது பிடிக்கலை.
//

என்னது அங்கிளா..சுபி வேணாம்..அப்புறம் சுபியோட சாதனைகள்ன்னு ஒரு போஸ்ட் எழுத வேண்டி இருக்கும்