நூறாவது பதிவு+வாழ்த்துக்கள்+நட்பு

Monday, May 31, 2010
நம் நட்பு ஆரம்பித்து சிறிது காலமே ஆனாலும் ஆண்டாண்டாய் பழகிய பந்தமாய் பரிணமித்திருக்கிறது என் மனதில்.உன்னிடம் மட்டும் என் நட்பின் பரிமாணங்கள் வேறுபடுகின்றன.எல்லா நட்புகளிடமும் "எனக்கு என்ன செஞ்ச நீ" எனக்கேட்கும் என சொற்கள் உன்னிடம் மட்டும் " உனக்கு என்ன செய்ய வேண்டும் நான்" எனக் கேட்கவே தலைப்படுகின்றன.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

(மு.வ உரை:
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்)
இந்தக் குறளுக்கான அர்த்தம் உன்னுடன் பழகிய பின்னரே உணர்ந்து கொண்டேன்.

பல‌‌ நேர‌ங்க‌ளில் உன‌க்கான‌ பெரும் அன்புத் தொல்லையாய்க் கூட‌ நான் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.உன்னைச் சிறு குழந்தையைத் தொல்லைபடுத்துவது போல படுத்தி இருக்கிறேன்.ஆனாலும் நான் அத‌ற்கு வ‌ருத்த‌ப்ப‌ட‌வில்லை. நீயும் அதைக் காட்டிக் கொண்டதில்லை..நிச்ச‌ய‌மாய் I am blessed to have such a frienship.

உன்னோடு ப‌ழ‌கும்வ‌ரை க‌ட‌வுளிட‌ம் ரொம்ப‌ சீரிய‌ஸாய் எதையும் கேட்ட‌தில்லை.உன்னைக் க‌ண்ட‌து முத‌ல் இறைஞ்சுகிறேன் தின‌மும்.. உன‌க்கான‌ ச‌ந்தோஷ‌ங்க‌ளை மீட்டுத் த‌ர‌ச் சொல்லி.. நிச்ச‌ய‌மாய் அவை வெகு விரைவில் திரும்பும் என‌ உறுதியாய் ந‌ம்புகிறேன்.


இந்நெருங்கிய நட்பும் கால ஒட்டத்தின் வேகத்தில் எத்தனை உறுதியாக நீடித்து நிலைக்கும் என்பதை நான் அறியேன்.அப்படி ஒரு வேளை நம் நட்புத்தூண் தூளானாலும் அதன் பிரதியாவது நிலைக்க வேண்டும் என்ற ஆவலின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.

ஜூலை மாத‌ம் வ‌ரும் உன் பிற‌ந்த‌ நாளுக்கு இன்றே வாழ்த்துகிறேன்.அதோடு ந‌ம் ந‌ட்பு ஆர‌ம்பித்த‌ நாளுக்காக‌வும்..:-)

Let God Bless All His Best Blessings over you Friend:-)


.

25 comments:

ஈரோடு கதிர் said...

100க்கு வாழ்த்துகள்

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் டீச்சரம்மா....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாழ்த்துக்கள்..

ஜோசப் பால்ராஜ் said...

100க்கு எனது வாழ்த்துக்கள்.

நட்பிற்கு எனது வணக்கங்கள்.

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் - 100க்கு

அ.முத்து பிரகாஷ் said...

எனது வாழ்த்துக்களும் ராஜி ...
// ஒரு வேளை நம் நட்புத்தூண் தூளானாலும் அதன் பிரதியாவது நிலைக்க வேண்டும் //
பிரதி மட்டுமல்ல மூலமும் நிலைத்து நிற்க இயற்கை உதவட்டும் !
மீண்டும் வாழ்த்துக்கள் தோழர் !

கார்த்திகைப் பாண்டியன் said...

சதத்துக்கு வாழ்த்துக்கள்.. அத்தோடு மேலும் நிறைய எழுதி சாதிக்க வாழ்த்துகள்..

எம்.எம்.அப்துல்லா said...

100 க்கு வாழ்த்துகள்.

dheva said...

Happy 100! Vaazthukkal!

சுசி said...

வாழ்த்துக்கள் ராஜி..

siva said...

100 ai Yetiyatharku Vazhthukal Raji..
Nooru (100) Ayiram (1000) aagakadavu..

மாதேவி said...

வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

100க்கு வாழ்த்துகள்

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் ராஜி....

கானா பிரபா said...

100 க்கு வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்..!

அன்புடன் அருணா said...

100ஆ...???ஆயிரமாக வாழ்த்துக்கள்+பூங்கொத்து!!

Menaga Sathia said...

100 க்கும்,நட்பிற்க்கும் வாழ்த்துக்கள்!!

அகல்விளக்கு said...

100க்கு வாழ்த்துக்கள்...

பிரேமா மகள் said...

ஏய்.. ராஜி.. கலக்குற...

Anonymous said...

100வது பதிவுக்கும் அந்த நட்புக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்...

தேவன் மாயம் said...

100 க்கு வாழ்த்துக்கள்!!

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.....

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துகள்.

ஸ்ரீ.... said...

முதல் சதத்திற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல சதங்கள் அடிப்பதற்கும்!

ஸ்ரீ....