ஒற்றை நிமிடம் சிந்திப்பீர்

Monday, May 3, 2010
இன்றைய வாழ்வியல் முறையில் குடும்ப‌த்திற்கு ஒரு பிள்ளை என்ப‌து க‌லாச்சார‌மாகி விட்ட‌து.அத‌ற்கு பெரும்பாலும் சொல்ல‌ப்ப‌டும் கார‌ண‌ம் இன்றைய‌ போட்டி மிகுந்த‌ உல‌கில் ஒரு பிள்ளைக்கு அனைத்து வ‌ச‌திக‌ளும் த‌ந்து சிறந்த‌ குடிம‌க‌னாக‌ வ‌ள‌ர்ப்ப‌து பெரும்காரிய‌ம்.ஒரு குழந்தையின் மீது ந‌ம் க‌வ‌னம் அனைத்தையும் செலுத்தும்போது இரண்டு மூன்று பிள்ளைக‌ளை வ‌ளர்ப்ப‌தை விட‌ சிற‌ப்பாக‌ வ‌ள‌ர்க்க‌லாம்.மேலும் ம‌க்க‌ள் தொகை பெருக்க‌த்தை க‌ண‌க்கிடும் வ‌கையிலும் ஒற்றைப் பிள்ளைக‌ள் என்ப‌து சிற‌ந்த‌து.


இவை அனைத்தும் ஒத்துக் கொள்ள‌க் கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ள்தான் என்றாலும்,ஒற்றைப் பிள்ளைக‌ளின் ம‌ன‌ வ‌ள‌ர்ச்சி,ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போகும் த‌ன்மை,குழு ம‌ன‌ப்பான்மை என்ப‌தெல்லாம் ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளோடு வ‌ள‌ர்ந்த‌ பிள்ளைக‌ளோடு ஒப்பிடும்போது சிறிது குறைவாக‌வே தோன்றுகிற‌து.ஒற்றை பிள்ளைக‌ளாய் வ‌ள‌ரும்போது ப‌கிர்ந்து கொள்ளும் ம‌ன‌ப்பான்மை என்ப‌து சிறிதும் வ‌ளர்வ‌தில்லை.அப்ப‌டிப்ப‌ட்ட‌ குழந்தைக‌ளுக்கு ந‌ண்ப‌ர்க‌ள் ச‌ரியான‌ அமையாவிடில் அவ‌ர்க‌ளின் வாழ்க்கைப் பாதை எளிதாக‌ திசை திருப்ப‌ப்ப‌ட‌ சாத்திய‌க் கூறுக‌ள் அதிக‌ம்.அன்புக்கான‌ ஏக்க‌ம் நிச்ச‌ய‌மாய் அவ‌ர் ம‌ன‌தில் இருக்கும். அந்த ஏக்கம் தவறானவர்களால் அவர்களுக்கு தகுந்தவாறு கையாளப்படலாம்


பெற்றோர் எவ்வ‌ள‌வுதான் அன்பாக‌‌ இருந்தாலும்,அவர்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டாலும்,முதல் தலைமுறையின் சிந்தனைக்கும்,அடுத்த தலைமுறையின் சிந்தனைக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளி என்பது குழந்தகளின் மனதில் ஒரு வேற்றுமையை உருவாக்கும் என்பது நிச்சயம்.அப்ப‌டிப்பட்ட‌ குழ‌ந்த‌க‌ள் திசைமாறிப் போவ‌த‌ற்கான‌ சாத்திய‌ங்க‌ளும் அதிகம்.கூட்டுக் குடும்பங்களும் சிதறிப் போன இக்காலத்தில் ஒற்றைக் குழந்தைகளுக்கு உறவுகள் என்பதின் அருமையும் புரியாமல் போகும்.

கொஞ்சம் யோசியுங்கள் உங்கள் உடன் பிறப்புகளோடு சிறு வயதில் நீங்கள் வாழ்ந்த வாழ்வின் அருமை உங்கள் ஒற்றைக் குழந்தைக்கு கிடைக்குமா. சித்தப்பா, பெரியப்பாக்களும், அத்தை, மாமாக்களும் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்.அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் உங்கள் குழந்தை சந்திக்கப் போகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.அதற்கேற்ப அவர்களை தயார்ப்படுத்துங்கள்.

ஒற்றைக்குழந்தையாய்ப் பிறந்தாலும் அதன் சின்ன சின்ன சந்தோஷங்களில் அக்கறை என்னும் பெய‌ரில் குறுக்கே நிற்காதீர்கள்.விடுமுறை நாட்களில் தூரத்து உறவுகளில் உள்ள உறவுகளுடனாவது ஒட்டி உறவாட விடுங்கள்.அதன் மூலம் அவர்களுக்கு உறவுகளின் அருமை புரிய வரும்.துன்பத்தில் தோள் கொடுக்க நமக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்னும் தன்னம்பிக்கை வளரும்.


.

24 comments:

ரோகிணிசிவா said...

//ஒற்றைக்குழந்தையாய்ப் பிறந்தாலும் அதன் சின்ன சின்ன சந்தோஷங்களில் அக்கறை என்னும் பெய‌ரில் குறுக்கே நிற்காதீர்கள்.விடுமுறை நாட்களில் தூரத்து உறவுகளில் உள்ள உறவுகளுடனாவது ஒட்டி உறவாட விடுங்கள்//
-nalla sinthanai,arivurai,
pakirvuku nandri iyarkai ,

அபி அப்பா said...

ஆஹா! இப்படி சிந்திச்சா எல்லாம் எப்பூடீ!!!

ஆனா சூப்பரான சிந்தனை. அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா உறவுகள் என்பது இல்லாமல் போய் விடும்.

ஒன்லி அப்பா, அம்மா, மட்டுமே பாக்கி இருக்கும்!

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லாச் சொல்லியிருக்கீங்க.

☀நான் ஆதவன்☀ said...

ம்ம் நல்ல சிந்தனைங்க :)

Ungalranga said...

//கொஞ்சம் யோசியுங்கள் உங்கள் உடன் பிறப்புகளோடு சிறு வயதில் நீங்கள் வாழ்ந்த வாழ்வின் அருமை உங்கள் ஒற்றைக் குழந்தைக்கு கிடைக்குமா. சித்தப்பா, பெரியப்பாக்களும், அத்தை, மாமாக்களும் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்.அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் உங்கள் குழந்தை சந்திக்கப் போகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.அதற்கேற்ப அவர்களை தயார்ப்படுத்துங்கள். //

உண்மை..விடுமுறை என்றாலே கோச்சிங் க்ளாஸ் செல்வதற்கு என்பதாகிவிட்டது இப்போது..!!

இதையும் தாண்டி சொந்த பந்தங்களோடும், நட்புகளோடும் சில நாட்கள் கழிப்பது நிச்சயமாய் குழந்தைகளுக்கு உதவும்..அவர்கள் மனதளவில் விரிவடைவார்கள்!!

நன்றி..!! நல்ல பதிவு..!! வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

சிந்திக்க வேண்டிய ஒன்று...

நல்லா சொல்லியிருக்கீங்க...

ஜோசப் பால்ராஜ் said...

ஒரு காலத்துல குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரம் இப்டி தான் இருந்துச்சு.

ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்.
இரண்டுக்கும் மேல் எப்போதும் வேண்டாம்.

அப்பறம் அப்டியே மாறி
ஒளிமயமாய் வாழ ஒரு குழந்தை போதும்னு சொன்னாய்ங்க.

இப்ப நாமே குழந்தைகள் , நமக்கேன் மழலைகள்னு விளம்பரம் வருது. இதுல நீங்க ரெண்டாவது குழந்தைய பத்தி பேசுறீங்க.

ஆனா நீங்க சொல்ல்யிருக்க கருத்து சிறப்பா இருக்கு.

நிஜமா நல்லவன் said...

நல்லா தான் சொல்லி இருக்கீங்க....இதை எல்லாம் நாங்க எப்பவோ யோசிச்சிட்டோம்ல:)

ஈரோடு கதிர் said...

நல்லதொரு பகிர்வு ராஜி...

க.பாலாசி said...

ம்ம்.. உங்களாட்டமாதிரி மாதிரி வயசானவங்க சொல்றத என்னாட்டமாதிரி சின்ன பசங்க கேட்டுக்கணும்...

இருங்க நான் முதல்ல கல்யாணம் பண்ணிட்டு வர்ரேன்....

*இயற்கை ராஜி* said...

குழந்தையோட பீலிங் உங்கள மாதிரி பெரியவங்களுக்கு புரியாது பாலாசிண்ணா..அதான் நான் சொல்றேனுங்க.. என் செட் புள்ளங்க பீலிங்கி.. கேட்டு தெரிஞ்சிக்கோங்க‌

நட்புடன் ஜமால் said...

அந்த காலத்துலேயே எனக்கு இப்படித்தான் நடந்துச்சு

சரியா சொன்னீங்க.

Anonymous said...

கதிர் நீங்க இதெல்லாம் கவனிக்கரதில்லையா? பாருங்க ராஜி எவ்வளவு ஃபீல் பண்ணி மறைமுகமா சொல்றா :)) அவங்க வீட்டில் இதெல்லாம் எடுத்து சொல்லுங்க.. என்னமோ போங்க :))))))

சுசி said...

பொறுப்பு வந்திடுச்சா.. :))

//ஒற்றைப் பிள்ளைக‌ளின் ம‌ன‌ வ‌ள‌ர்ச்சி,ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போகும் த‌ன்மை,குழு ம‌ன‌ப்பான்மை என்ப‌தெல்லாம் ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளோடு வ‌ள‌ர்ந்த‌ பிள்ளைக‌ளோடு ஒப்பிடும்போது சிறிது குறைவாக‌வே தோன்றுகிற‌து.//

இப்டி ஒரு ஒற்றைப் பிள்ளையை பார்த்திருக்கிறேன்.

அடுத்தவங்களோட சேரணும்ங்கிரத்துக்காகவே எல்லாத்தையும் விட்டுக் குடுத்து அனுசரிச்சுப் போற ஒரு ஒற்றைப் பிள்ளையையும் பார்த்திருக்கேன்.

ரெண்டுமே கஷ்டம்தான்.

ஆரூரன் விசுவநாதன் said...

வரும் தலைமுறை இழக்கப் போகும் பலவற்றுள் இதுவும் ஒன்று.... மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல சிந்தனை

க.பாலாசி said...

//*இயற்கை ராஜி* said...
குழந்தையோட பீலிங் உங்கள மாதிரி பெரியவங்களுக்கு புரியாது பாலாசிண்ணா..அதான் நான் சொல்றேனுங்க.. என் செட் புள்ளங்க பீலிங்கி.. கேட்டு தெரிஞ்சிக்கோங்க‌//

ஓ... ஃபீலிங் ஞாயந்தானுங்க்கா...

எம்.எம்.அப்துல்லா said...

ம்..

INDIA 2121 said...

ROMPA NALLA IRUNTHATHU
nalla pathivu
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN

sivaaa said...

//துன்பத்தில் தோள் கொடுக்க நமக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்னும் தன்னம்பிக்கை வளரும்//

உங்களுடைய பதிவில் இது மட்டும்தான் கொஞ்சம் உறுத்தற மாதிரி இருக்குது...நமக்கு நம்மளைத் தவிர வேற யாருமில்லை..அப்படிங்கிற எண்ணம் தருகிற தன்னம்பிக்கை வேற எதிலியும் கிடைக்காது...இதுவே நம்மள பல விஷயங்களில் முன்னேற்றுவதற்கு உதவும்..நானும் ஒத்த புள்ளைதாங்க...

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாச் சொல்லியிருக்கீங்க.

பிரேமா மகள் said...

ஹலோ... நாங்களெல்லாம் ஒத்தை பிள்ளைதான் தெரியும்ல...

Madumitha said...

அண்ணன்
தம்பி
அக்கா
தங்கை
மாமா
அத்தை
சித்தப்பா
சித்தி
பெரியப்பா
பெரியம்மா
எல்லாம் காலி.

MCX Gold Silver said...

சரிங்க டீச்சர் நீங்க சொன்னா சரிதான் :)