நானில்லாமலென்ன‌?

Saturday, June 19, 2010
அள்ளி அள்ளிச் சாப்பிட்ட
ஆசை காலியான‌து
பில்லைக் க‌ண்ட‌தும்தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே


எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்


தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது ஒட்டு முடியை

வேறென்னன்னு கேட்டார் இல்ல இவரு.. இங்கன வந்து பார்த்துக்கச் சொல்லுங்க‌

47 comments:

க.பாலாசி said...

//எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்//

ஓ இதுதான் அந்த குச்சி ஐஸ் கவிதைக்கான தாக்கமா?? சரி..சரி...

//தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது சவுரியை//

இனிமேயாவது நல்லா கயிறு போட்டு கட்டிவச்சிக்குங்க..

அகல்விளக்கு said...

எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்க....

:-)

குட்... இப்படித்தான் இருக்கணும்...

எல் கே said...

//
எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்
//
athu neengathaana .. ungalaithan tedikitu irukken

Anonymous said...

:-)

ஈரோடு கதிர் said...

திக்கித் திணறி ஒரு கவிதை எழுதினா.... அதுக்குப் போய் நாலு எதிர்கவுஜயா... நான் அந்தளவுக்கு வொர்த் இல்ல ராஜி

Anonymous said...

ஆச்சுவலி நீ உன் கடைக்கு ப்ரோமோஷன் பண்ணுறீயா இல்ல உங்க அண்ண கவிதைக்கு இலவச விளம்பரமா?

சுசி said...

இந்த ஊர்ல சம்மர் வந்தும் இன்னமும் குளிர் இருக்கிறது கொடுமைன்னு இனிமே சொல்ல மாட்டேன் ராஜி.

vasu balaji said...

/தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது ஒட்டு முடியை/

அடங்கொன்னியா. அந்த இருக்கிற நாலு முடியும் ஒட்டு முடியா?:))

vasu balaji said...

/எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்/

அட இதுவே புடுங்கி தின்னதா? இதுல குரங்கு படத்த வேற போட்டு என்னா அழிம்பு:))

vasu balaji said...

/தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே/

அண்ணன் படத்தை வரைஞ்சி பாக்க பரீட்சைத்தாள்தானா கிடைச்சது. அவ்வ்வ்.

ஈரோடு கதிர் said...

/அண்ணன் படத்தை வரைஞ்சி பாக்க பரீட்சைத்தாள்தானா கிடைச்சது. அவ்வ்வ்.//

இப்படியொரு பாசமான (நறநற) தங்கச்சியில்லையேன்னு பொறாமையாக்கும்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அள்ளி அள்ளிச் சாப்பிட்ட
ஆசை காலியான‌து
பில்லைக் க‌ண்ட‌தும்//

அதானே! நோட்டீஸ் போர்டையும்,மெனு கார்டையும் பாக்காம மூக்கு புடிக்க கட்டுனா பில்லைக் கண்டதும் ஆசை மட்டும் காலியாவாது பையும் தான் காலியாவும்! :)தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே//

ஆமா! கூட்டுலேருந்து முட்டையை அள்ளிகிட்டு வரயில இறகும் சேந்து வர்றதில்லையா?
முட்டையத்தான் எடுக்கப் போறோம். இறகால வந்ததுன்னு கதை கட்டுறது! :)
எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்//

ஆமா திருட்டு மாங்கா மாதிரி நெம்ப ருசியாத்தான் இருக்கும்! :)


தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது ஒட்டு முடியை
//

சவுரி வச்சுகிட்டா சவுரியமா இருக்காதுன்னு இவ்வளவு எளிமையா யாரும் கவுஜையில சொல்ல முடியாது!
:)

RAMYA said...

//
அள்ளி அள்ளிச் சாப்பிட்ட
ஆசை காலியான‌து
பில்லைக் க‌ண்ட‌தும்
//

என்னைய அழைச்சிகிட்டு பொய் இருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது ராஜி கொஞ்சம் யோசி நீ யோசி:))

RAMYA said...

//
எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்
//

அப்போ உன் முன்னாடி எதுவுமே சாப்பிட கூடாதா புடிங்கி தின்னுடுவியா:)

அடபோப்பா பயந்து வருது:))

RAMYA said...

//
தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது ஒட்டு முடியை
//

அப்போ அன்னைக்கி பார்த்தது நிஜம் இல்லையா நிழல்தானா:))

RAMYA said...

//
தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே
//

முட்டை வாங்கினியா? சொல்லவே இல்லே:)

அடுத்த முறை பார்க்கும் போது முட்டைக்கு ஒரு குட்டு:))

நேசமித்ரன் said...

:)

ஆயில்யன் said...

பார்த்தேன்;
படித்தேன்;
ரசித்தேன்;
சிரித்தேன் :)

கானா பிரபா said...

ஆயில்யன் said...

பார்த்தேன்;
படித்தேன்;
ரசித்தேன்;
சிரித்தேன் :)//

அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்

*இயற்கை ராஜி* said...

ஓ..இது புதுவிதமான ரிப்பீட்டா பாஸ்

குசும்பன் said...

சாரி கொஞ்சம் லேட் ஆயிட்டு:(((

ஆயில்யன் said...

//ஓ..இது புதுவிதமான ரிப்பீட்டா பாஸ்//

இதுக்குத்தான் படிச்சுட்டு உணர்ச்சிவசப்பட்டு கமெண்ட் போடகூடாதுன்னு சொன்னேன் பெரியபாண்டி கேட்டாத்தானே?

இப்ப இப்படி ஒரு அவமானம் தேவையா....?

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

ஆயில்யன் said...

பார்த்தேன்;
படித்தேன்;
ரசித்தேன்;
சிரித்தேன் :)//

அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்

ஆயில்யன் said...

மேல போட்டிருக்கிற கமெண்டை அழிச்சுடுங்கங்க! - பெரியபாண்டி நீங்களும் ஒரு ரிக்வெஸ்ட் ரிப்பிட்டிக் கொடுங்க! :((

கானா பிரபா said...

ஆயில்யன் said...

மேல போட்டிருக்கிற கமெண்டை அழிச்சுடுங்கங்க! - பெரியபாண்டி நீங்களும் ஒரு ரிக்வெஸ்ட் ரிப்பிட்டிக் கொடுங்க! :((//

ஆமா அழிச்சிடுங்க

நிஜமா நல்லவன் said...

/அள்ளி அள்ளிச் சாப்பிட்ட
ஆசை காலியான‌து
பில்லைக் க‌ண்ட‌தும்/

ஹையோ...ஹையோ....பில்லை அடுத்தவங்க தலைல கட்டுற பழக்கம் இன்னும் கத்துக்கலையா????

*இயற்கை ராஜி* said...

அழிவுப் பாதையை நான் எப்போது தேர்ந்தெடுப்பதில்லை.. எப்படி அழிக்க‌

Thenammai Lakshmanan said...

தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே//

நல்ல வேளை ராஜி மைனஸ் மார்க் போடலையே..:))

நிஜமா நல்லவன் said...

ஆயில்யன் said...

மேல போட்டிருக்கிற கமெண்டை அழிச்சுடுங்கங்க! - பெரியபாண்டி நீங்களும் ஒரு ரிக்வெஸ்ட் ரிப்பிட்டிக் கொடுங்க! :((//

ஆமா அழிச்சிடுங்க:)

ஆயில்யன் said...

//*இயற்கை ராஜி* said...

அழிவுப் பாதையை நான் எப்போது தேர்ந்தெடுப்பதில்லை.. எப்படி அழிக்க‌//

அழி ரப்பர் பாதையை தேர்ந்தெடுக்க!

அழி ரப்பர் - நடராஜ் பிராண்ட் நல்லா இருக்கும் -கையிலெடுங்க!

நட்புடன் ஜமால் said...

அட இங்கே பெரிய டெரர் நடந்து இருக்கா

நானும் புதுசா ஏதோன்னு நினைச்சு போட்டுட்டனே

இருந்தாலும் நீங்க குச்சி ஐஸை ...

ஆயில்யன் said...

// நட்புடன் ஜமால் said...

அட இங்கே பெரிய டெரர் நடந்து இருக்கா/

ஆமாம் கவிஜய படிச்சுட்டு எல்லாரும் பொத் பொத்ன்னு மயங்கி விழுந்து கெடக்குறாங்க!

நிஜமா நல்லவன் said...

/தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே/


அவ்வவ்....இறகு கொண்டு தான் மார்க் போடுறீங்களா????

நிஜமா நல்லவன் said...

பச்சை இங்க்னு பெருமை அடிச்சதெல்லாம் அப்போ சும்மா தானா:))))

நிஜமா நல்லவன் said...

ஒருவேளை இறகுல பச்சை மையை தடவி மார்க் போட்டு இருப்பாங்களோ:)))

ரோகிணிசிவா said...

@புனிதா||Punitha said...
//ஆச்சுவலி நீ உன் கடைக்கு ப்ரோமோஷன் பண்ணுறீயா இல்ல உங்க அண்ண கவிதைக்கு இலவச விளம்பரமா?//
athu thaanga puriyala , orae marmamaa irukku

கானா பிரபா said...

ஆயில்யன் said...

//*இயற்கை ராஜி* said...

அழிவுப் பாதையை நான் எப்போது தேர்ந்தெடுப்பதில்லை.. எப்படி அழிக்க‌//

அழி ரப்பர் பாதையை தேர்ந்தெடுக்க!

அழி ரப்பர் - நடராஜ் பிராண்ட் நல்லா இருக்கும் -கையிலெடுங்க!//

ஆமா அதான் சரியாப்படுது, கையிலெடுங்க!

அபி அப்பா said...

ஆம்பள பாவத்த கொட்டிக்காத ராஜி! நாள ஒரு மருநா எவனுமே கவுஜ எழுத மாட்டாய்ங்க!

குறிப்பு: வழக்கம் போல இந்த கமெண்ட்டை அனானியா ஆக்கிடு

Riyas said...

நல்லாயில்ல...
அப்படி சொல்ல முடியல்ல

நல்லாயிருக்கு..

Riyas said...

நல்லாயில்ல...
அப்படி சொல்ல முடியல்ல

நல்லாயிருக்கு..

Madumitha said...

இரண்டும் மூன்றும் மிக நன்று.

மங்குனி அமைச்சர் said...

தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது ஒட்டு முடியை///\\
\\\


அவுகளா நீங்க ??

பிரேமா மகள் said...

ஆக!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

'பரிவை' சே.குமார் said...

கவிதைகளை ரசித்தேன்.

sakthi said...

தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது சவுரியை//
fevicol use pannu ma

sakthi said...

எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்

அடக்கடவுளே நீ தானா அது !