ஓராண்டும் புத்தாண்டும்-நன்றியும் வாழ்த்தும்

Thursday, December 31, 2009
நட்புக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எல்லாவளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

புதிய வருடத்தில் புதிதாய் மலர்ந்த மனதோடு மீண்டும் சந்திப்போம்.

எனது வலைப்பூவுக்கு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.ஓர் ஆண்டில் தந்த மேலான ஆதரவுக்கு நன்றி..நன்றி... நன்றி

மனதில் மலர்ந்தவை 25/12/2009

Friday, December 25, 2009
வணக்கம் மக்களே.. பண்டிகைக் காலம் ஆரம்பிச்சாச்சி..அதோட சேர்த்து விடுமுறைக் கொண்டாட்டங்களும் ஆரம்பிச்சிருக்கும்ன்னு நம்பறேன்.புது வருஷம் வேற வரப்போகுது.எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா வாழ்த்திக்கறேன்..

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்

ஏன் இவ்ளோ நாளா பதிவு எழுதலே,எப்ப திரும்ப எழுதுவே..அப்படின்னு அக்கறையாய் விசாரித்த பல இலட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி.. நன்றி..(கொஞ்சம் ஓவராத்தான் பில்டப் குடுக்கறேனோ:)))) )அவங்க கேட்டது எவ்ளோ நாளைக்கு என் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்ன்னு தெரிஞ்சிக்கதான்கிற உண்மை நான் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் தெரியணும்ன்னு இல்ல:‍)))

குட்டி குட்டியாய் நிறைய விஷயங்கள் எழுதறதுக்கு மனசில இருக்கு.அதில சிலவற்றை மட்டும் இப்போ பகிர்ந்துக்கறேன்..சமீபத்தில் வாங்கிய பல்பு

நான் பயணத்தில் அடிக்கடி சில மாணவிகளைச் சந்திப்பேன்.கண்ணியமாய் உடை உடுத்துபவர்கள். அவர்களில் சிலர் ஒரு நாள்,திடீரென முகம் சுளிக்கத்தக்க ஆடையில் வந்தார்கள். நான் அவர்களிடம்.. இப்பிடியெல்லாம் இன்டீசன்டா டிரஸ் பண்ணலாமா என கேட்கப்போக அவர்கள் பதிலால் ஆடிப்போய்விட்டேன்
அவர்கள் கல்லூரியில் ஏதோ விழாவாம்.. விழாவுக்கு இப்படிப்போனாதான் காலேஜ்ல மரியாதை இருக்குமாம்..
என்ன அக்கா.... ஆன்ட்டி மாதிரி யோசிக்கறீங்க.இழுத்து போத்திட்டு போறதெல்லாம் அந்தக்காலம்..யூத்ன்னா இப்பிடித்தான் டிரஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டாங்க மக்களே.
அரைகுறையாய் ஆடை அணிந்தால்தான் யூத் என்னும் கலாச்சாரத்தைத் தோற்றுவித்தது யார்? இதையெல்லாம் அவங்க பெற்றோரோ,ஆசிரியரோ என்னன்னு கேக்கமாட்டாங்களா?


சமீபத்திய சந்தேகம்

பல வீடுகளைப் போல, எங்க வீட்டு டிவிலயும் நெறைய,நெறைய மெகாசீரியல்கள் ஓடிட்டு இருக்கும்.நானும் அப்போ அப்போ சாப்பிடும் நேரங்களில் அம்மாகூட உக்கார்ந்த்து சீரியல்களை வேடிக்கை பார்க்கறது உண்டு.பல சீரியல்கள்,பல எபிசோடுகள் பார்த்து எனக்கு வந்த சந்தேகம் என்னன்னா.. எல்லா சீரியல்கள்லையும் யாரவது இறந்துபோவதோ,அதன் தொடர்ச்சியான சீன்களோ, வெள்ளிக்கிழமைகளிலேயே நடப்பது ஏன்?


சமீபத்திய எரிச்சல்

இந்த செல்போனை வச்சிகிட்டு மாணவச்செல்வங்கள்:) காலேஜ்ல அடிக்கற லூட்டிய சமாளிக்கறதே பெரும்பாடா இருக்கு.பெரிய சி.பி.ஐ ஆபீசர் கணக்கா உளவு வச்சி செல்போன் ஒரு ஸ்டூடண்டகிட்ட இருக்கறத கண்டுபிடிச்சி,அதை வாங்கி வச்சிகிட்டு, அவங்க பெற்றோரைக் கூப்பிட்டு அவங்ககிட்ட மணிக்கணக்கில பேசி பையன்( பொண்ணு)கிட்ட செல்போனைத் தராதீங்கன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பிவச்சா அடுத்த ஒரு வாரத்தில திரும்ப போனை பையன்(பொண்ணு)கிட்ட குடுத்து, ஸ்டாப் கண்ணுல கிடைக்காம வச்சிக்கோன்னு சொல்லி அனுப்பறாங்களே. இவங்கள்லாம் என்னதான் நினைச்சிட்டு இருக்காங்க

இதயப்பூக்கள் மலர்ந்தனவே

Monday, October 26, 2009
வரலாறு கூறும் தொடர்ப்பதிவுக்கு அழைத்தவர் ஆதவன். நான் போட முடிவு செய்திருந்த நன்றிப் பதிவையும் இதனுடன் கலந்துகட்டி எழுதிட்டேன்.படிச்சிகோங்க மக்களே


புராஜ‌க்ட் ரிப்போர்ட்டும்,ரெகார்ட் நோட் புக்கும் அப்போ அப்போ கொஞ்ச‌ம் கிளாஸ் நோட்ஸ் ம்ன்னு எழுத்துன்னா அது இங்கிலீஷ்... இண்ட‌ர்நெட்ன்னா அது என் துறை சார்ந்த‌ ட‌வுன்லோடுக்கும்,மெயில்பார்க்கவும் மட்டும்தான் என்று இருந்த‌ என‌க்கு இப்ப‌டி ஒரு வ‌லையுல‌க‌ம் இருக்கிறது,அது மற்றுமொரு தமிழ் உலகின் வாயிலைத் திறக்கிறது என்ப‌தை அறிமுக‌ம் செய்த‌து ஏதோ ஒரு கூகுல் ச‌ர்ச் ல் திற‌ந்த விவசாய சம்பந்தமான ஒரு பதிவு.அந்த‌ வ‌லைப்பூவை ஓர‌ள‌வு மேய்ந்த‌பின்ன‌ர், நாமும் ஆர‌மிப்பிக்க‌லாமே என ஆசைப்பட்டு ஆனால் எப்ப‌டி என‌த் தெரியாம‌ல் த‌ட்டித் த‌ட‌வி ஆர‌ம்பித்த‌துதான் இத‌ய‌ப்பூக்க‌ளும்,இந்த‌ இய‌ற்கை ம‌க‌ள் என்னும் பெய‌ரும்.
டைரியில் இருந்த‌வ‌ற்றுக்கு ஒரு பேக் அப் காபியாக‌ இருந்த வ‌லைப்பூ என் நெஞ்ச‌த்தில் நிறைந்து,இதில் எழுத, அப்போ அப்போ தோணுவ‌தையெல்லாம் குறிப்பெடுக்க‌வே ஒரு டைரியை சும‌ப்ப‌வ‌ளாக‌ என்னை மாற்றிய‌து எப்போது என‌த் தெரிய‌வில்லை.
அப்படி நான் தத்துபித்துன்னு எழுதிட்டு இருந்த காலத்தில் என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார் மருத்துவர்.தேவ‌ன்மாய‌ம்.என் வலையுலக எழுத்துக்குக் கிடைத்த‌ முத‌ல் அங்கீகார‌ம் அது.

பின்ன‌ர் பின்னூட்ட‌ம் போடுவ‌து முத‌ல்,அடுத்த‌வ‌ர் வ‌லைப்பூவைத் தொட‌ர்வ‌து வ‌ரை ஒவ்வொன்றாய்க் க‌ற்றுக் கொண்டேன்.

யூத்புல் விக‌ட‌ன்னு ஒண்ணு இருக்குங்கிற‌தே தெரியாத நேர‌‌த்தில்,உங்க பதிவு யூத்புல் விகடனில் வந்திருக்குன்னு ஜமால் அண்ணா சொன்னார்.அதென்ன யூத்புல் விகடன்னு தேடினப்போ கூகுளார் வழிகாட்டிக் கூட்டிப்போனார்.
அப்புற‌ம் என்ன‌? நானும் ரவுடி ஆயிட்டேன் இல்ல. .இப்போதைக்கு ஏற‌த் தாழ‌ 20 ப‌திவுக‌ள் யூத்புல் விக‌ட‌ன்ல‌ வ‌ந்திருச்சி.

ச‌ரி.. போதும் இந்த‌ வ‌லைப்பூ ப‌ய‌ண‌ம்ன்னு முடிவெடுத்த‌ நேர‌த்தில், தொட‌ர்ப‌திவுக‌ளுக்கு ந‌ட்புக‌ள் அழைக்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.அதே நேர‌த்தில் விருதுக‌ளும் வ‌ர‌ ஆர‌ம்பித்த‌ன‌.விருதுக‌ளை அளித்த‌ Dr.தேவ‌ன்மாய‌ம்,தார‌ணிபிரியா,ராஜ்குமார்,விக்னேஷ்வ‌ரி,ப‌துமை,J,மேன‌காச‌த்யா தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ ஆத‌வ‌ன்,மேனகாச‌த்யா,அன்பு,ம‌கா,Dr.தேவ‌ன்மாய‌ம் அனைவ‌ருக்கும் என‌து ம‌ன‌ம்க‌னிந்த‌ ந‌ன்றி.

அதே நேர‌த்தில் எனது இவ்வ‌ருட‌ப் பிற‌ந்த‌ நாளை நிச்ச‌ய‌மாய் சிற‌ப்பான‌தாக்கிய வீட்டுபுறா ச‌க்தி,ஆயில்யன்,ச‌ஞ்ச‌ய் காந்தி,அன்பு,அபி அப்பா,தூயா,வ‌ச‌ந்த‌ குமார் ஆகியோரது பதிவுகளுக்கும்,மற்றும் அனைவரது வாழ்த்துக்களுக்கும் மிக்க‌ நன்றி

ஒருநாள் மெயிலைத் திற‌ந்தால், த‌மிழ்ம‌ல‌ர் ப‌த்திரிக்கையின் பிர‌தி நண்ப‌ரிட‌மிருந்து வ‌ந்திருந்த‌து. இதையெதுக்கு அனுப்பினீங்க‌ன்னு கேட்டா,4ம் ப‌க்க‌ம் பாருங்க‌ அப்ப‌டின்னு சொன்னார்.போய்ப் பார்த்தா என்னோட‌ ஒரு ப‌திவு அங்கே.என் வ‌லைப்பூ முகவ‌ரியுட‌ன்.

இது போதாதா என் எழுத்துப் ப‌ய‌ண‌த்தை ரீஸ்டார்ட் ப‌ண்ண‌? ம்ம்..மீண்டும் முழுவேக‌த்தில் தொட‌ங்கிய‌து.

இப்படி வலைப்பூ வ‌ண்டி மிக‌ வேக‌த்தில் போக‌ ஆர‌ம்பித்த‌ நேர‌த்தில்,வ‌ந்த‌து சில‌ த‌னிப்ப‌ட்ட மற்றும் உய‌ர்க‌ல்வி சார்ந்த‌ வேலைக‌ள்.

ச‌ரி. இனி வ‌லைப்பூ வ‌ண்டியை நிறுத்தி விட்டு க‌ல்வி வ‌ண்டிக்கு மாற‌ணும் அப்ப‌டின்னு முடிவு ப‌ண்ண‌ நேர‌த்தில் வ‌ந்த‌து வ‌லைச்ச‌ர‌ அழைப்ப.(நன்றி சீனா ஐயா மற்றும் சுரேஷ் குமார்) .என் வ‌லைப்பூவைப் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் எண்ணிக்கையும் 100ஐ நெருங்கிய‌து.100பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் எப்போ வ‌ருவாங்க‌ன்னு ந‌க‌த்தை க‌டிச்சிட்டு காத்திருந்த‌ நேர‌த்தில் வ‌லைச்ச‌ர‌ வார‌ம் ஆரம்பித்த‌து.சீனா ஐயா 100வ‌து பின் தொட‌ர்ப‌வ‌ராக‌ இணைந்தார்.அது ஒரு வார‌த்தில் 106ஆக‌ உய‌ர்ந்தது.அதே சமயத்தில் வ‌லைச்ச‌ர வார‌மும் இனிதே நிறைவுற்றது.இவ்வலையுல‌கால் கிடைத்த நட்புக்கள் ஏராளம்.அனைத்து நட்புக்களுக்கும் என் நன்றி.ஏதேனும் சொல்லாலோ,செயலாலோ நான் என்னை அறியாமல் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

தனிப்பட்ட‌ வேலைகள் என்னையே மூழ்கடிக்கும் நிலைக்கு அதிகரித்து விட்டதால் வலைப்பூவுக்கு விடுமுறை விடும் முடிவை இப்போது எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.இன்றுமுதல் இந்த வலைப்பூவுக்கு விடுமுறை விட்டுக்கறேன் மக்களே. மீண்டும் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.

அனைவ‌ருக்கும் மிக்க நன்றி‌.

.

அட்டெண் டன்டன்டன்டன் ஸ்

Thursday, October 22, 2009
வணக்கம் மக்கள்ஸ். நான் இங்கே டெபுடேஷன்ல போயி நாலு நாள் ஆகிப்போச்சு. போன இடத்துல வேலை எல்லாம் நல்லாத் தான் நடக்குது. பொழுது ஜாலியாத் தான் போகுது. நட்புகள் நல்லாவே ஆதரிக்கறாங்க. அதுக்காக நம்ம சொந்த ஆபீஸ அப்படியே விட்டுட முடியாதே.அப்போ அப்போ தலையக் காட்டணுமே.அதுக்குத்தான் வந்தேன். எல்லாரும் நல்லா இருக்கீங்களா.. சரி..பத்திரமா இருந்துக்கோங்க.

அங்க நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சிக்கனும்ன்னா இங்கே வாங்க.( பெரிசா வேலை செய்யவா போறேன். வழக்கம் போல் மொக்கைதான்)

முதல் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்

.
நான் அங்க போன நேரத்தில இங்க‌ ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. அது என்னன்னா...


எனக்கும் 100 followers வந்திட்டாங்கோ......

ஸ்வீட் எடு.. கொண்டாடேய்ய்ய்ய்ய்ய்ய்


.

இட மாற்றம்..

Monday, October 19, 2009
இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம்ல எழுதப்போறேன் மக்களே.. அப்படியே அங்கனயும் வந்து கொஞ்சம் கண்டுக்கோங்க‌

.

பள்ளிக்கால‌ நினைவுகள்-I

Saturday, October 10, 2009
சில நாட்களுக்கு முன் அபியும் நானும் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் தன் பொண்ணை பள்ளியில் சேர்க்க படும்பாடுகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போ எங்க அப்பா சொன்னாங்க.. நல்லவேளை.. என் புள்ளயெல்லாம் என்னை இப்பிடி அலைய விடல. அதுக்கு அதுவே அட்மிஷன் வாங்கிச்சு அப்படின்னு.. ம்ம்..எனக்கு அதெல்லாம் கொஞ்சம் நியாபகம் இருந்தாலும்.. நல்லா தெளிவா இல்ல.. அதனால அப்பாகிட்ட டீடெயிலா கேட்டேன்..அவர் சொன்ன உடனே என் பிளாகர் புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சுது.. ஆமா.. நாம அட்மிஷன் வாங்கின கதைய பிளாக்ல போடலாமேன்னு.. இதோ ஆரம்பிச்சுட்டேன்..

நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..எங்க அம்மா வீட்டு வேலைகள்னால என்னைப் பார்த்துக்கும் வேலைய எங்க அப்பாகிட்டயும் சித்திகிட்டயும் கொடுத்திருக்காங்க..எங்க அப்பா நிறைய இலக்கியக் கூட்டங்கள்ல பேசுவார். தமிழைப் பற்றி நிறையவே படிப்பார். அந்த நேரத்தில எங்க சித்தி தமிழ் இலக்கியம் முதுகலைப் படிச்சிட்டு இருந்திருக்காங்க.. வீட்ல இலக்கிய ஆறு கரைபுரண்டு ஓடிட்டு இருந்திருக்கு..அதனால "அம்மா சொல்லு", "அப்பா சொல்லு" சொல்லிக்குடுக்க வேண்டிய வயசில எனக்கு "அகர முதல சொல்லு" ன்னு சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க எங்க அப்பாவும் சித்தியும் . இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..
அப்போ எங்க வீட்ல பெருசா வாசல் இருக்கும்.. நாலுபக்கமும் ரூம் இருக்கும். எங்க அண்ணாக்கு அந்த வாசல்தான் சிலேட். காலைல எழுந்து.. அ,ஆ,...A,B,C,D...1,2,3,4.. எல்லாம் எழுதி அம்மாகிட்ட காட்டிட்டு தான் ஸ்கூல் போவான். நாம தான் அண்ணாவைக் அட்டக்காப்பி அடிக்கறாவங்களாச்சே..அதனால அண்ணா ஸ்கூல் போனதும் ..அந்த எழுத்துக்கள் மேலயே நானும் எழுதிப்பழக ஆரம்பிச்சுட்டேன்..
அப்போ..அண்ணா..சித்தி எல்லாரும் ஸ்கூல் போக நானும் ஸ்கூல் போகணும்ன்னு ஆசை வந்திருக்கு.. நானும் ஸ்கூல் போறேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சாச்சி.. அப்போவெல்லாம் ஹெட்மாஸ்டர் அடிப்பார்ன்னு என்னை அடக்கிட்டாங்க.அந்த வருஷம் எதோ ஒரு உதவிக்கு எங்க ஊர் பள்ளியோடத் தலைமை ஆசிரியர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்திட்டு இருந்திருக்கார். ஒரு நாள் அவர் அப்படி வந்தப்போ அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.
( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍( என்னை உங்க பள்ளிகூடத்துல அடிக்காம‌ சேர்த்திகிறீங்களா? எங்க அண்ணா கூட நானும் வரேன்னு சொல்லி இருக்கேன்..அவர் அசந்துபோயி.. எங்க அப்பாகிட்ட பாப்பாவ ஸ்கூல்க்கு அனுப்புங்கன்னு கம்பெல் பண்ணியிருக்கார்.எங்க அப்பா அடுத்த வருஷம் தான் அனுப்பனும்ன்னு சொல்ல..அதுக்கு H.M..பால்வாடிக்காவது அனுப்புங்கன்னு கூட்டிட்டு போய்டார்..என் பள்ளி செல்லும் படலம் ஆரம்பிச்சுது..

ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க .
அந்த கிளாஸ்ல என் கஸின் ஒரு அக்கா படிச்சாங்க.. என்னை விட 2 வருசம் பெரியவங்க..ஆனா பாவம்..என்னோட கிளாஸ்.. ஸ்கூல் முடிக்கறவரைக்கும் அந்த அக்காவும் நானும் ஒண்ணாபோனா ..இந்த விவரமெல்லாம் தெரியாத சொந்தக்காரங்க‌ "எந்த கிளாஸ் படிக்கறீங்க ரெண்டு பேரும்"ன்னு கேட்டுட்டு.. " ஏன் தமிழு? நீ பெயிலாயிட்டியா? தங்கச்சிகோட ஒரே கிளாஸ்ல படிக்கற"அப்படின்னு அந்த அக்காவக் கேப்பாங்க..அப்போ தமிழக்கா ஆகற டென்சன் இருக்கே... அப்பப்பா..அக்னி பகவேனே நேர்ல வந்து நிக்கற மாதிரி தான் இருக்கும்..:‍)

ஆனா அந்த அக்காவும் நானும் சேர்ந்துட்டு ஸ்கூல பண்ணின சேட்டைகள் ரொம்ப அதிகம்.. ஆனா எதிலயாவது மாட்டினாலும் பாவம் பெரிய புள்ளன்னு அவங்கதான் திட்டு வாங்குவாங்க..அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன் ..

இந்த நிகழ்வெல்லாம் கூட எழுதி உங்களயெல்லாம் கொடுமை பண்ணலன்னா பிளாக் வச்சிருந்து என்ன பயன்..அதான் எழுதிட்டேன்
(அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌)

.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு

Wednesday, October 7, 2009
அன்புவுக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு

வரம் தரும் சாமிக்கு....

Monday, September 14, 2009

|

ஏஞ்சல் வந்தாளே என்னிடமும்.. அனுப்பி வைத்த மேனகாசத்யாவுக்கு நன்றி..

முதல்ல நான் வேண்டிக்கறது என்னன்னா.. என் தொல்லை தாங்காம ஏஞ்சல் ஓடிப் போயிடக்கூடாது..( இது அவுட் ஆஃப் சிலபஸ் வேண்டுதல்)..


ஓகே..இப்போ சில‌ப‌ஸ்குள்ள போயி வேண்டுத‌ல்க‌ளைப் ப‌ட்டிய‌லிடுவோம்..


1. இப்போது இருக்கும் என் உறவுகளும், நட்புகளும் என்றும் பிரியாமல் இதே அன்போடு நிலைத்திருக்க வேண்டும்

2.நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்


3.யார் க‌ண்ணுக்கும் தெரியாம‌ல் ம‌றையும் ச‌க்தி வேண்டும்

4.தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்

5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்

6.போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும்

7. தனிமையில் ஏங்கும் நிலையோ, உணவுக்காக ஏங்கும் நிலையோ யாருக்கும் வரக்கூடாது

8.குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது

9.பசும் வ‌ய‌ல்க‌ளும், அட‌ர் கான‌க‌மும் அழியாம‌ல் நிலைத்திருக்க‌ வேண்டும்

10.இத்த‌னை வ‌ர‌ங்க‌ள் த‌ந்த‌ தேவ‌தையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற‌ வேண்டும்

இன்னும்சில‌ பேருக்கு இந்த‌ ஏஞ்ச‌லை அனுப்பி வைக்க‌ணுமாம்..அனுப்பிடுவோம்..ஏஞ்சல் வந்து சேர்ந்ததும் நீங்களும்(நேரமும், விருப்பமும் இருந்தால்)உங்க வரங்களைக் கேட்டுட்டு அடுத்தவங்களுக்கு அனுப்பி வச்சிடுங்க..

ஜோச‌ப் பால்ராஜ்
காய‌த்ரி
ரங்கா
சிவ‌னேஸ்
தாரணிபிரியா

இன்று பிறந்த நாள் காணும் நண்பர் ரங்கா என்னும் ரங்க ராஜனுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக‌.


.

தமிழும் ஆங்கிலமும்..( தொடர்பதிவு)

Tuesday, September 8, 2009
இன்னும் ஒரு தொடர்பதிவு வந்துவிட்டது.. இதில் மாட்டிவிட்டவர் அன்பு தம்பி... இதில நானும் இன்னும் 4 பேரை மாட்டிவிடணுமாம்..
இன்னும் சில விதிகள்

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்..


நான் அழைப்பவர்கள் எல்லாம் அறிமுகத்துக்கு அப்பாற்பட்ட பிரபலங்கள். அதனால் நேரடியா பதிவுக்கு போலாம்

1. A – Avatar (Blogger) Name / Original Name : இயற்கை/ராஜி

2. B – Best friend? : பிரண்ட்ன்னு சொன்னாலே எனக்கு பெஸ்ட்தானுங்க‌..

3. C – Cake or Pie? : கேக்

4. D – Drink of choice? மில்க் ஷேக்

5. E – Essential item you use every day? Water bottle

6. F – Favorite color? ,பிங்க், ஸ்கை ப்ளூ

7. G – Gummy Bears Or Worm? : ம்ம்..தேன்முட்டாயி..

8. H – Hometown? ‍ட‌வுன்னாதான் சொல்ல‌னுமா? வில்லேஜ்ன்னா சொல்ல‌ கூடாதா?

9. I – Indulgence? ‍ விவசாயம்..

10. J – January or February? - ஜனவரி.வருட‌த்தின் முதல் மாதம்
(முதல்னாலேஸ்பெஷல்தானே)

11. K – Kids & their names? ஹை..சாய்ஸ் கொஸ்டீன்

12. L – Life is incomplete without? போதுமென்ற‌ ம‌ன‌ம்

13. M – Marriage date? - ஏதோ ஒரு பாவ‌ப்ப‌ட்ட‌வ‌ரோட‌ ஆயுள்த‌ண்ட‌னை ஆர‌ம்பிக்க‌ப்போற‌ நாள்.

14. N – Number of siblings? இவ்ளோ ச‌கோத‌ர‌ சகோத‌ரிக‌ள் இருக்க‌ற‌ வலையுல‌கில் கேக்க‌ற‌ கேள்வியா இது?

15. O – Oranges or Apples? ஆப்பிள்..

16. P – Phobias/Fears? அதை ஏங்க‌ நியாப‌க‌ப்ப‌டுத்த‌றீங்க‌? ப‌ய‌மா இருக்குதில்ல‌:-(

17. Q – Quote for today? .All you need is ignorance and confidence and the success is sure..

18. R – Reason to smile? அன்பை வெளிக்காட்டும் சிறிய வழி..

19. S – Season? கோடைக் காலம்..( அப்போதானே கோடை விடுமுறை விடுவாங்க‌)

20. T – Tag 4 People?-

மயில் விஜி
மஹா
அன்புடன் அருணா
குறை ஒன்றும் இல்லை ராஜ்குமார்

21. U – Unknown fact about me? தெரியாதது தெரியாததாய் இருக்கும் வரைதான் வாழ்க்கை சுவாரசியம்..

22. V – Vegetable you don't like? இனிமேதான் கண்டுபிடிக்கணும்..

23. W – Worst habit? நான் ரொம்ப‌ ந‌ல்ல‌ புள்ள‌

24. X – X-rays you've had? இது எதுக்கு?..

25. Y – Your favorite food? பசிக்கிற நேரத்தில் கிடைக்கும் எதுவும்....

26. Z – Zodiac sign? வீராப்பான விருச்சிகத்துக்காரய்ங்க நாங்க‌..

********************************************************************************8

1. அன்புக்குரியவர்கள் : என் மேல் அன்பானவர் எல்லாரும்..

2. ஆசைக்குரியவர் : கள்ளமில்லாக் குழந்தைகள்....

3. இலவசமாய் கிடைப்பது : காலம்....

4. ஈதலில் சிறந்தது : தேவையான நேரத்தில் தேவையானதைத் தருவது.

5. உலகத்தில் பயப்படுவது : அதை டைப் பண்ணவே பயமாயிருக்கு;-))..

6. ஊமை கண்ட கனவு : நான் ஊமையில்லயே.. எனக்கு எப்படித் தெரியும்?..

7. எப்போதும் உடனிருப்பது : என் மன வானமும்.. அதில் சிறகடிக்கும் நினைவுகளும்..

8. ஏன் இந்த பதிவு : நீங்க படிக்க‌..(பின்னூட்டம்,ஓட்டு எல்லாம் போடவும் தான்)

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : Positive Attitude. ..

10.ஒரு ரகசியம் : ............(படிச்சிடீங்களா? யார்கிட்டயும் சொல்லிடாதீங்க‌)

11.ஓசையில் பிடித்தது : யாருக்காவது காத்திருக்கும்போது அவர்கள் வரும் ஓசை ..

12.ஔவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல்...

13.(அ)ஃறிணையில் பிடித்தது: சாக்பீஸ்..பேனா..கம்ப்யூட்டர்.


.

இன்றைய உண்மையும்..நாளைய உண்மையும்

Sunday, September 6, 2009
அதிகாலை நேரம்.. கோவை காந்திபுரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கும்போதே பார்க்கிறேன், வழக்கத்தை விட மிக அதிக நெரிசல்..மக்கள் அனைவரும் ஏதோ விழாக் காலம் போல சந்தோசத்தை தங்கள் முகத்தில் பூசிக்கொண்டு ஒரே திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தனர்..அனைவர் கைகளிலும் ஏதேதோ பார்சல்..நீ என்ன வாங்கினே? நான் இத தான் தரலாம்னு இருக்கேன்னு பயங்கர ஒப்புமை.. சிலர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து காதை செவிடாக்கும் முயற்சியில் ஈடுபட, சிலர் அடையாறு ஆனந்தபவன் , கிருஷ்ணா இனிப்புகளை பாரபட்சமின்றி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்..
ச‌ரி.. ஊரைப் ப‌ற்றி என்ன‌ க‌வ‌லை... ந‌ம்ம‌ வேலைய‌ப் பார்க்க‌லாம்ன்னு.. போக‌ வேண்டிய‌ இட‌த்துக்கு ஆட்டோவ கூப்டா யாரும் வ‌ர‌மாட்டேங்குறாங்க‌.. டாக்ஸி..ம்ஹூம். திரும்பிகூட‌ பாக்க‌மாட்டேங்கிறாங்க‌..
ச‌ரி..ந‌ம‌க்கு வாய்ச்ச‌து ட‌வுன்ப‌ஸ் தான்னு அங்க‌ போனா, பஸ்ஸில் எல்லோரும் புது துணி போட்டுட்டு கைகளில் பரிசு பெட்டியோட இருக்க, கண்டக்டர் கூட காலையில கோவிலுக்கு போய் வந்ததை உறுதி செய்யும் வகையில் நெற்றியில் பட்டையோடு பக்தி மார்க்கமாக இருந்தார்..
கண்டக்டரிடம் நான்...
எத்தனை மணிக்கு வடவள்ளி போகும்?
அங்கெல்லாம் போகாதுங்க‌.. க‌ண‌ப‌தி போற‌துன்னா ஏறிக்கோங்க‌..
இது வ‌ட‌வ‌ள்ளி போற‌ ப‌ஸ் தானேங்க‌?
ஆமா..ஆனா இன்னிக்கு ஸ்பெஷ‌ல் ச‌ர்வீஸ் க‌ண‌ப‌திக்கு.. எந்த‌ ப‌ஸ்ஸும் க‌ண‌ப‌தி த‌விர‌ வேற‌ எங்கியும் போகாது..
ஓ..அப்ப‌டி என்ன‌ங்க‌ க‌ண‌ப‌தில‌ ந‌ட‌க்குது..?
என்னாங்க‌.. நீங்க.. இது கூட‌த் தெரியாம‌ இருக்கீங்க‌? இன்னிக்கு எங்க‌ த‌லைவ‌ர் பிற‌ந்த‌ நாளு..இந்தியா முழுக்க.. ஏன் உலகம் முழுக்க இருந்து அவ‌ரை வாழ்த்த‌ ம‌க்க‌ள் வ‌ந்திட்டும் போய்ட்டும் இருக்காங்க‌...எல்லா மாநிலத்திலே இருந்தும் சிறப்பு ரயில்கள் எல்லாம் ஏற்படு பண்ணி இருக்காங்க.. பல ரோடுல பாத யாத்திர போற‌தால பயங்கர போக்குவரத்து நெரிசல்..இவ்ளோ போஸ்ட‌ர் இருக்கே..இத‌க்கூட‌ப் பாக்க‌லியா நீங்க‌? என சொல்லி என்னை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல பார்த்தார்..

ஓ..அப்ப‌டிங்களா..சாரிங்க‌..தெரியலேங்க என சொல்லி சமாளித்து பார்வையை அலைய விட.. அங்கே எட்டாம் வள்ளலே வாழ்க.. வாழும் தெய்வமே உன்னை வணங்குகிறோம், என வாழ்த்து போஸ்டர்கள் ஜொலித்தன..
அதில‌ இருக்க‌ற முக‌ம் தெரிஞ்ச‌ முக‌மா இருக்கேன்னு உத்து பார்த்தா..
அட‌.. ந‌ம்ம‌ ச‌ஞ்ச‌ய்..
ஆஹா.. ச‌ஞ்ச‌ய் இவ்ளோ பெரிய‌ ம‌னுஷர்ன்னு தெரியாம‌ போச்சே...ச‌ரி.. நாம‌ளும் ஒரு ந‌டை போய் நேர்ல‌ பார்த்து விஷ் ப‌ண்ணிட‌லாம்ன்னு.. வ‌ந்த‌ வேலைய‌ விட்டுட்டு க‌ண‌ப‌திக்கு கெள‌ம்பிட்டேன்
அவ‌ர் வீட்டுப் ப‌க்க‌ம் போனா.. ஒரு கிலோ மீட்டர் தூரம் மக்கள் வரிசையில் நிற்க.. ச‌ரி.. ந‌ம்மால‌ அவ‌ர‌ பாக்க‌ முடியாது..ஒரு போன் ப‌ண்ணி விஷ் ப‌ண்ணலாம்ன்னு போன் அடிச்சா.. ஒரு பத்து கைகள் மாறி ஒரு வழியா போன் அவர் கைக்கு போய் சேர்ந்தது.. நான் ராஜி பேசரேன்னு சொன்னதும்,
ஹாய்.. ராஜி..சொல்லுங்க‌..
ஹேப்பி ப‌ர்த்டே ச‌ஞ்ச‌ய்..
தேங்க் யூ..
ச‌ஞ்ச‌ய் இன்னிக்கு உங்க‌ள‌ மீட் ப‌ண்ண‌ முடியுமா?
ஓ..பாக்க‌லாமே..எங்க இருக்கீங்க நீங்க?
கணபதிலதான் இருக்கேன்..ப‌ஸ் ஸ்டாண்ட்ல‌...
சரி..இன்னும் 10 நிமிஷத்துல அங்க‌ இருப்பேன்.. வெயிட் ப‌ண்ணுங்க
ம்ம்.சரி..

சொல்லி சிறிது நேரத்தில் ராஜி..ன்னு சஞ்சயின் குர‌ல் ... பார்த்தா.. வானத்தில ஹெலிகாப்டர்ல‌ இருந்து வருது..

ஹாய்..ப‌ர்த்டே பேபி...
மேல வாங்க..(ஹை..நானும் ஹெலிகாப்டர்ல ஏறிட்டேனே)..
காரிலே வந்தா.. டிராஃபிக் வர முடியாது அதுவும் இல்லாம மக்கள் என்ன பாத்தா அவ்வளவு தான் விட மாட்டாங்க அதான்..

ம்ம்..ச‌ஞ்ச‌ய் இவ்ளோ பெரிய‌ ஆளா நீங்க‌? இப்போதான் என‌க்கு தெரிஞ்சிது..

அதெல்லாம் ஒண்ணும் இல்ல‌ப்பா.. எல்லாம் ந‌ம் ந‌ண்ப‌ர்க‌ளோட அன்புதான்..
ச‌ரி..ச‌ரி.. ஒரு வி.ஐ.பி யோட‌ டைமை நான் வேஸ்ட் ப‌ண்ண‌ல‌.. சீக்கிர‌ம் ட்ரீட்ட‌ குடுத்துட்டு கெள‌ம்புங்க‌..
ஓய்.. இன்னாது..ட்ரீட்டா..அதெல்லாம் கிடையாது.. ஏதோ கூப்டீங்க‌ளேன்னு வந்தா.. ட்ரீட்டாம்ல‌..ட்ரீட்டு...
சரி.சரி.உங்கள கேட்டது தப்புதான்.. நானே கேக் த‌ர்றேன்.. வ‌ச்சிகோங்க‌... என்ன‌தான் வி.ஐ.பி ஆனாலும் திருந்த‌ மாட்டீங்க‌ளே.:‍(..
குட் டெசிச‌ன் ராஜி.. இதுதான் ந‌ல்ல‌ புள்ளக்கி அடையாளம்‌..
கேக்கை சாப்டுட்டு ப‌ற‌ந்துவிட்டார் ..
நான் வ‌ழ‌க்க‌ம்போல‌ போன‌ வேலைய‌ விட்டுட்டு திரும்பி வீடு வ‌ந்து சேர்ந்திட்டேன்..

(சஞ்சய்!இதெல்லாம் இன்று கற்ப‌னைதான் என்றாலும்.. எதிர்கால‌த்தில் நீங்க‌ள் வி.ஐ.பி ஆக‌ப் போவ‌தும்.. எவ்வ‌ள‌வு பெரிய‌ நிலைக்குப் போனாலும் ந‌ட்புக‌ளை ம‌ற‌க்க‌மாட்டீர்க‌ள் என்ப‌தும் உண்மை)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்.

தெரிந்தும் ம‌ற‌ந்த‌வை

Saturday, September 5, 2009

நான் செல்லும் வழியெல்லாம் உன் முகமே நிறைந்திருந்தும்,
உன் வழியில் என் சுவடே இல்லையென்பதும்,
என் மனதில் நீ பேசாத வார்த்தைகளும் நிறைந்திருந்தும்,
உன் செவியில் நான் பேசியவையும் நிலைக்கவில்லையென்பதும்,
தெரிந்திருந்தும்
உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,உறுதியானது
என் மரணத்திற்கான உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது


.

சிங்கை நாதன்-Latest Posts Few

Tuesday, August 25, 2009
சிங்கை செந்தில் நாதனுக்கு அறுவை சிகிச்சை வரும் 27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.அனைவரும் பிரார்த்தியுங்கள்.


அவருக்கான உதவியில் 75% சேர்ந்துவிட்டது. இன்னும் கொஞ்சம்தான்.சீக்கிரம் உதவுங்கள்

சிங்கை நாதன் - Latest Updates

சிங்கை நாதனுக்குக் கூட்டுப் பிரார்த்தனை


Friends!!! We Need all Your Help to Save our Friend's Life

help senthil

.

உதவி அனுப்ப மறந்துடாதீங்க..

Sunday, August 16, 2009
சக பதிவர் சிங்கை நாதனுக்கான உதவியை அனுப்பிவிட்டீர்களா நண்பர்களே..
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கைப் பாருங்கள்.
http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html

சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை மனதில் கொள்ளுங்கள் தோழமைகளே

.

படித்ததில் பிடித்தது:-)

Monday, August 10, 2009
ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...

தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!

இது யார் எழுதினதுன்னு தெரியலிங்க.எனக்கு மெயில்ல வந்தது. தெரிஞ்சவங்க சொல்லுங்க‌.


.

நல்வாழ்த்துக்கள் !

Wednesday, August 5, 2009
வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ரக் ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்


சகோதரத்துவத்தைப் பேணும் இந்நாள்,அனைவர் வாழ்விலும் எல்லா வளத்தையும், நலத்தையும் பெருகவைக்கட்டும்

.

ஒரு விதிமுறை மீறல்

Tuesday, July 28, 2009
இப்போ சமீபமா வலையுலகத்தில சுத்தரது நட்பு விருது.அது அங்க இங்க சுத்திட்டு இருக்கும் போது அப்படியே எனக்கும் வந்திட்டுது.என்கிட்ட அந்த விருதை கொண்டுவந்து தந்தவங்க ரெண்டு பேர்.

Dr.தேவன்மாயம் மற்றும் தாரணிப்பிரியா..


இந்த விருதை என்னோட மத்த நட்புகளுக்குத் தரணுமாம்..

நான் தர ஆசைப் படறவங்க..

அப்துல்லா அண்ணா
அபி அப்பா..
அன்புட‌ன் அருணா அக்கா
அன்பு மதி
ஆயில்ய‌ன்
ஜமால் அண்ணா
ஜோச‌ப் பால்ராஜ்
கார்த்திகைப் பாண்டிய‌ன்
ப‌துமை
ராஜி
ராஜ்குமார்
சக்தி செல்வி
சஞ்ச‌ய்
ஸ்வாமி ஓம்கார்
T.V.Radhakrishnan அண்ணா
விக்னேஷ்வ‌ரி
((நட்பு அவார்டுன்னு சொல்லிட்டு அண்ணா,அக்காக்கெல்லாம் குடுத்துருக்கேன்னு பாக்கறீங்களா...உறவுகளும் நட்புணர்வோடு இருப்பதால்தான் அவை நிலைத்திருக்கின்றன.))
ம‌ற்றும்
Dr.தேவ‌ன் மாய‌ம்
தார‌ணிப்பிரியா(இவ‌ங்க‌ளோட‌ ந‌ட்பை என‌க்கு விருது குடுத்து தெரிவிச்சிட்டாங்க‌. என் ந‌ட்பை வெளிக்காட்ட‌ நான் இவ‌ங்க‌ளுக்கும் த‌ரேன்)

விதிமுறை மீறல்ன்னு யாரும் திட்டாதீங்க‌..பொழ‌ச்சிப் போன்னு விட்டுடுங்க‌..


விருது வாங்கினவங்கெல்லாம் வழக்கம்போல உங்க வலைப்பூவுல இதைப் போட்டு உங்க் ஃப்ரண்ட்ஸ்க்கு இதைப் பாஸ் பண்ணிடுங்க‌

இதில் நான் தராத‌ என்னோட நட்புக‌ளுக்கெல்லாம் இவங்க வழியா விருது வந்து சேரும்.ஏன்னா அவங்கெல்லாம் இவங்களுக்கும் ஃப்ரண்ட்ஸ்

.

ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்வது மனநிறைவைத் தருகிறதா?

Monday, July 27, 2009
இன்றைய அவசர உலகில் ஒரு குடும்பத்தில் இருக்கும் 3,4 பேர்களது, தேவையைப் பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கும் காலகட்டத்தில்,எண்ணிக்கையில் அதிகமான ஆதரவற்றோரைப் பராமரிக்கும் இல்லங்கள் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதே கஷ்டம்தான். இதை உணர்ந்து நம்மில் பலர், பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆதரவற்றோர் வாழும் இல்லங்களுக்குப் போவதும் அவர்களுக்கு உதவிகள் தருவதும் வாடிக்கையாகக் கொண்டிரருக்கின்றனர்.அத்தகைய செயல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளது,அவர்களது அடிப்படைத்தேவைகள் நிறைவேறுகின்றன‌ என்றாலும்,அதுஅவ்ர்களுக்கு மனநிறைவு தரும் செயலாக இருக்குமா?
அதனை மன நிறைவுதரும் செயலாக எப்படி மாற்றலாம்?
1.அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் முதலில் தொடர்பு கொண்டு அவர்களின் தேவை என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதை விட, அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பது சிறந்தது.

2.இனிப்பு,பழவகைகள் அல்லது ஏதேனும் பொருட்களை வரிசையில் நிறுத்தி கொடுக்காதீர்கள்.அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகவே பகிர்ந்தளியுங்கள்.முன்பின் தெரியாத ஒருவரிடம் அவ்வாறு வாங்குவது அவர்களின் தன்மானத்தை காயப்படுத்தலாம்

3.பழைய ஆடைகள், பழைய நோட்டுகள் போன்றவற்றைத் தரும்போது அவை உபயோகிக்கும் நிலையில் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆடைகளைத் துவைத்து, கிழிந்திருப்பின் அவற்றைத் தைத்துக் கொடுங்கள்.பல நோட்டுகளில் இருக்கும் உபயோகப்படுத்தாத பக்கங்களை ஒரே நோட்டாக பைண்ட் செய்தோ அல்லது தைத்தோ கொடுங்கள்.

4.தீபாவளி,பொங்கல்,புது வருடம் போன்ற பண்டிகை நாட்களில் ஸ்பான்சர் செய்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். நன்கொடைகளும் கிடைக்கும். அதனால் நீங்கள் ஏதேனும் கொடுப்பதையோ அல்லது அந்த இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் பொழுதைக் களிப்பதையோ சாதாரண நாட்களில் வைத்துக் கொள்ளுங்கள்

5.அங்கே செல்லும்போது, படாடோபமான உடைகளைத் தவிர்த்து,முடிந்தவரை எளிமையாய்ச் செல்லுங்கள்
6.அங்கு குழந்தைகள் இருப்பின், அவர்களுடன் உங்கள் குழந்தகளை விளையாட அனுமதியுங்கள்

7.நீங்கள் கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும். எனவே அவர்களுடன், சிறிது நேரமாவது செலவிடுங்கள்

8.அங்குள்ளவர்களது சிறு,சிறு தேவைகளைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய முயலுங்கள்

9.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு இல்லங்களுக்குச் செல்வதை விட ஒரே இல்லத்திற்கு அடிக்கடி‌ செல்வது ஒரு அந்நியோன்யத்தை அவர்களிடம் உண்டாக்கும்

10.நீங்கள் ஏதேனும் ஸ்பான்சர் செய்யும் நேரங்களில் மட்டும் தான் அங்கு செல்ல வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யலாம்.

இவற்றைப் பின்பற்றினால் அவர்களது ஏக்கங்களும் ஒரு முடிவுக்கு வரும்.நமக்கும் உறவுகளின் எண்ணிககை அதிகரித்ததைப் போன்ற ஒரு தெம்பைத் தரும்.

எனக்குத் தோணுணத சொல்லிட்டேன்.ஏதேனும் வழி விட்டுப்போயிருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
பதிவு பயனுள்ளதாக இருந்தால்,தமிழ்மணம்,தமிழிஷ்ல ஓட்டுப் போட்டிடுங்க. நிறைய பேர் படிக்கட்டும்

.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

இன்று ஜுலை 27 நம்ம ஹாஜர் அப்பா.. எல்லோருடனும் நட்பு பாராட்டும் ஜமால் அண்ணாவுக்குப் பிறந்த நாள்.அவர் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துவோம்பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா

.

காமெடி சேனல்களுக்கு ஒரு கேள்வி..

Saturday, July 25, 2009
தொலைக்காட்சி,சினிமா போன்ற ஊடகங்கள் அதிகமாய் என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பதில்லை.இப்போது இருக்கும் பலப் பல சேனல்களில் அவ்வபோது காமெடி சேனல்கள் மட்டும் பார்ப்பதுண்டு.அப்படிப் பார்த்த ஒரு காமெடி சேனலில் நிகழ்ச்சி இடைவெளிகளில் ஒரு புரோகிராம் போடுகிறார்கள்.
அதில்.. சேனலைச் சேர்ந்த 2,3 பேர் சேர்ந்து, பார்க்,பீச் அல்லது ரோடில் செல்பவர்களை ஏமாற்றும் ஏதோ ஒரு செயலைச் செய்வது.அவர்கள் ஏமாந்து விழிப்பதை பதிவு செய்து ஒலிபரப்புவது.இது எந்த‌ அள‌வுக்கு நாக‌ரீக‌மான செய‌ல் என‌ என‌க்குத் தெரிய‌வில்லை.

அப்படி நான் பார்த்த சிலவும் எனக்குள் தோன்றிய கேள்விகளும்..
1.பேய் முக‌மூடியைப் போட்டுக் கொண்டு ரோடில் செல்லும் ஒருவ‌ர் முன் திடீரென‌ப் போய் குதிப்ப‌து, அவ‌ர் ப‌ய‌ந்து அல‌றுவ‌தை அப்ப‌டியே ஒலிபரப்புவ‌து..
கேள்வி:
ரோடில் போன‌வ‌ர் இத‌ய‌ம் ப‌ல‌வீன‌மாக‌ இருப்ப‌வ‌ராக‌ இருந்தால் என்ன‌ ஆவ‌து?

2.ரோடில் ந‌ட‌ந்துவ‌ருப‌வ‌ரின் எதிர்திசையிலும், பின்தொட‌ர்ந்தும் வ‌ரும் இருவ‌ர்,திடீரென ஒருவ‌ரை நோக்கி ஒருவ‌ர் ஓடி வ‌ந்து க‌ட்டிப் பிடித்து அள‌வ‌ளாவிக் கொள்வ‌து..அந்த‌ ம‌னித‌ர் தம்மை நோக்கி ஓடிவருவதாய் நினைத்து ஒரு நொடி புரியாம‌ல் திகைப்பார்.சில‌ ச‌ம‌ய‌ம் ட‌க்கென‌ ரோடின் ம‌றுப‌க்க‌ம் ஒதுங்குவார்.
கேள்வி:
அப்ப‌டி ரோடின் ப‌க்க‌ம் பயந்து ஓடும்போது அவ‌ருக்கு ஏதேனும் விப‌த்து ஏற்ப‌ட்டால் யார் பொறுப்பு?


3.ரோடில் பெரிய பெட்டி ஒன்றைத் தூக்கமுடியாமல் தூக்கி கொண்டு இருப்பர்.அப்போது வழியில் செல்லும் யாரோ ஒருவரை உதவி செய்ய அழைப்பர்.அவர் வந்து பெட்டியைத் தூக்க உதவ முயல்கையில்,அப்பெட்டியில் மறைந்திருக்கும் ஒருவர்,திடீரென அவர் காலைச் சுரண்டுவார்.
4.ரோடில் போகும் ஒருவர் பர்சைத் தவற விடுவார்.(அறியாமல் போடுவதைப் போல,வேண்டுமென்றே கீழே போடுவார்.) பின்னால் வரும் யாரோ ஒரு அப்பாவி, அதை எடுத்து அவரிடம் கொடுக்க கையில் எடுத்தால், எங்கிருந்தோ வரும் மற்றொருவர்(தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்) "உங்க பர்சை இவர் எடுத்துகிட்டு ஓடறார்" என்பது போல சீன் கிரியேட் பண்ணி அந்த அப்பாவியை டென்சனாக்கி ஓட ஓட விரட்டுவார்
5.கண் பார்வை இல்லாதவர் போல் நடித்து, ரோடில் போகும் ஒருவரிடம் ரோடை கடந்து போக உதவி கேட்பார் ஒருவர்.அந்த அப்பாவி மனிதர் இவரை ரோடை கடந்து கொண்டுபோய் விடும் நேரத்தில்,எதிர் திசையில் வருபவர்(தொலைக்காட்சியை சேர்ந்தவர்) ஏதோ ஒரு அட்ரஸ்க்கு வழி கேட்பார்.அவர் குனிந்து அட்ரஸைப் படிக்கும் வேளையில், கண் தெரியாதவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை இவர் எடுத்து விடுவார். பின்னர் இருவரும் சேர்ந்து,அந்த அப்பாவி மனிதரிடம் பணத்தை குடுங்கள் என கலாட்டா செய்வார்கள்.

கேள்வி(3,4,5): உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களைக் கூட, இவர்கள் நடிக்கிறார்களோ என்ற சந்தேகக் கண் கொண்டு பார்க்க வழி இருக்கிறது அல்லவா?இவற்றால் மனிதனுக்கு மனிதன் சிறு உதவிகள் செய்யும் எண்ணம் தடைப்படாதா?


இவை அனைத்து நகைச்சுவைக்காகத்தான் எடுக்கப்பட்டது என்றாலும், நம் உறவினர்களையோ,நண்பர்களையோ,மதிக்கும் பெரியோரையோ, வெளியில் செல்லும்போது, இப்படி முகம் தெரியாத சிலர் கலாட்டா செய்வதையும், அதை தொலைக்காட்சியில் ஒலிபரப்புவதையும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியுமா?

இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க மக்களே.

.

என்ன‌ருகே நீ இருந்தும்..(6)

Thursday, July 23, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 5ம் ப‌குதி

மாலைநேரம்..அவ‌ள் வீட்டில் ஆஜ‌ர்.
ஆண்டி..சூடாக டிப‌ன் செய்து கொண்டிருக்க‌ ஜன‌னி ச‌ம‌ய‌ல‌றை மேடையில் உட்கார்ந்து அதை சுவைத்துக் கொண்டிருந்தாள்.
ஏய்.இன்னும் கெள‌ம்ப‌லியா நீ?
ஓ..காட் ..வ‌ந்திட்டியா?.இதோ ஒரு 5 மினிட்ஸ்
ஆன்ட்டி! போய்ட்டு சீக்கிர‌ம் வ‌ந்துடறோம்..அங்கிள்கிட்ட‌ சொல்லுங்க‌..அவ‌ளைத் திட்ட‌ போறார்..அப்புறம் அந்த வாலு என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா...
என‌ச் சொல்லிக்கொண்டே டிப‌னைக் காலி பண்ணும் வேலையை நான் தொட‌ர்ந்தேன்..
ச‌ரிப்பா..நான் சொல்லிக்கறேன்..உன்கூட தானே வர்றா..ஏதுவும் சொல்லமாட்டார்..
அதற்குள் கிளம்பி வந்து மலராய் நின்றாள்..
அல்லோ ..என்ன..டாக்டர் சார்..போலாமா?..
அம்மா..பை மா..

ம்..ம்..போலாம்..வா..பை ஆன்ட்டி..

பை..பத்திரமா போய்ட்டுவாங்க கண்ணு..


கார் நகர ஆரம்பித்தது..

போகும் வ‌ழியில்

ஏன் ஜனனி ஒரு மாதிரி சைலன்டா இருக்க‌

இல்ல..இன்னிக்கு எங்க அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க..அதை யோசிச்சிட்டு இருந்தேன்..

என்ன் விஷயம்? எதைப் பத்தி ?


உங்க‌ளுக்கு அலைய‌ன்ஸ் பாக்க‌ ஆர‌ம்பிச்சி இருக்காங்க‌ இல்ல‌?..அத‌னால அதிக‌மா 2 பேரும் ஒண்ணா சேர்ந்து சுத்தாதீங்க‌..பாக்க‌ற‌வ‌ங்க‌ எல்லாரும் இதை ந‌ல்ல‌ வித‌மா எடுத்துக்க‌ மாட்டாங்க‌..யாராவ‌து ஏதாவ‌து சொல்லிட்டா ரெண்டு குடும்ப‌த்துக்குமே க‌ஷ்ட‌ம்ன்னு சொன்னாங்க‌

ஓ..அப்படியா...

ஆமாம்..அதைக் கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சி..

இதைச் சொல்வதற்குள் அவள் கண்களில் குளம்..

அப்போ உங்க கல்யாணம் ஆயிட்டா நாம் ரெண்டு பேரும் பழக முடியாதா..வர்ற பொண்ணு நம்மள புரிஞ்சிக்க மாட்டாங்களா? நம்ம பிரண்ஷிப் அவ்ளோதானா..என்னால முடியாதுப்பா.. நம்ம பிரண்ஷிப்பை யாராவது ஏதாவது சொன்னா நான் அவ்ளோதான்..

இதற்கும் கண்களில் இருந்த குளம் கரை மீறியது..அழ ஆரம்பித்திருந்தாள்..

ஏய்..ஏம்மா அழற..அதெல்லாம் பாத்துக்கலாம் விடு..ப்ளீஸ் பேபி ரிலாக்ஸ் யுவ‌ர்செல்ஃப்...

சில‌ நிமிட‌ ச‌மாதான‌த்துக்குப் பின்..
ம்ம்..ஒகே..அழல..கோயிலுக்குப் போலாமா?

என்ன‌ திடீர்ன்னு?

போலாம் ப்ளீஸ்..


ச‌ரி..போலாம்..என‌க்கும் உன்கிட்ட‌ கொஞ்ச‌ம் பேச‌ணும்..

தரிசனத்திற்குப் பின்..பிரகாரத்தில் அவளது ஃபேவரிட் இடத்தில் அமர்ந்தோம்..

என்னவோ..பேசணும்ன்னு சொன்னீங்களேப்பா..சொல்லுங்க..

ம்.ம்..ஏன் திடீர்ன்னு எமோஷனல் ஆயிட்டே ..நீ?

ம்ப்ச்ச்ச்..அதை விடுங்க..யு டெல்..

ஜனனி உன் மனசில நம்ம ஃபிரண்ஸ்ஷிப்பை பத்தி எவ்ளோ பயம் இருக்கோ ..அதைவிட பல மடங்கு பயம் எனக்கும் இருக்குடா.. வர்ற பொண்ணு நம்மல புரிஞ்சிக்கலன்னா..நாம நிரந்திரமா பிரிய வேண்டிய நிலமை கூட வரும்..அதவிட பெரிய கஷ்டம் நம்ம லைஃப்ல வேற ஏதும் இருக்காதுன்னு நினக்கிறேன்..

ம்ம்..அதை நான் இவ்ளோ நாளா யோசிக்கல..இன்னிக்கு அம்மா சொன்னபின்னாடிதான் புரிஞ்சிது..

அதுக்கு எனக்கு ஒரு வழி தோணுது..ஆனா அது எந்த அளவுக்கு சரின்னு எனக்குத் தெரியல..என்ன அது?

பேசாம நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா? நான் இப்படி சொன்ன உடனே,இதே எண்ணத்தோடதான் நான் உன்கிட்ட பழகினேனான்னு நெனக்காதே..இந்த பிரச்சினைக்கு ஒரு சொல்யூஷனாத்தான் இதைச் சொல்றேன்...

இது நிச்சயமா ஒரு சொல்யூஷன் இல்ல ராஜ்.. எனக்கும் இப்படி ஒரு எண்ணம் அம்மா சொன்ன உடனே வந்துது..அப்புறம் தான் யோசிச்சேன்..

அப்படி ஒரு முடிவு எடுத்தா அது நம்ம பேரண்ஸ்க்கு நான் செய்யற நம்பிக்கை துரோகம்..ரெண்டு வீட்லயும் நம்ம மேல இருக்கற நம்பிக்கைல தானே நம்மலபழக விட்டு இருக்காங்க..இப்போ போய் இப்பிடி சொன்னா ...அவங்க நமக்காக ஒத்துக்கலாம்..ஆனாமனசுக்குள்ள எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்க.. கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..
அதுவுமில்லாம உங்க அப்பாக்கு ஜோசியம்னா எவ்ளோ நம்பிக்கைன்னு உங்களுக்கே தெரியும்.. நம்ம 2 பேர் ஜாதகமும் சேராதப்போ ..அவர் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்ன்னா அது அவருக்கு எவ்ளோ கஷ்டம்..

இதெல்லாம் யோசிங்க.. அதுக்கு அப்புறம் நீங்க எண்ண முடிவு எடுத்தாலும் நான் அக்செப்ட் பண்ணிக்கறேன்..கார்ல வெய்ட் பண்றேன்..முடிவு பண்ணிட்டு வாங்க..
சில நிமிடங்களுக்குப் பின் நான் மீண்டும் கடவுள் முன் நின்றேன்..

"கடவுளே! எங்களோட நட்புக்கு பங்கம் வராத மாதிரி வாழ்க்கைத் துணைகளை எங்களுக்குத்தா.."


என வேண்டிக் கொண்டு காரை நோக்கி நடந்தேன்..கோயிலில் விளக்குகள் ஒளிர்ந்தன‌


முற்றும்.

.

விருது வழங்கும் விழா!

Friday, July 17, 2009
வலையுலகில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு விருது வலம் வந்து கொண்டிருக்கும்.இப்போ சமீபமா எல்லாரும் குடுத்துக்கறது "இன்ட்ரெஸ்டிங் பிளாக் அவார்டு"

எனக்கும் கிடைச்சிருச்சி.. புன்னகை பிளாக்.. J .. மூலமா..


அவருக்கு ரொம்ப நன்றி...நான் இன்ட்ரெஸ்டிங் ஆ எழுதறேன்னு ஒருத்தர் சொன்னதுல கொஞ்சம் பெருமையும் கூட:‍))


இந்த விருத நான் இன்னும் 6 பேருக்குத் தரணுமாமே..ம்ம்ம்..


கார்த்திகைப் பாண்டியன்.. சினிமா விமர்சனங்கள்,கதைகள்ன்னு எல்லாத்தையும் இரசிக்கத்தக்க முறையில எழுதறார்

அன்பு..கதை,கவிதை நிகழ்வுன்னு பின்றார் இவர்.

ச‌க்தி செல்வி... க‌‌விதைப் பூங்காட்டின் ஏக‌போக‌ சொந்த‌க்காரி...

இர‌ச‌னைக்காரி.ராஜியை எப்ப‌டி விடறது?எல்லாத்தையும் ஒரு ர‌ச‌னையோட‌வே எழுதுவாங்க‌

ஜோசப் பால்ராஜ்..ரொம்ப குறைச்சலா எழுதினாலும்,‌சமூக அக்கறையோட ,நல்லா எழுதுவார்

அம்மாக்க‌ளின் வ‌லைப்பூ..குழ‌ந்தைக‌ள் ப‌த்தின்னாவே க‌ண்டிப்பா இன்ட்ர‌ஸ்டிங்கா தான் இருக்கும்..

.அடுத்து.....

ஓ!!!! 6 பேருக்குத்தான் தரணுமா?

என் லிஸ்ட்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க..ம்..ம்..என்ன பண்றது..
சரி ..வேற ஏதும் விருது வராமயா போய்டும்..

(மேலே சொன்ன 6 பேரும் இதை உங்க பிளாக்ல போட்டுட்டு..அடுத்த 6 பேருக்கு குடுத்துடு
ங்க‌)
.

நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்

ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
தொலைந்து போன‌ இள‌மைக்காய் ஏங்கி விட்டு
ப‌ச்சிள‌ம் பாலகர்களை ப‌ள்ளியில் சேர்ப்போம்
கல்வி கற்பிப்பதை சேவையில் சேர்த்து விட்டு
கட்டணத்தின் பெயரால் கோடிகளை குவிப்போம்

ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
வ‌ரதட்சணை வாங்குதல் ஈனச் செயல் எனப் பேசி
சீர் என்னும் பெயரால் செழிப்போம்
ஆணுக்குப் பெண் ச‌ம‌மென‌ப் பேசிவிட்டு
வீட்டுப் பெண்க‌ளுக்கு வாய்ப் பூட்டு போடுவோம்

ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
தெய்வீகத்தனமானது என‌க் கூறி விட்டு
காத‌லிலும் க‌ய‌மைத்த‌ன‌ம் புரிவோம்
சாதியை ஒழிக்க‌ணும் என‌ முழ‌ங்கி விட்டு
சாக்காட்டிலும் சாதிச் சுடுகாடு கேட்போம்
ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்

.

வாழ்த்துக்கள் அன்புடன் அருணா மேடம்:-)

Thursday, July 16, 2009
"முதன் முதலாய்" இந்த வார்த்தையை நினைக்கும்போதே மனதுக்குள் ஒரு உற்சாகம் கண்டிப்பாய் கொப்புளிக்கும். நம் வாழ்க்கையில் "முதல் நிமிடம்" என்பது எப்போதுமே ஸ்பெஷல் தான்.இந்த முதல் நிமிடம் என்பதோடு தொடர்புடையது உயர்வு(பிரமோஷன்)..நம் தற்போதைய நிலையிலிருந்து கிடைக்கும் உயர்வு எப்போதும் ஸ்பெஷல்.பர்ஸனல் வாழ்க்கைல வர்ற அக்கா,அண்ணா, அப்பா,அம்மா, தாத்தா,பாட்டி பிரமொஷனா இருந்தாலும் சரி...ஆபிஸ்ல வர்ற பதவி உயர்வா இருந்தாலும் சரி..அது கண்டிப்பா ஒரு பரவச நிமிடத்தை தரும்.
அப்படிப்பட்ட ஒரு பரவச நிமிடம் நம்ம அன்புடன் அருணா மேடம்க்கு கிடைச்சிருக்கு.அவங்க ஒரு பள்ளியின் பிரின்சிபலா பதவி உயர்வை அடைஞ்சு இருக்காங்க.


அவங்களோட சிறந்த நிர்வாகத்திறமைக்கும்,மாணவர்கள்பால் கொண்ட அக்கறைக்கும் இது ஒரு சிறந்த பரிசு.அவங்களோட நிர்வாகத்தில் பள்ளி பல சிறப்புகளை எட்டும் என்பதில் ஐயமில்லை.
எல்லாருக்கும் பூங்கொத்து தர்ற அவங்களுக்கே ஒரு பூங்கொத்து.:‍)


வாழ்த்துக்கள் அன்புடன் அருணா மேடம்.

மக்களே!!!!
நான் வாழ்த்திட்டேன்..நீங்களும் வாழ்த்துங்கன்னு சொல்லணுமா என்ன?.

என் 50வது பதிவு :-அப்பாவுக்கு

Wednesday, July 15, 2009இது என் 50வது பதிவு.

இதை அப்பாவுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தில் நிறைய எழுத இருந்தேன்.நேரச்சிக்கலின் காரணமாய், என் அப்பாவுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்
(நேரச்சிக்கல் என்பது ஒரு பொய்யான காரணம் தான் அப்பா.. நீங்கள் எனக்கு செய்தவற்றையும்,செய்து கொண்டிருப்பவற்றையும் சரியான வடிவில் எழுதி வெளிப்படுத்த முடியுமா என்னும் பயம் தான் இதற்கு காரணம்.)

அப்பா..பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் வளத்தோடும், நலத்தோடும் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.ஜோச‌ப் பால்ராஜ்க்கு ஒரு ப‌கிர‌ங்க‌ எச்ச‌ரிக்கை

Saturday, July 11, 2009
எல்லாரும் வாங்க‌. வ‌ண‌க்க‌ம்.ஒருத்த‌ர்க்கு எச்ச்ர்க்கை விட‌றதுக்கு முன்னாடி அவ‌ர் ப‌த்தி உங்க‌ளுக்கு எல்லாம் சோல்லிட‌னுமில்லீங்க‌..ஜோச‌ப் பால்ராஜ் ப‌த்தி மொத‌ல்ல‌ கொஞ்ச‌ம் சொல்லிட‌றேங்க‌.

அவ‌ர் ந‌ல்ல‌வ்ர்,வ‌ல்ல‌வ‌ர், நாலும் தெரிஞ்ச‌வ‌ர்,தின‌ம் 2 ப‌திவாவ‌து போட்டுடுவார்.பாக்க‌ற‌ அத்த‌னை வ‌லைப்பூவுக்கும் ஃபாலோய‌ர் ஆகிடுவார்.சிங்கை ப‌திவ‌ர் ச‌ங்க‌த்தின் தூண்.பிளாக்கின் டெக்னிக‌ல் விஷ‌ய‌ங்க‌ள்ல‌ ச‌ந்தேக‌ம் ஏதும் கேட்டா உட‌னே தீர்த்து வ‌ச்சிடுவார்.அப்புறம்...

(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆ..போதும்.. நிறுத்து இய‌ற்கை..வ‌ங்கின‌ காசுக்கு கொஞ்ச‌ம் ஓவ‌ராதான் கூவுறே!!)


ச‌ரி..இவ்ளோ ந‌ல்ல‌வ‌ர்ன்னு சொல்லிட்டு ஏன் எச்ச‌ரிக்க‌றேன்னு கேக்க‌றீங்க‌ளா..
வேற ஒண்ணுமில்லீங்க‌..அவ‌ர்க்கு JULY 11 பிறந்த‌ நாள்.அவ‌ருக்கு கேக் ரெடி..


கேக்கை ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ர் முக‌த்தில் பூச‌லாம்.
.ட்ரீட்ங்கிற பேர்ல‌ அவ‌ர் ப‌ர்ஸ் காலி ஆக‌லாம்.
ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் இருந்து birthday punches கிடைக்க‌லாம்
அத‌னால‌ எச்ச‌ரிக்கையா இருங்க‌ன்னு சொல்ற‌து ஒரு தோழியோட‌ க‌ட‌மை இல்லீங்க‌ளா.. அத‌னால‌ தான் அப்ப‌டி சொன்னேங்க‌.
ச‌ரி வாங்க ..அவ‌ர் கேக் வெட்ட சொல்லி வாழ்த்த‌லாம்... நீங்க‌ கேக்கை வெட்டுங்க‌ ஜோச‌ப்..ஹ‌லோ..ஹ‌லோ.. ஜோச‌ப் பால்ராஜ்.!!!!!... கேக்கை வெட்டுங்க‌ ன்னு சொன்னது க‌த்தில‌ வெட்ட‌ற‌தை.....‌ இப்பிடி சாப்டு காலி ப‌ண்றதை இல்ல‌.. உங்க‌ளையெல்லாம்.@$#$$%^%(*&%^%&.ச‌ரி..ச‌ரி..ப‌ர்த்டே பேபியை ஒண்ணும் குறை சொல்ல‌ கூடாது.இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்..ஜோச‌ப் பென‌டிக்ட் பால்ராஜ்....ப‌தினாறும் பெற்று பெருவாழ்வு வாழ (வாழ்த்துகிறேன்) வாழ்த்த‌ வ‌ய‌தில்லை வ‌ண‌ங்குகிறேன்:‍))))))))))))

VaanamVanthu.mp3

.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, July 7, 2009


இன்று என் பிறந்த‌ நாளுக்கு வாழ்த்திய‌ அனைவ‌ருக்கும் என் ம‌ன‌ம் நிறைந்த‌ ந‌ன்றின்னு சொல்ல‌ ஆசைதான்.(ஆனால் ந‌ன்றி சொல்லி உங்க‌ள எல்லாம் அந்நிய‌ப்ப‌டுத்த‌ன்னுமான்னு யோசிக்க‌றேன்)

நிச்ச‌ய‌மாய் இப்பிறந்த‌ நாளை என் வாழ்வில் ம‌ற‌க்க‌ முடியாத‌ இனிய‌ நாளாக்கிவிட்டீர்க‌ள்.
ம‌கிழ்ந்திருக்கின்றேன். நெகிழ்ந்திருக்கின்றேன்

ப‌திவு போட்டு வாழ்த்திய‌

ச‌க்தி அக்கா

ஆயில்ய‌ன்

ச‌ஞ்ச‌ய் காந்தி

அன்பு

அபி அப்பா

தூயா

இவ‌ங்க‌ளுக்கும்,
விட்ஜெட்ல் வாழ்த்திய‌

வ‌ச‌ந்த‌ குமார்

மற்றும் பதிவின் பின்னூட்ட‌ம்,ஜிமெயில்,ஆர்குட்,ஃபேஸ்புக் என‌ வாழ்த்திய‌ அனைவ‌ருக்கும்,ஏன் முன்னாடியே சொல்ல‌லைன்னு உரிமையா கோச்சிகிட்ட‌வ‌ங்க‌ளுக்கும் ஒரே ஒரு கேள்வி..

என்ன‌ த‌வ‌ம் செய்தேன் நான் இத்த‌கைய‌ உங்க‌ள் அன்பைப் பெற

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!!

Monday, July 6, 2009

இன்னிக்கு வ‌லையுல‌க‌ ம‌க்க‌ள் 2 பேருக்கு பிற‌ந்த‌ நாள்.
ஒருத்த‌ர்.....
ச‌க்தி (அக்கா)...வீட்டுப் புறாங்கிற க‌விதை தோட்ட‌த்தின் ஏக‌போக‌ சொந்த‌க்கார‌ங்க‌‌

வீட்டுப்புறாங்கிற வ‌லைப்பூவை நீங்க‌ ப‌டிச்சிருக்கீங்களா? ப‌டிக்க‌லைனா கீழே கிளிக் ப‌ண்ணி ப‌டிச்சி பாருங்க‌..

வீட்டுப்புறா

க‌விதைக‌ளின் ச‌ங்க‌ம‌ன்.பின்னூட்ட‌ங்க‌ளின் புக‌லிட‌ம். க‌விதைங்கிற‌ பேர்ல‌ 4.5 வ‌ரி எழுத‌ற‌த்துக்குள்ளயே என‌க்கெல்லாம் பைத்திய‌மே புடிச்சிடுது..வ‌லையுல‌க‌ விட்டே ஓடிட‌லாமான்னு யோசிக்க‌ ஆர‌ம்பிச்சிட‌றேன்.ஆனா இவங்க‌ க‌விதையா பொள‌ந்து க‌ட்ட‌றாங்க‌.

அதே மாதிரி இவ‌ங்க‌ளுக்கு வ‌ர்ற‌ பின்னூட்ட்ங்க‌ள‌ எண்ணிப் பார்த்து என் பிளாக்ல‌ பின்னூட்ட‌ப் பெட்டியையே மூடிட‌லாமான்னு பாக்க‌றேன்... ( நான் பின்னூட்ட‌ங்க‌ளை அனும‌திக்க‌ற‌தில்லைன்னு ச‌மாளிக்க‌ல்லாம் பாருங்க‌..அதுக்கு தான்)

எப்ப‌டி இவ்ளோ திற‌மை இவ‌ங்க‌ளுக்கு ம‌ட்டும்ன்னு தெரிஞ்சிக்க‌லாம்ன்னு ..அக்கா.. நீங்க‌ எந்த நேர‌த்தில‌ பொற‌ந்தீங்க‌ன்னு‌ கேட்ட‌ப்ப‌தான் தெரிஞ்சிது..அக்காக்கு இன்னிக்கு பிற‌ந்த‌ நாள் .ன்னு..

அத‌னால‌ ம‌க்க‌ளே எல்லாரும் சக்திக்கு ஜோரா ஒரு ஹேப்பி ப‌ர்த் டே பாட்டு பாடிட்டு போங்க‌...

இன்னொருத்த‌ர்.. தூயா..

அவ‌ங்க‌ள‌ப் ப‌த்தி நான் ஏதும் சொல்ல‌ப்போனா த‌மிழ் வ‌லையுல‌க‌மே திர‌ண்டு என்கிட்ட‌ ச‌ண்டைக்கு வ‌ந்திடும்.. எங்க‌ பொண்ணைப் ப‌த்தி எங்க‌ளுக்கே அறிமுக‌மான்னு...ஏன்னா அவ‌ங்க‌ வ‌லையுலகில் பெரும்பாலானோரின் செல்ல‌ம் அவ‌ங்க‌.

அத‌னால‌ அவ‌ங்க‌ளுக்கு வாழ்த்து ம‌ட்டும் சொல்லிக்க‌றேன்Vaa Vaa En Dhevada...

செல்ல‌ம்..ஹேப்பி ப‌ர்த்டே டு யூ

Friday, July 3, 2009
வ‌லையுல‌க‌ க‌விதைத் தென்ற‌ல்,க‌விதைப் புய‌ல்,க‌விதை சூறாவ‌ளியும் என‌து பாச‌மிகு அக்காவுமான‌ வீட்டுப்புறா- ச‌க்தியின் மூத்த‌ இராஜ‌குமார‌ன் பாலாஜிக்கு இன்று பிற‌ந்த‌ நாள்.அவ‌ன் எல்லாவ‌ள‌மும் பெற்று வாழ வாழ்த்துவோம்.


செல்லம்..கேக் வச்சிட்டு ரெடியா இருக்கேன்..சீக்கிர‌ம் வ‌ந்து க‌ட் ப‌ண்ணு ....ஓடிவா

ச‌க்தி அக்கா இந்த‌ சாக்லேட்ஸ் எல்லாம் ப‌த்திர‌மா குட்டி பைய‌ன் கிட்ட‌ சேத்துடுங்க‌

.

ம‌ல‌ரே...த‌மிழ்ம‌ல‌ரே!

Thursday, July 2, 2009
நான் சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் எழுதிய‌ "31622401 ம் நொடியில் உல‌க‌ம்?" என்னும் ப‌திவு "லீப் நொடி 2008ன் சிற‌ப்பு" என்னும் த‌லைப்பில் த‌மிழ்ம‌ல‌ரில் வ‌ந்துள்ளது.

இணைய‌த்தில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருக்கும் எனக்கு உண்மையிலேயே ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

த‌மிழ்ம‌ல‌ருக்கு ந‌ன்றி

இந்த‌ செய்தியை சொன்ன‌ திரு.ஜோச‌ப் பால்ராஜ்க்கு ந‌ன்றி.. ந‌ன்றி.. ந‌ன்றி

மேலும் சில‌ர‌து ப‌திவுக‌ளும் அதே ப‌க்க‌த்தில் வெளியாகியுள்ள‌து.

அவை

பெண்கள் வெட்கப்படுவது எப்போது? by ச‌ஞ்ச‌ய் காந்தி

இல‌வ‌ச‌ இணைய‌த‌ள‌ பெய‌ர் ப‌திவு by SUMAZLA/சுமஜ்லா

உண்மையான‌ ஊன்றுகோல் by நாம‌க்க‌ல் சிபி

இரவில் ரசித்து,பகலில் வரைந்தது by CHE


நர்சரி வார்த்தைகள் by செல்வராஜ் ஜெகதீசன்

‌பாம்புக்க‌டி -ப‌த‌ட்ட‌ம் வேண்டாம் by Dr.த‌.ஜீவ‌ராஜ்

லீப் நொடி 2008ன் சிற‌ப்பு-இய‌ற்கை ம‌க‌ள்

த‌மிழ்ம‌ல‌ரைப் ப‌ற்றிய‌ மேல் விவ‌ர‌ங்க‌ளுக்கு இங்கே கிளிக்க‌வும்- த‌மிழ்ம‌ல‌ர்

அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்

.

தேவை என்ன‌?

Tuesday, June 30, 2009
ச‌க்திமான் ஸ்டீல்ஸ் அவ்வூரிலேயே புக‌ழ்பெற்ற இரும்பு பொருள் த‌யாரிக்கும் தொழிற்சாலை.அத‌ன் நிறுவ‌ன‌ர் ச‌க்திவேல்.அவ்வூரின் புக‌ழ்பெற்ற விஐபி.அவர‌து குடும்ப‌த்தின் குல‌ தெய்வ‌த்தின் முன் சோக‌மே உருவாக‌ நின்றிருந்தார்.கார‌ண‌ம் ஏற‌த்தாழ‌ கால் நூற்றாண்டாக‌ ஏறுமுக‌த்திலேயே இருந்த‌ க‌ம்பெனி சில‌ ஆண்டுக‌ளாக‌ அடி வாங்குகிற‌து.த‌யாரித்த‌ பொருட்க‌ள் பாதிக்கு மேல் தேங்கி கிட‌க்கிற‌து.இத‌னால் க‌ம்பெனியின் கையிருப்பு ப‌ண‌ம் குறைந்துவிட்ட‌து. ஷேர்க‌ள் ம‌திப்பு குறைய‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து.க‌டவுளே ..ஏன் இந்த‌ சோத‌னை.க‌ம்பெனி இனிமேல் அவ்வ‌ள‌வுதானா.? வாங்கிய‌ க‌ட‌ன்க‌ளுக்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌து?.இத‌ற்குமேல் என் கையில் ஏதும் இல்லை.ஏதாவ‌து வ‌ழிகாட்டு.இல்லைன்னா வீதிக்குதான் போக‌ணும்.என‌ புல‌ம்பிக் கொண்டிருந்தார்.க‌ண்க‌ளில் க‌ண்ணீர் எட்டிப்பார்க்கும் நிலையில் இருந்த‌து.

சிறிது ஆசுவாச‌ப்ப‌டுத்திக் கொண்டு,கோயிலின் ஒரு மூலையில் அம‌ர்ந்தார்.அப்போது ஒரு பெரிய‌வ‌ர் அவ‌ரிட‌ம் வ‌ந்தார்.
த‌ம்பி! ஏதோ பிர‌ச்சினைல‌ இருக்கீங்க‌ போல‌ இருக்கு? என்கிட்ட‌ சொல்லுங்க‌.என்னால‌ ஏதாவ‌து உத‌வி ப‌ண்ண முடியுமான்னு பாக்க‌றேன்


ஐயா.. நான் ஒரு தொழில‌திப‌ர்.ச‌க்திமான் ஸ்டீல்ஸ் தொழிற்சாலை என்னோட‌துதான்.க‌ம்பெனில‌ கொஞ்ச‌ம் பிர‌ச்சினை.அத‌னால‌ க‌ட‌வுள்கிட்ட‌ முறையிட்டாலாவ‌து வ‌ழி பிற‌க்குமான்னு வ‌ந்திருக்கேன்


ஓ..அப்ப‌டியா..க‌வ‌லைப்ப‌டாதீங்க‌.க‌ட‌வுள் வ‌ழி காட்டுவார்.இப்போ உங்க‌ளுக்கு ப‌ண‌ம் தானே பிர‌ச்சினை.ப‌ண‌த்துக்கு வ‌ழி நான் செய்றேன்.இருங்க‌ என்று சொல்லிவிட்டு,எங்கேயோ போய்விட்டு,சில‌ நிமிட‌ங்க‌ளில் ஒரு "செக்"உட‌ன் வ‌ந்தார்.

இந்தாங்க‌,இதை வ‌ச்சிகிட்டு உங்க‌ பிஸின‌ஸை டெவ‌ல‌ப் ப‌ண்ணுங்க‌ என்றார்.


வாங்கிப் பார்த்தால்,அதில் 5,00,000 ரூபாய் எழுதியிருந்த‌து.இவ‌ர் ஆச்ச‌ரிய‌மாய் பார்த்தார்.

என்ன‌ பாக்க‌றீங்க‌. நான் தான் இந்த‌ ஊரின் பெரும் ப‌ண‌க்கார‌ர்க‌ளில் ஒருவ‌னான‌ சோம‌சுந்த‌ர‌ம்.என்னோட‌ ப‌ண‌த்தால‌ நீங்க‌ முன்னேறினா என‌க்கு ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்‌ ..


ஐயா..ரொம்ப‌ ந‌ன்றி. என்னோட‌ இன்றைய‌ நிலையில் இந்த‌ப் ப‌ண‌ம் நிச்ச‌ய‌மாய் என் வாழ்வை மீட்டெடுக்கும்.இந்த‌ ப‌ண‌த்தை எப்ப‌டி உங்க‌கிட்ட‌ திருப்பி த‌ர்ற‌து?

இன்னும் ஒரு வ‌ருஷ‌ம் க‌ழிச்சி இதே இட‌த்துக்கு வாங்க‌.உங‌க‌ளால‌ எவ்ளோ ப‌ண‌ம் திருப்பி த‌ர‌ முடியுமோ குடுங‌க‌..

என்று கூறி விட்டு வேக‌மாய் அவ்விட‌த்தை விட்டு அக‌ன்று விட்டார்.

குல‌தெய்வ‌மே மானிட‌ உருவில் வ‌ந்து உத‌விய‌தாய் எண்ணி ச‌க்திவேல் ம‌கிழ்ந்தார்.அச்செக்கை ப‌த்திர‌ப்ப‌டுத்திக் கொண்டார்.


ஆனால் அந்த‌ செக்கில் ப‌ண‌த்தை எடுக்காம‌ல் அவ‌ரிட‌மிருந்த‌ ப‌ண‌த்தை வைத்தே மீண்டும் தொழிலில் ப‌ழைய‌ நிலையை அடைந்தார்.அவ‌ரிட‌மிருந்த‌ அந்த‌ செக் எத்த‌கைய‌ ரிஸ்க் எடுக்க‌வும் அவ‌ருக்கு தைரிய‌த்தை அளித்த‌து. ந‌ம்மிட‌ம் 5,00,000 ரூபாய் இருக்கிற‌து என்னும் நினைவே அவ‌ருக்கு புது தெம்பை த‌ந்த‌து.


ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து,அந்த‌ப் பெரிய‌வ‌ருக்கு நான்றி சொல்ல‌ அதே கோயிலுக்கு விரைந்தார்.கையில் அப்பெரிய‌வ‌ர் கொடுத்த‌ செக் அப்ப‌டியே இருந்த‌து.


அப்பெரிய‌வ‌ர் ம‌ல‌ர்ந்த‌ முக‌த்துட‌ன் இவ‌ர‌ருகே வ‌ந்தார்.அப்போது ஒரு பெண்ம‌ணி, அந்த‌ப் பெரிய‌வ‌ரை விர‌ட்டி அடித்தார்.அவ‌ரும் ப‌ய‌ந்து ஓடி விட்டார்.

ச‌க்திவேல் ச‌ற்று கோப‌த்துட‌னே அப்பெண்ணிட‌ம் கேட்டார்.என்ன‌ம்மா ..அவ‌ரை ஏன் துர‌த்துறீங்க‌.பெரிய‌வ‌ங்கிட்ட‌ எப்ப‌டி ந‌ட‌ந்துக்க‌னும்ன்னு தெரியாதா ?அய்யா..அது ஒரு லூசுங்க‌.அஞ்சாறு வ‌ருஷ‌மா இந்த‌ ப‌க்க‌ம் சுத்திட்டு இருக்கு.‌வர்ற‌வ‌ங்க‌ போற‌வ‌ங்க‌ கிட்ட‌யெல்லாம் நான் தான் இ ந்த‌ உல‌க‌த்திலேயே பெரிய‌ ப‌ண‌க்கார‌ன்,உன‌க்கு ப‌ண‌ம் வேணும்னா சொல்லு நான் த‌ர்றேன்னு,ஒரு செக் புக்கை வேற‌ கைல‌ வ‌ச்சிகிட்டு சுத்தும். என்று கூறிவிட்டு போய்விட்டார் அப்பெண்..


ச‌க்திவேல் குழ‌ம்பிபோனார்.பின்ன‌ர்தான் புரிந்த‌து.ஓராண்டிற்குமுன் அவ‌ருக்கு தேவைப்ப‌ட்ட‌து ப‌ணம் அல்ல‌..த‌ன்ன‌ம்பிக்கை.


Note:என‌க்கு வ‌ந்த‌ ஒரு மின்ன‌ஞ்ச‌லைக் கொண்டு எழுதிய‌து.

.

தாய்மொழியில் ம‌ட்டுமே பேசுவ‌து ச‌ரியா?

Sunday, June 28, 2009
ஒரு வெளிநாட்டை சேர்ந்த‌ வ‌ர‌லாற்று ஆராய்ச்சி மாணாவ‌ர் ஒருவ‌ர் இந்தியாவைப் ப‌ற்றி ஆராய்ச்சி செய்ய‌ முடிவு செய்தார்.இ ந்தியாவைப் ப‌ற்றி அறிய‌ இந்தியா வ‌ந்தார்.வ‌ ந்திற‌ங்கிய‌து மும்பை விமான‌ நிலைய‌ம்.

மும்பைக்கு வ‌ந்த‌ அவ‌ர் நேரா போன‌து கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு..சில‌ ம‌ணி நேர‌ம் சுற்றி பார்த்து விட்டு அங்கிருந்த‌வ‌ரிட‌ம் இங்கிலீஷில் கேட்டார்."Who bulit this great structure?". (ந‌ம்ம‌ ஹிந்திகார‌ங்களைப் ப‌த்திதான் தெரியுமே..இங்கிலீஷ் தெரிஞ்சாலும் ஹிந்தில‌ தான் ப‌தில் சொல்லுவாங்க‌)..அங்கிருந்த‌வ‌ருக்கு ப‌தில் தெரிய‌ல‌..அத‌னால் அவ‌ர் சொன்னார் " ந‌ஹி மாலும் ஜி" (தெரியாதுங்க‌)..
அந்த‌ வெளிநாட்டுக்கார‌ர்..கேட் வே ஆஃப் இந்தியாவை க‌ட்டிய‌வ‌ர் பெய‌ர் " ந‌ஹி மாலும் ஜி" என‌ குறித்துக் கொண்டார்.


பின்ன‌ர் அங்கிருந்து குதுப்மினார் பார்க்க‌ போனார்.அங்கேயும் குதுப்மினாரைக் க‌ட்டியவார் பேரைக் அருகிலிருந்த‌வ‌ரிட‌ம் கேட்டார்.அங்கிருந்த‌வ‌ருக்கும் ப‌தில் தெரிய‌ல‌..அத‌னால் அவ‌ர் சொன்னார் " ந‌ஹி மாலும் ஜி" .அந்த‌ வெளிநாட்டுக்கார‌ர்..ஆஹா..இதையும் ந‌ஹி மாலும் ஜி தான் க‌ட்டினாரா..அவ‌ர் பெரிய‌ ஆள் போல‌ இருக்கே என‌ ம‌ன‌துக்குள் பாராட்டி குறித்துக் கொண்டார்.

பின்ன‌ர் அங்கிருந்து ஆக்ரா சென்றார். அங்கேயும் இதே க‌தை.அவ‌ருக்கு ஒரே ஆச்ச‌ரிய‌ம். இந்தியாவில் எவ்ளோ பெரிய‌ ம‌னித‌ர்க‌ள் எல்லாம் வாழ் ந்திருக்காங்க‌.ஒரே ம‌னித‌ர் இத்த‌னை இட‌ங்க‌ளில் இவ்ளோ பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ளையெல்லாம் க‌ட்டியிருக்க‌றாரே என‌ இந்திய‌ர்க‌ளைப் ப‌ற்றி மிக‌ உய‌ர்வாய் எண்ணினார்.


பின்ன‌ர் ஒரு நாள் காசியின் வீதிக‌ளில் போய் கொண்டிருந்தார்.அங்கே ஒரு இற‌ந்த‌ ச‌ட‌ல‌த்தை ந‌க‌ராட்சிப் ப‌ணியாளார்க‌ள் தூக்கிப் போய் கொண்டிருந்தார்க‌ள். அதைக் க‌ண்ட‌ இவ‌ர் அ ந்த‌ ந‌க‌ராட்சிப் ப‌ணியாளாரிட‌ம் கேட்டார்."Who is this?" அவ‌ர் சொன்னார்.. "ந‌ஹி மாலும் ஜி"


இவ‌ருக்கு வ‌ந்த‌தே ஆத்திர‌ம்.காச் மூச்ன்னு க‌த்திட்டு போய்ட்டார். பின்ன‌ர் அவ‌ர் ரிப்போர்ட் எழுதினார்..இந்திய‌ர்க‌ள் ந‌ன்றி கெட்ட‌வ‌ர்க‌ள். ந‌ஹி மாலும் ஜி என்ப‌வ‌ர் இந்தியாவில் ஒரு மிக‌ப்பெரிய‌ ம‌னித‌ர். ப‌ல‌ புக‌ழ்பெற்ற க‌ட்டிட‌ங்க‌ளைக் க‌ட்டிய‌வ‌ர். இந்தியாவின் புக‌ழுக்கு கார‌ண‌மான‌ ப‌ல‌ நினைவுச்சின்ன‌ங்க‌ளை எழுப்பிய‌வ‌ர். அவ‌ருக்கு யாரும் உரிய‌ ம‌ரியாதை த‌ருவ‌தில்லை.அவ‌ர‌து இறுதி ஊர்வ‌ல‌த்தில் கூட‌ யாருமே க‌ல‌ந்து கொள்ளவில்லை.இந்திய‌ர்க‌ள் மிக‌ மோச‌மான‌வ‌ர்க‌ள்..


குறிப்பு: இது சிரிக்க‌ ம‌ட்டுமே..சிந்திக்க‌ அல்ல‌....ஹி..ஹி..ஹி..
சிரிச்சிட்டு அப்ப‌டியே த‌மிழ்மண‌த்தில் ஒரு ஓட்டு போட்டுடுங்க.
இந்த க‌தையை நானும் உரையாட‌ல் போட்டிக்கு அனுப்பிட்டேனே
.

உங்க‌ள் வேலை எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌மான‌து என்ப‌தை க‌ண்ட‌றிய ஒரு குவிஸ்

Friday, June 26, 2009
நீங்க‌ செய்யும் வேலையில் இருக்கும் க‌ஷ்ட‌ங்க‌ள் உங்க‌ளுக்கு தெரியும்.எந்த‌ அள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை நீங்க‌ வேலைல‌ அனுப‌விக்க‌றீங்க‌ன்னு தெரிய‌னுமா?கீழே வ‌ரும் கேள்விக்கெல்லாம் ப‌தில் சொல்லுங்க‌.எவ்ளோ அதிக‌மான‌ கேள்விக்கு "ஆம்" ப‌தில் சொல்றீங்க‌ன்னு நோட் ப‌ண்ணிக்கோங்க‌.

உங்க‌ள் வேலைப் ப‌ளு இதை விட‌ அதிக‌மா?
ஆஃபீஸில் ஏசி,ஃபேன் அடிக்க‌டி ம‌க்க‌ர் ப‌ண்ணுதா? டெம்ப்ரேச்ச்ர் இவ‌ர்க‌ள் வேலையிட‌த்தை விட‌ அதிக‌மாய் போகுதா?
உங்க‌ ஆஃபீஸ் ரூமை ச‌ரியா ஸ்வீப்ப‌ர்ஸ் கிளீன் ப‌ண்ற‌தே இல்லையா?இதை விட‌ குப்பையாவா இருக்கு உங‌க‌ ஆஃபீஸ் ரூம்?இதில் இருக்கும் ரிஸ்க்கை விட‌வா உங்க‌ லைஃப்ல‌ ரிஸ்க் அதிக‌ம்?உங்க‌ள் பேச்சுக்கு ஆஃபீஸ்ல‌ யாரும் ச‌ரியா ரெஸ்பான்ஸ் த‌ர்றது இல்லை,இக்னோர் ப‌ண்றாங்க‌ன்னு குறைப்ப‌ட‌ரீங்க‌ளா..இ ந்த‌ சிறுமியை விட‌ அதிக‌மாவா புற‌க்க‌ணிக்கப்ப‌ட‌றீங்க‌‌?
நிச்ச‌ய‌மாய்த் தெரியும்.ஒரு கேள்விக்கும் ஆம்ன்னு ப‌தில் சொல்லி இருக்க‌மாட்டீங்க‌.


உல‌கில் எவ்ளோ ம‌க்க‌ள் ந‌ம்ம‌ளைவிட‌ தாழ்ந்த‌ நிலைல‌ இருக்காங்க‌ன்னு தெரிஞ்சிகிட்டீங்க‌ளா..க‌வ‌லைக‌ளைத் தூக்கி தூர‌ப் போட்டுட்டு வேலையை பாருங்க‌.முடிஞ்சா க‌ஷ்ட‌ப‌ட‌ற‌வ‌ங்க‌ளுக்கு ஏதாவ‌து உத‌வி ப‌ண்ண முடியுமான்னு பாருங‌க‌

என்ன‌ருகே நீ இருந்தும்.....(5)

Monday, June 22, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 4ம் ப‌குதிஇதைப் போன்ற‌ கேள்விக‌ள் எங்க‌ளைப் பார்க்கும் ப‌ல‌ரிடமிருந்தும் வ‌ந்த‌ன‌. நான் யோசிக்க‌ ஆர‌ம்பித்தேன் இதுவ‌ரை யோசித்திராத‌ புது கோண‌த்தில். இந்நாட்க‌ளில் எக்ஸாம் ஆர‌ம்பித்த‌தால் அவ‌ள் ப‌டிப்பில் பிஸி ஆகிவிட்டாள். நாங்க‌ள் ஒன்றாய் க‌ழிக்கும் நேர‌ம் மிக‌க் குறைந்த‌து.அவ‌ளை ப‌ல‌ வ‌ருடங்க‌ளாய்காணாத‌ போது இருந்த‌ வேத‌னையை விட‌க் க‌டும்வேத‌னையை உணர்ந்தேன்.இனியொரு முறை அவ‌ளைப் பிரிய‌ நேரிட்டால், அது உயிர் பிரியும் வேத‌னையைத் தான் த‌ரும் என்ப‌து நித‌ர்ச‌ன‌மாய்த் தெரிந்த‌து
ப‌ல‌ நாள் யோச‌னைக்குப் பின் ஒரு முடிவுக்கு வ‌ந்தேன்.
அம்முடிவை அவ‌ளிட‌ம் வெளிப்ப‌டுத்தினால் ஏற்ப‌டும் விளைவுக‌ள் என்ன‌ என‌ அனுமானிக்க‌ முடிய‌வில்லை..சொன்னால் கோப‌ப்ப‌டுவாளோ.. ஏத்துக்குவாளோ..கோப‌ப்ப‌ட்டால் எப்ப‌டி ச‌மாளிப்ப‌து..அவ‌ள் முக‌த்தில் எப்ப‌டி விழிப்ப‌து?
எண்ண‌ அலைக‌ள் எப்போதும் என்னைச் சூழ்ந்த‌ன‌.

அவ‌ள் தேர்வுக‌ள் முடிந்த‌ நாளும் வ‌ந்த‌து.அவ‌ள் வீடு நோக்கி விரைந்தேன்.அவ‌ளுக்கு முன் வீட்டில் இருந்தேன்.

அவ‌ள் அம்மா க‌த‌வைத் திற‌ந்தாங்க‌.

ஆன்ட்டி எப்ப‌டி இருக்கீங்க‌?


ம்ம்.. ந‌ல்லா இருக்கேன். நீ எப்ப‌டி க‌ண்ணு இருக்கே?வீட்டு ப‌க்க‌மே ஆள‌க் காணோம்?


கொஞ்ச‌ம் வேலை ஆன்ட்டி.அதான் இப்போ வ‌ந்துட்டேனே.ஜ‌ன‌னி இன்னும் வ‌ர‌லியா?

இன்னும் இல்லை..ப‌ஸ் எல்லாம் ரொம்ப‌ ர‌ஷ் ஆ இருக்கு..லேட்டா கிள‌ம்பி வ‌ர்றேன்னு இப்போதான் போன் ப‌ண்ணினா..

ஓ..அப்ப‌டியா..ச‌ரி ஆன்ட்டி.. நான் போய் அவ‌ளை கூட்டிட்டு வ‌ந்துட‌றேன்..எங்க‌ இருக்கா?

அவ‌ பிர‌ண்ட் க‌விதா வீட்ல‌.. லேட் ஆகுது.. நீ சாப்பிடு..அப்புற‌ம் போலாம்..


இல்லை ஆன்ட்டி..அவ‌ளையும் போய் கூட்டிட்டு வ‌ந்துட‌றேன் ..சேர்ந்து சாப்டுக்க‌லாம்
நீங்க‌ அவ‌ளுக்கு போன் ப‌ண்ணி காலேஜ் என்ட்ர‌ன்ஸ்க்கு வ‌ர‌ச் சொல்லிடுங்க‌

ச‌ரி..போய்ட்டு வா..

கிள‌ம்பி போய் அவ‌ளை அழைத்து வ‌ந்து சாப்பிட்டு எவ்வ‌ள‌வோ க‌தைக‌ள் பேசியும் என் எண்ணத்தை வெளிப்ப‌டுத்தும் தைரிய‌ம் இல்லாம‌லே வீட்டைவிட்டு கிள‌ம்பினேன்.

கிள‌ம்பும்போது..
ஏய்..ம‌யிலு..இன்னிக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா?

ஏன் கேக்க‌றே?

சொல்லும்மா..ஃப்ரீயா..இல்லையா?

ஃப்ரீதான்..

ச‌ரி..அப்போ ஈவினிங் ரெடியா இரு..அம்மா ப‌ர்த்டேக்கு ஒரு சாரி வாங்க‌ணும்.வ‌ந்து செல‌க்ட் ப‌ண்ணுவியாம்..


ஓ..அடுத்த‌ வார‌ம் ..ஆன்ட்டி ப‌ர்த்டே வ‌ருதில்லே...ம‌ற‌ந்திட்டேன்..ச‌ரி போலாம்..எப்போ வ‌ருவே?

Around 6...அதுக்குமேல‌ லேட்டா போனா அங்கிள் கிட்ட‌ உதைதான் விழும்...

ஒகே..I will be waiting for you


அப்போது தெரிய‌வில்லை என‌க்கு என் எண்ண‌த்தை வெளிப்ப‌டுத்தும் தைரிய‌ம் ஈவினிங் வ‌ரும் என்று

((இந்த‌ ப‌குதி ஒரு மீள் ப‌திவு))
(தொட‌ரும்)

.

மெடிக்க‌ல்,எஞ்சினிய‌ரிங் சேர்க்கை ந‌ட‌ப்ப‌து என்ன‌?

Sunday, June 21, 2009
இன்றைய‌ தேதில‌ ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ள் எல்லாரோட‌ குறிக்கோளாவும் இருக்க‌ற‌து தொழிற்க‌ல்வி.
அதாவ‌து மெடிக்க‌ல் அல்ல‌து எஞ்சினிய‌ரிங்.இக்க‌ல்லூரிக‌ளில் சேர்வ‌தென்ப‌து க‌ட்ஆஃப் முத‌ல் க‌வுன்சிலிங் வ‌ரை ப‌ல‌ நிலைக‌ளை உள்ளட‌க்கியுள்ள‌து.அதெல்லாம் என்ன‌ என்ன‌ன்னு சொல்றேன்.தெரியாத‌வ‌ங்க‌ தெரிஞ்சிக்க‌..தெரிஞ்ச‌வ‌ங்க‌ த‌ப்பு ஏதும் இருந்தா பின்னூட்ட‌த்துல‌ சொல்லுங்க‌.

எக்ஸாம் எழுதும்போதே நாம‌ எப்ப‌டி எழுதி இருக்கோம் எவ்ளோ மார்க் வ‌ரும்ன்னு ஓர‌ள‌வுக்கு தெரிஞ்சிடும்.உட‌னே நாம் முடிவு ப‌ண்ண‌வேண்டிய‌து, ரிச‌ல்ட்க்காக‌ காத்திருந்து, வ‌ர்ற‌ மார்க்குக்கு ஏத்த‌ கோர்ஸ்ல‌ க‌வ‌ர்மெண்ட் கோட்டால‌ சேர‌ப்போரோமா இல்ல‌ மானேஜ்மெண்ட் கோட்டால‌ ந‌ம‌க்கு விருப்ப‌மான‌ க‌ல்லூரில‌ சேர‌ப்பொறோமான்னுதான்.
மானேஜ்மெண்ட் கோட்டான்னு முடிவு ப‌ண்ணிட்டீங்க‌ன்னா, எதைப்ப‌த்தியும் க‌வ‌லைப்ப‌டாம‌ நீங்க‌ விரும்ப‌ற‌ காலேஜ‌ சீக்கிர‌ம் அப்ரோச் ப‌ண்ணி அட்மிஷ‌ன் வாங்கிகோங்க‌.லேட் ப‌ண்ணினீங்க‌ன்னா,டிமாண்ட் அதிக‌மாகி கேபிடேஷ‌ன் ஃபீஸ் அதிக‌மானாலும் ஆக‌லாம்.

க‌வ‌ர்மெண்ட் கோட்டான்னு முடிவு ப‌ண்ணா,
1. ரிச‌ல்ட் வ‌ர்ற‌ வ‌ரை வெய்ட் ப‌ண்ணிடிருங்க‌.
2. நீங்க‌ விரும்ப‌ற‌ கோர்ஸ்க்கு அப்ளிகேஷ‌ன் எப்போ கிடைக்குதுன்னு பாத்து அப்ளிகேஷ‌ன் போட்டிருங்க‌.
3.க‌ட் ஆஃப்: இப்போ தான் ஆர‌ம்பிக்குது.க‌ட் ஆஃப் கால்குலெஷ‌ன். க‌ட் ஆஃப் மார்க்கை வ‌ச்சே உங்க‌ளுக்கு எந்த‌ காலேஜ் கிடைக்கும்ன்னு ஓர‌ள‌வுக்கு தெரிஞ்சிக்க‌லாம்.


க‌ட் ஆஃப் மார்க் (எஞ்சினிய‌ரிங்)=பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,ல‌ நீங்க‌ வாங்கின‌ மார்க்கை 50 க்கு க‌ன்வ‌ர்ட் ப‌ண்ணிகோங்க‌.


மாத்ஸ் மார்க்கை 100க்கு க‌ன்வ‌ர்ட் ப‌ண்ணிகோங்க‌. இ ந்த‌ ரெண்டோட‌ கூட்ட‌ல் தான் க‌ட் ஆஃப் மார்க் எஞ்சினிய‌ரிங் சேர்க்கைக்கு.

இதே ம‌ருத்துவ‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ப‌டிப்புன்னா

பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,ல‌ நீங்க‌ வாங்கின‌ மார்க்கை 50 க்கு க‌ன்வ‌ர்ட் ப‌ண்ணிகோங்க‌.

ப‌யால‌ஜி மார்க்கை 100க்கு க‌ன்வ‌ர்ட் ப‌ண்ணிகோங்க‌. இந்த‌ ரெண்டோட‌ கூட்ட‌ல் தான் க‌ட் ஆஃப் மார்க் ம‌ருத்துவ‌ம் சார்ந்த‌ ப‌டிப்பு சேர்க்கைக்கு.

இ ந்த‌ ஸ்டேஜ்க்கு அப்புற‌ம் ம‌ருத்துவ‌ம்,பொறியிய‌ல் சேர்க்கைக்கு வ‌ழிமுறைக‌ள் ஒரே மாதிரிதான்.

4.ரேங்க் லிஸ்ட்: வ‌ர்ற‌ அப்ளிகேஷ‌ன்ஸ வ‌ச்சி, மருத்துவ‌ம்,பொறியிய‌ல் ரெண்டுக்கும் த‌னித் த‌னி ரேங்க் லிஸ்ட் போடுவாங்க‌.


அப்ளை ப‌ண்ண‌துல‌ ப‌ல‌ மாண‌வ‌ர்க‌ள் ஒரே மார்க் வாங்கி இருந்தா அவ‌ங்க‌ளோட‌ பிற‌ பாட‌ ம‌திப்பெண்க‌ள்,பிற‌ந்த‌தேதி(மூத்த‌வ‌ருக்கே முன்னுரிமை)இதை வச்சி லிஸ்ட் போடுவாங்க‌.

இதில‌யும் ஒரே மாதிரி வ‌ர்ற‌வ‌ங்க‌ளுக்கு க‌ம்ப்யூட்ட‌ர் வச்சி ரேண்ட‌ம் ந‌ம்ப‌ர் அலாட் ப‌ண்ணுவாங்க‌.
இதையெல்லாம் வ‌ச்சிதான் ரேங்க் லிஸ்ட் போடுவாங்க‌.இந்த‌ லிஸ்ட்ப‌டிதான் க‌வுன்சிலிங் கூப்பிடுவாங்க‌.


5.க‌வுன்சிலிங்: க‌வுன்சிலிங்ல‌ நீங்க‌ ஹால்க்குள்ள‌ வெளில‌யே அன்றைய‌ சீட்க‌ளின் நிலை டிஸ்பிளே ப‌ண்ணீருப்பாங்க.
க‌வுன்சிலிங் ஹாலுக்குள்ள‌ மாண‌வ‌ர் கூட‌ யாராவ‌து(பேர‌ண்ட்(அ)கார்டிய‌ன்)ஒருத்த‌ரைத்தான் அனும‌திப்பாங்க‌.
நீங்க‌ உள்ள போன‌ உட‌னே,எந்த‌ க‌ல்லூரிக‌ள்ல‌ எந்த‌ துறைல‌ சீட் இருக்குங்க‌ற‌ விவ‌ர‌ம் க‌ம்ப்யூட்ட‌ர்ல‌ காட்டுவாங்க‌. அதுல‌ உங்க‌கிட்ட‌ 3 ஆப்ஷ‌ன் கேப்பாங்க‌.உங்க‌ளை அலாட்மெண்ட் டேபுள்க்கு அனுப்புவாங்க‌

அங்க‌ நீங்க‌ த‌ந்த‌ 3 ஆப்ஷ‌ன்ல‌ எது அவெய்ல‌பில் ஆ இருக்கோ அந்த‌ சீட் உங்க‌ளுக்கு அலாட் ப‌ண்ணி ஆர்ட‌ர் த‌ந்திடுவாங்க‌..
அப்புற‌ம் என்ன‌..ஜாலியா கிள‌ம்பிபோய் காலேஜ்ல‌ க‌ல‌க்க‌ வேண்டிய‌துதான்

என்ன‌ருகே நீ இருந்தும்...(4)

Tuesday, June 9, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 3ம் ப‌குதி

நாட்க‌ள் உருண்ட‌ன‌.அவ‌ர்க‌ள் வீடு என‌து ம‌ருத்துவ‌ம‌னைக்கு அருகிலேயே இருந்த‌தால் நான் என் ரூமிற்குப் போவ‌தென்ப‌தே அரிதான‌து.இருவ‌ரும் சேர்ந்து சமைப்ப‌து,வீட்டை சுத்த‌ப்ப‌டுத்துவ‌து என‌ விடுமுறைக‌ளில் வீட்டையே இர‌ணக‌ள‌ப்படுத்திக் கொண்டிருந்தோம்.

என‌க்குப் பெண் தேட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.என‌க்கென்ன‌வோ அதில் ஒரு இன்ட்ரெஸ்ட் வ‌ர‌வில்லை.எத்தனையோ வ‌ர‌ன்க‌ள்,ஜாத‌கங்க‌ள்,போட்டோக்க‌ள்.என் அப்பாவின் அபார‌ ஜோதிட‌ ந‌ம்பிக்கையை பூர்த்தி செய்யும் ஜாதக‌ம் கிடைப்ப‌து குதிரை கொம்பான‌து.என‌க்கென்ன‌மோ ஜாலியாய்தான் இருந்த‌து. போட்டோவில் finalise செய்யும் வேலையை என் அம்மா ம‌யிலிட‌ம் கொடுத்தார்.என் அப்பா ஒன்றிர‌ண்டு ஜாத‌க‌ங்க‌ள் சேர்வ‌தாய்ச் சொன்னால் , அந்த‌ பெண்க‌ளின் போட்டோக‌ளில் இவ‌ள் திருப்திப்ப‌ட‌வில்லை.

ஜெம்மு..உன‌க்கு ஏத்த‌ மேட்ச் இல்ல‌ப்பா..இந்த‌ பொண்ணு..வேணாம்..


அடிப்பாவி..நீயும் எங்க‌ப்பாவும் சேர்ந்தா என‌க்கு டைர‌க்டா அறுப‌தாம் க‌ல்யாண‌ம்தான்

அலையாத‌ப்பா..அப்பா,அம்மா முன்னாடி interest இல்லைங்கிற‌து..அப்புற‌ம் த‌னியா அலைய‌ற‌து..ச‌ரியான‌ அல்ப‌ம்ஸ் நீ

நீ தாண்டி அல்ப‌ம்..உன‌க்கு க‌ல்யாண‌ம் ஆக‌ற‌ வ‌ரைக்கும் என‌க்கும் ஆக‌க்கூடாதுன்னு ம‌ன‌சில‌ ஏதும் பிளான் வ‌ச்சிருக்கியா சொல்லிடு..உன‌க்கும் மாப்பிள்ளை பாக்க‌ சொல்றேன்..அதுக்காக‌ என் வாழ்கைல‌ வெளையாட‌த‌..

டேய்..போடா லூசு..என‌க்கு எப்போ மாப்பிள்ளை பாக்க‌ சொல்ல‌னுன்னு என‌க்கு தெரியும்.. நீ ஒண்ணும் ரெக‌ம‌ண்ட் ப‌ண்ண‌ வேணாம்..இரு..இப்போவே ஊருக்கு போன் ப‌ண்ணி ஆன்ட்டிகிட்ட‌ நீ எவ்ளோ பெரிய அலைஞ்சான்னு சொல்றேன்

இப்போ ம‌ட்டும் போன் ப‌ண்ணிண‌ ....அப்புற‌ம் ந‌ட‌க்க‌ற‌தே வேற

அடுத்த‌ ச‌ண்டை ஆர‌ம்பித்த‌து.
இப்ப‌டியே நொடிக்கொரு ச‌ண்டையும், ம‌ணிக்கொரு அடித‌டியுமாய் நாட்க‌ள் ந‌க‌ர் ந்த‌ன‌..


நான் அப்பா அம்மாவைப் பார்க்க‌ ஊருக்கு போவ‌து குறைந்து அவ‌ர்க‌ள் இங்கு வ‌ருவ‌து அதிக‌ரித்த‌து

ஒருமுறை ஊருக்கு வ‌ ந்த‌ அம்மாவிட‌ம் கேட்டேன்.
ஏம்மா..இப்ப‌டி இவ‌ கைல‌ என் த‌லைவிதியை எழுத‌ வைக்கிறே..

உன்னோட‌ டேஸ்ட் எங்க‌ளை விட‌ ஜ‌ன‌னிக்குத் தெரியுண்டா..அத‌னால‌தான்..அவ‌ selection எப்ப‌வுமே ச‌ரியாருக்கும்.

என்ன‌மோ போம்மா..இதை வ‌ச்சிகிட்டு அவ‌ ப‌ண்ர‌ அலும்பு தாங்க‌ல‌

ஏங்க‌ண்ணு..ஒண்ணு கேட்டா கோச்சிக்க‌ மாட்ட‌யே?


என்ன‌ம்மா? சொல்லு..என்ன‌மோ ஏங்கிட்ட‌ ப‌ய‌ ந்து ந‌டுங்க‌றா மாதிரி பில்ட‌ப் குடுக்க‌றே..

இல்லாடா... உன் ம‌ன‌சில‌ ஜ‌னனி ப‌த்தி ஏதாவ‌து நென‌ப்பு வ‌ச்சிருக்கியா?


அப்ப‌டில்லாம் இல்ல‌ம்மா..உன் ம‌ன‌சில‌ ஏதாவ‌து நென‌ப்பு இரு ந்தா அதுக்கு என் த‌லையை உருட்டாத‌..ஆமா..ஏன் திடீர்னு இப்பிடி கேக்கிறே?

இல்ல‌ க‌ண்ணு...பொண்ணு பாக்க‌ற‌துல‌ ஒரு இன்ட்ரெஸ்டே காமிக்க‌ மாட்டீங்கிறியே ..அதான் கேட்டேன்.என் ம‌ன‌சில‌ என்ன‌ நென‌ப்பு இரு ந்து என்ன‌டா ப‌ண்ற‌து..அதான் உங்க‌ ரெண்டு பேரு ஜாத‌க‌மும் ஒத்து போல‌யே:‍(

யாரு ஜாத‌க‌ம்மா? ஜ‌ன‌னியோட‌தா? பாத்தீங்க‌ளா..

ஆமா க‌ண்ணு..உன‌க்கு பொண்ணு பாக்க‌ ஆர‌ம்பிச்ச‌தே மொத‌ மொத‌ பாத்த‌தே அவ‌ ஜாத‌க‌ந்தான்..என்ன‌ ப‌ண்ற‌து..ஒத்து போல‌..

அப்பாடா.தேங்க் காட்..இல்ல‌ன்னா அந்த‌ ராட்ஷ‌சிகிட்ட‌ சிக்கி இருப்பேனா...

டேய் ..சும்மா பேசாத‌..அவ‌ ரொம்ப‌ ந‌ல்ல‌ புள்ளைடா..உன்மேல‌ உசுரையே வ‌ச்சிருக்கா

ஆமா...ஏற்க‌ன‌வே திமிர்புடிச்சி ஆட‌றா. நீ வேற‌ ஏத்தி விடாத‌ அவ‌ளை.போம்மா..போய் வேலையைப் பாரு..

அம்மாவின் முக‌த்தில் சிறு வ‌ருத்த‌த்தை க‌ண்டேன்
ஒரு நாள் அங்கிளும்,ஆன்ட்டியும் ஊருக்குப் போய்விட‌ த‌னியாய் இருக்க‌ ப‌ய‌ந்து,ப‌க்க‌த்திலேயே இருந்த‌ அவ‌ள் சித்த‌ப்பா வீட்டிற்கும் போக‌ ம‌றுத்து, நைட் டியூட்டிக்கு ஹாஸ்பிட‌ல் போக‌ இருந்த‌ என்னுட‌ன் ஒட்டிக் கொண்டாள்.


அன்று இர‌வு ஹாஸ்பிட‌ல் முழுக்க‌ அவ‌ள் ராஜ்ஜிய‌ம்தான்.சீரிய‌ஸ் ஆன‌ கேஸ் எதுவும் ஹாஸ்பிட‌லில் இல்லாத‌தால் எல்லோருக்கும் ஜாலியாக‌வே போன‌து பொழுது.அன்றிலிருந்து என் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரும் அவ‌ளுக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் ஆயின‌ர்.

ஒரு நாள் என் ந‌ண்ப‌ன் கேச‌வ்சொன்னான்...

ராஜ்.. நீயும் ஜ‌ன‌னியும் made for each other மாதிரி இருக்கீங்க‌ப்பா..பேசாம‌ அவ‌ங்க‌ளையே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம் இல்ல‌..


இல்ல‌ கேச‌வ்.அப்ப‌டி ஏதும் எங்க‌ளுக்குள்ள இல்லை..

இதுவ‌ரைக்கும் இல்லாட்டி என்ன‌..யோசிச்சிபாரு.. இதுக்கு உங்க‌ வீடுக‌ள்ல‌யும் எந்த‌ பிர‌ச்சினையும் வ‌ராது..வேற‌ஏதோ ஒரு பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ணினா அந்த‌ பொண்ணு உங்க‌ளை புரிஞ்சிக்குமா? இந்த‌ ரிலெஷ‌ன்ஷிப் க‌ன்டினியூ ப‌ண்ண முடியுமா?

No கேச‌வ்.No more discussions regarding this pls.

ok pa..sorry if i am wrong..

its ok..leave it..lets go for a coffee now:-)
என‌ அவ‌ன் வாயை அடைத்தேன்

என்ன‌ருகே நீ இருந்தும் 5ம் ப‌குதி(தொட‌ரும்)
.

என்ன‌ருகே நீ இருந்தும்...(3)

Sunday, June 7, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 2ம் ப‌குதி

அவ‌ள் என் பார்வையில் ப‌டும்ப‌டியான‌ ஒரு இட‌த்தில் அம‌ர்ந்தேன்.அவ‌ளிட‌ம் போய் எப்ப‌டிப் பேச‌லாம் என ம‌ன‌துக்குள் ஒத்திகை பார்த்த‌ நேர‌ம்..வந்தார்..கேண்டீன் முத‌லாளி ..

வ‌ண‌க்க‌ம் டாக்ட‌ர்...நைட் டூயுட்டிங்க‌ளா? இங்கியே வ‌ந்திட்டீங்க‌?ரூம் ச‌ர்வீஸ் சொல்ல‌லிங்க‌ளா.?.

ஓ..வ‌ண‌க்க‌ங்க‌..வீட்டுக்கு கிள‌ம்பிட்டேன்‌..அப்ப‌டியே சாப்ர‌லாம்ன்னு வ‌ந்தேன்

ச‌ந்தோஷ‌ங்க‌..என்ன‌ சாப்ட‌ரீங்க‌..

ஊத்த‌ப்ப‌ம் கொண்டுவ‌ர‌ச் சொல்லுங்க‌..

ச‌ரிங்க‌ .. என‌ ஒரு வ‌ழியாய் ந‌க‌ர்ந்தார் அவ‌ர்.

வ‌ந்த‌ ஊத்த‌ப்ப‌த்தில் ஒரு சிறு ப‌குதியைப் எடுத்து சாம்பாரில் தோய்த்து த‌னியாக வைத்தேன்.அது ஜ‌ன‌னியின் ப‌ங்கு.இது நாங்க‌ள் இருவ‌ரும் சிறுவ‌ய‌தில் ப‌ழ‌கிய‌ ப‌ழ‌க்க‌ம். நான் அவ‌ளுக்கும்,அவ‌ள் என‌க்குமான ப‌ங்கை சாப்பிடும்முன் எடுத்து வைப்ப‌து அந்த‌ ப‌ழ‌க்க‌ம் இன்று வ‌ரை என்னில் தொட‌ர்கிற‌து.இந்த‌ ப‌ழ‌க்க‌த்தால் ந‌ண்ப‌ர்க‌ளிடையே எவ்வ‌ள‌வோ முறை சிக்கி சின்னாபின்ன‌ப்ப‌ட்டிருக்கேன்.ஆனாலும் ப‌ழ‌க்க‌த்தை விட‌வில்லை.

இப்போது என்னில் ஒரு ஆவ‌ல்.அவ‌ளும் அந்த‌ ப‌ழ‌க்க‌த்தை வைத்திருக்கிறாளா என்று.... அவ‌ள் த‌ட்டைப் பார்த்தேன்.அங்கேயும் அதே போல் ஒரு துண்டு ச‌ப்பாத்தி த‌னியாக‌ இருந்த‌து.
ம‌ன‌ம் ஆன‌ந்த‌க் கூத்தாடிய‌து.ச‌ந்தோஷ‌த்துட‌னே சாப்பிட்டு முடித்தேன்.

அத‌ற்குள் அவ‌ள் கேண்டீனை விட்டுக் கிள‌ம்பிவிட்டாள்.கேண்டீன் வெளியே நின்று தொலைபேசிக் கொண்டிருந்தாள்.பேசி முடித்துவிட்டு ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தாள்.

Excuse me Miss.Janani என்றேன். நின்றாள்.திரும்பினாள்.Yes Doctor என்றாள்

உங்க‌ பேர் ம‌யிலுதானே என்றேன்.
(அது அவ‌ளை நான் ம‌ட்டும் கூப்பிடும் பேர். )

க‌ண்க‌ள் விரிய‌, சிரித்துக் கொண்டே ..அப்போ நீங்க‌ பாண்டிய‌னா? அட‌ச்சே..GEMஆ?
(GEM-இது அவ‌ள் என்னைத் திட்டும் பெய‌ர் (Ginger Eating Monkey))

அப்பா காலைல‌யே சொன்னாங்க‌ நீங்க‌ இங்க‌தான் இருக்கீங்க‌ன்னு.. நான் எப்போ பாப்போம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்..என‌ துள்ளிக் குதித்தாள்.

உன்னைப் பார்ப்பேனான்னு இருந்தேன் ம‌யிலு.10 years க்கு மேல‌ ஆச்சு நாம‌ பார்த்து.ம்ம்ம்..Now i am very very happy ...ச‌ரி அங்கிள் எங்க‌? என்றேன்.

அப்பா,சித்த‌ப்பா வீட்ல‌ இருக்காங்க‌.என‌க்கு அம்மாவை விட்டுட்டு இருக்க‌ முடிய‌ல‌..அத‌னால‌ நான் ICUல‌யே இருந்துக்கறேன்னு சொல்லிட்டு வ‌ ந்துட்டேன்.

பேசிக்கொண்டே ICU- Doctors Roomக்கு வ‌ந்தோம்.

வா GEM.போய் அம்மாவை பாக்க‌லாம்.

நான் இப்போதான் aunty condition check ப‌ண்ணிட்டு வ‌ந்தேன்.She is improving.

oh..Thanks.நான் போய் பாத்துட்டு வ‌ரேன் இரு .

அவ‌ள் சீஃப்ன் relative என்ப‌தால் த‌டுப்ப‌வ‌ர் எவ‌ருமில்லாம‌ல் ICU.வினுள் நுழைந்தாள்.

திரும்பி வ‌ந்த‌ அவ‌ள் முக‌த்தில் என்னைக் க‌ண்ட‌போதிருந்த உற்சாக‌ம் மிஸ்ஸிங்.

என்ன‌ம்மா ஆச்சு? ஏன் ட‌ல் ஆயிட்டே?

ஒண்ணும் இல்லை ..அம்மாவை இப்ப‌டி பாக்க க‌ஷ்ட‌மாயிருக்கு..

it's ok ...nothing serious .we are here na..நான் பாத்துக்க‌றேன்

என‌ ஆர‌ம்பித்த‌ எங்க‌ள் உரையாட‌ல்.. நாங்க‌ள் meet ப‌ண்ணியிருக்காத‌ அந்த‌ 10 வ‌ருட‌ங்க‌ளையும் உள்ளட‌க்கிய‌து.
காலை 6 ம‌ணிக்கு வீட்டிலிருந்து அவ‌ளுக்கு கார் வ‌ந்த‌பின் தான் நாங்க‌ள் கால‌த்தை உண‌ர் ந்தோம்.

அவ‌ள் வீட்டிற்கு கிள‌ம்பினாள். நான் சில‌ ச‌ர்ஜ‌ரிக்க‌ள் இருந்த‌தால் அங்கேயே refresh செய்து கொண்டு என் அன்றைய‌ ப‌ணியை ஆர‌ம்பித்தேன்.

அடுத்த‌ நாள் ஆன்ட்டி ICUலிருந்து ரூமுக்கு மாற்றப்ப‌ட்டார்.ஜ‌ன‌னியும் அங்கிளும் ஹாஸ்பிட‌லிலேயே த‌ங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.டியூட்டி இல்லாத‌ என் நேர‌ம் அனைத்தும் அவ‌ர்க‌ளுக்காய் ஆன‌து. எங்க‌ள் விட்டுப் போன‌ ந‌ட்பு, மீண்டும் துளிர் விட்ட‌து.

ஆன்ட்டி discharge ஆகி சில‌ வார‌ங்க‌ளில் அங்கிளுக்கு நான் இருந்த‌ ஊருக்கே மாறுத‌ல் வ‌ந்த‌து.அவ‌ளும் அதே ஊரில் முதுநிலைப் ப‌டிப்பில் சேர்ந்தாள்.

(தொட‌ரும்)
என்ன‌ருகே நீ இருந்தும் 4ம் ப‌குதி
.

என்ன‌ருகே நீ இருந்தும்...(2)

Friday, June 5, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் முத‌ல் ப‌குதி


சிஸ்ட‌ர்..இவ‌ங்க‌ கூட‌ வ‌ந்த‌வ‌ங்க‌ எங்க‌?இங்க‌ கூட்டிட்டு வாங்க‌..
ப‌ட‌ப‌ட‌ப்பான‌ சில‌ நிமிட‌ங்க‌ளுக்குப்பின்..

சார்..அவ‌ங்க‌ சீஃப் ரூம்ல‌ இருக்காங்க‌ என‌ ப‌தில் வ‌ந்த‌து..
oh..ok..நான் சீஃப் ரூம் வ‌ரைக்கும் போய்ட்டு வ‌ரேன்.தியேட்ட‌ருக்கு இன்ஃபார்ம் ப‌ண்ணீ கேஸ் ரெடி ப‌ண்ண‌ சொல்லுங்க‌.
சீஃப் ரூமிற்குள் நுழைந்தால்..
.. வாங்க‌ ராஜ்.Meet my brother Mr.Srinivasan.அங்கிருந்த‌வ‌ர் ப‌க்க‌ம் திரும்பி..
அண்ணா..இவ‌ர்தான் Dr.ராஜேஸ்வ‌ர‌ன்.ந‌ம்ம‌ ஹாஸ்பிட‌லோட‌ young and energetic chap.
என் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ரைப் பார்க்க‌ இன்ப‌ அதிர்ச்சி
சார்.. அங்கிளை என‌க்கு இன்ட்ர‌ட்யூஸ் ப‌ண்ண‌னுமா? அங்கிள்..என்னைத் தெரிய‌லியா.. பாண்டிய‌ன் அங்கிள் நான்..ஆன்ட்டியை ஐசியுவில‌ பாத்த‌தும் உங்க‌ளைத் தேடிட்டுதான் ஓடி வ‌ந்தேன்.
பாண்டியா...எப்ப‌டி க‌ண்ணு இருக்கே ..ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மா இருக்குப்பா உன்னைப் பார்க்க‌..அப்பா அம்மால்லாம் ந‌ல்லா இருக்காங்க‌ளா...
(பாண்டிய‌ன் என்ப‌து என் வீட்டில் கூப்பிடும் பெய‌ர்)

ம்ம்..எல்லாம் ந‌ல்லா இருக்காங்க‌ அங்கிள்.

ஓஓ... ரெண்டுபேரும் ஏற்க‌ன‌வே தெரிஞ்ச‌வ‌ங்க‌ளா...ச‌ந்தோஷ‌ம்.ச‌ரி அண்ணா..ஜ‌ன‌னி எங்கே?.என்ற‌து சீஃப் இன் குரல்..
வெளில‌தான் இருக்கா..ரிஷ‌ப்ஷ‌ன்ல‌ உக்காந்திருக்கா..பாவ‌ம் பொண்ணு ரொம்ப‌ சோர்ந்து போச்சி.. நான் தான் அம்மாவை வ‌ர‌ச்சொல்லி ஆக்ஸிடெண்ட்ல‌ மாட்டி விட்டுட்டேன்னு பொல‌ம்பிட்டு இருக்கா..

oh..so Sad ..அது என்ன ப‌ண்ணும் பாவ‌ம்..அவ‌ளை ஏன் அண்ணா த‌னியா விட்டீங்க‌..இருங்க‌ உள்ள கூப்பிட‌லாம்....
சிஸ்ட‌ர்... ஜ‌ன‌னின்னு ஒரு பொண்ணு ரிஷ‌ப்ஷ‌ன்ல‌ இருக்கும் கூட்டிட்டு வாம்மா..
அனைவ‌ரும் ஜ‌ன‌னிக்காய் காத்திருக்க‌...நானும் என் செல்ல‌ தேவ‌தையைக் காணும் சந்தோஷ‌த் த‌விப்பில் வினாடிக‌ளை விழுங்க‌
வேக‌மாய் திற‌ந்த‌ க‌த‌வினுள் அவ‌ச‌ர‌மாய் நுழைந்த ந‌ர்ஸ்..டாக்ட‌ர்..ஐசியு 2 ல‌ 5th bed patient க்கு திரும்ப‌ pain வ‌ந்திருச்சி..என‌ப் ப‌தைக்க‌,நான் இன்ட‌ர்ன‌ல் வே வ‌ழியா ஐசியுவுக்கு விரைய‌,வெளிக்க‌த‌வைத் திற‌ந்து என் தேவ‌தை சீஃப் ரூமினுள் பிர‌வேசிக்கிறாள்.
ஹ்ம்ம்ம்ம்..ஜ‌ன‌னியைக் காணாம‌லே என் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ நிமிட‌ங்க‌ள் ஆர‌ம்பித்த‌ன‌.
ஐசியு,ச‌ர்ஜ‌ரி என‌ என் ம‌ணித்துளிக‌ள் ம‌ர‌ணித்தாலும் ம‌ன‌தை நிறைத்த‌ என் ம‌யில்தேவ‌தையை ம‌றுக்க‌முடிய‌வில்லை:-(
என‌க்காய்ச் சில‌ நிமிட‌ம் கூட‌ இல்லாம‌ல் என்ன‌ வாழ்க்கை என‌ என்றுமில்லாச் ச‌லிப்பு என் தொழில்மீதே வ‌ந்த‌து.ஆனாலும் வேறுவ‌ழியின்றி.. ச‌ர்ஜ‌ன்ஸ் மீட்டிங்கிற்கு சீஃப் டாக்ட‌ருட‌ன் கிளம்பிய‌ நேர‌ம்,சீஃப் டாக்ட‌ரின் காரிலிருந்து காலையில் என் ம‌ன‌தைக் க‌லைத்த‌ பெண் இற‌ங்கிச் சென்றாள்.

அப்போ..அதுதான் ஜ‌ன‌னியா.. என் ம‌யில்குட்டியா!!!! ப‌ழைய‌ ந‌ட்பும்,அன்பும்தான் என்னைத் த‌டுமாற‌ வைத்த‌தா??

சார் ஜ‌ன‌னிதானே அது..ஆவ‌லை அட‌க்க‌ முடியாம‌ல் சீஃப் இட‌மே கேட்டுவிட்டேன்..
அவ‌ர், ஆமாம் ராஜ்..உங்க‌ளுக்கு அடையாள‌ம் தெரிய‌லையா...சின்ன‌ப் பொண்ணுல‌ பார்த்த‌தோ.கா‌லைல‌ருந்து இன்னும் அதுகிட்ட‌ பேச‌லையா...அண்ணா உங்க‌ ஃப்ர‌ண்ட்ஷிப் ப‌த்தி சொன்னார்.திக் ஃப்ர‌ண்ஸாமே..பிரிய‌வே மாட்டீங்க‌ளாம்..

ஆமாம் சார்..காலைல‌ இருந்து வ‌ந்த‌ கிரிடிக‌ல் கேஸ்க‌ளால பேச‌க்கூட‌முடியாம‌ போச்சு :-(.

anyway my dear boy..you should spare time for such important things.ஒரு டாக்ட‌ர்க்கு எந்த‌ அள‌வுக்கு profession முக்கிய‌மோ அதே அள‌வுக்கு personal lifeம் முக்கிய‌ம்..இல்லைன்னா லைஃப்ல‌ ஒரு ச‌லிப்பு வ‌ந்திடும்

ok sir.I will follow your advice.Now we have reached the meeting hall..

மீட்டிங் முடிந்து இர‌வு உட‌ல் ஓய்வைக் கேட்டாலும்,ம‌ன‌ம் ஆன்ட்டியின் உட‌ல் நிலையை ப‌ரிசோதிக்க‌ சொல்லிய‌து..ஓர‌த்தில் ஜ‌ன‌னியை ச‌ந்திக்கும் சாத்திய‌க்கூறுக‌ளையும் ஆராய்ந்த‌து.

so again back to hospital.

ஆன்ட்டியின் க‌ண்டிஷ‌ன் பார்த்து திருப்திய‌டைந்த‌ வேளையில்,கைபேசி ஒலித்த‌து.
அறை ந‌ண்ப‌னின் SMS
Cooking women didn't come today.Have dinner outside.
என்ற‌து.

ok.என‌ ரிப்ளை செய்துவிட்டு கேண்டீன் நோக்கி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினேன்
கேண்டீனில் மிக‌ச்சில‌ரே இருந்த‌ன‌ர்.அங்கே த‌னியாய் சோக‌மே உருவாய் அம‌ர்ந்திருந்தாள் ஜ‌னனி.
(தொட‌ரும்)

என்ன‌ருகே நீ இருந்தும் 3ம் ப‌குதி

.

என்ன‌ருகே நீ இருந்தும்...

Wednesday, June 3, 2009
"காத‌ல் வ‌ந்தால் சொல்லிய‌னுப்பு

உயிரோடிருந்தால் வ‌ருகிறேன்"


காரின் ஸ்பீக்க‌ரிலிருந்து க‌சியும் என் ஃபேவ‌ரிட் பாட‌ல் எப்போதும் போல‌ ம‌ன‌தை ம‌ய‌க்க‌ காரைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.இந்த‌ பாட்டு ரிலீஸ் ஆன‌துல‌ இருந்து ஒரு 100 முறையாவ‌து கேட்டிருப்பேன்.ஆனாலும் ச‌லிக்க‌வில்லை.பாட்டு முடிய‌ற‌துக்குள்ள‌ என்னைப் ப‌த்தி ஒரு ரீகேப் பாருங்க‌.

நான்.. ந‌க‌ரின் புக‌ழ் பெற்ற‌ ஒரு ஹாஸ்பிட‌லின் டாக்ட‌ர்.போன‌ வ‌ருட‌ம் தான் மருத்துவ‌ மேல் ப‌டிப்பை இங்கிலாந்தின் புக‌ழ்பெற்ற‌ க‌ல்லூரியில் முடித்திருந்தேன்.ம‌ருத்துவ‌த்துறையில் ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌தே வாழ்நாள் சாத‌னையாய் எண்ணுப‌வ‌ன்.


ஹாஸ்பிட‌ல் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு,போய் என் சீட்டுக்கு உட‌லைக் கொடுத்து,கேஸ் ஹிஸ்ட‌ரிக்க‌ளை புர‌ட்ட‌ ஆர‌ம்பித்த நேர‌ம்,கைபேசி ஒலித்த‌து.யாராய் இருக்கும் என‌ யோச‌னையோடு எடுத்தால்...சீஃப் காலிங்..எழுத்துக்க‌ள் மின்னின‌..

குட்மார்னிங் சார்..
குட்டே ராஜ். ஹேவ் யு ரீச்டு ஹாஸ்பிட‌ல்?
யெஸ் சார்.ஜ‌ஸ்ட் ந‌வ்
ஒகே..குட்..மை க‌ஸின் பிர‌த‌ர்ஸ் வொய்ப் மெட் வித் ஏன் ஆக்ஸிடெண்ட் அன்ட் அட் கிரிட்டிக‌ல் பொசிஷ‌ன்.தே டுக் ஃப‌ர்ஸ்ட் எய்ட் அட் சேல‌ம் அன்ட் க‌மிங் டு அஸ் ஃபார் ஃபர்த‌ர் டிரிட்மெண்ட்..தே வில் ரீச் தேர் இன் 10 மினிட்ஸ்..டேக் கேர் ஆஃப் தெம்..ஐ வில் க‌ம் இன் 15 மினிட்ஸ்..
ஓகே சார்...மே ஐ நோ த‌ பேஷ‌ண்ட் நேம்?
ம்ம்ம்ம்...பார்வ‌தி ..ஹர் ஹ‌ஸ்பெண்ட் ஈஸ் சீனிவாச‌ன்.யு பி வித் தெம் டில் இ ரீச்..
ஓகே.சார்.ஐ வில் டேக் அட் மோஸ்ட் கேர்.

போனை வைத்து விட்டு இண்ட‌ர்காமில் ரிஷ‌ப்ஷ‌னைக் கூப்பிட்டு குறிப்பிட்ட‌ பேஷ‌ண்ட் வ‌ந்தால் மினி தியேட்ட‌ருக்கு கொண்டு வ‌ந்து, என‌க்குத் தெரிவிக்க‌ச் சொல்லிவிட்டு,ஜ‌ன்ன‌லில் வேடிக்கை பார்க்க‌த் தொட‌ங்கினேன்..
சில‌ நிமிட‌ங்க‌ளில் பேஷ‌ண்ட் வ‌ந்துவிட்ட‌தாய் த‌க‌வ‌ல் வ‌ர‌..மினி தியேட்ட‌ரை நோக்கி அவ‌ச‌ர‌மாய் ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன்.அப்போது ரிஷ‌ப்ஷ‌ன்,விஸிட்ட‌ர்ஸ் லான்ஜ்ல் அம‌ர்ந்திருந்த‌ ஒரு பெண் என் க‌வ‌ன‌த்தை க‌வ‌ர்ந்தாள்

எவ்வ‌ள‌வோ பேர‌ழ‌கிக‌ள் கூட‌ இன்று வ‌ரை என் க‌வ‌ன‌த்தைக் இப்ப‌டிக் க‌வ‌ர்ந்த‌தில்லை. எந்த‌ப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத‌ சாமியார் என‌ பேர் வாங்கிய‌வ‌ன் நான் ஆனால் இன்று....ஒரு நிமிட‌ம் த‌ட‌ம் மாறிய‌ சிந்தனையைத் .."அடேய்..என்னாச்சு உன‌க்கு?."..என‌ த‌லையில் த‌ட்டி நிக‌ழ்வுல‌குக்கு வ‌ந்தேன்.

பேஷ‌ண்ட் அருகில் சென்று பார்த்தால் ...அவ‌ர் ம‌ய‌க்க‌மாய் இருந்தார்.இப்போது ம‌ன‌ம் இன்னும் க‌ட்டுப்பாட்டை இழ‌ந்து குதித்தது....ம‌ன‌தைக் க‌ட்டுப்ப‌டுத்தி க‌ண்டிஷ‌ன் அன‌லைஸ் ப‌ண்றதுக்குள்ள‌ சீஃப் வ‌ ந்துட்டார்.அவ‌ரின் சிகிச்சை முறைக‌ளை க‌வ‌னித்து விட்டு,பேஷ‌ண்டை ஐசியுவிற்கு அனுப்பிவிட்டு வெளியே அந்த‌ பேஷ‌ண்டுட‌ன் வ‌ந்த‌வ‌ர்க‌ளைத் தேடினேன்


இத‌ன் தொட‌ர்ச்சியைப் ப‌டிக்க‌ இங்கே கிளிக்க‌வும்( தொட‌ரும்)

.

பொறியிய‌ல் சேர்க்கை‍ - சில‌ டிப்ஸ்

Wednesday, May 27, 2009
ப‌ள்ளி நாட்க‌ளில் பெரும்பாலான‌வ‌ர்க‌ளின் ம‌ற்றும் அவ‌ர்க‌ள் குடும்ப‌த்தின‌ரின் க‌ன‌வு தொழிற்க‌ல்வி தான்.தொழில் க‌ல்விக‌ள்ல‌ முக்கிய‌மான‌வை...மெடிக‌ல் ம‌ற்றும் எஞ்சிய‌னீரிங்தான்.சில‌ வ‌ருஷ‌ங்க‌ளா,அதிக‌ரிச்சிட்டு வ‌ர்ற‌ பொறியிய‌ல் க‌ல்லூரிக‌ளோட‌ எண்ணிக்கையைப் பார்க்கும்போது,பொறியிய‌ல் க‌ன‌வு காண்ப‌வ‌ர்க‌ளுக்கு அது எட்டாக் க‌னி அல்ல‌ என்ப‌து தெரிகிற‌து.
ஆனால் இந்த‌ அதிக‌ எண்ணிக்கையிலான‌ க‌ல்லூரிக‌ளில், எத்த‌னை க‌ல்லூரிக‌ள் த‌ரமான‌ க‌ல்வியைத் த‌ருகின்ற‌ன‌ என்ப‌து தெரிய‌வில்லை.
என‌வே க‌ல்லூரிக‌ளைத் தேர்ந்தெடுக்கும்போது நிறைய‌ அல‌சி ஆராய‌ வேண்டியிருக்கு.
க‌வ‌னத்தில் கொள்ள‌வேண்டிய‌வை சில‌:


1.க‌ல்லூரியில் கேம்ப‌ஸ் பிளேஸ்மெண்ட் இருக்குதான்னு ம‌ட்டும் பாக்காதீங்க‌.கேம்ப‌ஸ்ல‌ செல‌க்ட் ஆன‌ ஸ்டுட‌ண்ஸ் க‌ம்பெனில‌ சேர்ராங்க‌ளான்னும் பாருங்க‌. ஏன்னா,ரெக்ரூட் ப‌ண்ற‌ ப‌ல‌ க‌ம்பெனிக‌ள் கால் லெட்ட‌ரே அனுப்ப‌ற‌தில்லை. ஸ்டூட‌ண்ஸ் கால் லெட்ட‌ர்காக‌, காத்திருந்து, காத்திருந்து, பின் வேற வேலை தேட‌வேண்டிய‌ நிலைக்கு ஆளாக‌றாங்க‌.

2.ஒரு த‌ர‌மான‌ க‌ல்லூரியில் அதிக‌மா ஸ்கோப் இல்லாத‌ பிரான்ஞ் ஆ? அல்ல‌து த‌ர‌மில்லாத‌ க‌ல்லூரியில் ஸ்கோப் அதிக‌மான‌ பிரான்ஞ் ஆ ங்கிற நிலை வ‌ந்தால் க‌ல்லூரி த‌ர‌த்திற்கே முக்கிய‌த்துவ‌ம் குடுங்க‌.க‌ல்லூரி த‌ர‌மா இல்லைன்னா, ஆய்வ‌க‌மோ, நூல‌க‌மோ எந்த‌ வ‌ச‌தியும் ச‌ரியா இருக்காது.எப்பேர்ப‌ட்ட‌ பிரான்ச்ல‌ ப‌டிச்சாலும்,ஸ்ட‌ஃப் இல்லைன்னா க‌ண்டிப்பா முன்னேற‌ முடியாது.


3.கல்லூரிக‌ள்ல‌ க‌ற்பிக்க‌ற‌ முறையைப் ப‌த்தி, அங்க‌ ஏற்க‌ன‌வே ப‌டிக்க‌ற‌ மாண‌வ‌ர்க‌ள்கிட்ட‌ கேட்டு தெரிஞ்சிக்கோங்க‌.ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ற‌தை ம‌ட்டும் ஊக்குவிக்க‌ற‌ க‌ல்லூரிக‌ளை ஒதுக்கிடுங்க‌. ஏன்னா..தொழிற்க‌ல்விங்க‌ற‌து ப‌ள்ளிப்படிப்பு மாதிரி புத்த‌க‌த்துல‌ இருக்க‌ற‌தை தெரிஞ்சிக்க‌ற‌து ம‌ட்டும் அல்ல‌.அதை பிராக்டிக‌லா அப்ளை ப‌ண்ண‌வும் யோசிக்க‌ணும்.அத‌னால‌ அதிக‌மான‌ ப்ராக்டிக‌ல் ஓரிய‌ண்ட‌ட் அப்ரோச் உள்ள‌ க‌ல்லூரியைத் தேர்ந்தெடுங்க‌.

இதெல்லாம் தேவையான‌ விவ‌ர‌ங்க‌ள்.இதெல்லாம் எப்ப‌டி ந‌ம‌க்கு கிடைக்கும்ன்னு பார்த்தா,க‌ண்டிப்பா எந்த‌ க‌ல்லூரியும் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் வாயிலாக‌த் த‌ருவ‌தில்லை.அக்க‌ல்லூரியில் ப‌டிப்ப‌(த்த‌)வ‌ர்க‌ள்,வேலை செய்ப‌(த‌)வ‌ர்க‌ள் இவ‌ங்க‌ளோட‌ தொட‌ர்பு கொள்ற‌தால‌ ம‌ட்டும் தான் உண்மை விவ‌ர‌ங்க‌ள் கிடைக்கும் .
இதையெல்லாம் வ‌ச்சி தேர்ந்தெடுத்தால் போதும்.க‌ண்டிப்பா ந‌ல்ல த‌ர‌மான‌ க‌ல்லூரியில் தான் சேருவீங்க‌.சேர்ந்த‌ப்புற‌ம்..ஆஹா.. ந‌ல்ல‌ காலெஜ்ல‌ சேர்ந்தாச்சி..இனிமே லைப் ஜாலிதான்னு என்ஜாய் ப‌ண்ண ஆர‌ம்பிச்சிடாதீங்க‌.ப‌டிப்புல‌யும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் வையுங்க‌.

போன‌ வ‌ருட‌த்திற்கான‌ க‌ல்லூரிக‌ளின் க‌ட் ஆஃப் மதிப்பெண்க‌ளைத் தெரிந்து கொள்ள‌ கீழே கிளிக்குங்க‌ள்
cutoffmarks2008and2007
வாழ்க்கையில் ஜொலிக்க‌ வாழ்த்துக்க‌ள்‌

ஒரு ஸ்கூல் விய‌க்க‌ வைக்கிறது!-அதிச‌ய‌ங்க‌ள் சில‌

Tuesday, May 5, 2009
இந்த‌ ச‌ம்ம‌ர் வ‌ந்தாலே எங்க‌ அம்மா வீட்டை கிளீன் ப‌ண்றேன்னு என்கிட்ட‌ வேலை வாங்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌.இந்த‌ ப‌ழ‌க்க‌ம் ப‌ள்ளி நாட்க‌ள்ல‌ ப‌டிச்சி முடிச்ச‌ புத்த‌க‌ம், நோட்டு எல்லாம் தூக்கிப் போட‌ற‌துல‌ ஆர‌ம்பிச்ச‌து. இன்னும் விட‌ மாட்டேங்கிறாங்க‌.கிளீன் ப‌ண்ண‌ எதுவுமே இல்லைன்னாலும் ப‌ர‌ண் மேல‌ இருக்க‌றது எல்லாத்தையும் எடுத்துப் பாத்துட்டு திரும்ப‌ வைக்க‌றதுல‌ அவ‌ங்க‌ளுக்கு ஒரு ச‌ந்தோச‌ம்.அந்தப் ப‌ர‌ண் மேல‌ ஏறர‌துல என‌க்கு ஒரு ச்ந்தோச‌ம்:‍)
அப்ப‌டி ஏறின ஒரு சுப‌யோக‌ சுப‌தின‌த்துல‌ தான் எங்க‌ அண்ணா சின்ன‌ வ‌ய‌சுல‌ யூஸ் ப‌ண்ணிட்டு இருந்த‌ பெட்டி கிடைச்சிது.அது அவ‌னுக்கு பொக்கிஷம் மாதிரி.என்னையெல்லாம் தொட்டு பாக்க‌ கூட‌ விட‌மாட்டான்.அந்த‌ பெட்டி மேல‌ என‌க்கு அப்பொல்லாம் ஒரு கிரேஸ்.பெரிசான‌ பின்னாடி அந்த‌ பெட்டி ம‌ற‌ந்தே போயிருந்த‌து.இப்போ அதைப் பாத்த‌தும்..ச‌ரி..பெட்டி இனி ந‌ம் ஆளுகைல‌..என்ன‌தான் இருக்குன்னு பாத்துட‌லாம்கிற‌ எண்ண‌த்தில‌ பூட்டை ஒடைச்சிட்டேன்.உள்ளே இருந்த‌ குப்பை(அண்ணா..திட்டாதே..ப்ளீஸ்) எல்லாம் கிள்ரிட்டு இருந்த‌ப்ப‌ ஒரு ஜூனிய‌ர் விக‌ட‌ன் புக்கோட‌ க‌ட்டிங் கெட‌ச்சிது.

அதுல‌ ஒரு க‌வ‌ர்மெண்ட் ஸ்கூல் ப‌த்தி எழுதி இருந்தாங்க‌.அந்த‌க் கால‌த்திலேயே அந்த‌ ப‌ள்ளியோட‌ செய‌ல்பாடு, இப்போ இருக்க‌ற ப‌ல‌ த‌னியார் ப‌ள்ளிக‌ளைவிட‌ பெட்ட‌ரா இருந்திருக்கு.அந்த‌ க‌ட்டுரையின் சார‌த்தை கீழே த‌ர்றேன்.ப‌டிச்சிக்கோங்க‌.

த‌லைப்பு: ஒரு ஸ்கூல் விய‌க்க‌ வைக்கிறது!
ப‌ள்ளியின் பெய‌ர்:அர‌சின‌ர் மேல் நிலைப் ப‌ள்ளி,ஏழூர், நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம்,த‌மிழ் நாடு

இப்ப‌டிப்ப‌ட்ட‌ மாதிரிப் ப‌ள்ளியை ந‌ட‌த்த‌ அந்த‌ப் ப‌ள்ளியின் த‌லைமை ஆசிரிய‌ரும்,ஆசிரிய‌ர்க‌ளும் எத்த‌னைத் தியாக‌ங்க‌ளைச் செய்திருப்ப‌ர் என‌ நினைக்கும்போது அதிச‌ய‌மா இருக்கு. நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌த்துக்கார‌ங்க‌ இதைப் ப‌த்தி மேலும் த‌க‌வ‌ல்க‌ள் தெரிஞ்சா சொல்லுங்க‌ளேன்

அப்ப‌ள்ளியின் அதிச‌ய‌ங்க‌ள் சில‌

1.ப‌ள்ளியில் ந‌ட‌க்கும் ஆளில்லாக் க‌டை

க‌டையில் மாணவ‌ர்க‌ளுக்குத் தேவையான‌ அனைத்துப் போருட்க‌ளும் இருக்குமாம்.ஆள் இருக்க‌ மாட்ட‌ங்க‌ளாம்.விலை எழுதி ஒட்டி இருக்குமாம். நாமே ப‌ண‌த்தை க‌ல்லாப் பெட்டியில் போட்டு விட்டு பொருளை எடுத்துக்க‌லாமாம்.இது மாண‌வ‌ர்க‌ளிடையே நாண‌ய‌த்தை வ‌ள‌ர்க்கும் முய‌ற்சி.இப்ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளின் நேர்மைக்கு சாட்சி..இக்க‌டையின் லாப‌த்தில் ப‌ள்ளிக்கான ஸ்டிரியோ செட் வாங்கி இருக்காங்க‌.

2.எறும்புசாரி முறை

மாணவ‌ மாணவிக‌ள் எங்கே போனாலும் வ‌ரிசையாய் போகின்ற‌ன‌ர்.ப‌ள்ளியிலிருந்து வீட்டுக்குப் போகும் வ‌ரையிலும்,வீட்டிலுருந்து ப‌ள்ளிக்கு வ‌ரும் வ‌ரையிலும் கூட‌.கிராம‌த்துப் ப‌ள்ளி ஆன‌தால் ப‌ல‌ மாணவ‌ர்க‌ள் ந‌ட‌ந்தேதான் ப‌ள்ளிக்கு வ‌ருகவார்க‌ள்..ப‌ள்ளியிலிருந்து சில‌ கி.மீ தொலைவில், ஆசிரிய‌ர் எவ‌ரும் இல்லாத‌ இட‌ங்க‌ளிலும் கூட‌ இதைக் க‌டைப்பிடிக்கிறார்க‌ள். இது மாண‌வ‌ர்க‌ளின் ம‌ன‌மாற்ற‌த்தால் ம‌ட்டுமே சாத்திய‌ம்.

3.ப‌ள்ளி ஆளும‌ன்ற‌ம்

ப‌ள்ளி மாணவ‌ர்க‌ளிடையே ஒரு அர‌சாங்க‌மே இருக்கிற‌து.வ‌ருடா வ‌ருட‌ம் மாண‌வ‌ர் தேர்த‌ல் ந‌ட‌க்கிறது.மாணவ‌ அமைச்ச‌ர‌வை பொறுப்பேற்கிறது.அவ‌ர்க‌ள் ப‌ள்ளியின் ஒவ்வோர் முன்னேற்ற‌ப் ப‌டியிலும் க‌ல‌ந்தாலோசிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். இத‌னால் மாண‌வ‌ர்க‌ளின் சேவை ம‌ன‌ப்பாண்மை வ‌ள‌ர்கிற‌து.அர‌சிய‌ல் ஆர்வ‌ம் வ‌ள‌ர்கிற‌து. எதிர்கால‌த்தில் ந‌ல்ல‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் எங்க‌ளால் முடிந்த‌ சிறு முய‌ற்சி என்கிறார் த‌லைமை ஆசிரிய‌ர்.
மேலும் மாண‌வ‌ர்க‌ளை உற்சாக‌ப்ப‌டுத்த‌, ஒவ்வொரு வார‌மும் சிற‌ந்த‌ வ‌குப்பு தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டு,அவ்வ‌குப்பின் முன் ஒரு கொடி ப‌ற‌க்க‌விட‌ப்ப‌டுகிறது.இந்த‌க் கொடியைப் பெற ஒவ்வொரு வ‌குப்பும் முடிந்த‌வ‌ரை முய‌ல்கிறாது இது மாண‌வர்க‌ளின் குழு ம‌ன‌ப்பாண்மையை(Team Building Skills) வ‌ள‌ர்க்கிறது . ‌

4.மிக‌ப்பெரும் க‌ட்டிட‌ங்க‌ளும்,மிண்ணொளி விள‌க்குக‌ளும்,அழ‌குப் பூங்கா
வும்

அர‌சுப் ப‌ண‌த்தை எதிபாராம‌ல், ந‌ன்கொடைக‌ள் மூல‌முமாக‌வே ப‌ள்ளிக்க‌ட்டிட‌ங்க‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கு.அழ‌கிய‌ பூங்கா அமைக்க‌ப்ப‌ட்டிருக்கு.இர‌வைப் ப‌க‌லாக்கும் வ‌கையில் ப‌ல‌ப் ப‌ல‌ மின்னொளி விள‌க்குக‌ள் ப‌ள்ளியிலும்,ப‌ள்ளிப் பூங்காவிலும் அமைக்க‌ப் ப‌ட்டிருக்கு. ச‌ரியான மின்வ‌ச‌தி இல்லாத‌ ப‌ல‌ கிராம‌த்து மாண‌வ‌ர்க‌ள் இப்ப‌ள்ளி விள‌க்குக‌ளாலெயே ப‌டித்துப் ப‌ய‌ன்பெறுகின்ற‌ன‌ர்.

5.மேலும் சில‌

ப‌ள்ளியில் சைல‌ன்ஸ் அவ‌ர்ன்னு ஒண்ணு இருக்கு.சைல‌ண்ஸ் பெல் அடிச்ச‌ உட‌னே குண்டூசி விழு ந்தா கூட‌ கேட்கும் அள‌விற்கு ப‌ள்ளி அமைதியாய் இருக்கிறது

வ‌ய‌தில் பெரிய‌வர் யாரைப் பார்த்தாலும் அவ‌ர் கூலித் தொழிலாளியாய் இருந்தால் கூட‌, மாணவ‌ர்க‌ள் வ‌ணக்க‌ம் சொல்றாங்க‌

யாருமே லேட்டா வ‌ர்ற‌தில்லை

பள்ளிக்கான சொத்து ஏற‌த்தாழ‌ 35 ல‌ட்ச‌ம் தேறுமாம்.

த‌லைமை ஆசிரிய‌ர் ந‌ட‌ராச‌ன் சொல்கிறார்:

இவை அனைத்தும் சாத்திய‌ப் ப‌ட்ட‌து எங்க‌ள் ஆசிரிய‌ர்க‌ளின் க‌டும் உழைப்பாலும்,மாண‌வர்க‌ள் ம‌ற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பாலும் தான்.அவ‌ர்க‌ள் இல்லையேல் இதெல்லாம் ந‌ட‌க்க‌துங்க‌.

ஆனால் ஆசிரிய‌ர்க‌ளும்,மாண‌வ‌ர்க‌ளும்,பெற்றோரும் இச்சாத‌னைக்கு கைகாட்டுவ‌து ..த‌லைமை ஆசிரிய‌ரைத்தான்.

அவ‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள்"அவ‌ருக்கு உயிர்மூச்சே இப்ப‌ள்ளிதாங்க‌.அவ‌ருடைய‌ ப‌ர‌ம்ப‌ரை சொத்துக‌ளைக்கூட‌ ப‌ள்ளிக்கு ந‌ன்கொடையாக‌க் கொடுத்திருக்கிறார்."‌


இவ‌ர்க‌ளுக்கு அர‌சுக‌ள் எத்தகைய ஊக்க‌த்தைத் த‌ந்திருக்கும் என‌த் தெரிய‌வில்லை.அர‌சுப் ப‌ள்ளிக‌ளும் சாத‌னைப் ப‌டைக்கும் என‌ நிரூபித்த‌ அப்ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ரையும் அவ‌ர‌து குழுவின‌ரையும் வாழ்த்த‌ ந‌ம‌க்கு வ‌ய‌திருக்காது.வ‌ண‌ங்குவோம்.

இந்த‌ இகையை அவ‌ர்க‌ளின் தியாக‌த்திற்கு காணிக்கையாய் ச‌ம‌ர்ப்பிக்கிறேன்
இந்த‌ப் ப‌ள்ளியைப் ப‌ற்றிய மேலும் சில‌ த‌க‌வ‌ல்க‌ளோ,அல்ல‌து வேறு சிற‌ந்த‌ சேவை செய்யும்(த‌) ப‌ள்ளிக‌ளைத் தெரிந்த‌வ‌ர்க‌ள் இந்த‌ இடுகையைத‌ தொட‌ருங்க‌ளேன்

I am back...................

Monday, May 4, 2009
ஐ யாம் பேக்கு..ஐயோ..இங்கிலீஷ்ல‌ எழுதினா த‌ப்பு த‌ப்பா அர்த்த‌ம் வ‌ருது....திரும்ப‌ வ‌ந்துட்டேனுங்க‌....ஒரு மாச‌ம் முன்னாடி லாங் லீவ் சொல்லிட்டு போனேன்.ஆனா என்ன‌ ப‌ண்ற‌து... நான் இல்லாம‌ இருக்க‌ முடியாம‌(இப்ப‌டிதான் பில்ட‌ப் குடுக்க‌ணும்.வேற‌ என்ன‌ செய்ய‌?) லீவைக் கேன்ச‌ல் ப‌ண்ணிட்டாங்க‌ காலேஜ்ல‌...ஸோ ..ஸ்டார்ட் மீஸிக்....அகெய்ன் மை மொக்கை ஸ்டார்ட்ஸ்...

.

I am suffering from...

Thursday, April 23, 2009
ஐ யாம் ச‌ஃப‌ரிங் ஃப்ர‌ம்......அட‌ச்சே....லீவ் லெட்ட‌ர்ன்னு நென‌ச்சாலே இந்த‌ வ‌ரிக‌ள் வ‌ந்துருது..


ம‌க்க‌ளே...கொஞ்ச‌ நாளைக்கு உங்க‌ளையெல்லாம் நிம்ம‌தியா விட‌ற‌துன்னு முடிவு ப‌ண்ணிட்டேன்...அத‌னால‌தான் இந்த‌ லீவ் லெட்ட‌ர்
சில‌ ப‌ல‌ ப‌ர்ச‌ன‌ல் ம‌ற்றும் அஃபிஷிய‌ல் வேலைக‌ளால் ப‌திவுல‌க‌ம் ப‌க்க‌ம் சில‌ மாத‌ங்க‌ளுக்கு வ‌ர‌ முடியாது...அத‌னால‌ கொஞ்ச‌கால‌த்துக்கு லீவு சொல்லிக்கிறேன்..
இதுவ‌ரை என் கொடுமைக‌ளை ச‌கித்துக்கொண்ட‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி

.

என்ஜினீய‌ர்க‌ள் மிஸ் ப‌ண்ணிடாதீங்க‌

Saturday, April 11, 2009
எல்லா என்ஜினீய‌ரிங் பாட‌த்துக்கும் Video Lessons இந்த‌ லின்க்ல இருக்கு. IIT,IIscபோன்ற‌ சிற‌ந்த‌ நிறுவ‌ன‌ பேராசிரிய‌ர்க‌ள் பாட‌ம் ந‌ட‌த்த‌றாங்க‌‌.

common link

பாருங்க‌ க‌ண்டிப்பா ப‌ய‌னுள்ள‌தா இருக்கும்


.

இந்திய‌ அர‌சின் ஆன்லைன் குறைதீர்ப்பு மைய‌ம்

Thursday, April 9, 2009
இந்திய‌ அர‌சின் குறைதீர்ப்பு மைய‌ம் ஆன்லைனில் செய‌ல்ப‌டுகிறது. முக‌வ‌ரி

http://pgportal.gov.in/

எந்த‌ அர‌சுத்துறையிலும் நீங்க‌ள் ச‌ந்திக்கும் பிர‌ச்சினைக‌ளைப் ப‌ற்றி இங்கு முறையிட‌லாம்.
மேலும் விவ‌ர‌ங்க‌ளுக்கு கீழே கிளிக்குங்க‌ள்
Grievance post.


.

வலி

Tuesday, April 7, 2009
ஈர மெழுகு கையில் பட்டது
முழங்கை சுவற்றில் பட்டது
விழித்திரையில் முள் பட்டது
வலிக்கவில்லை..
நீ என்னை பார்த்தும்
பேசாமல் போனாய்
ரணமாய் வலிக்குதடி

இது தோழி Aizன் க‌விதை.சிற‌ந்த‌ க‌விதைக‌ளை எழுதும் அவ‌ரின் பிற‌ க‌விதைக‌ளைப் ப‌டிக்க‌ கீழே கிளிக்குங்க‌ள்.
ப‌துமையின் க‌விதைக‌ள்

.

ப‌தினாறும் பெற்று வாழ்க‌

Sunday, April 5, 2009


ப‌தினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க‌ன்னு வாழ்த்த‌றாங்க‌ளே.அந்த‌ ப‌தினாறு என்ன‌ என்ன‌ன்னு தெரியுங்க‌ளா? இப்போ சொல்றேன்.தெரியாத‌வ‌ங்க‌ தெரிஞ்சிக்கோங்க‌.தெரிஞ்ச‌வ‌ங்க‌ ச‌ரி பாத்துக்கோங்க‌.

1.புக‌ழ் 9.பெருமை

2.க‌ல்வி 10.ஆயுள்

3.ஆற்ற‌ல் 11.ந‌ல்லூள்

4.வெற்றி 12.இள‌மை

5.ந‌ன்ம‌க்க‌ள் 13.பொருள்

6.பொன் 14. துணிவு

7.நெல் 15.நுக‌ர்ச்சி

8.அறிவு 16.நோயின்மை


.