31622401 ம் நொடியில் உல‌க‌ம்?

Thursday, January 1, 2009
2008 ஆம் ஆண்டு மற்ற ஆண்டுகளை விட நீண்டு இருந்தது. இத‌ற்கு அறிவியல் ரீதியாக விளக்கமும் இருக்கிறது.
இந்த ஆண்டு நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதம் ஒரு முழுநாள் கூடுதலாக கிடைத்தது.மேலும் 2008 ஆம் ஆண்டில் லீப் நொடி என்றழைக்கப்படும் ஒரு நொடியும் கூடுதலாக கிடைத்த‌து. இந்நிக‌ழ்வு 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஏற்படுகிறது.ஆண்டின் இறுதி நாளான நேற்று புத்தாண்டு தொடங்குவதற்கு முன்னர் இந்த ஒரு நொடி கூடுதலாகக்க‌ப்ப‌ட்ட‌து. என‌வே 2008 ஆண்டு ம‌ற்ற‌ ஆண்டுக‌ளைப் போல‌ அல்லாம‌ல் 31622401 நொடிக‌ளைக் கொண்டிருந்த‌து

எதற்காக ஒரு நொடி கூடுதல்?

புவியின் தற்போதைய சுழற்சி முன்னர் இருந்ததைவிட சீராக மிகவும் மெதுவாக குறைந்து வருவதால், இந்த சிறிய மாற்றம் தேவைப்படுகிறது. புவியின் சுழற்சி வேகம் இவ்வாறு குறைந்தது வருவதற்கு காரணம் புவி வெப்பமடைதலும் கடல் அலைகளின் அசைவுகளும் இயக்கமும் காரணம்.

உலகளவில் கணினி சர்வர்கள், மொபைல் தொலைபேசி சேவைகளை வழங்குபவர்கள், விண்ணில் ஒரு நிலையில் இருந்து செயல்படும் செயற்கை கோள் கருவிகள் ஆகியவை அணு கடிகாரங்களை ஆதாரமாகக் கொண்டுதான் தமது நேரங்களை சரி செய்கின்றன.

இந்த‌ நொடி கூடுதல் மூலம் அணு கடிகார நேரத்துடன் புவி ஒருங்கிணைந்து இருக்கும்.நேரத்தை எந்த அளவுக்கு துல்லியமாக அள‌விட‌ முடியுமோ அந்த அளவுக்கு துல்லியமாக அள‌விட‌லாம்.
எனவே இந்த ஆண்டு முடிவுக்கு வந்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கும் தருணத்தில், 2008 ஆம் ஆண்டில் ஒரு நொடி கூடுதலாக இருந்ததை நினைவு கூறுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமே.


நாம் பெற்ற‌ இ(து)ன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம்.அத‌னால‌ ஓட்டுப் போட‌ ம‌ற‌ந்துடாதீங்க‌!
ந‌ன்றி:Tamilskynews.com

17 comments:

SUREஷ் said...

aha... openingகே துல்லியமா இருக்கே...

கே.ரவிஷங்கர் said...

இயற்கை,

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என் வலைக்கு இரண்டாம் முறையாக வந்து
வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

//அல்லாம‌ல் 31622401 நொடிக‌ளைக் கொண்டிருந்த‌து//
வாழ்த்தோடு நிற்காமல் ஒரு புதிய தகவலும் இருந்தது.என் மகனுடன் பகிர்ந்து கொண்டேன்.

(நொடிகளை நாட்களாக்கி சரி பார்த்தேன்.ஹிஹிஹிஹி....சரியாக இருக்கிற்து.)

Anonymous said...

மிகவும் அழகாக உள்ளது.

LOSHAN said...

நல்ல விளக்கம்.. நல்ல விஷயம்.. ஏற்கெனவே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும்(yahoo), தங்கள் தமிழ் விளக்கம் அருமை..

Radhu said...

Nice pa.Keep it up.Wish you happy new year

Shangeetha said...

Hi!Good... Informative one...

thevanmayam said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!11

Deva...

thevanmayam said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Deva

இய‌ற்கை said...

ந‌ன்றி SUREஷ்

இய‌ற்கை said...

வாழ்த்து சொன்னதற்கு நன்றி:-) ரவிஷங்கர்

//நொடிகளை நாட்களாக்கி சரி பார்த்தேன்.ஹிஹிஹிஹி....சரியாக இருக்கிற்து.)//

நான் செக் ப‌ண்ணி பார்த்துதான் போட்டேன்:‍)

இய‌ற்கை said...

ந‌ன்றி LOSHAN :-)

இய‌ற்கை said...

Radhu and Shangeetha..Thank you

இய‌ற்கை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் DEVA:-)

இய‌ற்கை said...

வாழ்த்துக்கு இர‌ட்டை ந‌ன்றி தேவா:‍))

இய‌ற்கை said...

/anbu-openheart said...
மிகவும் அழகாக உள்ளது./

அன்பு க‌ல‌ந்த‌ ந‌ன்றிக‌ள் அன்பு:‍)

Anonymous said...

intha muthukumar oru karma veeran enbathil aiyamillai aanaal poratta gunam illai ivar oru uthamapurushar aanal utharanama kolla mudiyadhu ivar konda pathaiai......un maranam kodaana kodiperukku valikum aanal kolgai ena kookural idam kollaikaarargaluku idhayam erunthaal thaney valikkum.......aanma santhiyadaiya prarthippom......mudivil tharkolaikku kuda veeram venum yenna valiai munkuttiye unaranthu theruvu seivadhu thaney tharkolai...

அபி அப்பா said...

ரொம்ப அழகழன ஆராச்சி