பள்ளிக்கால‌ நினைவுகள்-I

Saturday, October 10, 2009
சில நாட்களுக்கு முன் அபியும் நானும் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் தன் பொண்ணை பள்ளியில் சேர்க்க படும்பாடுகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போ எங்க அப்பா சொன்னாங்க.. நல்லவேளை.. என் புள்ளயெல்லாம் என்னை இப்பிடி அலைய விடல. அதுக்கு அதுவே அட்மிஷன் வாங்கிச்சு அப்படின்னு.. ம்ம்..எனக்கு அதெல்லாம் கொஞ்சம் நியாபகம் இருந்தாலும்.. நல்லா தெளிவா இல்ல.. அதனால அப்பாகிட்ட டீடெயிலா கேட்டேன்..அவர் சொன்ன உடனே என் பிளாகர் புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சுது.. ஆமா.. நாம அட்மிஷன் வாங்கின கதைய பிளாக்ல போடலாமேன்னு.. இதோ ஆரம்பிச்சுட்டேன்..

நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..எங்க அம்மா வீட்டு வேலைகள்னால என்னைப் பார்த்துக்கும் வேலைய எங்க அப்பாகிட்டயும் சித்திகிட்டயும் கொடுத்திருக்காங்க..எங்க அப்பா நிறைய இலக்கியக் கூட்டங்கள்ல பேசுவார். தமிழைப் பற்றி நிறையவே படிப்பார். அந்த நேரத்தில எங்க சித்தி தமிழ் இலக்கியம் முதுகலைப் படிச்சிட்டு இருந்திருக்காங்க.. வீட்ல இலக்கிய ஆறு கரைபுரண்டு ஓடிட்டு இருந்திருக்கு..அதனால "அம்மா சொல்லு", "அப்பா சொல்லு" சொல்லிக்குடுக்க வேண்டிய வயசில எனக்கு "அகர முதல சொல்லு" ன்னு சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க எங்க அப்பாவும் சித்தியும் . இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..
அப்போ எங்க வீட்ல பெருசா வாசல் இருக்கும்.. நாலுபக்கமும் ரூம் இருக்கும். எங்க அண்ணாக்கு அந்த வாசல்தான் சிலேட். காலைல எழுந்து.. அ,ஆ,...A,B,C,D...1,2,3,4.. எல்லாம் எழுதி அம்மாகிட்ட காட்டிட்டு தான் ஸ்கூல் போவான். நாம தான் அண்ணாவைக் அட்டக்காப்பி அடிக்கறாவங்களாச்சே..அதனால அண்ணா ஸ்கூல் போனதும் ..அந்த எழுத்துக்கள் மேலயே நானும் எழுதிப்பழக ஆரம்பிச்சுட்டேன்..
அப்போ..அண்ணா..சித்தி எல்லாரும் ஸ்கூல் போக நானும் ஸ்கூல் போகணும்ன்னு ஆசை வந்திருக்கு.. நானும் ஸ்கூல் போறேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சாச்சி.. அப்போவெல்லாம் ஹெட்மாஸ்டர் அடிப்பார்ன்னு என்னை அடக்கிட்டாங்க.அந்த வருஷம் எதோ ஒரு உதவிக்கு எங்க ஊர் பள்ளியோடத் தலைமை ஆசிரியர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்திட்டு இருந்திருக்கார். ஒரு நாள் அவர் அப்படி வந்தப்போ அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.
( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍( என்னை உங்க பள்ளிகூடத்துல அடிக்காம‌ சேர்த்திகிறீங்களா? எங்க அண்ணா கூட நானும் வரேன்னு சொல்லி இருக்கேன்..அவர் அசந்துபோயி.. எங்க அப்பாகிட்ட பாப்பாவ ஸ்கூல்க்கு அனுப்புங்கன்னு கம்பெல் பண்ணியிருக்கார்.எங்க அப்பா அடுத்த வருஷம் தான் அனுப்பனும்ன்னு சொல்ல..அதுக்கு H.M..பால்வாடிக்காவது அனுப்புங்கன்னு கூட்டிட்டு போய்டார்..என் பள்ளி செல்லும் படலம் ஆரம்பிச்சுது..

ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க .
அந்த கிளாஸ்ல என் கஸின் ஒரு அக்கா படிச்சாங்க.. என்னை விட 2 வருசம் பெரியவங்க..ஆனா பாவம்..என்னோட கிளாஸ்.. ஸ்கூல் முடிக்கறவரைக்கும் அந்த அக்காவும் நானும் ஒண்ணாபோனா ..இந்த விவரமெல்லாம் தெரியாத சொந்தக்காரங்க‌ "எந்த கிளாஸ் படிக்கறீங்க ரெண்டு பேரும்"ன்னு கேட்டுட்டு.. " ஏன் தமிழு? நீ பெயிலாயிட்டியா? தங்கச்சிகோட ஒரே கிளாஸ்ல படிக்கற"அப்படின்னு அந்த அக்காவக் கேப்பாங்க..அப்போ தமிழக்கா ஆகற டென்சன் இருக்கே... அப்பப்பா..அக்னி பகவேனே நேர்ல வந்து நிக்கற மாதிரி தான் இருக்கும்..:‍)

ஆனா அந்த அக்காவும் நானும் சேர்ந்துட்டு ஸ்கூல பண்ணின சேட்டைகள் ரொம்ப அதிகம்.. ஆனா எதிலயாவது மாட்டினாலும் பாவம் பெரிய புள்ளன்னு அவங்கதான் திட்டு வாங்குவாங்க..அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன் ..

இந்த நிகழ்வெல்லாம் கூட எழுதி உங்களயெல்லாம் கொடுமை பண்ணலன்னா பிளாக் வச்சிருந்து என்ன பயன்..அதான் எழுதிட்டேன்
(அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌)

.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு

Wednesday, October 7, 2009
அன்புவுக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்




பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு

வரம் தரும் சாமிக்கு....

Monday, September 14, 2009

|

ஏஞ்சல் வந்தாளே என்னிடமும்.. அனுப்பி வைத்த மேனகாசத்யாவுக்கு நன்றி..

முதல்ல நான் வேண்டிக்கறது என்னன்னா.. என் தொல்லை தாங்காம ஏஞ்சல் ஓடிப் போயிடக்கூடாது..( இது அவுட் ஆஃப் சிலபஸ் வேண்டுதல்)..


ஓகே..இப்போ சில‌ப‌ஸ்குள்ள போயி வேண்டுத‌ல்க‌ளைப் ப‌ட்டிய‌லிடுவோம்..


1. இப்போது இருக்கும் என் உறவுகளும், நட்புகளும் என்றும் பிரியாமல் இதே அன்போடு நிலைத்திருக்க வேண்டும்

2.நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்


3.யார் க‌ண்ணுக்கும் தெரியாம‌ல் ம‌றையும் ச‌க்தி வேண்டும்

4.தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்

5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்

6.போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும்

7. தனிமையில் ஏங்கும் நிலையோ, உணவுக்காக ஏங்கும் நிலையோ யாருக்கும் வரக்கூடாது

8.குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது

9.பசும் வ‌ய‌ல்க‌ளும், அட‌ர் கான‌க‌மும் அழியாம‌ல் நிலைத்திருக்க‌ வேண்டும்

10.இத்த‌னை வ‌ர‌ங்க‌ள் த‌ந்த‌ தேவ‌தையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற‌ வேண்டும்

இன்னும்சில‌ பேருக்கு இந்த‌ ஏஞ்ச‌லை அனுப்பி வைக்க‌ணுமாம்..அனுப்பிடுவோம்..ஏஞ்சல் வந்து சேர்ந்ததும் நீங்களும்(நேரமும், விருப்பமும் இருந்தால்)உங்க வரங்களைக் கேட்டுட்டு அடுத்தவங்களுக்கு அனுப்பி வச்சிடுங்க..

ஜோச‌ப் பால்ராஜ்
காய‌த்ரி
ரங்கா
சிவ‌னேஸ்
தாரணிபிரியா

இன்று பிறந்த நாள் காணும் நண்பர் ரங்கா என்னும் ரங்க ராஜனுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக‌.


.