பொறியிய‌ல் சேர்க்கை‍ - சில‌ டிப்ஸ்

Wednesday, May 27, 2009
ப‌ள்ளி நாட்க‌ளில் பெரும்பாலான‌வ‌ர்க‌ளின் ம‌ற்றும் அவ‌ர்க‌ள் குடும்ப‌த்தின‌ரின் க‌ன‌வு தொழிற்க‌ல்வி தான்.தொழில் க‌ல்விக‌ள்ல‌ முக்கிய‌மான‌வை...மெடிக‌ல் ம‌ற்றும் எஞ்சிய‌னீரிங்தான்.சில‌ வ‌ருஷ‌ங்க‌ளா,அதிக‌ரிச்சிட்டு வ‌ர்ற‌ பொறியிய‌ல் க‌ல்லூரிக‌ளோட‌ எண்ணிக்கையைப் பார்க்கும்போது,பொறியிய‌ல் க‌ன‌வு காண்ப‌வ‌ர்க‌ளுக்கு அது எட்டாக் க‌னி அல்ல‌ என்ப‌து தெரிகிற‌து.
ஆனால் இந்த‌ அதிக‌ எண்ணிக்கையிலான‌ க‌ல்லூரிக‌ளில், எத்த‌னை க‌ல்லூரிக‌ள் த‌ரமான‌ க‌ல்வியைத் த‌ருகின்ற‌ன‌ என்ப‌து தெரிய‌வில்லை.
என‌வே க‌ல்லூரிக‌ளைத் தேர்ந்தெடுக்கும்போது நிறைய‌ அல‌சி ஆராய‌ வேண்டியிருக்கு.
க‌வ‌னத்தில் கொள்ள‌வேண்டிய‌வை சில‌:


1.க‌ல்லூரியில் கேம்ப‌ஸ் பிளேஸ்மெண்ட் இருக்குதான்னு ம‌ட்டும் பாக்காதீங்க‌.கேம்ப‌ஸ்ல‌ செல‌க்ட் ஆன‌ ஸ்டுட‌ண்ஸ் க‌ம்பெனில‌ சேர்ராங்க‌ளான்னும் பாருங்க‌. ஏன்னா,ரெக்ரூட் ப‌ண்ற‌ ப‌ல‌ க‌ம்பெனிக‌ள் கால் லெட்ட‌ரே அனுப்ப‌ற‌தில்லை. ஸ்டூட‌ண்ஸ் கால் லெட்ட‌ர்காக‌, காத்திருந்து, காத்திருந்து, பின் வேற வேலை தேட‌வேண்டிய‌ நிலைக்கு ஆளாக‌றாங்க‌.

2.ஒரு த‌ர‌மான‌ க‌ல்லூரியில் அதிக‌மா ஸ்கோப் இல்லாத‌ பிரான்ஞ் ஆ? அல்ல‌து த‌ர‌மில்லாத‌ க‌ல்லூரியில் ஸ்கோப் அதிக‌மான‌ பிரான்ஞ் ஆ ங்கிற நிலை வ‌ந்தால் க‌ல்லூரி த‌ர‌த்திற்கே முக்கிய‌த்துவ‌ம் குடுங்க‌.க‌ல்லூரி த‌ர‌மா இல்லைன்னா, ஆய்வ‌க‌மோ, நூல‌க‌மோ எந்த‌ வ‌ச‌தியும் ச‌ரியா இருக்காது.எப்பேர்ப‌ட்ட‌ பிரான்ச்ல‌ ப‌டிச்சாலும்,ஸ்ட‌ஃப் இல்லைன்னா க‌ண்டிப்பா முன்னேற‌ முடியாது.


3.கல்லூரிக‌ள்ல‌ க‌ற்பிக்க‌ற‌ முறையைப் ப‌த்தி, அங்க‌ ஏற்க‌ன‌வே ப‌டிக்க‌ற‌ மாண‌வ‌ர்க‌ள்கிட்ட‌ கேட்டு தெரிஞ்சிக்கோங்க‌.ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ற‌தை ம‌ட்டும் ஊக்குவிக்க‌ற‌ க‌ல்லூரிக‌ளை ஒதுக்கிடுங்க‌. ஏன்னா..தொழிற்க‌ல்விங்க‌ற‌து ப‌ள்ளிப்படிப்பு மாதிரி புத்த‌க‌த்துல‌ இருக்க‌ற‌தை தெரிஞ்சிக்க‌ற‌து ம‌ட்டும் அல்ல‌.அதை பிராக்டிக‌லா அப்ளை ப‌ண்ண‌வும் யோசிக்க‌ணும்.அத‌னால‌ அதிக‌மான‌ ப்ராக்டிக‌ல் ஓரிய‌ண்ட‌ட் அப்ரோச் உள்ள‌ க‌ல்லூரியைத் தேர்ந்தெடுங்க‌.

இதெல்லாம் தேவையான‌ விவ‌ர‌ங்க‌ள்.இதெல்லாம் எப்ப‌டி ந‌ம‌க்கு கிடைக்கும்ன்னு பார்த்தா,க‌ண்டிப்பா எந்த‌ க‌ல்லூரியும் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் வாயிலாக‌த் த‌ருவ‌தில்லை.அக்க‌ல்லூரியில் ப‌டிப்ப‌(த்த‌)வ‌ர்க‌ள்,வேலை செய்ப‌(த‌)வ‌ர்க‌ள் இவ‌ங்க‌ளோட‌ தொட‌ர்பு கொள்ற‌தால‌ ம‌ட்டும் தான் உண்மை விவ‌ர‌ங்க‌ள் கிடைக்கும் .
இதையெல்லாம் வ‌ச்சி தேர்ந்தெடுத்தால் போதும்.க‌ண்டிப்பா ந‌ல்ல த‌ர‌மான‌ க‌ல்லூரியில் தான் சேருவீங்க‌.சேர்ந்த‌ப்புற‌ம்..ஆஹா.. ந‌ல்ல‌ காலெஜ்ல‌ சேர்ந்தாச்சி..இனிமே லைப் ஜாலிதான்னு என்ஜாய் ப‌ண்ண ஆர‌ம்பிச்சிடாதீங்க‌.ப‌டிப்புல‌யும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் வையுங்க‌.

போன‌ வ‌ருட‌த்திற்கான‌ க‌ல்லூரிக‌ளின் க‌ட் ஆஃப் மதிப்பெண்க‌ளைத் தெரிந்து கொள்ள‌ கீழே கிளிக்குங்க‌ள்
cutoffmarks2008and2007
வாழ்க்கையில் ஜொலிக்க‌ வாழ்த்துக்க‌ள்‌

26 comments:

கடைக்குட்டி said...

ஆனா இதிலெல்லாம் உண்மையை சொல்லும் கல்லூரிகள் எத்தனை ???

காசில்லாம ஒருத்தன் இப்போ நல்ல பொறியியல் கல்லூரிக்குள் போவது கடினமே!!!

நட்புடன் ஜமால் said...

நான் கொஞ்சம் அல்ல

ரொம்பவே லேட் ...


(பொறியியல் படிப்பதை சொன்னேன்)

Sanjai Gandhi said...

எலே டீச்சர் என்னலே இது? ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவுலே.. :)

//அதிக‌ரிச்சிட்டு வ‌ர்ற‌ பொறியிய‌ல் க‌ல்லூரிக‌ளோட‌ எண்ணிக்கையைப் பார்க்கும்போது,பொறியிய‌ல் க‌ன‌வு காண்ப‌வ‌ர்க‌ளுக்கு அது எட்டாக் க‌னி அல்ல‌ என்ப‌து தெரிகிற‌து.//

ஆமா ஆமா.. முழு சீட்டையும் நிரப்புவது கல்லூரிகளுக்கு எட்டாக் கனியாகிட்டு வருது.. :))

ஷண்முகப்ரியன் said...

நீங்கள் சொல்வதையெல்லம் சிந்த்தித்துச் சீர் தூக்கிப் பார்க்கும் கல்வியை நாம் முதலில் மாணவர்களுக்கு அளித்திருக்கிறோமா,நண்பரே?

கலையரசன் said...

ஏமாத்தறதுன்னு முடிவு பன்னிட்டா ரவுன்டு கட்டி அடிப்பானுங்க..
பல டெக்னிக்ஸ் வச்சிருங்காங்க பாஸ்..
எனிவே பதிவு அமர்களம்!

sarathy said...

எங்கள மாதிரி முன்னாள் மாணவர்களிடம் கூட
கேட்கலாம் னு ஏன் நீங்க
சொல்லவே இல்ல...

Anbu said...

நல்ல பதிவு அக்கா

மேவி... said...

:-))

எம்.எம்.அப்துல்லா said...

//வாழ்க்கையில் ஜொலிக்க‌ வாழ்த்துக்க‌ள்‌ //

வழிமொழிகின்றேன் .

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

விக்னேஷ்வரி said...

சரியான டிப்ஸ்ங்க.

SK said...

நல்ல பதிவு.

உங்களுக்கு நேரம் இருப்பின், இன்ஜினியரிங் கவுன்சிலிங் கட் எவ்வாறு கணக்கு செய்கிறார்கள் என்பது போன்ற விவரம் எழுதினால் தற்போதைய சூழ்நிலை அறிய தோதுவாக இருக்கும்.

Anonymous said...

நல்ல பயனுள்ள குறிப்பு இயற்கை.
பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ கடைக்குட்டி ..காசைக் கொடுத்தும் மோச‌ம்போகாம‌லிருக்க‌ சில‌ டிப்ஸ்தான் இவை

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌...இணைச்சாச்சு:‍)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌...இணைச்சாச்சு:‍)@தமிழர்ஸ் - Tamilers

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ ஜ‌மால்..ரொம்ப‌ நாள் ஆச்சு..குட்டிப் பாப்பா எப்ப‌டி இருக்கு?

*இயற்கை ராஜி* said...

//$anjaiGandh! said...
எலே டீச்சர் என்னலே இது? ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவுலே.. :)///

@ச‌ஞ்ச‌ய்...எத்த‌னை நாளைக்குதான் உங்க‌ளை மாதிரி வெட்டி போஸ்டா போடுற‌து?

*இயற்கை ராஜி* said...

//ஷண்முகப்ரியன் said...
நீங்கள் சொல்வதையெல்லம் சிந்த்தித்துச் சீர் தூக்கிப் பார்க்கும் கல்வியை நாம் முதலில் மாணவர்களுக்கு அளித்திருக்கிறோமா,//
இதையெல்லாம் சிந்திக்க‌த் தேவையில்லைங்க‌...Datas collect.ப‌ண்ணாலே போதுமே

*இயற்கை ராஜி* said...

@கலையரசன்..... ந‌ன்றிங்க‌... எத்த‌னை கால‌ம் தான் ஏமாற்றுவார் இந்த‌ நாட்டிலே:-)

*இயற்கை ராஜி* said...

//sarathy said...
எங்கள மாதிரி முன்னாள் மாணவர்களிடம் கூட
கேட்கலாம் னு ஏன் நீங்க
சொல்லவே இல்ல...
//


இந்த‌ விவ‌ர‌ம் எல்லாம் வேணும்ன்னுதான் சொல்லியிருக்கேன்.எங்க‌ கிடைக்கும்ன்னு சொல்ல‌லைங்க‌...எனிவே இப்போ சேர்த்துட்டேன்.. மிக்க‌ ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

@ அன்பு..ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

வ‌ருகைக்கு ந‌ன்றி MayVee

*இயற்கை ராஜி* said...

எம்.எம்.அப்துல்லா said...
//வாழ்க்கையில் ஜொலிக்க‌ வாழ்த்துக்க‌ள்‌ //

வழிமொழிகின்றேன் .//

நான் மீண்டும் வ‌ழிமொழிகிறேன்:-)

Anonymous said...

இந்திய மொழிகளில் முதன் முறையாக.

முதல் இந்திய மின்னணுவியல் தரவுத்தாள் தளம்

தமிழ் தரவுத்தாள் தளம்

www.tamildata.co.cc

First Electronics Engineering Resource in Tamil

Unknown said...

Great article! thanks for sharing. Also refer collegezippy.com to find more colleges easily...