பொஸசிவ் பெற்றோரா நீங்கள்?

Friday, January 1, 2010
நம் உறவுகளும்,நட்புகளும் நம் மீதும் அன்பைப் பொழிவதென்பவது மிக அருமையான ஒரு விஷயம்.அத்தகைய ஒரு விஷயமும் சில நேரங்களில் சிலரது வாழ்வைப் பந்தாடிவிடுகிறது. அந்த பாசத்தினால் சூழ்நிலைக் கைதிகளாகி அச்சிறையிலிருந்து மீள முடியாமல் பாதாளத்திற்கே போகும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
அப்படியான ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை இது.

என் தோழி ஒருத்தி.. தமிழகத்தின் ஒரு சிறு நகரில் பிறந்து,வாழும் ஒரு சராசரிப் பெண். பெற்றோருக்கு ஒரே பெண். அதனால் வீட்டில் கிடைக்கும் அன்பும் கவனிப்பும் மிக மிக அதிகம். மகளின் அனைத்து நடவடிக்கைகளிலும் பெற்றோரின் தலையீடு இருக்கும். அவள் பிரஷ் செய்யும் பேஸ்ட் தொடங்கி,தூங்கும் பெட் வரை பெற்றோரின் தேர்வாகவே இருக்கும். இவளது விருப்பங்களை வெளிப்படுத்தினாலும் அவை "உனக்கு அது நல்லதல்ல.நாங்க உன் மேல உயிரையே வச்சிருக்கோம்..உனக்குத் தீங்கு செய்வோமா? சொல்வதை கேள்" என அடக்கப்படுவாள். அவர்கள் அவளுக்கு தேர்ந்தெடுப்பவை பெஸ்ட் ஆகவே இருக்கும் என்பதும் உண்மை.
அவளுக்குள்ளே ஆயிரம் திறமைகள் ஒளிந்திருந்தன. படிப்பா,விளையாட்டா,ஓவியமா,கோலமா அனைத்திலும் முன் நிற்பாள்.ஆனால் படிப்பைத்தவிர வேறு எதிலும் அவள் பெற்றோர் அவளை ஊக்குவிக்கவில்லை. விளையாட்டில் கலந்துகொண்டால் ஏதாவது அடிபட்டு விடும். பனியில கோலம் போட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது போன்ற பலப்பல காரணங்கள் அவள் பெற்றோரிடம் இருந்தது.

அவளின் சின்ன சின்ன ஆசைகளை(அந்த வயதில் அதெல்லாம் மிகப்பெரிய ஆசைகளாய்த் தோன்றும்) யும் நாங்கள் எங்களால் முடிந்தவரை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் நிறைவேற்றுவோம்.
பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக் காலம் வந்ததும் நாங்கள் எல்லோரும் தகுதிக்கேற்றக் கல்லூரியைத் தேடி கிளம்பிவிட்டோம்.ஆனால் அவள் வசித்த ஊரில் கல்லூரி இல்லை என்பதால், தன் மகளை வெளியூருக்கு படிக்க அனுப்ப பயந்த பெற்றோர் அவளைக் கல்லூரியில் சேர்க்கவேயில்லை. அங்கேயே இருந்த ஒரு கணினி கல்விக்கூடத்தில் சேர்ந்தாள்.இத்தனைக்கும் பள்ளியில் அவள் பெற்ற மதிப்பெண் 90%.பெற்றோர் அங்கும் அவளைக் குழந்தை போலவே நடத்தியிருக்கிறார்கள்.அவளை அழைத்துச் சென்று கல்விக்கூடத்தில் விட்டு,வகுப்பு முடியும்வரை காத்திருந்து பின் வீட்டுக்கு அழைத்துப் போவது எனத் தொடர்ந்திருக்கிறது.அந்நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியததால், அப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பழித்தும், அவள் பெற்றோர் அப்படி இருப்பது இவளின் ஒழுக்கத்தின் மீதான நம்பிக்கையின்மையால்தான் எனக் கதை உலவத் தொடங்கியிருக்கிறது.

அதைப் பற்றி கவலையுறாமல் படிப்பை நல்ல படியாகவே முடித்தாள்.வழக்கம் போல வேலைக்குப் போவதும் எதிர்க்கப் பட்டது.அதனால் வீட்டிலேயே முடங்கினாள்.

திருமணத்திற்கு வரன் பார்த்தார்கள்.அவர்கள் ஊரிலேயே வரன் வேண்டும் எனத்தேடினார்கள். அது சிறிய ஊர்.அங்கிருந்த படித்தவர் எல்லாம் வெளியூரிலேயே இருந்தனர்.அதனால் அந்த ஊரிலேயே இருந்த‌, எந்த வேலையிலும் இல்லாத‌ ஒருவருக்கு மணம் செய்வித்தனர்.
திருமணம் முடிந்து சில காலத்தில், அவளது கணவருக்குத் தானும் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றி வேலை தேடத் தொடங்கினார்.100km தொலைவிலுள்ள ஒரு ஊரில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் அவளது பெற்றோருக்கு மகளை அவருடன் அனுப்ப மனமில்லை.தனியே வெளியூரில் தங்கி வேலைப் பார்த்த அவருக்குத் தன் மனைவியைத் தன்னுடன் வைத்துக்கொள்ளும் ஆசையால் இவளை வற்புறுத்தி அழைத்திருக்கிறார்.இவள் மனதில் ஆசை இருப்பினும் பெற்றோரை மீற முடியாமல் மறுத்து விட்டாள்.தனிமரமாகவே நிற்கிறாள்.அவள் கணவர் மனைவியைப் பிரிந்து,இத்தனைப் பிரச்சினைகளால் பலத் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டாராம்.இது பெற்றோருக்குத் தெரிந்தால் விவாகரத்து வரை போய்விடுமோ எனப் பயத்தில் இருக்கிறாள் தோழி.

இப்போது யாருக்கும் நிம்மதி இல்லை.ஆனால் அவர்கள் எல்லோரும் நினைப்பது " நான் செய்வதே சரி.என் பக்கமே நியாயம்
"
இத்தனைப் பேரின் நிம்மதி தொலைந்தது, மனிதர்கள் குற்றமா? அல்லது மனிதர்கள் ஒருவர்மேல் ஒருவர் வைத்த அன்பின் குற்றமா?

44 comments:

ஈரோடு கதிர் said...

புத்தாண்டில் நல்லதொரு இடுகைக்கு வாழ்த்துகள் ராஜி...

பாவமாய் இருக்கிறது உங்கள் தோழியின் வாழ்க்கை

//மனிதர்கள் குற்றமா?
அன்பின் குற்றமா?//

நல்ல கேள்வி...

Anonymous said...

மிக அவசியமான பதிவு ராஜி, பெற்றொரால் அவதிபடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அன்பு அவஸ்தை - தொல்லை..

cheena (சீனா) said...

அன்பின் ராஜி

அன்பு அளவிற்கு மீறினால் இப்படித்தான் - பெண்களும் பெற்றோரின் கருத்துக்கு மாறாகப் பேசப் பயப்படுகிறார்கள்.

என்ன செய்வது . அளவு மீறுதல் தான் குற்றம்

நல்வாழ்த்துகல் ராஜி

mvalarpirai said...

இந்த மாதிரி நிகழ்வுகள் தமிழ் நாட்டில் ஏராளம்.

வைரமுத்துவின் வரிகள்

ஜந்து வயது வரை பிள்ளைகளுக்கு பெற்றோர் வேலைகாரர்கள்.
ஜந்து வயது முதல் பதினாறு வரை பெற்றோர்களுக்கு பிள்ளைகள் வேலைகாரர்கள்.
பதினாறு முதல் பாகம் பிரிக்கும் வரை தோழர்கள்
அதற்கு பிறகு தூரத்து உறவுகள்

இதை பெற்றோர்கள் புரிந்து கொண்டால் நல்லது நடக்கும்

SK said...

அருமையான தொடக்கம். புத்தாண்டில்.

பெற்றோர்கள் இதை புரிந்து கொண்டால் ரொம்பவே நல்லது. மேலும் உங்கள் கண்ணோட்டத்தையும் பாராட்டுகிறேன். பெற்றோர்கள் குழந்தைகள் மீதான பாசம் என்ற பார்வைக்காக.. :-)

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்ல பதிவு, ராஜி.

பெரும்பாலும் பென் குழந்தைகள் மீது தினிக்கப்படும் அன்பே ஒரு வன்முறைதான்.

உனக்குப் பிடிச்சிருக்கா என யாரும் கேட்பதில்லை. பதிலாக உனக்கு இது நல்லா இருக்கும் என திணிக்கப்படுகிறது.

தங்கள் சொந்த முடிவுகளையும் அதற்கான விளைவுகளையும் ஏற்றுக் கொள்ளப் பழக வாய்ப்பே தருவதில்லை.

கண்ணகி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.இது பெற்றோரின் தவறுதான். குழந்தைகள் நம்மிலிருந்து வந்தவர்கள் மட்டுமே.நம் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றும் ரோபோக்கள் அல்ல.இந்தப்பெண்ணும் இருவரையும் பேலன்ஸ் பண்ணி கொண்டு வரவேண்டும். இருவரில் யாரைத்தவிர்த்தாலும் காயம்தான்.

அபி அப்பா said...

இது பத்தி விலாவாரியா நிறைய பேசலாம். இதிலே யார்மேல குத்தம் அப்படின்னு எதுவுமே சொல்ல முடியாது. நதியா, சிவாஜி நடிச்ச படம் கூட அது போல ஒன்னு இருக்கு. பின்ன இது பத்தி நிறைய பேசுவோம் ராஜி!

நல்ல பதிவு! புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜி!!!

☀நான் ஆதவன்☀ said...

இதைப் பார்க்கும் போது உங்கள் தோழி குழந்தையா? இல்லை அந்த பெற்றோர் குழந்தையா? என்று தெரியவில்லை(நடவடிக்கையில்).

எதுவுமே அதிகமானால் திகட்டும், கடைசியில் பிரச்சனையிலும் முடியும் :(

புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் தோழிக்கும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆச்சரியம் தோழி.. பெற்றோரால் பழி வாங்கப்படும் குழந்தைகளின் ஆசைகள் பற்றி எழுதலாம் என்று எண்ணியிருக்கும் நேரத்தில் உங்களுடைய இடுகை.. அருமையான, அவசியமான இடுகை..

சுசி said...

முதலில் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இதே பிரச்சனையை எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்க அனுபவிச்சு கிட்டு இருக்காங்க.

எனக்கென்னமோ அத நேர்ல பாக்கிறதால பெத்தவங்க பிள்ளைங்கள அன்பால வாழ வைக்கணும், கட்டிப்போடக் கூடாதுன்னுதான் தோணுது :(

நட்புடன் ஜமால் said...

அன்பு அன்பாய் வெளிப்படனும்

அதி-கார-மாய் வந்தால் இப்படித்தான்

gayathri said...

alavukku minjinaal amuthamum nanju.
Ambum appadi than

sivanes said...

"தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன்" அதைப் புரியாத பெற்றோரின் அன்புத்தொல்லையால் பரிதாபமாக அந்தத்தோழி துன்பப்படுகிறார், இப்படிப்பட்ட பெற்றோர் முதலில் திருந்த வேண்டும், நல்ல படைப்பு தோழி.

Thamiz Priyan said...

நல்ல பதிவு இயற்கை. இதில் எனக்கு கூட நல்ல ‘அனுபவம்’ இருக்கு.

Rajalakshmi Pakkirisamy said...

Good Post madam

கண்மணி/kanmani said...

மூட நம்பிக்கைகளைப் போல இது ஒரு மூடப் பாசம்
மகளின் வாழ்வு சந்தோஷமா இருக்கனும் என்றுதான் எந்தப் பெற்றோரும் நினைப்பர்.
இவர்கள் இன்னும் சீரியல் சினிமா வாழ்க்கையை நிஜம்னு நம்புறவங்க போல

sarvan said...

good post.

அண்ணாமலையான் said...

ஏம்ம இத அடிப்படையா வச்சித்தான் தெலுகுல ஒரு படம் வந்து தமிழ்ல உனக்கும் எனக்கும்னு ரீமேக் ஆனது..
2010ல இது த்ரீமேக்கா? (உண்மையா இருந்தாலும்)
சரி என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

குறை ஒன்றும் இல்லை !!! said...

மகளின் அனைத்து //நடவடிக்கைகளிலும் பெற்றோரின் தலையீடு இருக்கும். அவள் பிரஷ் செய்யும் பேஸ்ட் தொடங்கி,தூங்கும் பெட் வரை பெற்றோரின் தேர்வாகவே இருக்கும். இவளது விருப்பங்களை வெளிப்படுத்தினாலும் அவை "உனக்கு அது நல்லதல்ல.நாங்க உன் மேல உயிரையே வச்சிருக்கோம்..உனக்குத் தீங்கு செய்வோமா? //

ஈரோட்டில ஒரு சந்தோசி சுப்ரமணியா?

Subha said...

மிகவும் வருத்தப்பட கூடிய விசயம்.

sindhusubash said...

படிச்சிட்டு பல பேரை நினைக்கவெக்குது.

அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் விஷம் தான்னு எப்ப தான் அந்த பெற்றோர் புரிஞ்சிக்க போறாங்களோ.

*இயற்கை ராஜி* said...

ஈரோடு கதிர் said...
புத்தாண்டில் நல்லதொரு இடுகைக்கு வாழ்த்துகள் ராஜி...

பாவமாய் இருக்கிறது உங்கள் தோழியின் வாழ்க்கை

//மனிதர்கள் குற்றமா?
அன்பின் குற்றமா?//

நல்ல கேள்வி.../

ம்ம்ம்..ப‌தில் தெரியா கேள்வி..அதுதான் கொடுமை

*இயற்கை ராஜி* said...

/மயில் said...
மிக அவசியமான பதிவு ராஜி, பெற்றொரால் அவதிபடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அன்பு அவஸ்தை - தொல்லை../

ம்ம்..வ‌ருகைக்கு ந‌ன்றி.அதிக‌மான அன்பும் சில‌ நேர‌ம் ஆப‌த்தில் முடிகிற‌து

*இயற்கை ராஜி* said...

/cheena (சீனா) said...
அன்பின் ராஜி

அன்பு அளவிற்கு மீறினால் இப்படித்தான் - பெண்களும் பெற்றோரின் கருத்துக்கு மாறாகப் பேசப் பயப்படுகிறார்கள்.

என்ன செய்வது . அளவு மீறுதல் தான் குற்றம்

நல்வாழ்த்துகல் ராஜி/

ந‌ன்றி ஐயா

*இயற்கை ராஜி* said...

/ mvalarpirai said...
இந்த மாதிரி நிகழ்வுகள் தமிழ் நாட்டில் ஏராளம்.

வைரமுத்துவின் வரிகள்

ஜந்து வயது வரை பிள்ளைகளுக்கு பெற்றோர் வேலைகாரர்கள்.
ஜந்து வயது முதல் பதினாறு வரை பெற்றோர்களுக்கு பிள்ளைகள் வேலைகாரர்கள்.
பதினாறு முதல் பாகம் பிரிக்கும் வரை தோழர்கள்
அதற்கு பிறகு தூரத்து உறவுகள்

இதை பெற்றோர்கள் புரிந்து கொண்டால் நல்லது நடக்கும்/

ம்ம்ம்..வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/SK said...
அருமையான தொடக்கம். புத்தாண்டில்.

பெற்றோர்கள் இதை புரிந்து கொண்டால் ரொம்பவே நல்லது. மேலும் உங்கள் கண்ணோட்டத்தையும் பாராட்டுகிறேன். பெற்றோர்கள் குழந்தைகள் மீதான பாசம் என்ற பார்வைக்காக.. :-)

புத்தாண்டு வாழ்த்துக்கள்./

ந‌ன்றி SK. புத்தாண்டு வாழ்த்துக்கள்

*இயற்கை ராஜி* said...

/வடகரை வேலன் said...
நல்ல பதிவு, ராஜி.

பெரும்பாலும் பென் குழந்தைகள் மீது தினிக்கப்படும் அன்பே ஒரு வன்முறைதான்.

உனக்குப் பிடிச்சிருக்கா என யாரும் கேட்பதில்லை. பதிலாக உனக்கு இது நல்லா இருக்கும் என திணிக்கப்படுகிறது.

தங்கள் சொந்த முடிவுகளையும் அதற்கான விளைவுகளையும் ஏற்றுக் கொள்ளப் பழக வாய்ப்பே தருவதில்லை.
/

க‌ர‌க்ட் அண்ணாச்சி.அடுத்த‌ த‌லைமுறைக்காவ‌து இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ங்க‌ள் இல்லாமலிருக்கும் என ந‌ம்புவோம்

*இயற்கை ராஜி* said...

/kannaki said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.இது பெற்றோரின் தவறுதான். குழந்தைகள் நம்மிலிருந்து வந்தவர்கள் மட்டுமே.நம் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றும் ரோபோக்கள் அல்ல.இந்தப்பெண்ணும் இருவரையும் பேலன்ஸ் பண்ணி கொண்டு வரவேண்டும். இருவரில் யாரைத்தவிர்த்தாலும் காயம்தான்./

க‌ருத்துக்கும் வ‌ருகைக்கும் ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/அபி அப்பா said...
இது பத்தி விலாவாரியா நிறைய பேசலாம். இதிலே யார்மேல குத்தம் அப்படின்னு எதுவுமே சொல்ல முடியாது. நதியா, சிவாஜி நடிச்ச படம் கூட அது போல ஒன்னு இருக்கு. பின்ன இது பத்தி நிறைய பேசுவோம் ராஜி!

நல்ல பதிவு! புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜி!!!/

புத்தாண்டு வாழ்த்துக்கள்

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
இதைப் பார்க்கும் போது உங்கள் தோழி குழந்தையா? இல்லை அந்த பெற்றோர் குழந்தையா? என்று தெரியவில்லை(நடவடிக்கையில்).

எதுவுமே அதிகமானால் திகட்டும், கடைசியில் பிரச்சனையிலும் முடியும் :(

புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் தோழிக்கும்./

புத்தாண்டு வாழ்த்துகள்

*இயற்கை ராஜி* said...

கார்த்திகைப் பாண்டியன் said...
ஆச்சரியம் தோழி.. பெற்றோரால் பழி வாங்கப்படும் குழந்தைகளின் ஆசைகள் பற்றி எழுதலாம் என்று எண்ணியிருக்கும் நேரத்தில் உங்களுடைய இடுகை.. அருமையான, அவசியமான இடுகை../

எழுதுங்க‌ தோழா.. அவ‌சிய‌மான‌துதான் அது

*இயற்கை ராஜி* said...

/சுசி said...
முதலில் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இதே பிரச்சனையை எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்க அனுபவிச்சு கிட்டு இருக்காங்க.

எனக்கென்னமோ அத நேர்ல பாக்கிறதால பெத்தவங்க பிள்ளைங்கள அன்பால வாழ வைக்கணும், கட்டிப்போடக் கூடாதுன்னுதான் தோணுது :(/

நன்றிங்க...புத்தாண்டு வாழ்த்துக்கள்..என‌க்கு அந்த‌ப் பெற்றோரை நினைத்தாலும் பாவ‌மாய்த்தான் தோணும்

*இயற்கை ராஜி* said...

/நட்புடன் ஜமால் said...
அன்பு அன்பாய் வெளிப்படனும்

அதி-கார-மாய் வந்தால் இப்படித்தான்/

ம்ம்..ந‌ல்ல‌ வார்த்தை விளையாட்டு அண்ணா:)

*இயற்கை ராஜி* said...

/ gayathri said...
alavukku minjinaal amuthamum nanju.
Ambum appadi thaந்/

ம்ம்ம்..ஆமாம் காய‌த்ரி

*இயற்கை ராஜி* said...

/ சிவனேசு said...
"தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன்" அதைப் புரியாத பெற்றோரின் அன்புத்தொல்லையால் பரிதாபமாக அந்தத்தோழி துன்பப்படுகிறார், இப்படிப்பட்ட பெற்றோர் முதலில் திருந்த வேண்டும், நல்ல படைப்பு தோழி./

வ‌ருகைக்கு ந‌ன்றி தோழி

*இயற்கை ராஜி* said...

/தமிழ் பிரியன் said...
நல்ல பதிவு இயற்கை. இதில் எனக்கு கூட நல்ல ‘அனுபவம்’ இருக்கு.
/

வாங்க..வாங்க.. பெரியவங்க எல்லாம் என் பிளாக் பக்கம் வந்து இருக்கீங்க.:-)))))

....ம்ம்.. ந‌ல்ல அனுப‌வ‌மோ

*இயற்கை ராஜி* said...

/Rajalakshmi Pakkirisamy said...
Good Post madaம்/

ந‌ன்றி மேட‌ம்

*இயற்கை ராஜி* said...

/கண்மணி said...
மூட நம்பிக்கைகளைப் போல இது ஒரு மூடப் பாசம்
மகளின் வாழ்வு சந்தோஷமா இருக்கனும் என்றுதான் எந்தப் பெற்றோரும் நினைப்பர்.
இவர்கள் இன்னும் சீரியல் சினிமா வாழ்க்கையை நிஜம்னு நம்புறவங்க போல/

வாங்க‌..வ‌ருகைக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/sarvan said...
good post./

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/ அண்ணாமலையான் said...
ஏம்ம இத அடிப்படையா வச்சித்தான் தெலுகுல ஒரு படம் வந்து தமிழ்ல உனக்கும் எனக்கும்னு ரீமேக் ஆனது..
2010ல இது த்ரீமேக்கா? (உண்மையா இருந்தாலும்)
சரி என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..../

இது 2010 ரீமேக் இல்ல‌ங்க‌.. லேட் 1980s ரீமேக்.ரொம்ப‌ வ‌ருஷ‌மா இது ந‌ட‌க்குது.

வ‌ருகைக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
மகளின் அனைத்து //நடவடிக்கைகளிலும் பெற்றோரின் தலையீடு இருக்கும். அவள் பிரஷ் செய்யும் பேஸ்ட் தொடங்கி,தூங்கும் பெட் வரை பெற்றோரின் தேர்வாகவே இருக்கும். இவளது விருப்பங்களை வெளிப்படுத்தினாலும் அவை "உனக்கு அது நல்லதல்ல.நாங்க உன் மேல உயிரையே வச்சிருக்கோம்..உனக்குத் தீங்கு செய்வோமா? //

ஈரோட்டில ஒரு சந்தோசி சுப்ரமணியா?/

சேல‌த்துல‌ ஒரு சந்தோசி சுப்ரமணி:-))

*இயற்கை ராஜி* said...

/
சுபா said...
மிகவும் வருத்தப்பட கூடிய விசயம்./

ம்ம்ம்ம்

*இயற்கை ராஜி* said...

/ sindhusubash said...
படிச்சிட்டு பல பேரை நினைக்கவெக்குது.

அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் விஷம் தான்னு எப்ப தான் அந்த பெற்றோர் புரிஞ்சிக்க போறாங்களோ.
/

புரிஞ்சிக்க‌ணும்:-(