என்+(அவ)னிடம் ஒரு கேள்வி

Tuesday, March 16, 2010



நீ பார்க்க மாட்டாய் என்றாலும்
உனக்குப் பிடித்த ஆடைகளையே
தேர்வு செய்யும் என் கரங்களுக்கும்,


நீ அழைக்கமாட்டாய் எனத் தெரிந்தும்
அடிக்கடி அலைபேசியை
நோக்கும் என் கண்களுக்கும்,


நீ பேசும் சில வார்த்தைகளையும்
நிரப்பி பூட்டிக் கொள்ள
முயலும் என் செவிகளுக்கும்


உன்னைத் தெரியாதவர் எனத்தெரிந்தும்
அவரிடமும் உன்னைப் பற்றியே
பேசும் என் இதழ்களுக்கும்


கடிவாளம் போட நீ வரும் நாள் எப்போது:-)






டிஸ்கி: (மக்களே.. கவிதை எழுதினா அனுபவிக்கணும்..ஆராய்ஞ்சி போட்டு குடுக்க பிளான் போடறது நெம்ப தப்பு)




.

27 comments:

சிட்டுக்குருவி said...

்வந்துட்டேன்

நல்லா இருக்கே எனக்காக எழுதிய கவிதை

*இயற்கை ராஜி* said...

வாங்க.. கவிதா.. உங்களுக்கு எழுதினது உங்களுக்கு பிடிச்சிருக்கா?:-)

Anonymous said...

ராஜி, நல்லாத்தானே இருந்தே? ம்ம் வயசுகோளாறு :))

ஈரோடு கதிர் said...

ராஜி..
கவிதை நல்லாயிருக்கு

//சிட்டுக்குருவி said...
நல்லா இருக்கே எனக்காக எழுதிய கவிதை
//

என்றா கொடுமை இது!!!!???

☀நான் ஆதவன்☀ said...

:-))) நல்லாயிருக்குங்க. சீக்கிரமே கடிவாளம் போடுற நாள் வரட்டும் :)

பிரேமா மகள் said...

ராஜி... என்னம்மா பிரச்சனை.. வீட்டில் சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லலாமா?

மதுரை சரவணன் said...

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராஜி..
கவிதை நல்லாயிருக்கு

Anonymous said...

எப்போது எப்போது???

சிட்டுக்குருவி said...

//உங்களுக்கு எழுதினது உங்களுக்கு பிடிச்சிருக்கா?://

ரொம்ப பிடிச்சிருக்கே

கண்ணகி said...

??????......அழகான வெளிப்பாடு...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//க‌மெண்ட் போடாம‌ போக‌ மாட்டீங்க‌ன்னு தெரியும்.ஆனாலும் நியாப‌க‌ப்ப‌டுத்த‌றது என் க‌ட‌மை.:-)//

அதே மாதிறி உங்க கல்யாண மேட்டருக்கும் இது ஒரு வகையான நினைவூட்டலோ !!!! ஏங்க புள்ளைய பெத்தவங்களே இனியாச்சும் சூதானாம மாப்பிளைய பாக்க ஆரம்பிங்க !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//உன்னைத் தெரியாதவர் எனத்தெரிந்தும்
அவரிடமும் உன்னைப் பற்றியே
பேசும் என் இதழ்களுக்கும்//

இப்படி பிளாக்கில கவிதை(!!??!!) எழுதறத பத்தியா?

ஆயில்யன் said...

//மக்களே.. கவிதை எழுதினா அனுபவிக்கணும்..ஆராய்ஞ்சி போட்டு குடுக்க பிளான் போடறது நெம்ப தப்பு)///

முதல்ல இது கவிதையான்னு ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டிருக்கோம் அதுக்குள்ள நீங்களாவே கவிதைன்னு கமிட் ஆக கூடாது!

நல்லா இருக்கு :))

குறை ஒன்றும் இல்லை !!! said...

இந்த வார பதிவுலக கிசுகிசு : கல்யாணம் பண்ணிக்கொள் எனக்கேட்ட பெற்றோருக்கும், அண்ணாவுக்கு இப்போ என்ன அவசரம் என பார்மலாக சொன்னதை ப்ராப்பராக குடும்பம் பாலோ செய்வதால் இப்படி கவிதை மூலம் நினைவூட்டுவதாக வதந்தி !!! நான் உங்களை சொல்லல பொதுவா சொன்னேன் !!!








நீங்க மீள் இடுகை தான் போட்டிருப்பீங்க!!ஹி ஹி ஹி .. இது நம்ம ஸ்டைல் மீல் பின்னூட்டம் ஆனா உங்க இடுகைக்கு நல்லாவே பொருந்தும் !!!

விக்னேஷ்வரி said...

நல்ல வேளை, டிஸ்கிலேயும், லேபிள்லேயும் கவிதைன்னு போட்டீங்க ராஜி. ;)

காதல் பொங்குது, யாருக்காக...

நல்லாருக்கும்மா.

க.பாலாசி said...

அந்த கொயந்த படம் என்னாத்துக்கு???

//நீ பேசும் சில வார்த்தைகளையும்
நிரப்பி பூட்டிக் கொள்ள
முயலும் என் செவிகளுக்கும்//

அட..அட...

நட்புடன் ஜமால் said...

சீக்கிரமே ஆ(நா)ள் வரும் ...

டிஸ்கி போட்டதாலதான் ஏதோ மேட்டர் இருக்குன்னே விளங்குது...

நசரேயன் said...

//கடிவாளம் போட நீ வரும் நாள் எப்போது:-)//

நீங்க கவிதை எழுதுவதை நிறுத்தும் போது????

சுசி said...

அடடடடா.. இதுதாங்க காதல் !!!

Subha said...

Kavithai super Raaji..Ithai anubavikiravangalaala mattumthan ippadi elutha mudiyum :)

பனித்துளி சங்கர் said...

கலக்கல் நண்பரே !

மீண்டும் வருவான் பனித்துளி !

அன்புடன் அருணா said...

:) நல்லா கேட்டுருக்கீங்க!

Princess said...

romba cute saki..

unnavan enga irukaro unna theditu..!

;)

Venkatesh R said...

கவிதை நல்ல இருக்குங்க

அபி அப்பா said...

// மயில் said...
ராஜி, நல்லாத்தானே இருந்தே? ம்ம் வயசுகோளாறு :))

//

அதானே! சீக்கிரம் கால்கட்டு போட்டுடுவோம்! எந்த திசையிலே தங்க மச்சான் இருக்கார்ன்னு லைட்டா கோடி காமிச்சா போதும். ஆள் விட்டு தூக்கிடுவோம்ல:-))

ursula said...

நீ பார்க்க மாட்டாய் என்றாலும்
உனக்குப் பிடித்த ஆடைகளையே
தேர்வு செய்யும் என் கரங்களுக்கும்,


நீ அழைக்கமாட்டாய் எனத் தெரிந்தும்
அடிக்கடி அலைபேசியை
நோக்கும் என் கண்களுக்கும்,


நீ பேசும் சில வார்த்தைகளையும்
நிரப்பி பூட்டிக் கொள்ள
முயலும் என் செவிகளுக்கும்


உன்னைத் தெரியாதவர் எனத்தெரிந்தும்
அவரிடமும் உன்னைப் பற்றியே
பேசும் என் இதழ்களுக்கும்


கடிவாளம் போட நீ வரும் நாள் எப்போது:-)

kavithai kaathalai sonnalum, suthanthira thanmaiyai izhanthuvidukirathu.
matrapadi nanaraaga irukkirathu.

anbudan
ursularagav