எக்ஸாம் பூதம்ம்ம்ம்ம்

Thursday, May 27, 2010
இந்த எக்ஸாம் பூதத்த எனக்கு அனுப்பின நல்லவங்க ரெண்டு பேரு
நான் ஆதவன்
தாரணிப்பிரியா.

எனக்கு அனுப்பிட்டு நான் எப்பிடில்லாம் அழுவறேன்னு பார்த்து
சிரிக்கலாம்ன்னு பிளான் போட்டு வெயிட்டிங்ல இருக்காங்க‌.இதுக்கு மேலயும் எழுதலன்னா பூதத்தை விட்டு கடிக்க விட்டுடுவாங்க.. அதனால இதோ என்னை பயமுறுத்த முயன்ற‌ பூதத்தைப் பற்றின ஒரு அறிமுகம்..

கண்டிப்பான ஆசிரியர் குடும்பத்துல பிறந்ததால, படிப்பு மட்டுமே வாழ்க்கை என்னும் ஒரு பிம்பம்தான் சின்ன வயசுல எனக்கு தோற்றுவிக்கப்பட்டது.பள்ளிக்கு போக முன்னாடியே அண்ணா கூட சேர்ந்து அவன் படிக்கிறதெல்லாம் நானும் படிச்சிட்டதால சின்ன கிளாஸ்ல எல்லாம் எக்ஸாம்ஸ் பெரிசா பயமுறுத்தினதில்ல.தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மாலை 3 மணி நேரம் காலையில் அதிகாலை முதல் பள்ளிக்கு போகும் முன் ரெண்டு மணி நேரம் படிக்கணும்கிறது வீட்டில் கண்டிப்பான ரூல்.ஆனால் தேர்வு நாட்களில் கொஞ்சம் விதிமுறை தளர்த்தல்கள் உண்டு.படிக்க இஷ்டம்ன்னா படிக்கலாம்.இல்லன்னா விளையாடலாம் தூங்கலாம் அப்படின்னு.தேர்வு நாட்கள்ல அரை நாள் விடுமுறை வேறக் கிடைக்குமா..அதனால ரொம்ப ஜாலியான நாட்கள் அவை.தினமும் படிக்கிறது பள்ளிப் பாடம் மட்டுமில்லை.தமிழ் இலக்கியம்,அறிவியல் நூல்கள்,வரலாறு நூலகள்ன்னு எல்லாமும் படிக்கணும்.இதெல்லாம் படிக்கிறதால அவுட் ஆப் சிலபஸ் விவரங்களும் தேர்வில் எழுத முடியும்.அதெல்லாம் படிச்சி டீச்சர் எல்லாம் நிஜமாவே இந்தப் புள்ளக்கி ஏதோ தெரியும் போல இருக்குன்னு மார்க்கைப் போட்டுடுவாங்க.அப்படியே ஒரு பில்டப்ல காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்.‌



இப்பிடியே ஜாலியா போய்க்கிட்டு இருந்த நாட்களுக்கு எங்க அப்பா ஒரு ஆப்பு வச்சார்.9ம் வகுப்பு கூட்டிட்டு போயி அவர் பள்ளிக் கூடத்துலயே சேர்த்திட்டார்.அங்க என் அப்பாவோட பெட் ஸ்டூடன்ஸ் ரெண்டு அண்ணாக்கள் வேலை பார்த்தாங்க.ரெண்டு பேரும் கங்கணம் கட்டிக்கிட்டு என்னை கண்காணிப்பாங்க. தேர்வு அறைல பாதில வந்து எழுதற பேப்பர வாங்கிப் பார்த்து விடை தப்பா இருந்தா முறைச்சிட்டு போவாங்க.அப்பப்பா அந்த ரெண்டு வருஷத்துல இவங்க ரெண்டு பேரும் படுத்தின பாட்டுல எங்க அப்பாவோட கண்டிப்பு எல்லாம் பெரிசாவே தெரில.எக்ஸாம்ல கேள்விக்கு பதில் தெரியாதேன்னு பயப்பட்டத விட.. அய்யோ தப்பா எழுதினா இந்த அண்ணாங்ககிட்ட மாட்டிக்கணுமேங்கிறதே பெரிய கவலையா இருந்திச்சு..9வதுலயே இப்படின்னா பத்தாவதுல என்ன ஆகுமோன்னு பயந்திட்டு இருந்தேன்


10வதுல அரையாண்டுத்‌ தேர்வு வரைக்கும் தான் இந்த பயம் எல்லாம். அரையாண்டு விடுமுறையில‌ டைபாய்டும் மலேரியாவும் சேர்ந்து வந்திருச்சு. அதையெல்லாம் சரி பண்ணிகிட்டு திரும்ப ஸ்கூல் போகறதுக்குள்ள 3 ரிவிஷன் டெஸ்டும் முடிஞ்சி பப்ளிக் எக்ஸாம் வந்திருச்சு.உடம்பு சரியில்லாத புள்ளங்கிற கன்செஷன்ல எல்லா மிரட்டல்ல இருந்தும் ஒரு வருஷத்துக்கு எஸ்கேப் ஆயிட்டேன்.திரும்ப +2ல மிரட்டல்கள் ஆரம்பிக்கும் போது அந்த மாரியாத்தா அம்மை வடிவில வந்து காப்பாத்திட்டா..அப்போவும் பூதத்துல இருந்து எஸ்கேப் ஆயிட்டேன்.


அதுக்குள்ள எங்க அப்பா அம்மாக்கு படிப்பு விஷயத்துல‌ கண்டிப்பான வளர்ப்பு முறை எனக்கு சரிப்பட்டு வராதுன்னு புரிஞ்சிபோச்சு.காலேஜ்ல என்னை கண்டிக்கறவங்க யாரும் இல்லாம போயிட்டாங்க.ஆனால் காலேஜ்ல‌ நமக்கும் பொறுப்புன்னு ஒன்னு தலைகாட்டிடுச்சோ இல்ல நானே ரியல் பூதம் ஆயிட்டேனோ தெரியல‌‌.எக்ஸாம் பூதத்தை பிரண்டு ஆக்கிட்டேன்.அதுக்கப்புறம் இன்னிக்கு வரைக்கும் அது என் பிரண்டாத்தான் இருக்கு.


எக்சாம் பூத்துக்கு பயப்படாமயே காலம் முடிஞ்சிதுன்னு பார்த்தேன்.ஆனால் புராஜக்ட் ரிவ்யூ பூதம்ன்னு ஒண்ணு வந்திச்சு.ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ... நிஜமாவே ரிவ்யூ கமிட்டில இருக்கறவங்க எல்லாம் பூதமாய்த்தான் தெரியுவாங்க.. ரூம் போட்டு யோசிச்சி கேள்வி கேப்பாய்ங்களோ...அடசாமி.. கரெக்டா எங்க திணறுவேன்னு கரெக்டா கண்டுபிடிச்சு அதுலயே சுத்து சுத்து வருவாய்ங்க..வடிவேல் பார்த்திபன் கிட்ட படற பாட்டை விடக் கொடுமை அது..எக்ஸாம் பீவர்,எக்ஸாமோபோபியா எல்லாம் சேர்ந்து வரவைக்காம விட மாட்டாங்க...
ஹி..ஹி..ஆனாலும் நாங்க‌ ச‌மாளிப்போமில்ல‌.

இவ்ளோ பொல‌ம்பிட்டு என் ஸ்டூட‌ண்ஸ சும்மா விடுவேன்னு நினைக்க‌றிங்க‌? நோ..நோ.. நாம‌ ப‌ட்ட‌ க‌ஷ்ட‌த்துக்கு ப‌ழி வாங்கிறோமில்ல‌...:‍))

மேலும் இந்த எக்ஸாம் பூதத்தைப் ப‌ற்றிப் புகழ(!!??!!) நான் அழைப்ப‌து

டாக்ட‌ர் ரோகிணி,சுபா டீச்சர், கார்த்திகை பாண்டிய‌ன்.
மஹா
.

.

28 comments:

தாரணி பிரியா said...

நான் படிச்ச ஸ்கூல்ல எங்க பெரியப்பாதான் ஹெச்.எம். ஆனாலும் நான் அடங்கலை :).

//நானே ரியல் பூதம் ஆயிட்டேனோ தெரியல//

எதுக்கு இப்படி தேவையில்லாத சந்தேகம்


தொடரை தொடர அழைச்சவங்க எல்லாம் சூப்பர். மீ தி வெயிட்டிஸ் அன்டு நன்னீஸ் எழுதினதுக்கு :)

Unknown said...

உங்க ஸ்டூடண்ட்ஸ் எக்ஸாம் பூதத்த விட உங்களத்தான் பாத்து பயப்படுறாங்களாமே உண்மையா?? :))

Subha said...

//ஆனால் காலேஜ்ல‌ நமக்கும் பொறுப்புன்னு ஒன்னு தலைகாட்டிடுச்சோ இல்ல நானே ரியல் பூதம் ஆயிட்டேனோ தெரியல‌‌.எக்ஸாம் பூதத்தை பிரண்டு ஆக்கிட்டேன்.//

ROFTL :))))))))))

நர்சிம் said...

;)

சந்தனமுல்லை said...

/அடசாமி.. கரெக்டா எங்க திணறுவேன்னு கரெக்டா கண்டுபிடிச்சு அதுலயே சுத்து சுத்து வருவாய்ங்க..வடிவேல் பார்த்திபன் கிட்ட படற பாட்டை விடக் கொடுமை அது..எக்ஸாம் பீவர்,எ/

இது அப்படியே இன்டர்வியூவுக்கும் பொருந்தி வருதே!! :))

சுசி said...

நல்லா சிரிச்சேன்.. பூதத்த பத்தி படிச்சாலும் பயம் இல்லாம..

ஆயில்யன் said...

//படிப்பு மட்டுமே வாழ்க்கை என்னும் ஒரு பிம்பம்தான் சின்ன வயசுல எனக்கு தோற்றுவிக்கப்பட்டது//

பெரிய வயசுல என்னால் தோற்கடிக்கப்பட்டதுன்னு ஒரு ப்ளோவா வரவேண்டாமா?

ஆயில்யன் said...

//பள்ளிக்கு போக முன்னாடியே அண்ணா கூட சேர்ந்து அவன் படிக்கிறதெல்லாம் நானும் படிச்சிட்டதால//

அடடே!

ஆயில்யன் said...

//தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மாலை 3 மணி நேரம் காலையில் அதிகாலை முதல் பள்ளிக்கு போகும் முன் ரெண்டு மணி நேரம் படிக்கணும்கிறது வீட்டில் கண்டிப்பான ரூல்//

நல்லவேளை இந்த மாதிரி குடும்பத்துல நான் பொறக்கலயேன்னு ஆண்டவனுக்கு டாங்க்ஸ் சொல்லிக்கிடறேன் !

ஆயில்யன் said...

//.தினமும் படிக்கிறது பள்ளிப் பாடம் மட்டுமில்லை.தமிழ் இலக்கியம்,அறிவியல் நூல்கள்,வரலாறு நூலகள்ன்னு எல்லாமும் படிக்கணும்//

ஒஹோ!

ஆயில்யன் said...

//அவுட் ஆப் சிலபஸ் விவரங்களும் தேர்வில் எழுத முடியும்.அதெல்லாம் படிச்சி டீச்சர் எல்லாம் நிஜமாவே இந்தப் புள்ளக்கி ஏதோ தெரியும் போல இருக்குன்னு மார்க்கைப் போட்டுடுவாங்க.//

அதானே பார்த்தேன் சூட்சுமத்தை புரிஞ்சுக்கிட்டு படிச்சிருக்கீயளா? குட் குட்!

ஆயில்யன் said...

//அப்படியே ஒரு பில்டப்ல காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்.‌//


இங்க ஒரு சிறிய பிழை திருத்தம் - ஓட்டிட்டு இருந்தேன் வராது! ஓட்டிக்கிட்டு இருக்கேன்! - இதுதான் சரி !

Anonymous said...

அய்யோ ராமா த‌ப்பு த‌ப்பு ஒரு ப‌டிப்பாளி கூட‌ போய் பிர‌ண்ட் ஆகிட்டேனே! நீங்க‌ ஒரு ப‌டிப்ஸ்னு முனாடியே சொல்லிருந்தா நீங்க‌ அப்பாளிக்கா போயிருக்க‌லாம் நான் இப்பாளிக்கா போயிருப்பேன்.

ஆயில்யன் said...

//காலேஜ்ல என்னை கண்டிக்கறவங்க யாரும் இல்லாம போயிட்டாங்க.//


9 - 12 வரைக்கும் கண்டிச்சு பார்த்திருப்பாங்க இதுக்குமேல எக்கேடு கெட்டாச்சும் போகட்டும்ன்னு எல்லாரும் எஸ்ஸாகியிருக்ககூடும் என்பது எனது அவதானிப்பு

Anonymous said...

\\"இவ்ளோ பொல‌ம்பிட்டு என் ஸ்டூட‌ண்ஸ சும்மா விடுவேன்னு நினைக்க‌றிங்க‌? நோ..நோ.. நாம‌ ப‌ட்ட‌ க‌ஷ்ட‌த்துக்கு ப‌ழி வாங்கிறோமில்ல‌...:‍))"//


"யாம் பெற்ற‌ துன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம்" கொள்கை தான‌ ராஜி! வாழ்க‌ உன் கொள்கை வ‌ள‌ர்க‌ உன் பில்ட‌ப்

Anonymous said...

\\"தமிழ் இலக்கியம்,அறிவியல் நூல்கள்,வரலாறு நூலகள்"//

அப்டின்னா என்ன‌ ராஜி! எங்க‌ளுக்கு சில‌ப‌ஸ்ல‌ இருக்க‌ற‌தே தெரியாது! இன்னும் சில‌ருக்கு சில‌ப‌சே தெரியாது. என்ன‌ மாதிரி! பிசிக்ஸ் ப‌ரிட்சைக்கு உக்காந்து மேக்ஸ‌ ப‌டிப்பாய்ங்க‌.

கானா பிரபா said...

இவ்ளோ பொல‌ம்பிட்டு என் ஸ்டூட‌ண்ஸ சும்மா விடுவேன்னு நினைக்க‌றிங்க‌? நோ..நோ.. நாம‌ ப‌ட்ட‌ க‌ஷ்ட‌த்துக்கு ப‌ழி வாங்கிறோமில்ல‌...:‍))//

நீங்க ரொம்ப நல்லவங்க பாஸ்

கானா பிரபா said...

Blogger ஆயில்யன் said...

//தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மாலை 3 மணி நேரம் காலையில் அதிகாலை முதல் பள்ளிக்கு போகும் முன் ரெண்டு மணி நேரம் படிக்கணும்கிறது வீட்டில் கண்டிப்பான ரூல்//

நல்லவேளை இந்த மாதிரி குடும்பத்துல நான் பொறக்கலயேன்னு ஆண்டவனுக்கு டாங்க்ஸ் சொல்லிக்கிடறேன் !//

நான் நூற்றியெட்டு தேங்காயே ஒடைக்கிறேன் ஆண்டவனுக்கு

கானா பிரபா said...

/.தினமும் படிக்கிறது பள்ளிப் பாடம் மட்டுமில்லை.தமிழ் இலக்கியம்,அறிவியல் நூல்கள்,வரலாறு நூலகள்ன்னு எல்லாமும் படிக்கணும்//

ஓஹோ பெரிய நெசவாளர் குடும்பம் போல

கானா பிரபா said...

//அப்படியே ஒரு பில்டப்ல காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்.‌//

இருந்தேன்
இருக்கிறேன்
இருப்பேன்

சந்தனமுல்லை said...

/ கானா பிரபா said...

/.தினமும் படிக்கிறது பள்ளிப் பாடம் மட்டுமில்லை.தமிழ் இலக்கியம்,அறிவியல் நூல்கள்,வரலாறு நூலகள்ன்னு எல்லாமும் படிக்கணும்//

ஓஹோ பெரிய நெசவாளர் குடும்பம் போல/

பச்சை கலரு சிங்குச்சா...மஞ்ச கலரு சிங்குச்சா!! :))

*இயற்கை ராஜி* said...

சந்தனமுல்லை said...
/ கானா பிரபா said...

/.தினமும் படிக்கிறது பள்ளிப் பாடம் மட்டுமில்லை.தமிழ் இலக்கியம்,அறிவியல் நூல்கள்,வரலாறு நூலகள்ன்னு எல்லாமும் படிக்கணும்//

ஓஹோ பெரிய நெசவாளர் குடும்பம் போல/

பச்சை கலரு சிங்குச்சா...மஞ்ச கலரு சிங்குச்சா!! :))
//




என் சோகத்துல சிங்குச்சா அடிக்கிறீங்களா..ம்ம்.. எனக்கு சான்ஸ் கிடைக்காமயா போகும்

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... கலக்கல் பதிவு ராஜி.

நிஜமா நல்லவன் said...

:))

Thamiz Priyan said...

அழகான பதிவு! நன்றி கோயிஞ்சாமி!

Anonymous said...

எக்ஸாம் பூதத்தை பத்தி ஒரு பேய் எழுதுதேஏஏஏஏஏஏஏஏஎ!!
அடடே
ஆச்சரிய குறி !!!

ராஜி உனக்கு கவிதையா பதில் சொல்ல ட்ரையிங் :)

ஈரோடு கதிர் said...

அடடா....

செம கும்மி மிஸ்ஸாயிடுச்சு போல!!!

Iyappan Krishnan said...

நேத்து ஈரோடுல இருந்து வந்த ஒரு பூதத்தைப் பார்த்தேன். அது உன்னைப் பாத்து பயந்து வந்திருக்காமாம். பாவம்