என்ன‌ருகே நீ இருந்தும்...(2)

Friday, June 5, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் முத‌ல் ப‌குதி


சிஸ்ட‌ர்..இவ‌ங்க‌ கூட‌ வ‌ந்த‌வ‌ங்க‌ எங்க‌?இங்க‌ கூட்டிட்டு வாங்க‌..
ப‌ட‌ப‌ட‌ப்பான‌ சில‌ நிமிட‌ங்க‌ளுக்குப்பின்..

சார்..அவ‌ங்க‌ சீஃப் ரூம்ல‌ இருக்காங்க‌ என‌ ப‌தில் வ‌ந்த‌து..
oh..ok..நான் சீஃப் ரூம் வ‌ரைக்கும் போய்ட்டு வ‌ரேன்.தியேட்ட‌ருக்கு இன்ஃபார்ம் ப‌ண்ணீ கேஸ் ரெடி ப‌ண்ண‌ சொல்லுங்க‌.
சீஃப் ரூமிற்குள் நுழைந்தால்..
.. வாங்க‌ ராஜ்.Meet my brother Mr.Srinivasan.அங்கிருந்த‌வ‌ர் ப‌க்க‌ம் திரும்பி..
அண்ணா..இவ‌ர்தான் Dr.ராஜேஸ்வ‌ர‌ன்.ந‌ம்ம‌ ஹாஸ்பிட‌லோட‌ young and energetic chap.
என் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ரைப் பார்க்க‌ இன்ப‌ அதிர்ச்சி
சார்.. அங்கிளை என‌க்கு இன்ட்ர‌ட்யூஸ் ப‌ண்ண‌னுமா? அங்கிள்..என்னைத் தெரிய‌லியா.. பாண்டிய‌ன் அங்கிள் நான்..ஆன்ட்டியை ஐசியுவில‌ பாத்த‌தும் உங்க‌ளைத் தேடிட்டுதான் ஓடி வ‌ந்தேன்.
பாண்டியா...எப்ப‌டி க‌ண்ணு இருக்கே ..ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மா இருக்குப்பா உன்னைப் பார்க்க‌..அப்பா அம்மால்லாம் ந‌ல்லா இருக்காங்க‌ளா...
(பாண்டிய‌ன் என்ப‌து என் வீட்டில் கூப்பிடும் பெய‌ர்)

ம்ம்..எல்லாம் ந‌ல்லா இருக்காங்க‌ அங்கிள்.

ஓஓ... ரெண்டுபேரும் ஏற்க‌ன‌வே தெரிஞ்ச‌வ‌ங்க‌ளா...ச‌ந்தோஷ‌ம்.ச‌ரி அண்ணா..ஜ‌ன‌னி எங்கே?.என்ற‌து சீஃப் இன் குரல்..
வெளில‌தான் இருக்கா..ரிஷ‌ப்ஷ‌ன்ல‌ உக்காந்திருக்கா..பாவ‌ம் பொண்ணு ரொம்ப‌ சோர்ந்து போச்சி.. நான் தான் அம்மாவை வ‌ர‌ச்சொல்லி ஆக்ஸிடெண்ட்ல‌ மாட்டி விட்டுட்டேன்னு பொல‌ம்பிட்டு இருக்கா..

oh..so Sad ..அது என்ன ப‌ண்ணும் பாவ‌ம்..அவ‌ளை ஏன் அண்ணா த‌னியா விட்டீங்க‌..இருங்க‌ உள்ள கூப்பிட‌லாம்....
சிஸ்ட‌ர்... ஜ‌ன‌னின்னு ஒரு பொண்ணு ரிஷ‌ப்ஷ‌ன்ல‌ இருக்கும் கூட்டிட்டு வாம்மா..
அனைவ‌ரும் ஜ‌ன‌னிக்காய் காத்திருக்க‌...நானும் என் செல்ல‌ தேவ‌தையைக் காணும் சந்தோஷ‌த் த‌விப்பில் வினாடிக‌ளை விழுங்க‌
வேக‌மாய் திற‌ந்த‌ க‌த‌வினுள் அவ‌ச‌ர‌மாய் நுழைந்த ந‌ர்ஸ்..டாக்ட‌ர்..ஐசியு 2 ல‌ 5th bed patient க்கு திரும்ப‌ pain வ‌ந்திருச்சி..என‌ப் ப‌தைக்க‌,நான் இன்ட‌ர்ன‌ல் வே வ‌ழியா ஐசியுவுக்கு விரைய‌,வெளிக்க‌த‌வைத் திற‌ந்து என் தேவ‌தை சீஃப் ரூமினுள் பிர‌வேசிக்கிறாள்.
ஹ்ம்ம்ம்ம்..ஜ‌ன‌னியைக் காணாம‌லே என் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ நிமிட‌ங்க‌ள் ஆர‌ம்பித்த‌ன‌.
ஐசியு,ச‌ர்ஜ‌ரி என‌ என் ம‌ணித்துளிக‌ள் ம‌ர‌ணித்தாலும் ம‌ன‌தை நிறைத்த‌ என் ம‌யில்தேவ‌தையை ம‌றுக்க‌முடிய‌வில்லை:-(
என‌க்காய்ச் சில‌ நிமிட‌ம் கூட‌ இல்லாம‌ல் என்ன‌ வாழ்க்கை என‌ என்றுமில்லாச் ச‌லிப்பு என் தொழில்மீதே வ‌ந்த‌து.ஆனாலும் வேறுவ‌ழியின்றி.. ச‌ர்ஜ‌ன்ஸ் மீட்டிங்கிற்கு சீஃப் டாக்ட‌ருட‌ன் கிளம்பிய‌ நேர‌ம்,சீஃப் டாக்ட‌ரின் காரிலிருந்து காலையில் என் ம‌ன‌தைக் க‌லைத்த‌ பெண் இற‌ங்கிச் சென்றாள்.

அப்போ..அதுதான் ஜ‌ன‌னியா.. என் ம‌யில்குட்டியா!!!! ப‌ழைய‌ ந‌ட்பும்,அன்பும்தான் என்னைத் த‌டுமாற‌ வைத்த‌தா??

சார் ஜ‌ன‌னிதானே அது..ஆவ‌லை அட‌க்க‌ முடியாம‌ல் சீஃப் இட‌மே கேட்டுவிட்டேன்..
அவ‌ர், ஆமாம் ராஜ்..உங்க‌ளுக்கு அடையாள‌ம் தெரிய‌லையா...சின்ன‌ப் பொண்ணுல‌ பார்த்த‌தோ.கா‌லைல‌ருந்து இன்னும் அதுகிட்ட‌ பேச‌லையா...அண்ணா உங்க‌ ஃப்ர‌ண்ட்ஷிப் ப‌த்தி சொன்னார்.திக் ஃப்ர‌ண்ஸாமே..பிரிய‌வே மாட்டீங்க‌ளாம்..

ஆமாம் சார்..காலைல‌ இருந்து வ‌ந்த‌ கிரிடிக‌ல் கேஸ்க‌ளால பேச‌க்கூட‌முடியாம‌ போச்சு :-(.

anyway my dear boy..you should spare time for such important things.ஒரு டாக்ட‌ர்க்கு எந்த‌ அள‌வுக்கு profession முக்கிய‌மோ அதே அள‌வுக்கு personal lifeம் முக்கிய‌ம்..இல்லைன்னா லைஃப்ல‌ ஒரு ச‌லிப்பு வ‌ந்திடும்

ok sir.I will follow your advice.Now we have reached the meeting hall..

மீட்டிங் முடிந்து இர‌வு உட‌ல் ஓய்வைக் கேட்டாலும்,ம‌ன‌ம் ஆன்ட்டியின் உட‌ல் நிலையை ப‌ரிசோதிக்க‌ சொல்லிய‌து..ஓர‌த்தில் ஜ‌ன‌னியை ச‌ந்திக்கும் சாத்திய‌க்கூறுக‌ளையும் ஆராய்ந்த‌து.

so again back to hospital.

ஆன்ட்டியின் க‌ண்டிஷ‌ன் பார்த்து திருப்திய‌டைந்த‌ வேளையில்,கைபேசி ஒலித்த‌து.
அறை ந‌ண்ப‌னின் SMS
Cooking women didn't come today.Have dinner outside.
என்ற‌து.

ok.என‌ ரிப்ளை செய்துவிட்டு கேண்டீன் நோக்கி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினேன்
கேண்டீனில் மிக‌ச்சில‌ரே இருந்த‌ன‌ர்.அங்கே த‌னியாய் சோக‌மே உருவாய் அம‌ர்ந்திருந்தாள் ஜ‌னனி.
(தொட‌ரும்)

என்ன‌ருகே நீ இருந்தும் 3ம் ப‌குதி

.

28 comments:

Anbu said...

me the first

Anbu said...

ரொம்ப நல்லா இருக்கிறது அக்கா

தினேஷ் said...

:) அடுத்து எப்போ காதல சொல்வார் ?

*இயற்கை ராஜி* said...

thanks anbu:-)

*இயற்கை ராஜி* said...

//சூரியன் said...
:) அடுத்து எப்போ காதல சொல்வார் ?///

காத‌லில்தான் தேட‌வேண்டும் என்றில்லையே...அவ‌ர்க‌ள் சிறுவ‌ய‌து தோழ‌ர்க‌ள்.அவ‌ளைப் பார்க்கும் ஆர்வ‌த்திலும் தேட‌லாமே

தாரணி பிரியா said...

நல்ல எழுத்து நடை இயற்கை :)

நட்புடன் ஜமால் said...

\மீட்டிங் முடிந்து இர‌வு உட‌ல் ஓய்வைக் கேட்டாலும்,ம‌ன‌ம் ஆன்ட்டியின் உட‌ல் நிலையை ப‌ரிசோதிக்க‌ சொல்லிய‌து..ஓர‌த்தில் ஜ‌ன‌னியை ச‌ந்திக்கும் சாத்திய‌க்கூறுக‌ளையும் ஆராய்ந்த‌து.\\

ரொம்ப நல்லாயிருக்கு.

(தொடரும் போடலையோ ...)

புதியவன் said...

//என் ம‌ணித்துளிக‌ள் ம‌ர‌ணித்தாலும் ம‌ன‌தை நிறைத்த‌ என் ம‌யில்தேவ‌தையை ம‌றுக்க‌முடிய‌வில்லை:-(//

கதை நடுவில் கவிதை வரிகள் அழகு...தொடருங்கள்...

வினோத்குமார் said...

nice iyarkai

தேவன் மாயம் said...

நல்ல வேகமான நடை!! இப்போதைய அதிவேக உலகுக்கு ஏற்ற சொற்கள்!!மிக வேகமாக செல்கிறது கதை!!

Unknown said...

//என் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ரைப் பார்க்க‌ இன்ப‌ அதிர்ச்சி
சார்.. அங்கிளை என‌க்கு இன்ட்ர‌ட்யூஸ் ப‌ண்ண‌னுமா? அங்கிள்..என்னைத் தெரிய‌லியா.. பாண்டிய‌ன் அங்கிள் நான்..//

யாரு பாண்டியன்?

*இயற்கை ராஜி* said...

@ தாரணி பிரியா

ந‌ன்றிங்க‌ தார‌ணி...ரொம்ப‌ நாளா ஆளையே காணோம்?

*இயற்கை ராஜி* said...

//நட்புடன் ஜமால் said...
\மீட்டிங் முடிந்து இர‌வு உட‌ல் ஓய்வைக் கேட்டாலும்,ம‌ன‌ம் ஆன்ட்டியின் உட‌ல் நிலையை ப‌ரிசோதிக்க‌ சொல்லிய‌து..ஓர‌த்தில் ஜ‌ன‌னியை ச‌ந்திக்கும் சாத்திய‌க்கூறுக‌ளையும் ஆராய்ந்த‌து.\\

ரொம்ப நல்லாயிருக்கு.

(தொடரும் போடலையோ ...)//



இப்போ போட்டுட்டேன்:-(

*இயற்கை ராஜி* said...

@புதியவன்


க‌விஞ‌ர் க‌ரெக்டா க‌விதை வ‌ரிக‌ளை ர‌சிக்க‌ரீங்க‌ளா?

*இயற்கை ராஜி* said...

Thanks Vinothkumar

*இயற்கை ராஜி* said...

@thevanmayam

மிக்க‌ ந‌ன்றி Dr.தேவா

*இயற்கை ராஜி* said...

@கே.ரவிஷங்கர்


குறிப்பிட்ட‌த‌ற்கு ந‌ன்றி :-)ர‌விஷ‌ங்க‌ர்ஜி.ஒரு லைன் மிஸ் ஆயிடுச்சி:-(

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல எழுத்து நடை..:-))))

அபி அப்பா said...

புதிய தொடரா? குட் குட்! எத்தனை பாகம் எழுத உத்தேசம். ஏன்னா எல்லாம் முடிஞ்ச பின்னே ஒன்னா படிச்சிடுவேன் ஒரே மூச்சுல. எனக்கு சச்பென்ஸ் இருந்தா மண்டை தாங்காது அதனாலத்தான்!

Divyapriya said...

nallaa irukku kadhai...kadhai kalam vidhyaasamaa irukku...thodarunga...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கிறது

அன்புடன் அருணா said...

ம்ம்ம்..அப்புறம்? சீக்கிரம் சொல்லுங்க!!!

*இயற்கை ராஜி* said...

@ கார்த்திகை பாண்டிய‌ன்

ந‌ன்றி தோழா

*இயற்கை ராஜி* said...

//அபி அப்பா said...
புதிய தொடரா? குட் குட்! எத்தனை பாகம் எழுத உத்தேசம். ஏன்னா எல்லாம் முடிஞ்ச பின்னே ஒன்னா படிச்சிடுவேன் ஒரே மூச்சுல. எனக்கு சச்பென்ஸ் இருந்தா மண்டை தாங்காது அதனாலத்தான்!//


5 அல்ல‌து 6 பாக‌ம் வ‌ரும் அண்ணா.முடிச்ச‌தும் சொல்றேன் ப‌டிங்க‌.

*இயற்கை ராஜி* said...

@Divyapriya


Thanks Divya.

*இயற்கை ராஜி* said...

//T.V.Radhakrishnan said...
நல்லா இருக்கிறது//

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

@அன்புடன் அருணா

இதோ சொல்லிட‌றேன்:-))

ப்ரியமுடன் வசந்த் said...

இண்ட்ரெஸ்டிங்கா போகுது