தீர்க்கக் கண்களும் தீராக் காதலும்
குறு நகை இதழும், கூர் மலர் நாசியும்
அக்னி மகளின் இறுக்க அணைப்பில்
சிதைந்து தான் போயிருக்குமா?
எத்தனையோ உயிர்காக்க
உழைத்திட்ட உந்தன் கைகள்
தன் உயிர்ப் பறவை ஏகிய
வழிதனைத் தேடி அலைந்திருக்குமா?
அந்த பிறவியின் எண்ணம்
எல்லாம் விடுத்து மற்றொரு
தாயின் மகவாய் வந்து
மண்ணில் உதித்திருப்பாயா?
இப்போதெப்படியிருப்பாயோ நீ
தத்தித் தவழும் மழலையோ?
எவரெவரை அறிந்திருப்பாயோ?
என்ன பேரைச் சுமந்திருப்பாயோ?
கண்ணில் சுமந்து திரியுமென்
கனவிலேனும் வந்து கண நேரம்
கண் சிமிட்டிப் போயேன்
காத்திருக்கிறேன் காரிருளில்
Subscribe to:
Posts (Atom)