ஓராண்டும் புத்தாண்டும்-நன்றியும் வாழ்த்தும்

Thursday, December 31, 2009
நட்புக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எல்லாவளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்





புதிய வருடத்தில் புதிதாய் மலர்ந்த மனதோடு மீண்டும் சந்திப்போம்.

எனது வலைப்பூவுக்கு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.ஓர் ஆண்டில் தந்த மேலான ஆதரவுக்கு நன்றி..நன்றி... நன்றி

மனதில் மலர்ந்தவை 25/12/2009

Friday, December 25, 2009
வணக்கம் மக்களே.. பண்டிகைக் காலம் ஆரம்பிச்சாச்சி..அதோட சேர்த்து விடுமுறைக் கொண்டாட்டங்களும் ஆரம்பிச்சிருக்கும்ன்னு நம்பறேன்.புது வருஷம் வேற வரப்போகுது.எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா வாழ்த்திக்கறேன்..

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்

ஏன் இவ்ளோ நாளா பதிவு எழுதலே,எப்ப திரும்ப எழுதுவே..அப்படின்னு அக்கறையாய் விசாரித்த பல இலட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி.. நன்றி..(கொஞ்சம் ஓவராத்தான் பில்டப் குடுக்கறேனோ:)))) )அவங்க கேட்டது எவ்ளோ நாளைக்கு என் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்ன்னு தெரிஞ்சிக்கதான்கிற உண்மை நான் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் தெரியணும்ன்னு இல்ல:‍)))

குட்டி குட்டியாய் நிறைய விஷயங்கள் எழுதறதுக்கு மனசில இருக்கு.அதில சிலவற்றை மட்டும் இப்போ பகிர்ந்துக்கறேன்..



சமீபத்தில் வாங்கிய பல்பு

நான் பயணத்தில் அடிக்கடி சில மாணவிகளைச் சந்திப்பேன்.கண்ணியமாய் உடை உடுத்துபவர்கள். அவர்களில் சிலர் ஒரு நாள்,திடீரென முகம் சுளிக்கத்தக்க ஆடையில் வந்தார்கள். நான் அவர்களிடம்.. இப்பிடியெல்லாம் இன்டீசன்டா டிரஸ் பண்ணலாமா என கேட்கப்போக அவர்கள் பதிலால் ஆடிப்போய்விட்டேன்
அவர்கள் கல்லூரியில் ஏதோ விழாவாம்.. விழாவுக்கு இப்படிப்போனாதான் காலேஜ்ல மரியாதை இருக்குமாம்..
என்ன அக்கா.... ஆன்ட்டி மாதிரி யோசிக்கறீங்க.இழுத்து போத்திட்டு போறதெல்லாம் அந்தக்காலம்..யூத்ன்னா இப்பிடித்தான் டிரஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டாங்க மக்களே.
அரைகுறையாய் ஆடை அணிந்தால்தான் யூத் என்னும் கலாச்சாரத்தைத் தோற்றுவித்தது யார்? இதையெல்லாம் அவங்க பெற்றோரோ,ஆசிரியரோ என்னன்னு கேக்கமாட்டாங்களா?


சமீபத்திய சந்தேகம்

பல வீடுகளைப் போல, எங்க வீட்டு டிவிலயும் நெறைய,நெறைய மெகாசீரியல்கள் ஓடிட்டு இருக்கும்.நானும் அப்போ அப்போ சாப்பிடும் நேரங்களில் அம்மாகூட உக்கார்ந்த்து சீரியல்களை வேடிக்கை பார்க்கறது உண்டு.பல சீரியல்கள்,பல எபிசோடுகள் பார்த்து எனக்கு வந்த சந்தேகம் என்னன்னா.. எல்லா சீரியல்கள்லையும் யாரவது இறந்துபோவதோ,அதன் தொடர்ச்சியான சீன்களோ, வெள்ளிக்கிழமைகளிலேயே நடப்பது ஏன்?


சமீபத்திய எரிச்சல்

இந்த செல்போனை வச்சிகிட்டு மாணவச்செல்வங்கள்:) காலேஜ்ல அடிக்கற லூட்டிய சமாளிக்கறதே பெரும்பாடா இருக்கு.பெரிய சி.பி.ஐ ஆபீசர் கணக்கா உளவு வச்சி செல்போன் ஒரு ஸ்டூடண்டகிட்ட இருக்கறத கண்டுபிடிச்சி,அதை வாங்கி வச்சிகிட்டு, அவங்க பெற்றோரைக் கூப்பிட்டு அவங்ககிட்ட மணிக்கணக்கில பேசி பையன்( பொண்ணு)கிட்ட செல்போனைத் தராதீங்கன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பிவச்சா அடுத்த ஒரு வாரத்தில திரும்ப போனை பையன்(பொண்ணு)கிட்ட குடுத்து, ஸ்டாப் கண்ணுல கிடைக்காம வச்சிக்கோன்னு சொல்லி அனுப்பறாங்களே. இவங்கள்லாம் என்னதான் நினைச்சிட்டு இருக்காங்க