இந்த சம்மர் வந்தாலே எங்க அம்மா வீட்டை கிளீன் பண்றேன்னு என்கிட்ட வேலை வாங்க ஆரம்பிச்சிடுவாங்க.இந்த பழக்கம் பள்ளி நாட்கள்ல படிச்சி முடிச்ச புத்தகம், நோட்டு எல்லாம் தூக்கிப் போடறதுல ஆரம்பிச்சது. இன்னும் விட மாட்டேங்கிறாங்க.கிளீன் பண்ண எதுவுமே இல்லைன்னாலும் பரண் மேல இருக்கறது எல்லாத்தையும் எடுத்துப் பாத்துட்டு திரும்ப வைக்கறதுல அவங்களுக்கு ஒரு சந்தோசம்.அந்தப் பரண் மேல ஏறரதுல எனக்கு ஒரு ச்ந்தோசம்:)
அப்படி ஏறின ஒரு சுபயோக சுபதினத்துல தான் எங்க அண்ணா சின்ன வயசுல யூஸ் பண்ணிட்டு இருந்த பெட்டி கிடைச்சிது.அது அவனுக்கு பொக்கிஷம் மாதிரி.என்னையெல்லாம் தொட்டு பாக்க கூட விடமாட்டான்.அந்த பெட்டி மேல எனக்கு அப்பொல்லாம் ஒரு கிரேஸ்.பெரிசான பின்னாடி அந்த பெட்டி மறந்தே போயிருந்தது.இப்போ அதைப் பாத்ததும்..சரி..பெட்டி இனி நம் ஆளுகைல..என்னதான் இருக்குன்னு பாத்துடலாம்கிற எண்ணத்தில பூட்டை ஒடைச்சிட்டேன்.உள்ளே இருந்த குப்பை(அண்ணா..திட்டாதே..ப்ளீஸ்) எல்லாம் கிள்ரிட்டு இருந்தப்ப ஒரு ஜூனியர் விகடன் புக்கோட கட்டிங் கெடச்சிது.
அதுல ஒரு கவர்மெண்ட் ஸ்கூல் பத்தி எழுதி இருந்தாங்க.அந்தக் காலத்திலேயே அந்த பள்ளியோட செயல்பாடு, இப்போ இருக்கற பல தனியார் பள்ளிகளைவிட பெட்டரா இருந்திருக்கு.அந்த கட்டுரையின் சாரத்தை கீழே தர்றேன்.படிச்சிக்கோங்க.
தலைப்பு: ஒரு ஸ்கூல் வியக்க வைக்கிறது!
பள்ளியின் பெயர்:அரசினர் மேல் நிலைப் பள்ளி,ஏழூர், நாமக்கல் மாவட்டம்,தமிழ் நாடு
இப்படிப்பட்ட மாதிரிப் பள்ளியை நடத்த அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும்,ஆசிரியர்களும் எத்தனைத் தியாகங்களைச் செய்திருப்பர் என நினைக்கும்போது அதிசயமா இருக்கு. நாமக்கல் மாவட்டத்துக்காரங்க இதைப் பத்தி மேலும் தகவல்கள் தெரிஞ்சா சொல்லுங்களேன்
அப்பள்ளியின் அதிசயங்கள் சில
1.பள்ளியில் நடக்கும் ஆளில்லாக் கடை
கடையில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் போருட்களும் இருக்குமாம்.ஆள் இருக்க மாட்டங்களாம்.விலை எழுதி ஒட்டி இருக்குமாம். நாமே பணத்தை கல்லாப் பெட்டியில் போட்டு விட்டு பொருளை எடுத்துக்கலாமாம்.இது மாணவர்களிடையே நாணயத்தை வளர்க்கும் முயற்சி.இப்பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு சாட்சி..இக்கடையின் லாபத்தில் பள்ளிக்கான ஸ்டிரியோ செட் வாங்கி இருக்காங்க.
2.எறும்புசாரி முறை
மாணவ மாணவிகள் எங்கே போனாலும் வரிசையாய் போகின்றனர்.பள்ளியிலிருந்து வீட்டுக்குப் போகும் வரையிலும்,வீட்டிலுருந்து பள்ளிக்கு வரும் வரையிலும் கூட.கிராமத்துப் பள்ளி ஆனதால் பல மாணவர்கள் நடந்தேதான் பள்ளிக்கு வருகவார்கள்..பள்ளியிலிருந்து சில கி.மீ தொலைவில், ஆசிரியர் எவரும் இல்லாத இடங்களிலும் கூட இதைக் கடைப்பிடிக்கிறார்கள். இது மாணவர்களின் மனமாற்றத்தால் மட்டுமே சாத்தியம்.
3.பள்ளி ஆளுமன்றம்
பள்ளி மாணவர்களிடையே ஒரு அரசாங்கமே இருக்கிறது.வருடா வருடம் மாணவர் தேர்தல் நடக்கிறது.மாணவ அமைச்சரவை பொறுப்பேற்கிறது.அவர்கள் பள்ளியின் ஒவ்வோர் முன்னேற்றப் படியிலும் கலந்தாலோசிக்கப்படுகிறார்கள். இதனால் மாணவர்களின் சேவை மனப்பாண்மை வளர்கிறது.அரசியல் ஆர்வம் வளர்கிறது. எதிர்காலத்தில் நல்ல அரசியல்வாதிகள் எங்களால் முடிந்த சிறு முயற்சி என்கிறார் தலைமை ஆசிரியர்.
மேலும் மாணவர்களை உற்சாகப்படுத்த, ஒவ்வொரு வாரமும் சிறந்த வகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு,அவ்வகுப்பின் முன் ஒரு கொடி பறக்கவிடப்படுகிறது.இந்தக் கொடியைப் பெற ஒவ்வொரு வகுப்பும் முடிந்தவரை முயல்கிறாது இது மாணவர்களின் குழு மனப்பாண்மையை(Team Building Skills) வளர்க்கிறது .
4.மிகப்பெரும் கட்டிடங்களும்,மிண்ணொளி விளக்குகளும்,அழகுப் பூங்கா
வும்
அரசுப் பணத்தை எதிபாராமல், நன்கொடைகள் மூலமுமாகவே பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கு.அழகிய பூங்கா அமைக்கப்பட்டிருக்கு.இரவைப் பகலாக்கும் வகையில் பலப் பல மின்னொளி விளக்குகள் பள்ளியிலும்,பள்ளிப் பூங்காவிலும் அமைக்கப் பட்டிருக்கு. சரியான மின்வசதி இல்லாத பல கிராமத்து மாணவர்கள் இப்பள்ளி விளக்குகளாலெயே படித்துப் பயன்பெறுகின்றனர்.
5.மேலும் சில
பள்ளியில் சைலன்ஸ் அவர்ன்னு ஒண்ணு இருக்கு.சைலண்ஸ் பெல் அடிச்ச உடனே குண்டூசி விழு ந்தா கூட கேட்கும் அளவிற்கு பள்ளி அமைதியாய் இருக்கிறது
வயதில் பெரியவர் யாரைப் பார்த்தாலும் அவர் கூலித் தொழிலாளியாய் இருந்தால் கூட, மாணவர்கள் வணக்கம் சொல்றாங்க
யாருமே லேட்டா வர்றதில்லை
பள்ளிக்கான சொத்து ஏறத்தாழ 35 லட்சம் தேறுமாம்.
தலைமை ஆசிரியர் நடராசன் சொல்கிறார்:
இவை அனைத்தும் சாத்தியப் பட்டது எங்கள் ஆசிரியர்களின் கடும் உழைப்பாலும்,மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பாலும் தான்.அவர்கள் இல்லையேல் இதெல்லாம் நடக்கதுங்க.
ஆனால் ஆசிரியர்களும்,மாணவர்களும்,பெற்றோரும் இச்சாதனைக்கு கைகாட்டுவது ..தலைமை ஆசிரியரைத்தான்.
அவர்கள் சொல்கிறார்கள்"அவருக்கு உயிர்மூச்சே இப்பள்ளிதாங்க.அவருடைய பரம்பரை சொத்துகளைக்கூட பள்ளிக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்."
இவர்களுக்கு அரசுகள் எத்தகைய ஊக்கத்தைத் தந்திருக்கும் எனத் தெரியவில்லை.அரசுப் பள்ளிகளும் சாதனைப் படைக்கும் என நிரூபித்த அப்பள்ளி தலைமை ஆசிரியரையும் அவரது குழுவினரையும் வாழ்த்த நமக்கு வயதிருக்காது.வணங்குவோம்.
இந்த இகையை அவர்களின் தியாகத்திற்கு காணிக்கையாய் சமர்ப்பிக்கிறேன்
இந்தப் பள்ளியைப் பற்றிய மேலும் சில தகவல்களோ,அல்லது வேறு சிறந்த சேவை செய்யும்(த) பள்ளிகளைத் தெரிந்தவர்கள் இந்த இடுகையைத தொடருங்களேன்
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
படிக்கறுதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.. இன்னைக்கு இருக்கக் கூடிய பள்ளிகள்ல இதேல்லாம் சாத்தியமான்னு தெரியல..
அட..அதிசயமா இருக்கே..சந்தோசமாவும் இருந்தது பதிவை படிக்கும்போது..
ஊழல்களும்,அக்கிரமங்களையுமே ஊடகங்களில் படித்தும்,பார்த்தும் மனம் நொந்திருக்கும் வேளையில் கோடையின் நடுவில் வீசும் தென்றல் போல் உங்கள் செய்தி இதமாய் இருக்கிறது.
மனம் சந்தோஷத்தில் குதிக்கிறது படித்தவுடன்....நான்
ஆரம்பிக்க வேண்டும் என நினைத்திருக்கும் பள்ளியில் இன்னும் சேர்த்துக் கொள்ள பல நல்ல விஷயங்கள் கிடைத்திருக்கிறது...நன்றி...
அன்புடன் அருணா
கடையில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் போருட்களும் இருக்குமாம்.ஆள் இருக்க மாட்டங்களாம்.விலை எழுதி ஒட்டி இருக்குமாம். நாமே பணத்தை கல்லாப் பெட்டியில் போட்டு விட்டு பொருளை எடுத்துக்கலாமாம்.இது மாணவர்களிடையே நாணயத்தை வளர்க்கும் முயற்சி.இப்பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு சாட்சி..///
இப்போ இதமாதிரி வச்சுப்பாருங்க... நம்ம பசங்க ரொம்ப நேர்மையா இருப்பாங்க...
அட..ஆச்சர்யமா இருக்கே...hats off...
புதியவன் said...
ம்...உண்மையில் வியக்கத்தான் வைக்கிறது...
antha schoola ippove parkanum pola erukke:-(
athisayam..antha aasiriyarkal yenga irukkangannu therincha yaaravathu sollungalen.
சந்தோசமா இருக்கு :)
@கார்த்திகைப் பாண்டியன்
முயன்றால் அனைத்தும் சாத்தியமே தோழா
@Rajeswari மகிழ்ச்சி.. நீங்கள் ஆசிரியர் குலம் தானே..சந்தோஷமாகத்தான் இருக்கும்
ஷண்முகப்ரியன்
Thanks Sir
@அன்புடன் அருணா
நன்றி...
@நெல்லைத்தமிழ்
:-))
@புதியவன்
போஸ்டை ரீபப்ளிஷ் பண்ணதால பழைய பதிவுக்கான உங்க கமெண்டை நானே போட்டுட்டேன் புதியவன்
Theriyaleengale karthik:-[
@ SUBBU
:-)
படிக்கறுதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு :)
இப் பள்ளியை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. இதே போன்றதொரு பள்ளி தர்மபுரி மாவட்டம் லளிகம் கிராமத்தில் இருந்தது. அதற்கு முழு காரணம் அப்பள்ளியில் தலைமை ஆசிரியராயிருந்த திரு. நடராசன் ஐயா அவர்கள். அவரைப் பற்றிய தகவல் ஏதும் யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்கவும். நான் அப்பள்ளி முன்னாள் மாணவன்.
வியக்கத்தான் வைக்கிறது...சந்தோஷமா இருக்குங்க..
Post a Comment