க(வன)ரணம் தப்பினால்...

Monday, January 4, 2010
ந‌க‌ரின் பிசியான‌ சாலை.காலை அலுவ‌ல‌க‌ம் செல்லும் அவ‌ச‌ர‌த்தில் அனைவ‌ரும் ப‌ற‌ந்து கொண்டிருக்கும் நேர‌ம்.கேச‌வ், ஏற்க‌னவே ஆபீஸ்க்கு டைம் ஆச்சே,மீட்டிங் வேற‌ இருக்கே,லேட்டாப் போனா மேனேஜ‌ரை எப்ப‌டி ச‌மாளிக்க‌றது என்ற‌ க‌வ‌லையுட‌னே தன் வாக‌ன‌த்தை விர‌ட்டிக் கொண்டிருந்தான்.மாலை சீக்கிரம் கிளம்பி த‌ன் 4 வயது ம‌க‌ளை ஹாஸ்பிட‌லுக்கு கூட்டிட்டு போக மேனேஜர் பர்மிஷன் தர‌ணுமே என்ற எண்ண‌ம் வேறு ப‌ய‌த்தைக் கூட்டியது.

எல்லாம் காலை நேர‌ சோம்ப‌லால் வ‌ரும் வினை.ஒரு 10 நிமிட‌ம் சீக்கிர‌ம் எழுந்தால் டென்ஷ‌ன் இல்லாம‌ ஆபீஸ் கிள‌ம்ப‌லாம் என‌ மூளைக்குத் தெரிந்தாலும்,ம‌ன‌ம் அத‌ற்கு ஒத்துழைப்ப‌தில்லையே..என ம‌ன‌திற்குள் பொருமிக் கொண்டிருந்தான்.

ரோட்டில் சிக்னல் வேறு சிவப்பு விழுந்துவிட்டால் அதில் சில நிமிடங்கள் வீணாகுமே பச்சையில் இருக்கும் போதே கடந்து விடவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும்
போதே தொலைவில் சிக்னல் தெரிந்தது. ஆஹா பச்சையில் தான் ஒளிர்கிறது.ஆனால் டைமர் 2 செகண்டு காட்டுதே..என வண்டியை முறுக்கினான்.சிக்னலை நெருங்கவும் மஞ்சள் விழவும் சரியாக இருந்தது.மஞ்சள் தானே,சிகப்பு விழும்முன் சீக்கிரம் போயிடலாம் என வேகத்தைக் கூட்டினான்...

தேர்வுக்கு லேட் ஆச்சே என்றக் கவலையோடு,அவ்வூரின் பெரும் பணக்காரரின் மகன் கிஷோர் உச்ச வேகத்தில் வந்து கொண்டிருந்தான் தனது புத்தம் புதிய காரில் எதிர்த் திசையில்.அவன் வரும் திசையிலும் ஒளிர்ந்தது மஞ்சள்.அடுத்து பச்சை தானே வரப்போகிறது நாம் சிக்னலை அடைவதற்குள் பச்சை விழுந்து விடும் என்ற நம்பிக்கையில் வேகத்தைக் குறைக்காமலே வண்டியைச் செலுத்தினான்.

கிஷோரின் காரும்,கேசவ்வின் வண்டியும் சந்தித்தது சிக்னல் அருகே எதிரெதிரே உச்ச வேகத்தில்.இரு வண்டிகளும் தூக்கியெறியப்பட்டன.அங்கிருந்த மக்கள் சந்தித்தது ஒரு கோர விபத்தை..இரு இளைஞர்களின் வாழ்வு சிதைந்தது.இரு குடும்பங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியானது.

இது அவர்களின் விதியெனச் சிலர் நினைத்தாலும், அதைத் தவிர்த்திருக்க வழியே இல்லையா..

இருவரும் செய்த சில சிறு சிறு தவறுகளால்தான் இவ்விபத்து.அதில் பல தவறுகள் நாமும் செய்வதுதான்..
கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலைதான் பயணத்திலும் என்ற பெரும் உண்மையை நாமெல்லாம் சாவகாசமாய்ப் புறக்கணித்து விடுகிறோம்

சிக்னலை அலட்சியம் செய்ததும்,மிக அதிக வேகமுமே இருவரின் வாழ்க்கையை அழித்தது.அதிக வேகத்துக்குக் காரணம் அவர்கள் பயண நேரத்துக்கு சரியாக கிளம்பாமல் விட்டதுதான்.பயணத்தில் செய்யும் சிறு தவறும் பெரிய பெரிய மோசமான விளைவுகளை இது போல ஏற்படுத்தலாம்.

சாலைப் பாதுகாப்பு வாரத்தை(ஜனவரி 1-7) டிரைவிங்கில் நீங்கள் செய்யும் தவறுகளை மீள்பார்வை செய்யும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்‌.
சாலைப் பாதுகாப்புத் தெடர்பான இடுகைகளை எழுத கீழ்வரும் நண்பர்களை அழைக்கிறேன்


நான் ஆதவன்
கார்த்திகைப் பாண்டியன்
சஞ்சய் காந்தி
சுபா
சிவனேஸ்வரி


எழுதிட்டு, நீங்களும் குறைந்தபட்சம் 5 பேரை அழையுங்க மக்களே

ப‌ய‌ண‌த்தில் க‌வ‌ன‌மாயிருங்க‌ள்.விதிக‌ளை ம‌தியுங்க‌ள்.ம‌கிழ்வாய் வாழுங்க‌ள்.

27 comments:

அகல்விளக்கு said...

நல்ல முயற்சி...

வாழ்த்துக்கள்....

நட்புடன் ஜமால் said...

எல்லாம் காலை நேர‌ சோம்ப‌லால் வ‌ரும் வினை.ஒரு 10 நிமிட‌ம் சீக்கிர‌ம் எழுந்தால் டென்ஷ‌ன் இல்லாம‌ ஆபீஸ் கிள‌ம்ப‌லாம் என‌ மூளைக்குத் தெரிந்தாலும்,ம‌ன‌ம் அத‌ற்கு ஒத்துழைப்ப‌தில்லையே..என ம‌ன‌திற்குள் பொருமிக் கொண்டிருந்தான்.]]


நிஜம் நிஜம் ...

-------------

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு

☀நான் ஆதவன்☀ said...

விழிப்புணர்வு பதிவு.

இவ்வாரம் பதிவிடுகிறேன் இயற்கை :)

Rajalakshmi Pakkirisamy said...

Hmm Good Post

Anonymous said...

சாலை விபத்துக்களைப்பொறுத்தவரை அடுத்தவர்கள் தவறிலிருந்து நாம் கற்ருக்கொள்ளாவிட்டால், நம் தவறிலிருந்து அடுத்தவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

ஆயில்யன் said...

தொடர்பதிவுக்கு ஒரு நல்ல கான்செப்ட்

கலக்குறீங்க போங்க!

ஒரு ஆறுமாசம் லீவு போட்டு யோசிச்சு இப்ப அட்டாக் பண்ண ஆரம்பிச்சிருக்கீங்க போல குட்! :)

ஈரோடு கதிர் said...

தலைப்பு மிகப் பொருத்தம்...

//இது அவர்களின் விதியெனச் சிலர் நினைத்தாலும், அதைத் தவிர்த்திருக்க வழியே இல்லையா..//

விபத்து என்பது விதி என்பதை விட தற்கொலை அல்லது கொலை என்றே சொல்லலாம்

ஆரூரன் விசுவநாதன் said...

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தூண்டும் இந்த தொடர் பதிவிற்கு வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

நல்ல முயற்சி!

வாழ்த்துக்கள் பாஸ்!

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

தொடர்பதிவுக்கு ஒரு நல்ல கான்செப்ட்

கலக்குறீங்க போங்க!

ஒரு ஆறுமாசம் லீவு போட்டு யோசிச்சு இப்ப அட்டாக் பண்ண ஆரம்பிச்சிருக்கீங்க போல குட்! :)/


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Ungalranga said...

நல்ல மெஸேஜ்,
நல்ல பகிர்வு,
நல்ல முய்ற்சி,
நல்ல அறிவுரை,

நல்லவர் இதை சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது..

சுசி said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.

sivanes said...

வெரி நைஸ் யா...! பாராட்டுக்கள்...! நல்ல கருத்து ஆனாக்கா நம்மையே கலாய்ச்சுட்டீங்களே கண்மணி, சரி நம்ம பாணியிலே ஏதாவது சொல்ல முயற்சி பண்ணுறேன்...! :‍))

*இயற்கை ராஜி* said...

/அகல்விளக்கு said...
நல்ல முயற்சி...

வாழ்த்துக்கள்..../

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

*இயற்கை ராஜி* said...

// நட்புடன் ஜமால் said...
எல்லாம் காலை நேர‌ சோம்ப‌லால் வ‌ரும் வினை.ஒரு 10 நிமிட‌ம் சீக்கிர‌ம் எழுந்தால் டென்ஷ‌ன் இல்லாம‌ ஆபீஸ் கிள‌ம்ப‌லாம் என‌ மூளைக்குத் தெரிந்தாலும்,ம‌ன‌ம் அத‌ற்கு ஒத்துழைப்ப‌தில்லையே..என ம‌ன‌திற்குள் பொருமிக் கொண்டிருந்தான்.]]


நிஜம் நிஜம் ...

-------------

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு//

நன்றிங்க அண்ணா...காலைச் சோம்பலில் இது நினைவு வந்தால் நல்லது

*இயற்கை ராஜி* said...

/ ☀நான் ஆதவன்☀ said...
விழிப்புணர்வு பதிவு.

இவ்வாரம் பதிவிடுகிறேன் இயற்கை :)/

நன்றி

*இயற்கை ராஜி* said...

/ Rajalakshmi Pakkirisamy said...
Hmm Good Post/

Thanks

*இயற்கை ராஜி* said...

/சின்ன அம்மிணி said...
சாலை விபத்துக்களைப்பொறுத்தவரை அடுத்தவர்கள் தவறிலிருந்து நாம் கற்ருக்கொள்ளாவிட்டால், நம் தவறிலிருந்து அடுத்தவர்கள் கற்றுக்கொள்வார்கள்./

ம்ம். உண்மை ..வருகைக்கு நன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/ ஆயில்யன் said...
தொடர்பதிவுக்கு ஒரு நல்ல கான்செப்ட்

கலக்குறீங்க போங்க!

ஒரு ஆறுமாசம் லீவு போட்டு யோசிச்சு இப்ப அட்டாக் பண்ண ஆரம்பிச்சிருக்கீங்க போல குட்! :)/

நன்றி பாஸ்..

*இயற்கை ராஜி* said...

/ஈரோடு கதிர் said...
தலைப்பு மிகப் பொருத்தம்...

//இது அவர்களின் விதியெனச் சிலர் நினைத்தாலும், அதைத் தவிர்த்திருக்க வழியே இல்லையா..//

விபத்து என்பது விதி என்பதை விட தற்கொலை அல்லது கொலை என்றே சொல்லலாம்/


நன்றிங்கோவ்

*இயற்கை ராஜி* said...

/ஆரூரன் விசுவநாதன் said...
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தூண்டும் இந்த தொடர் பதிவிற்கு வாழ்த்துக்கள்/

வாங்க..வாங்க..நன்றிங்க

*இயற்கை ராஜி* said...

/நிஜமா நல்லவன் said...
நல்ல முயற்சி!

வாழ்த்துக்கள் பாஸ்!/

நன்றி பாஸ்

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
/ ஆயில்யன் said...

தொடர்பதிவுக்கு ஒரு நல்ல கான்செப்ட்

கலக்குறீங்க போங்க!

ஒரு ஆறுமாசம் லீவு போட்டு யோசிச்சு இப்ப அட்டாக் பண்ண ஆரம்பிச்சிருக்கீங்க போல குட்! :)/


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:-))))

*இயற்கை ராஜி* said...

/ ரங்கன் said...
நல்ல மெஸேஜ்,
நல்ல பகிர்வு,
நல்ல முய்ற்சி,
நல்ல அறிவுரை,

நல்லவர் இதை சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது../

நன்றி

*இயற்கை ராஜி* said...

/சுசி said...
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்./

நன்றிங்க

*இயற்கை ராஜி* said...

/ சிவனேசு said...
வெரி நைஸ் யா...! பாராட்டுக்கள்...! நல்ல கருத்து ஆனாக்கா நம்மையே கலாய்ச்சுட்டீங்களே கண்மணி, சரி நம்ம பாணியிலே ஏதாவது சொல்ல முயற்சி பண்ணுறேன்...! :‍))/

எழுதுங்க...எழுதுங்க...

பனித்துளி சங்கர் said...

அருமையான அலசல் .

பகிர்வுக்கு நன்றி நண்பரே !