கணினியில் பொங்கல் கிடைக்குமா?

Friday, January 15, 2010
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி பொங்கி நிறையும் நாட்களாய் இருந்தன அன்றையப் பொங்கல் பண்டிகைகள். தாத்தா, மாமா, சித்தப்பா என அனைத்து சொந்தங்களும் முழு நேர விவசாயிகளாய் இருந்தக் காலம் அது. படிப்பு மட்டுமே வாழ்க்கை என நினைத்து, ஹிஸ்டரியையும், ஜியாக்ரபியையும் படிக்கும் விருப்பத்தில் சொந்த மண்ணின் வரலாறையும், புவி அமைப்பையும் அறியாமல் விட்ட பள்ளி நாட்கள்.

பொங்கலுக்கெல்லாம் ஊருக்கு போக வேண்டாம் என அடம் பிடித்த அந்தக் காலத்தில் அறிந்திருக்கவில்லை, விரைவில் இவையெல்லாம் வெறும் நினைவுகளாகப் போகப் போகின்றன என்று. எப்படி வேண்டி வருந்தினாலும் இவை விரும்பி வராது என்று. அன்று சிறிதும் விருப்பமில்லாமல் ஊருக்குப் போன‌ சில‌ பொங்க‌ல் தின‌ங்க‌ளும் பொற்கால‌ங்க‌ளாய் ம‌ன‌தில் மிளிர்கின்ற‌ன‌ .

ஆனால், இன்று? அத்தகையதொரு கிராமப் பொங்கலுக்கு மனம் ஏங்கினாலும் நிதர்சனமோ வேறாய் இருக்கிறதே. இன்றைய கிராமப் பொங்கலில் , அந்நாளைய நகரப் பொங்கலிலும் நளினம் குன்றித்தான் போனது. கிராமத்து வீடுகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளாலும், செல்போன்களாலும் சூழப்பட்டு விட்டன. எங்கள் சிறுவயதுப் பொங்கலில் இருந்த உற்சாகமோ, உவகையோ இன்றைய குழந்தைகளிடம் இல்லாமல் போனதே.

பொங்கலோ பொங்கல் எனத் தாம்பளத்தில் குச்சி வைத்துத் தட்டுகையில், யார் வீட்டு ஒலி அதிகம் கேட்டது எனப் பெரிய போட்டியே நடக்கும். இன்று என் அண்ணன் மகள் கேட்கிறாள். “அத்தை! எதுக்கு இப்பிடி இன்டீசண்டா தேவை இல்லாம சப்தம் போடறாங்க”. தோட்டத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வரை எங்கள் கையிலிருக்கும் பொங்கல் சோற்றுக்காய்த் துரத்தி வரும் காகங்களும் எங்கோ மறைந்தன. அவைகளுக்கும் பப்ஸும், பர்கரும் விருப்ப உணவாகிவிட்டதா?

கணினி விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்வும் ஈர்க்குமளவுக்கு பாரம்பரியப் பண்டிகைகள் ஈர்ப்பைக் கொடுக்கவில்லையே இன்றைய மழலைத் தலைமுறையிடம். அவசரத்தில் அடுத்த கட்டத்துக்கு நொண்டி நொண்டி நகரும் நாம்தான் சரியாக அவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டோம் என்பதை மறுக்க முடியுமா? மாட்டுப் பொங்க‌லில் இளம் க‌ன்றுக் குட்டிக‌ளோடு நாங்கள் நடத்தும் ஜ‌ல்லிக்க‌ட்டுக்காய் ஏங்கிய நானும், என் அண்ணனும், ஆட்டுக்குட்டி அருகில் வ‌ந்தாலே, "ஐயே.ட‌ர்ட்டி"என‌ என‌ வில‌கி ஓடும் எங்க‌ள் வீட்டு ம‌ழலையைக் க‌ண்டு வாய‌டைத்துப் போய்த்தான் இருக்கிறோம்.

எங்களுக்காவது, விவசாய பாரம்பரியத்தை நினைத்துப் பார்க்க பனிப்புகை படர்ந்து சில பொங்கல் தினங்கள் நினைவிடுக்கில் தேங்கியிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு விவ‌சாய‌மும், விவசாயம் சார்ந்த பண்டிகைகளும் என்றாலே பேஸ்புக் ஃபார்ம்வில்லே தான் நினைவுக்கு வ‌ருமோ?. கூடவே பொங்கல் சோறும் கணினியிலோ கிடைக்க விஞ்ஞானம் ஏதாவது செய்யுமா?

.

42 comments:

Subha said...

அருமையான பதிவு இயற்கை..ஆனால்..ஃபார்ம்வில்லே..சோறு போடுமா...அருமையான கேள்வி :)

Anonymous said...

பொங்கலோ பொங்கல் எனத் தாம்பளத்தில் குச்சி வைத்துத் தட்டுகையில், யார் வீட்டு ஒலி அதிகம் கேட்டது எனப் பெரிய போட்டியே நடக்கும். //

டீச்சர் உங்களை நினைத்தாலே தமாசா இருக்கு :)

Anonymous said...

பேஸ்புக் ஃபார்ம்வில்லே//


எங்களுக்கு எது வருமோ அதானே பண்ண முடியும் :))

ஈரோடு கதிர் said...

இளம் கன்றுக்குட்டியின் சின்னக் கொம்பை பிடித்து ஜல்லிக்கட்டு விளையாடிய அனுபவம் எனக்கும் உண்டு...

பொங்கச்சோத்துக்கு காக்காய் துரத்தியதை நானும் பார்த்திருக்கிறேன்..

//கணினியில் பொங்கல் கிடைக்குமா?"//

கிராபிக்ஸ்-ல் தானே

கணினி இருக்கட்டும்.... விவசாய பூமியைத் திருடிய பொருளாதார மண்டலத்திலிருந்து ஒரே ஒரு அரிசி இவர்கள் விஞ்ஞானத்தால் உருவாக்கித் தரட்டும்....

மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள் சகோதரி

Anonymous said...

நாம்தானே நம் இளைய தலைமுறைக்கு நமது கலை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்..

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா எழுதிருக்கீங்க ராஜி.

ரொம்ப வருத்தமா இருக்கு, அடுத்த தலைமுறைக்கு நம் பண்டிகைகள் மறைந்து போய் விடும் அபாயம் குறித்து.

நட்புடன் ஜமால் said...

கிடைக்கும் சாப்பிட தெரியுமா உங்களுக்கு கணினியில் ...

(எனக்கும் தெரியாது :P)

அபி அப்பா said...

அருமையான நினைவலைகள்!! என் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

ப்ரியமுடன் வசந்த் said...

அது சரி ஃபார்ம்வில்லேவில் இருக்குற உங்க மார்ருப்பண்ணையில இன்னிக்கு மாட்டுபொங்கல் வச்சீங்களா இல்லியா?

:)))

ப்ரியமுடன் வசந்த் said...

ஃபேஸ்புக் மாட்டுபண்ணையில் பொங்கல் வைக்காத ராஜியை மாடுகள் புறக்கணிக்க முடிவு...

Unknown said...

very nice...

ஜோசப் பால்ராஜ் said...

சோகத்த அதிகமாக்கிட்டிங்க.

ஃபார்ம்வில்லேய விடுங்க. இப்ப கிராமத்துலயே மாட்டுப் பொங்கல் கொண்டாட மாடு இல்ல. அந்தளவுக்கு மாடுகளுக்கு பஞ்சமா போச்சு.

இன்னும் கொஞ்சநாள் போச்சுனா மாட்டுப் பொங்கல் ட்ராக்டர் பொங்கலா உருமாறிரும்னு நினைக்கிறேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

தேவன் மாயம் said...

நல்ல பதிவு! .ஃபார்ம்வில்லே ஆட்டத்துக்கெல்லாம் நான் போறதில்லே!!

தேவன் மாயம் said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல பகிர்வுங்க... ஆனா இந்த பார்ம்வில்லே பத்தி நீங்க தான் சொல்லனும் !!!

Unknown said...

அருமையா சொல்லி இருக்கீங்க.

என் பசங்களுக்கு இங்க கிறிஸ்துமஸ் குடுக்கிற சந்தோஷத்தை நம்ம பண்டிகைகள் குடுக்கிறதில்ல :(((

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

நாமதான் கிராமம் கிராமம் சொல்லிக்கிட்டு இருக்கோம்.ஆனால் நம்ம குழந்தைகள்?

cheena (சீனா) said...

அன்பின் ராஜி

இயற்கையினை மறந்து எல்லாம் செய்கிறோம் - வயல்கள் அடுக்கங்களாக மாறுகின்றன - என்ன செய்வது - காலத்துடன் பயணம் செய்ய வேண்டியதுதான்

நல்வாழ்த்துகள் ராஜி

Sakthi said...

happy pongal

gayathri said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு..

*இயற்கை ராஜி* said...

/சுபா said...
அருமையான பதிவு இயற்கை..ஆனால்..ஃபார்ம்வில்லே..சோறு போடுமா...அருமையான கேள்வி :)/

பார்ம்வில்லே போடும் சோறு ப‌சியாற்றுமா... இப்பிடியும் கேக்க‌லாமா சுபா

*இயற்கை ராஜி* said...

/மயில் said...
பொங்கலோ பொங்கல் எனத் தாம்பளத்தில் குச்சி வைத்துத் தட்டுகையில், யார் வீட்டு ஒலி அதிகம் கேட்டது எனப் பெரிய போட்டியே நடக்கும். //

டீச்சர் உங்களை நினைத்தாலே தமாசா இருக்கு :)/


இருக்கும்..இருக்கும்... :‍))))

*இயற்கை ராஜி* said...

/ மயில் said...
பேஸ்புக் ஃபார்ம்வில்லே//


எங்களுக்கு எது வருமோ அதானே பண்ண முடியும் :))/


ந‌ம‌க்குதான் அதுவும் வ‌ர‌மாட்டெங்குதே:-)))

*இயற்கை ராஜி* said...

/ஈரோடு கதிர் said...
இளம் கன்றுக்குட்டியின் சின்னக் கொம்பை பிடித்து ஜல்லிக்கட்டு விளையாடிய அனுபவம் எனக்கும் உண்டு...

பொங்கச்சோத்துக்கு காக்காய் துரத்தியதை நானும் பார்த்திருக்கிறேன்..//


இப்போல்லாம் காக்காயே பாக்க‌முடிய‌ல‌:‍(

//கணினியில் பொங்கல் கிடைக்குமா?"//

கிராபிக்ஸ்-ல் தானே

//கணினி இருக்கட்டும்.... விவசாய பூமியைத் திருடிய பொருளாதார மண்டலத்திலிருந்து ஒரே ஒரு அரிசி இவர்கள் விஞ்ஞானத்தால் உருவாக்கித் தரட்டும்.... //இப்படியே போனால் பசியாற்ற சோறு கிடைக்காது. பசியைத்தடுக்கும் மாத்திரைகள் தான் கிடைக்கும்

மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள் சகோதரி//


ம்ம்ம்.. ந‌ன்றி அண்ணா...இதுல‌ உள்குத்து ஏதும் இல்லையே:-)

*இயற்கை ராஜி* said...

/புனிதா||Punitha said...
நாம்தானே நம் இளைய தலைமுறைக்கு நமது கலை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்../

அதை ச‌ரியாக‌ செய்யாத‌ த‌வ‌றுதான் ப‌ல‌ இட‌ங்க‌ளில் ந‌ட‌க்கிறது

*இயற்கை ராஜி* said...

/
விக்னேஷ்வரி said...
ரொம்ப அழகா எழுதிருக்கீங்க ராஜி.

ரொம்ப வருத்தமா இருக்கு, அடுத்த தலைமுறைக்கு நம் பண்டிகைகள் மறைந்து போய் விடும் அபாயம் குறித்து


ம்ம்ம்ம்ம்:‍(((

*இயற்கை ராஜி* said...

// நட்புடன் ஜமால் said...
கிடைக்கும் சாப்பிட தெரியுமா உங்களுக்கு கணினியில் ...

(எனக்கும் தெரியாது :P)//எவ்வ‌ள‌வோ க‌த்துகிட்டோம்.இதை க‌த்துக்க‌ மாட்டோமா:-))

*இயற்கை ராஜி* said...

/ அபி அப்பா said...
அருமையான நினைவலைகள்!! என் பொங்கல் வாழ்த்துக்கள்!!!/

ந‌ன்றி.. உங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்

*இயற்கை ராஜி* said...

// பிரியமுடன்...வசந்த் said...
அது சரி ஃபார்ம்வில்லேவில் இருக்குற உங்க மார்ருப்பண்ணையில இன்னிக்கு மாட்டுபொங்கல் வச்சீங்களா இல்லியா?

:)))//


பார்ம்தாங்க இருக்கு. பொங்கல் பானை வாங்க கூட காசு இல்லை.. எங்க போயி பொங்கல் வைக்க‌:-)

*இயற்கை ராஜி* said...

/ பிரியமுடன்...வசந்த் said...
ஃபேஸ்புக் மாட்டுபண்ணையில் பொங்கல் வைக்காத ராஜியை மாடுகள் புறக்கணிக்க முடிவு.../

ஐயா சாமி.. நாட்டு அரசியல் எல்லாம் போரடிச்சி போச்சா.. மாட்டுப் பண்ணைல அரசியல கெளப்பறீங்க‌

*இயற்கை ராஜி* said...

/ see said...
very nice.../

thanks

*இயற்கை ராஜி* said...

/ ஜோசப் பால்ராஜ் said...
சோகத்த அதிகமாக்கிட்டிங்க.

ஃபார்ம்வில்லேய விடுங்க. இப்ப கிராமத்துலயே மாட்டுப் பொங்கல் கொண்டாட மாடு இல்ல. அந்தளவுக்கு மாடுகளுக்கு பஞ்சமா போச்சு.

இன்னும் கொஞ்சநாள் போச்சுனா மாட்டுப் பொங்கல் ட்ராக்டர் பொங்கலா உருமாறிரும்னு நினைக்கிறேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க./


ம்ம்..ஆமாங்க.. இப்போவே அப்படித்தான் பெரும்பாலான இடங்களில் இருக்கு

*இயற்கை ராஜி* said...

/ தேவன் மாயம் said...
நல்ல பதிவு! .ஃபார்ம்வில்லே ஆட்டத்துக்கெல்லாம் நான் போறதில்லே!!/

நன்றி.. :‍))

*இயற்கை ராஜி* said...

/ தேவன் மாயம் said...
பொங்கல் வாழ்த்துக்கள்!!/

பொங்கல் வாழ்த்துக்கள்

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல பகிர்வுங்க... ஆனா இந்த பார்ம்வில்லே பத்தி நீங்க தான் சொல்லனும் !!!/இவ்ளோ பெரிய போஸ்ட் போட்டிருக்கேன்.அதுல இந்த ஒரு வார்த்தைதான் உங்க கண்ணுல படுதா..:‍)))

*இயற்கை ராஜி* said...

/susi said...
அருமையா சொல்லி இருக்கீங்க.

என் பசங்களுக்கு இங்க கிறிஸ்துமஸ் குடுக்கிற சந்தோஷத்தை நம்ம பண்டிகைகள் குடுக்கிறதில்ல :(((

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்./

உண்மைய சொல்லி இருக்ககீங்க...
பொங்கல் வாழ்த்துக்கள்

*இயற்கை ராஜி* said...

/தாராபுரத்தான் said...
நாமதான் கிராமம் கிராமம் சொல்லிக்கிட்டு இருக்கோம்.ஆனால் நம்ம குழந்தைகள்?/

தெரிய‌லியே

*இயற்கை ராஜி* said...

cheena (சீனா) said...
/அன்பின் ராஜி

இயற்கையினை மறந்து எல்லாம் செய்கிறோம் - வயல்கள் அடுக்கங்களாக மாறுகின்றன - என்ன செய்வது - காலத்துடன் பயணம் செய்ய வேண்டியதுதான்

நல்வாழ்த்துகள் ராஜி/

நன்றி ஐயா.. பயமுறுத்தக் கூடிய உண்மையாகத்தான் இருக்கிற‌து

*இயற்கை ராஜி* said...

/சக்தியின் மனம் said...
happy pongal/

Thanks..same to you

*இயற்கை ராஜி* said...

/ gayathri said...
பொங்கல் வாழ்த்துக்கள்!!/

உங்களுக்கும் வாழ்த்துக்கள் காயத்ரி

*இயற்கை ராஜி* said...

/ அண்ணாமலையான் said...
நல்ல பதிவு../

நன்றி