வரம் தரும் சாமிக்கு....

Monday, September 14, 2009

|

ஏஞ்சல் வந்தாளே என்னிடமும்.. அனுப்பி வைத்த மேனகாசத்யாவுக்கு நன்றி..

முதல்ல நான் வேண்டிக்கறது என்னன்னா.. என் தொல்லை தாங்காம ஏஞ்சல் ஓடிப் போயிடக்கூடாது..( இது அவுட் ஆஃப் சிலபஸ் வேண்டுதல்)..


ஓகே..இப்போ சில‌ப‌ஸ்குள்ள போயி வேண்டுத‌ல்க‌ளைப் ப‌ட்டிய‌லிடுவோம்..


1. இப்போது இருக்கும் என் உறவுகளும், நட்புகளும் என்றும் பிரியாமல் இதே அன்போடு நிலைத்திருக்க வேண்டும்

2.நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில், விரும்புபவர்களுடன் இருக்க வேண்டும்


3.யார் க‌ண்ணுக்கும் தெரியாம‌ல் ம‌றையும் ச‌க்தி வேண்டும்

4.தெரிந்தோ தெரியாமலோ நான் மனதை புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேண்டும்

5.அதிக பொதுச்சேவை செய்வதே நாட்டின் உயர் பதவிகளுக்கானத் தகுதியாய் அமைய வேண்டும்

6.போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும்

7. தனிமையில் ஏங்கும் நிலையோ, உணவுக்காக ஏங்கும் நிலையோ யாருக்கும் வரக்கூடாது

8.குழந்தைப் பருவத்திலேயே உழைக்கும் கட்டாயம் எவருக்கும் வரக்கூடாது

9.பசும் வ‌ய‌ல்க‌ளும், அட‌ர் கான‌க‌மும் அழியாம‌ல் நிலைத்திருக்க‌ வேண்டும்

10.இத்த‌னை வ‌ர‌ங்க‌ள் த‌ந்த‌ தேவ‌தையின் ஏதேனும் ஒரு ஆசையை நான் நிறைவேற்ற‌ வேண்டும்

இன்னும்சில‌ பேருக்கு இந்த‌ ஏஞ்ச‌லை அனுப்பி வைக்க‌ணுமாம்..அனுப்பிடுவோம்..ஏஞ்சல் வந்து சேர்ந்ததும் நீங்களும்(நேரமும், விருப்பமும் இருந்தால்)உங்க வரங்களைக் கேட்டுட்டு அடுத்தவங்களுக்கு அனுப்பி வச்சிடுங்க..

ஜோச‌ப் பால்ராஜ்
காய‌த்ரி
ரங்கா
சிவ‌னேஸ்
தாரணிபிரியா

இன்று பிறந்த நாள் காணும் நண்பர் ரங்கா என்னும் ரங்க ராஜனுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக‌.


.

தமிழும் ஆங்கிலமும்..( தொடர்பதிவு)

Tuesday, September 8, 2009
இன்னும் ஒரு தொடர்பதிவு வந்துவிட்டது.. இதில் மாட்டிவிட்டவர் அன்பு தம்பி... இதில நானும் இன்னும் 4 பேரை மாட்டிவிடணுமாம்..
இன்னும் சில விதிகள்

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்..


நான் அழைப்பவர்கள் எல்லாம் அறிமுகத்துக்கு அப்பாற்பட்ட பிரபலங்கள். அதனால் நேரடியா பதிவுக்கு போலாம்

1. A – Avatar (Blogger) Name / Original Name : இயற்கை/ராஜி

2. B – Best friend? : பிரண்ட்ன்னு சொன்னாலே எனக்கு பெஸ்ட்தானுங்க‌..

3. C – Cake or Pie? : கேக்

4. D – Drink of choice? மில்க் ஷேக்

5. E – Essential item you use every day? Water bottle

6. F – Favorite color? ,பிங்க், ஸ்கை ப்ளூ

7. G – Gummy Bears Or Worm? : ம்ம்..தேன்முட்டாயி..

8. H – Hometown? ‍ட‌வுன்னாதான் சொல்ல‌னுமா? வில்லேஜ்ன்னா சொல்ல‌ கூடாதா?

9. I – Indulgence? ‍ விவசாயம்..

10. J – January or February? - ஜனவரி.வருட‌த்தின் முதல் மாதம்
(முதல்னாலேஸ்பெஷல்தானே)

11. K – Kids & their names? ஹை..சாய்ஸ் கொஸ்டீன்

12. L – Life is incomplete without? போதுமென்ற‌ ம‌ன‌ம்

13. M – Marriage date? - ஏதோ ஒரு பாவ‌ப்ப‌ட்ட‌வ‌ரோட‌ ஆயுள்த‌ண்ட‌னை ஆர‌ம்பிக்க‌ப்போற‌ நாள்.

14. N – Number of siblings? இவ்ளோ ச‌கோத‌ர‌ சகோத‌ரிக‌ள் இருக்க‌ற‌ வலையுல‌கில் கேக்க‌ற‌ கேள்வியா இது?

15. O – Oranges or Apples? ஆப்பிள்..

16. P – Phobias/Fears? அதை ஏங்க‌ நியாப‌க‌ப்ப‌டுத்த‌றீங்க‌? ப‌ய‌மா இருக்குதில்ல‌:-(

17. Q – Quote for today? .All you need is ignorance and confidence and the success is sure..

18. R – Reason to smile? அன்பை வெளிக்காட்டும் சிறிய வழி..

19. S – Season? கோடைக் காலம்..( அப்போதானே கோடை விடுமுறை விடுவாங்க‌)

20. T – Tag 4 People?-

மயில் விஜி
மஹா
அன்புடன் அருணா
குறை ஒன்றும் இல்லை ராஜ்குமார்

21. U – Unknown fact about me? தெரியாதது தெரியாததாய் இருக்கும் வரைதான் வாழ்க்கை சுவாரசியம்..

22. V – Vegetable you don't like? இனிமேதான் கண்டுபிடிக்கணும்..

23. W – Worst habit? நான் ரொம்ப‌ ந‌ல்ல‌ புள்ள‌

24. X – X-rays you've had? இது எதுக்கு?..

25. Y – Your favorite food? பசிக்கிற நேரத்தில் கிடைக்கும் எதுவும்....

26. Z – Zodiac sign? வீராப்பான விருச்சிகத்துக்காரய்ங்க நாங்க‌..

********************************************************************************8

1. அன்புக்குரியவர்கள் : என் மேல் அன்பானவர் எல்லாரும்..

2. ஆசைக்குரியவர் : கள்ளமில்லாக் குழந்தைகள்....

3. இலவசமாய் கிடைப்பது : காலம்....

4. ஈதலில் சிறந்தது : தேவையான நேரத்தில் தேவையானதைத் தருவது.

5. உலகத்தில் பயப்படுவது : அதை டைப் பண்ணவே பயமாயிருக்கு;-))..

6. ஊமை கண்ட கனவு : நான் ஊமையில்லயே.. எனக்கு எப்படித் தெரியும்?..

7. எப்போதும் உடனிருப்பது : என் மன வானமும்.. அதில் சிறகடிக்கும் நினைவுகளும்..

8. ஏன் இந்த பதிவு : நீங்க படிக்க‌..(பின்னூட்டம்,ஓட்டு எல்லாம் போடவும் தான்)

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : Positive Attitude. ..

10.ஒரு ரகசியம் : ............(படிச்சிடீங்களா? யார்கிட்டயும் சொல்லிடாதீங்க‌)

11.ஓசையில் பிடித்தது : யாருக்காவது காத்திருக்கும்போது அவர்கள் வரும் ஓசை ..

12.ஔவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல்...

13.(அ)ஃறிணையில் பிடித்தது: சாக்பீஸ்..பேனா..கம்ப்யூட்டர்.


.

இன்றைய உண்மையும்..நாளைய உண்மையும்

Sunday, September 6, 2009
அதிகாலை நேரம்.. கோவை காந்திபுரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கும்போதே பார்க்கிறேன், வழக்கத்தை விட மிக அதிக நெரிசல்..மக்கள் அனைவரும் ஏதோ விழாக் காலம் போல சந்தோசத்தை தங்கள் முகத்தில் பூசிக்கொண்டு ஒரே திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தனர்..அனைவர் கைகளிலும் ஏதேதோ பார்சல்..நீ என்ன வாங்கினே? நான் இத தான் தரலாம்னு இருக்கேன்னு பயங்கர ஒப்புமை.. சிலர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து காதை செவிடாக்கும் முயற்சியில் ஈடுபட, சிலர் அடையாறு ஆனந்தபவன் , கிருஷ்ணா இனிப்புகளை பாரபட்சமின்றி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்..
ச‌ரி.. ஊரைப் ப‌ற்றி என்ன‌ க‌வ‌லை... ந‌ம்ம‌ வேலைய‌ப் பார்க்க‌லாம்ன்னு.. போக‌ வேண்டிய‌ இட‌த்துக்கு ஆட்டோவ கூப்டா யாரும் வ‌ர‌மாட்டேங்குறாங்க‌.. டாக்ஸி..ம்ஹூம். திரும்பிகூட‌ பாக்க‌மாட்டேங்கிறாங்க‌..
ச‌ரி..ந‌ம‌க்கு வாய்ச்ச‌து ட‌வுன்ப‌ஸ் தான்னு அங்க‌ போனா, பஸ்ஸில் எல்லோரும் புது துணி போட்டுட்டு கைகளில் பரிசு பெட்டியோட இருக்க, கண்டக்டர் கூட காலையில கோவிலுக்கு போய் வந்ததை உறுதி செய்யும் வகையில் நெற்றியில் பட்டையோடு பக்தி மார்க்கமாக இருந்தார்..
கண்டக்டரிடம் நான்...
எத்தனை மணிக்கு வடவள்ளி போகும்?
அங்கெல்லாம் போகாதுங்க‌.. க‌ண‌ப‌தி போற‌துன்னா ஏறிக்கோங்க‌..
இது வ‌ட‌வ‌ள்ளி போற‌ ப‌ஸ் தானேங்க‌?
ஆமா..ஆனா இன்னிக்கு ஸ்பெஷ‌ல் ச‌ர்வீஸ் க‌ண‌ப‌திக்கு.. எந்த‌ ப‌ஸ்ஸும் க‌ண‌ப‌தி த‌விர‌ வேற‌ எங்கியும் போகாது..
ஓ..அப்ப‌டி என்ன‌ங்க‌ க‌ண‌ப‌தில‌ ந‌ட‌க்குது..?
என்னாங்க‌.. நீங்க.. இது கூட‌த் தெரியாம‌ இருக்கீங்க‌? இன்னிக்கு எங்க‌ த‌லைவ‌ர் பிற‌ந்த‌ நாளு..இந்தியா முழுக்க.. ஏன் உலகம் முழுக்க இருந்து அவ‌ரை வாழ்த்த‌ ம‌க்க‌ள் வ‌ந்திட்டும் போய்ட்டும் இருக்காங்க‌...எல்லா மாநிலத்திலே இருந்தும் சிறப்பு ரயில்கள் எல்லாம் ஏற்படு பண்ணி இருக்காங்க.. பல ரோடுல பாத யாத்திர போற‌தால பயங்கர போக்குவரத்து நெரிசல்..இவ்ளோ போஸ்ட‌ர் இருக்கே..இத‌க்கூட‌ப் பாக்க‌லியா நீங்க‌? என சொல்லி என்னை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல பார்த்தார்..

ஓ..அப்ப‌டிங்களா..சாரிங்க‌..தெரியலேங்க என சொல்லி சமாளித்து பார்வையை அலைய விட.. அங்கே எட்டாம் வள்ளலே வாழ்க.. வாழும் தெய்வமே உன்னை வணங்குகிறோம், என வாழ்த்து போஸ்டர்கள் ஜொலித்தன..




அதில‌ இருக்க‌ற முக‌ம் தெரிஞ்ச‌ முக‌மா இருக்கேன்னு உத்து பார்த்தா..
அட‌.. ந‌ம்ம‌ ச‌ஞ்ச‌ய்..
ஆஹா.. ச‌ஞ்ச‌ய் இவ்ளோ பெரிய‌ ம‌னுஷர்ன்னு தெரியாம‌ போச்சே...ச‌ரி.. நாம‌ளும் ஒரு ந‌டை போய் நேர்ல‌ பார்த்து விஷ் ப‌ண்ணிட‌லாம்ன்னு.. வ‌ந்த‌ வேலைய‌ விட்டுட்டு க‌ண‌ப‌திக்கு கெள‌ம்பிட்டேன்
அவ‌ர் வீட்டுப் ப‌க்க‌ம் போனா.. ஒரு கிலோ மீட்டர் தூரம் மக்கள் வரிசையில் நிற்க.. ச‌ரி.. ந‌ம்மால‌ அவ‌ர‌ பாக்க‌ முடியாது..ஒரு போன் ப‌ண்ணி விஷ் ப‌ண்ணலாம்ன்னு போன் அடிச்சா.. ஒரு பத்து கைகள் மாறி ஒரு வழியா போன் அவர் கைக்கு போய் சேர்ந்தது.. நான் ராஜி பேசரேன்னு சொன்னதும்,
ஹாய்.. ராஜி..சொல்லுங்க‌..
ஹேப்பி ப‌ர்த்டே ச‌ஞ்ச‌ய்..
தேங்க் யூ..
ச‌ஞ்ச‌ய் இன்னிக்கு உங்க‌ள‌ மீட் ப‌ண்ண‌ முடியுமா?
ஓ..பாக்க‌லாமே..எங்க இருக்கீங்க நீங்க?
கணபதிலதான் இருக்கேன்..ப‌ஸ் ஸ்டாண்ட்ல‌...
சரி..இன்னும் 10 நிமிஷத்துல அங்க‌ இருப்பேன்.. வெயிட் ப‌ண்ணுங்க
ம்ம்.சரி..

சொல்லி சிறிது நேரத்தில் ராஜி..ன்னு சஞ்சயின் குர‌ல் ... பார்த்தா.. வானத்தில ஹெலிகாப்டர்ல‌ இருந்து வருது..

ஹாய்..ப‌ர்த்டே பேபி...
மேல வாங்க..(ஹை..நானும் ஹெலிகாப்டர்ல ஏறிட்டேனே)..
காரிலே வந்தா.. டிராஃபிக் வர முடியாது அதுவும் இல்லாம மக்கள் என்ன பாத்தா அவ்வளவு தான் விட மாட்டாங்க அதான்..

ம்ம்..ச‌ஞ்ச‌ய் இவ்ளோ பெரிய‌ ஆளா நீங்க‌? இப்போதான் என‌க்கு தெரிஞ்சிது..

அதெல்லாம் ஒண்ணும் இல்ல‌ப்பா.. எல்லாம் ந‌ம் ந‌ண்ப‌ர்க‌ளோட அன்புதான்..
ச‌ரி..ச‌ரி.. ஒரு வி.ஐ.பி யோட‌ டைமை நான் வேஸ்ட் ப‌ண்ண‌ல‌.. சீக்கிர‌ம் ட்ரீட்ட‌ குடுத்துட்டு கெள‌ம்புங்க‌..
ஓய்.. இன்னாது..ட்ரீட்டா..அதெல்லாம் கிடையாது.. ஏதோ கூப்டீங்க‌ளேன்னு வந்தா.. ட்ரீட்டாம்ல‌..ட்ரீட்டு...
சரி.சரி.உங்கள கேட்டது தப்புதான்.. நானே கேக் த‌ர்றேன்.. வ‌ச்சிகோங்க‌... என்ன‌தான் வி.ஐ.பி ஆனாலும் திருந்த‌ மாட்டீங்க‌ளே.:‍(..
குட் டெசிச‌ன் ராஜி.. இதுதான் ந‌ல்ல‌ புள்ளக்கி அடையாளம்‌..
கேக்கை சாப்டுட்டு ப‌ற‌ந்துவிட்டார் ..
நான் வ‌ழ‌க்க‌ம்போல‌ போன‌ வேலைய‌ விட்டுட்டு திரும்பி வீடு வ‌ந்து சேர்ந்திட்டேன்..

(சஞ்சய்!இதெல்லாம் இன்று கற்ப‌னைதான் என்றாலும்.. எதிர்கால‌த்தில் நீங்க‌ள் வி.ஐ.பி ஆக‌ப் போவ‌தும்.. எவ்வ‌ள‌வு பெரிய‌ நிலைக்குப் போனாலும் ந‌ட்புக‌ளை ம‌ற‌க்க‌மாட்டீர்க‌ள் என்ப‌தும் உண்மை)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்







.

தெரிந்தும் ம‌ற‌ந்த‌வை

Saturday, September 5, 2009

நான் செல்லும் வழியெல்லாம் உன் முகமே நிறைந்திருந்தும்,
உன் வழியில் என் சுவடே இல்லையென்பதும்,
என் மனதில் நீ பேசாத வார்த்தைகளும் நிறைந்திருந்தும்,
உன் செவியில் நான் பேசியவையும் நிலைக்கவில்லையென்பதும்,
தெரிந்திருந்தும்
உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,உறுதியானது
என் மரணத்திற்கான உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது


.