இதயப்பூக்கள் மலர்ந்தனவே

Monday, October 26, 2009
வரலாறு கூறும் தொடர்ப்பதிவுக்கு அழைத்தவர் ஆதவன். நான் போட முடிவு செய்திருந்த நன்றிப் பதிவையும் இதனுடன் கலந்துகட்டி எழுதிட்டேன்.படிச்சிகோங்க மக்களே


புராஜ‌க்ட் ரிப்போர்ட்டும்,ரெகார்ட் நோட் புக்கும் அப்போ அப்போ கொஞ்ச‌ம் கிளாஸ் நோட்ஸ் ம்ன்னு எழுத்துன்னா அது இங்கிலீஷ்... இண்ட‌ர்நெட்ன்னா அது என் துறை சார்ந்த‌ ட‌வுன்லோடுக்கும்,மெயில்பார்க்கவும் மட்டும்தான் என்று இருந்த‌ என‌க்கு இப்ப‌டி ஒரு வ‌லையுல‌க‌ம் இருக்கிறது,அது மற்றுமொரு தமிழ் உலகின் வாயிலைத் திறக்கிறது என்ப‌தை அறிமுக‌ம் செய்த‌து ஏதோ ஒரு கூகுல் ச‌ர்ச் ல் திற‌ந்த விவசாய சம்பந்தமான ஒரு பதிவு.அந்த‌ வ‌லைப்பூவை ஓர‌ள‌வு மேய்ந்த‌பின்ன‌ர், நாமும் ஆர‌மிப்பிக்க‌லாமே என ஆசைப்பட்டு ஆனால் எப்ப‌டி என‌த் தெரியாம‌ல் த‌ட்டித் த‌ட‌வி ஆர‌ம்பித்த‌துதான் இத‌ய‌ப்பூக்க‌ளும்,இந்த‌ இய‌ற்கை ம‌க‌ள் என்னும் பெய‌ரும்.
டைரியில் இருந்த‌வ‌ற்றுக்கு ஒரு பேக் அப் காபியாக‌ இருந்த வ‌லைப்பூ என் நெஞ்ச‌த்தில் நிறைந்து,இதில் எழுத, அப்போ அப்போ தோணுவ‌தையெல்லாம் குறிப்பெடுக்க‌வே ஒரு டைரியை சும‌ப்ப‌வ‌ளாக‌ என்னை மாற்றிய‌து எப்போது என‌த் தெரிய‌வில்லை.
அப்படி நான் தத்துபித்துன்னு எழுதிட்டு இருந்த காலத்தில் என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார் மருத்துவர்.தேவ‌ன்மாய‌ம்.என் வலையுலக எழுத்துக்குக் கிடைத்த‌ முத‌ல் அங்கீகார‌ம் அது.

பின்ன‌ர் பின்னூட்ட‌ம் போடுவ‌து முத‌ல்,அடுத்த‌வ‌ர் வ‌லைப்பூவைத் தொட‌ர்வ‌து வ‌ரை ஒவ்வொன்றாய்க் க‌ற்றுக் கொண்டேன்.

யூத்புல் விக‌ட‌ன்னு ஒண்ணு இருக்குங்கிற‌தே தெரியாத நேர‌‌த்தில்,உங்க பதிவு யூத்புல் விகடனில் வந்திருக்குன்னு ஜமால் அண்ணா சொன்னார்.அதென்ன யூத்புல் விகடன்னு தேடினப்போ கூகுளார் வழிகாட்டிக் கூட்டிப்போனார்.
அப்புற‌ம் என்ன‌? நானும் ரவுடி ஆயிட்டேன் இல்ல. .இப்போதைக்கு ஏற‌த் தாழ‌ 20 ப‌திவுக‌ள் யூத்புல் விக‌ட‌ன்ல‌ வ‌ந்திருச்சி.

ச‌ரி.. போதும் இந்த‌ வ‌லைப்பூ ப‌ய‌ண‌ம்ன்னு முடிவெடுத்த‌ நேர‌த்தில், தொட‌ர்ப‌திவுக‌ளுக்கு ந‌ட்புக‌ள் அழைக்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.அதே நேர‌த்தில் விருதுக‌ளும் வ‌ர‌ ஆர‌ம்பித்த‌ன‌.விருதுக‌ளை அளித்த‌ Dr.தேவ‌ன்மாய‌ம்,தார‌ணிபிரியா,ராஜ்குமார்,விக்னேஷ்வ‌ரி,ப‌துமை,J,மேன‌காச‌த்யா தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ ஆத‌வ‌ன்,மேனகாச‌த்யா,அன்பு,ம‌கா,Dr.தேவ‌ன்மாய‌ம் அனைவ‌ருக்கும் என‌து ம‌ன‌ம்க‌னிந்த‌ ந‌ன்றி.

அதே நேர‌த்தில் எனது இவ்வ‌ருட‌ப் பிற‌ந்த‌ நாளை நிச்ச‌ய‌மாய் சிற‌ப்பான‌தாக்கிய வீட்டுபுறா ச‌க்தி,ஆயில்யன்,ச‌ஞ்ச‌ய் காந்தி,அன்பு,அபி அப்பா,தூயா,வ‌ச‌ந்த‌ குமார் ஆகியோரது பதிவுகளுக்கும்,மற்றும் அனைவரது வாழ்த்துக்களுக்கும் மிக்க‌ நன்றி

ஒருநாள் மெயிலைத் திற‌ந்தால், த‌மிழ்ம‌ல‌ர் ப‌த்திரிக்கையின் பிர‌தி நண்ப‌ரிட‌மிருந்து வ‌ந்திருந்த‌து. இதையெதுக்கு அனுப்பினீங்க‌ன்னு கேட்டா,4ம் ப‌க்க‌ம் பாருங்க‌ அப்ப‌டின்னு சொன்னார்.போய்ப் பார்த்தா என்னோட‌ ஒரு ப‌திவு அங்கே.என் வ‌லைப்பூ முகவ‌ரியுட‌ன்.

இது போதாதா என் எழுத்துப் ப‌ய‌ண‌த்தை ரீஸ்டார்ட் ப‌ண்ண‌? ம்ம்..மீண்டும் முழுவேக‌த்தில் தொட‌ங்கிய‌து.

இப்படி வலைப்பூ வ‌ண்டி மிக‌ வேக‌த்தில் போக‌ ஆர‌ம்பித்த‌ நேர‌த்தில்,வ‌ந்த‌து சில‌ த‌னிப்ப‌ட்ட மற்றும் உய‌ர்க‌ல்வி சார்ந்த‌ வேலைக‌ள்.

ச‌ரி. இனி வ‌லைப்பூ வ‌ண்டியை நிறுத்தி விட்டு க‌ல்வி வ‌ண்டிக்கு மாற‌ணும் அப்ப‌டின்னு முடிவு ப‌ண்ண‌ நேர‌த்தில் வ‌ந்த‌து வ‌லைச்ச‌ர‌ அழைப்ப.(நன்றி சீனா ஐயா மற்றும் சுரேஷ் குமார்) .என் வ‌லைப்பூவைப் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் எண்ணிக்கையும் 100ஐ நெருங்கிய‌து.100பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் எப்போ வ‌ருவாங்க‌ன்னு ந‌க‌த்தை க‌டிச்சிட்டு காத்திருந்த‌ நேர‌த்தில் வ‌லைச்ச‌ர‌ வார‌ம் ஆரம்பித்த‌து.சீனா ஐயா 100வ‌து பின் தொட‌ர்ப‌வ‌ராக‌ இணைந்தார்.அது ஒரு வார‌த்தில் 106ஆக‌ உய‌ர்ந்தது.அதே சமயத்தில் வ‌லைச்ச‌ர வார‌மும் இனிதே நிறைவுற்றது.இவ்வலையுல‌கால் கிடைத்த நட்புக்கள் ஏராளம்.அனைத்து நட்புக்களுக்கும் என் நன்றி.ஏதேனும் சொல்லாலோ,செயலாலோ நான் என்னை அறியாமல் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

தனிப்பட்ட‌ வேலைகள் என்னையே மூழ்கடிக்கும் நிலைக்கு அதிகரித்து விட்டதால் வலைப்பூவுக்கு விடுமுறை விடும் முடிவை இப்போது எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.இன்றுமுதல் இந்த வலைப்பூவுக்கு விடுமுறை விட்டுக்கறேன் மக்களே. மீண்டும் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.

அனைவ‌ருக்கும் மிக்க நன்றி‌.

.

24 comments:

Ungalranga said...

அவள் பறந்து போனாளே ..எனை மறந்துபோனாளே..!!

cheena (சீனா) said...

ரங்கா ரங்கா - விடுமுறை தான் ரங்கா - ஒரு நாள் தானே போனாப்போகட்டும் - வந்துடுவாங்க சீக்கிரம் - கவலை வேண்டாம்

என்ன ராஜீ - சரியா

நல்வாழ்த்துகள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி !!!!

அபி அப்பா said...

ராஜி! 14 வருஷம் லீவ் விடுவது எல்லாம் டூ மச்! அட்லீஸ்ட் 13 வருஷத்திலயாவது திரும்பி வந்துடும்மா! அண்ணா பேச்சை கேளு! அடம் பிடிக்காதே!!

Rajalakshmi Pakkirisamy said...

en en en? nooooooooooooooooooooooooooo

Subha said...

எல்லா பணிகளும் முடிந்து சீக்கிரமே திரும்பி வர வாழ்த்துக்கள் :)

☀நான் ஆதவன்☀ said...

ஆகா தொடருக்கு கூப்பிட்டது தப்பாங்க? கோவிச்சுட்டு போற மாதிரி இருக்கு :)

☀நான் ஆதவன்☀ said...

முக்கிய வேலைக்கு அப்புறம் கிடைக்குற டைம் பாஸூக்கு தான் ’வலைப்பூ’ங்கிறதை நல்லா புரிஞ்சிருக்கீங்க. ரொம்ப நல்ல முடிவு தான்.

நானும் அந்த முடிவு எடுக்குற நாள் ரொம்ப தூரம் இல்லைன்னு நினைக்கிறேன் :)

gayathri said...

eppa ellam time kedaikutho appa ellam vanthu ponga pa

ஜோசப் பால்ராஜ் said...

குட், இப்ப தான் நீங்க பிரபலப் பதிவர் ஆகிட்டு இருக்கீங்க.
இனிமே வலைப்பூவில எழுத மாட்டேன்னு சொல்லிட்டே இருக்கனும். பின்னூட்டங்கள்ல ஐயோ அப்டியெல்லாம் சொல்லக் கூடாதாக்கும், நீங்கள்லாம் எழுதலன்னா தமிழ் இருந்த இடத்துலயே தான் இருக்கும், அத எப்டி அடுத்த கட்டத்துக்கு நகர்துறதுங்கிற ரேஞ்சுக்கு ஃபீலிங்ஸ் பின்னூட்டமெல்லாம் வரணும். அப்பறம் ரசிகப் பெருமக்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி நான் தொடர்ந்து எழுத முடிவெடுத்துள்ளேன்னு சொல்லனும்.
இத சொல்லிட்டா நீங்க பிரபலப் பதிவர் தான்.

ஏனுங்க, அப்ப எழுதுற எல்லாரும் சும்மா வெட்டியா உக்காந்துருக்கவங்களா? வேலை வெட்டி இல்லாதவங்க தான் எழுதிட்டு இருக்காங்களா? பேலன்ஸிங் முக்கியம் மேடம். எதுக்கு எப்ப முக்கியத்துவம் குடுக்கனும்னு புரிஞ்சுகிட்டா தொடர்ந்து எழுதிகிட்டேயிருக்கலாம்.

ஃபார்ம்வில்லேயா , பதிவா , நண்பர்களா, படிப்பா , சாப்பாடா, ஓய்வா இதுல எதுக்கு எப்ப முக்கியத்துவம் குடுக்கனும்னு முடிவெடுத்துட்டா போதும் எல்லாத்தையும் செய்யலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

enna aachchu

*இயற்கை ராஜி* said...

@ஜோசப் பால்ராஜ்

எதுக்கு எப்போ முக்கியத்துவம் தரணும்ன்னு முடிவு பண்ணினதாலதாங்க இந்த பதிவு.இப்போதைக்கு ஆன்லைன் வர்ற வாய்ப்புகள் எனக்கு குறைவு.
போஸ்ட் போடறது கஷ்டம். அதனால்தான் இந்த விடுமுறை.

தொடர்பதிவுக்கு நண்பர்கள் யாரும் அழைத்துவிட்டால் எழுதமுடியாதே என்பதால்தான் பப்ளிக்கா இப்படி ஒரு விடுமுறை போஸ்ட் போட்டிருக்கேன்.இனியாரும் அப்படி அழைக்க மாட்டார்கள் அல்லவா?


மத்தபடி நான் வலைப்பூவுக்கு விடுமுறைதாங்க விட்டிருக்கேன். விடைபெறவில்லை.. ரசிகப் பெருமக்கள்கூப்டாலும்,கூப்டலைனாலும் மீண்டும் கண்டிப்பாய் வருவேன்

தேவன் மாயம் said...

அப்படி நான் தத்துபித்துன்னு எழுதிட்டு இருந்த காலத்தில் என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார் மருத்துவர்.தேவ‌ன்மாய‌ம்.என் வலையுலக எழுத்துக்குக் கிடைத்த‌ முத‌ல் அங்கீகார‌ம் அது.
///

ஆகா!! இன்னும் ஞாபகம் இருக்கா?

தேவன் மாயம் said...

சும்மா ரெண்டுவரி எழுதலாமே- வாரம் இரு முறை!!

தேவன் மாயம் said...

நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்!!

Menaga Sathia said...

நேரம் கிடைக்கும் போது எழுதுங்க ராஜி..

நிஜமா நல்லவன் said...

:)

சுசி said...

சிறப்பா உங்க வேலைய முடிச்சிட்டு சீக்கிரமே வந்து எழுத ஆரம்பிங்க... லீவுதாங்கிரத மறந்திட வேண்டாம்!!!

விக்னேஷ்வரி said...

நல்ல பதிவு. சீக்கிரம் வாங்க இயற்கை.

Princess said...

சீக்கரம் வாங்க..

-பதுமை

ப்ரியமானவள் said...

பெண்களே.. இதுவும் சரிதானே

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

அன்புடன் அருணா said...

/ஃபார்ம்வில்லேயா , பதிவா , நண்பர்களா, படிப்பா , சாப்பாடா, ஓய்வா இதுல எதுக்கு எப்ப முக்கியத்துவம் குடுக்கனும்னு முடிவெடுத்துட்டா போதும் எல்லாத்தையும் செய்யலாம்/
ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க ஜோசப் பால்ராஜ் !

Anonymous said...

ராஜீ சீக்கிர‌ம் வ‌ந்திடுங்க‌.....

we r waiting 4 u........

Thenammai Lakshmanan said...

.//இப்போதைக்கு ஏற‌த் தாழ‌ 20 ப‌திவுக‌ள் யூத்புல் விக‌ட‌ன்ல‌ வ‌ந்திருச்சி.//

vaazththukkaL iyarkai