மனதில் மலர்ந்தவை 25/12/2009

Friday, December 25, 2009
வணக்கம் மக்களே.. பண்டிகைக் காலம் ஆரம்பிச்சாச்சி..அதோட சேர்த்து விடுமுறைக் கொண்டாட்டங்களும் ஆரம்பிச்சிருக்கும்ன்னு நம்பறேன்.புது வருஷம் வேற வரப்போகுது.எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா வாழ்த்திக்கறேன்..

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்

ஏன் இவ்ளோ நாளா பதிவு எழுதலே,எப்ப திரும்ப எழுதுவே..அப்படின்னு அக்கறையாய் விசாரித்த பல இலட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி.. நன்றி..(கொஞ்சம் ஓவராத்தான் பில்டப் குடுக்கறேனோ:)))) )அவங்க கேட்டது எவ்ளோ நாளைக்கு என் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்ன்னு தெரிஞ்சிக்கதான்கிற உண்மை நான் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் தெரியணும்ன்னு இல்ல:‍)))

குட்டி குட்டியாய் நிறைய விஷயங்கள் எழுதறதுக்கு மனசில இருக்கு.அதில சிலவற்றை மட்டும் இப்போ பகிர்ந்துக்கறேன்..



சமீபத்தில் வாங்கிய பல்பு

நான் பயணத்தில் அடிக்கடி சில மாணவிகளைச் சந்திப்பேன்.கண்ணியமாய் உடை உடுத்துபவர்கள். அவர்களில் சிலர் ஒரு நாள்,திடீரென முகம் சுளிக்கத்தக்க ஆடையில் வந்தார்கள். நான் அவர்களிடம்.. இப்பிடியெல்லாம் இன்டீசன்டா டிரஸ் பண்ணலாமா என கேட்கப்போக அவர்கள் பதிலால் ஆடிப்போய்விட்டேன்
அவர்கள் கல்லூரியில் ஏதோ விழாவாம்.. விழாவுக்கு இப்படிப்போனாதான் காலேஜ்ல மரியாதை இருக்குமாம்..
என்ன அக்கா.... ஆன்ட்டி மாதிரி யோசிக்கறீங்க.இழுத்து போத்திட்டு போறதெல்லாம் அந்தக்காலம்..யூத்ன்னா இப்பிடித்தான் டிரஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டாங்க மக்களே.
அரைகுறையாய் ஆடை அணிந்தால்தான் யூத் என்னும் கலாச்சாரத்தைத் தோற்றுவித்தது யார்? இதையெல்லாம் அவங்க பெற்றோரோ,ஆசிரியரோ என்னன்னு கேக்கமாட்டாங்களா?


சமீபத்திய சந்தேகம்

பல வீடுகளைப் போல, எங்க வீட்டு டிவிலயும் நெறைய,நெறைய மெகாசீரியல்கள் ஓடிட்டு இருக்கும்.நானும் அப்போ அப்போ சாப்பிடும் நேரங்களில் அம்மாகூட உக்கார்ந்த்து சீரியல்களை வேடிக்கை பார்க்கறது உண்டு.பல சீரியல்கள்,பல எபிசோடுகள் பார்த்து எனக்கு வந்த சந்தேகம் என்னன்னா.. எல்லா சீரியல்கள்லையும் யாரவது இறந்துபோவதோ,அதன் தொடர்ச்சியான சீன்களோ, வெள்ளிக்கிழமைகளிலேயே நடப்பது ஏன்?


சமீபத்திய எரிச்சல்

இந்த செல்போனை வச்சிகிட்டு மாணவச்செல்வங்கள்:) காலேஜ்ல அடிக்கற லூட்டிய சமாளிக்கறதே பெரும்பாடா இருக்கு.பெரிய சி.பி.ஐ ஆபீசர் கணக்கா உளவு வச்சி செல்போன் ஒரு ஸ்டூடண்டகிட்ட இருக்கறத கண்டுபிடிச்சி,அதை வாங்கி வச்சிகிட்டு, அவங்க பெற்றோரைக் கூப்பிட்டு அவங்ககிட்ட மணிக்கணக்கில பேசி பையன்( பொண்ணு)கிட்ட செல்போனைத் தராதீங்கன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பிவச்சா அடுத்த ஒரு வாரத்தில திரும்ப போனை பையன்(பொண்ணு)கிட்ட குடுத்து, ஸ்டாப் கண்ணுல கிடைக்காம வச்சிக்கோன்னு சொல்லி அனுப்பறாங்களே. இவங்கள்லாம் என்னதான் நினைச்சிட்டு இருக்காங்க

46 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

ஆஹா... மலர்தவை நறுமணம் வீசுகிறதே...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஸ்டாப் கண்ணுல கிடைக்காம வச்சிக்கோன்னு சொல்லி அனுப்பறாங்களே//

உங்க அட்வைஸ் அப்படி

சீமாச்சு.. said...

//ஸ்டாப் கண்ணுல கிடைக்காம வச்சிக்கோன்னு சொல்லி அனுப்பறாங்களே. இவங்கள்லாம் என்னதான் நினைச்சிட்டு இருக்காங்க //

செல்போனை பையன் அல்லது பொண்ணு கிட்டே கொடுக்கிறதுனால பெற்றோர்க்கு ஏதோ ஒரு பயன் இருக்கு.. அந்தப் பயனுக்கு பங்கம் வராமல் ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க..

செல்போனை வைத்துக்கொண்டு மாணவனோ மாணவியோ வகுப்பில் தொந்தரவு வந்தால், மாணவனின் செயல்களுக்குப் பெற்றோரைப் பொறுப்பேற்க வையுங்கள்..

Rajalakshmi Pakkirisamy said...

welcome back :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்வரவு

நட்புடன் ஜமால் said...

அது நீங்க தனியா வாங்கிய பல்பு அல்ல கலாச்சாரமும் நாம் அனைவருக்கும் சேர்ந்து கிட்டயது.

அந்த சந்தேகத்த தூக்கி போடுங்க நேர விரயம்

அந்த எரிச்சல் மேட்டரு அப்படித்தான், மாணவர்கள் செல்போன் வைத்திருப்பது தவறல்ல இப்பொழுது அவசியமான ஒன்றாகி விட்டது - அதனை அவர்கள் எப்படி உபயோகில்லாம் மற்றும் எப்படி உபயோகிக்க கூடாது என்பதை பயிற்றுவியுங்கள்.

நல்வரவு தங்கச்சி

☀நான் ஆதவன்☀ said...

வெல்கம் பேக் :)

//.யூத்ன்னா இப்பிடித்தான் டிரஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டாங்க மக்களே//

:(

S.A. நவாஸுதீன் said...

வெல்கம் பேக் இயற்கை.

Anonymous said...

welcome back :))

இராகவன் நைஜிரியா said...

மலர்ந்தவை அனைத்தும் அழகு..

gayathri said...

ஏன் இவ்ளோ நாளா பதிவு எழுதலே,எப்ப திரும்ப எழுதுவே..அப்படின்னு அக்கறையாய் விசாரித்த பல இலட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி..

itha naan mattum thane ketten
naan oruthi kethathu uanu laksha kanakkana makkala

nadakkatum nadakkattum

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

Anonymous said...

welcome back

Anonymous said...

\\"ஏன் இவ்ளோ நாளா பதிவு எழுதலே,எப்ப திரும்ப எழுதுவே..அப்படின்னு அக்கறையாய் விசாரித்த பல இலட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி.. நன்றி.."//

இதெல்லாம் நொம்ப‌ ஓவ‌ர் தான்

Anonymous said...

\\"எல்லா சீரியல்கள்லையும் யாரவது இறந்துபோவதோ,அதன் தொடர்ச்சியான சீன்களோ, வெள்ளிக்கிழமைகளிலேயே நடப்பது ஏன்?"//

அட‌ அட‌ என்ன‌ அறிவு உங்க‌ளுக்கு! ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு யோசிக்க‌றீங்க‌.

Anonymous said...

\\"செல்போன் ஒரு ஸ்டூடண்டகிட்ட இருக்கறத கண்டுபிடிச்சி,அதை வாங்கி வச்சிகிட்டு"//



ம்ம்ம் சொல்லுங்க‌ வாங்கி வ‌ச்சுக்கிட்டு....


பெரிய‌ இடைவெளி விட்ட்டுருக்கீங்க‌ளே.... அதை நான் பில் ப‌ண்றேன்...
அடுத்து நீங்க‌ அந்த‌ போன்ல‌ ம‌ணிக்க‌ன‌க்கா அமௌண்ட் தீர்ற‌ வ‌ர்ற‌ பேசிட்டு


\\\"அவங்க பெற்றோரைக் கூப்பிட்டு அவங்ககிட்ட மணிக்கணக்கில பேசி பையன்( பொண்ணு)கிட்ட செல்போனைத் தராதீங்கன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பிவச்சா அடுத்த ஒரு வாரத்தில திரும்ப போனை பையன்(பொண்ணு)கிட்ட குடுத்து, ஸ்டாப் கண்ணுல கிடைக்காம வச்சிக்கோன்னு சொல்லி அனுப்பறாங்களே. "///

Anonymous said...

அப்பாடா இனிமேல் நான் நிம்ம‌தியா தூங்குவேன்.

நெக்ஸ்ட் போஸ்ட் எப்போ.?

வ‌ர்டா.............

Subha said...

//நானும் அப்போ அப்போ சாப்பிடும் நேரங்களில் அம்மாகூட உக்கார்ந்த்து சீரியல்களை வேடிக்கை பார்க்கறது உண்டு.// அப்போ அப்போனா...அடிக்கடியா? :)

Anonymous said...

//சுபா said...
//நானும் அப்போ அப்போ சாப்பிடும் நேரங்களில் அம்மாகூட உக்கார்ந்த்து சீரியல்களை வேடிக்கை பார்க்கறது உண்டு.// அப்போ அப்போனா...அடிக்கடியா? :)//

u knw wat iyarkai..subha online le tamil series download panni advance ah paarthuduvaanga..

butterfly Surya said...

Welcome back..

டிரஸ்ஸ பத்தி சொன்னாலோ எழுதினாலோ பல்பு மட்டுமா..??

ஈரோடு கதிர் said...

//எல்லா சீரியல்கள்லையும் யாரவது இறந்துபோவதோ,அதன் தொடர்ச்சியான சீன்களோ, வெள்ளிக்கிழமைகளிலேயே நடப்பது ஏன்?
//

இதெல்லாம் கவனிக்க நேரம் இருக்கா... உங்களுக்கு...

ஆயில்யன் said...

//MAHA said...

\\"ஏன் இவ்ளோ நாளா பதிவு எழுதலே,எப்ப திரும்ப எழுதுவே..அப்படின்னு அக்கறையாய் விசாரித்த பல இலட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி.. நன்றி.."//

இதெல்லாம் நொம்ப‌ ஓவ‌ர் தான்
..//

ரிப்பிட்டேய்ய்ய்ய்!:)))

Sanjai Gandhi said...

//itha naan mattum thane ketten
naan oruthi kethathu uanu laksha kanakkana makkala
//

அடப்பாவி காயத்ரி.. இதை சொல்ல தான் நான் கமெண்ட் போட நெனச்சேன். என்னை மாதிரி புத்திசாலிகளும் நாட்ல இருக்கத்தான் செய்றாங்கப்பா.. :)

//பல வீடுகளைப் போல, எங்க வீட்டு டிவிலயும் நெறைய,நெறைய மெகாசீரியல்கள் ஓடிட்டு இருக்கும்//

செம கண்டுபிடிப்பு.. :))

//எல்லா சீரியல்கள்லையும் யாரவது இறந்துபோவதோ,அதன் தொடர்ச்சியான சீன்களோ, வெள்ளிக்கிழமைகளிலேயே நடப்பது ஏன்?//
சனிப் பொணம் தனியா போகாதாம். அதனால ஒரு நாள் முன்னாடி வெள்ளிக்கிழமையே டிக்கெட் எடுத்துக் குடுத்திடறாங்களா. டவுட்டாப் பாரு. அடுத்த பிஹெச்டி இதை வச்சிப் பண்ணுங்க.. வரலாறு வாழ்த்தும்.

வால்பையன் said...

செல்போனை நல்லவிதமாக உபயோகிக்க கற்று தரலாமே!?

அன்புடன் அருணா said...

இன்னும் நிறைய மலரட்டும்!

*இயற்கை ராஜி* said...

/ஸ்வாமி ஓம்கார் said...
ஆஹா... மலர்தவை நறுமணம் வீசுகிறதே.../


ந‌ன்றி ஸ்வாமிஜி

*இயற்கை ராஜி* said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//ஸ்டாப் கண்ணுல கிடைக்காம வச்சிக்கோன்னு சொல்லி அனுப்பறாங்களே//

உங்க அட்வைஸ் அப்படி//


ம்ம்ம்..வ‌ருகைக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

Seemachu said...
//ஸ்டாப் கண்ணுல கிடைக்காம வச்சிக்கோன்னு சொல்லி அனுப்பறாங்களே. இவங்கள்லாம் என்னதான் நினைச்சிட்டு இருக்காங்க //

செல்போனை பையன் அல்லது பொண்ணு கிட்டே கொடுக்கிறதுனால பெற்றோர்க்கு ஏதோ ஒரு பயன் இருக்கு.. அந்தப் பயனுக்கு பங்கம் வராமல் ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க..

செல்போனை வைத்துக்கொண்டு மாணவனோ மாணவியோ வகுப்பில் தொந்தரவு வந்தால், மாணவனின் செயல்களுக்குப் பெற்றோரைப் பொறுப்பேற்க வையுங்கள்..//

அப்ப‌டித்தாங்க‌ ப‌ண்றோம்.ஆனாலும்...ஹ்ம்ம்

வ‌ருகைக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/Rajalakshmi Pakkirisamy said...
welcome back :)/

ந‌ன்றி ராஜி..போஸ்ட‌ப் ப‌டிச்சியா நீ? இரு..த‌னியா டெஸ்ட் வைக்கிறேன்:-)

*இயற்கை ராஜி* said...

/T.V.Radhakrishnan said...
நல்வரவு
/

மிக்க‌ ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

@நட்புடன் ஜமால்

வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
வெல்கம் பேக் :)

//.யூத்ன்னா இப்பிடித்தான் டிரஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டாங்க மக்களே//

:(/

:‍)))

*இயற்கை ராஜி* said...

/S.A. நவாஸுதீன் said...
வெல்கம் பேக் இயற்கை./

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/mayil said...
welcome back :))
/

வ‌ந்திட்டேன்.. ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/இராகவன் நைஜிரியா said...
மலர்ந்தவை அனைத்தும் அழகு../

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/gayathri said...
ஏன் இவ்ளோ நாளா பதிவு எழுதலே,எப்ப திரும்ப எழுதுவே..அப்படின்னு அக்கறையாய் விசாரித்த பல இலட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி..

itha naan mattum thane ketten
naan oruthi kethathu uanu laksha kanakkana makkala

nadakkatum nadakkattuம்/

நீ அவ்ளோ பெரிய ஆள் காய‌த்ரி.உன் ம‌திப்பு உன‌க்குத் தெரில‌:‍)))

*இயற்கை ராஜி* said...

/தியாவின் பேனா said...
அருமையான இடுகை வாழ்த்துகள்/

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

@MAHA
ந‌ன்றி

ஓவ‌ர்ன்னுதான் நானே சொல்லிடேனே..அப்புறம் எதுக்கு டேமேஜ்

என் அறிவுல கண்ணு போடக்கூடாது மகா

ஆஹா.. ப‌க்க‌த்துல‌ இருந்து பார்த்தாமாதிரியே சொல்றீங்க‌ளே...

ச்சே..எப்போடா போஸ்ட் போடுவான்னு பார்த்துட்டு இருந்தீங்க‌ளா மேட‌ம்.

*இயற்கை ராஜி* said...

சுபா said...
//நானும் அப்போ அப்போ சாப்பிடும் நேரங்களில் அம்மாகூட உக்கார்ந்த்து சீரியல்களை வேடிக்கை பார்க்கறது உண்டு.// அப்போ அப்போனா...அடிக்கடியா? :)

:‍) ஆறு மாசம் கழிச்சி பார்த்தாலும் அதே சீன் தானே போகுது.இதுல அடிக்கடி எதுக்கு பார்க்கணும்

*இயற்கை ராஜி* said...

/புனிதா||Punitha said...
//சுபா said...
//நானும் அப்போ அப்போ சாப்பிடும் நேரங்களில் அம்மாகூட உக்கார்ந்த்து சீரியல்களை வேடிக்கை பார்க்கறது உண்டு.// அப்போ அப்போனா...அடிக்கடியா? :)//

u knw wat iyarkai..subha online le tamil series download panni advance ah paarthuduvaanga../

ஓ..இப்பிடில்லாம் வேற‌ ந‌ட‌க்குதா? செய்திக்கு ந‌ன்றி புனிதா

*இயற்கை ராஜி* said...

/butterfly Surya said...
Welcome back..

டிரஸ்ஸ பத்தி சொன்னாலோ எழுதினாலோ பல்பு மட்டுமா..??/

ந‌ன்றி..

அவ்வ்வ்வ்

*இயற்கை ராஜி* said...

/ஈரோடு கதிர் said...
//எல்லா சீரியல்கள்லையும் யாரவது இறந்துபோவதோ,அதன் தொடர்ச்சியான சீன்களோ, வெள்ளிக்கிழமைகளிலேயே நடப்பது ஏன்?
//

இதெல்லாம் கவனிக்க நேரம் இருக்கா... உங்களுக்கு.../

ஹி..ஹி..அப்ச‌ர்விங்க் ப‌வ‌ர் அறிவாளிக‌ளுக்கு அதிக‌ம்:‍))

*இயற்கை ராஜி* said...

/ ஆயில்யன் said...
ரிப்பிட்டேய்ய்ய்ய்!:)))/

ம்ம்..அடுத்த‌ போஸ்ட‌ மாட்ட‌ம‌லா போவிங்க‌ பாஸ்

*இயற்கை ராஜி* said...

@SanjaiGandhi™

வாங்க‌ புத்திசாலி.
பொற‌மைப்ப‌டாதீங்க‌ என் அறிவைப் பார்த்து

*இயற்கை ராஜி* said...

/வால்பையன் said...
செல்போனை நல்லவிதமாக உபயோகிக்க கற்று தரலாமே!?/

அத‌ற்கான‌ முய‌ற்சிகள்ல ஒரு பகுதிதாங்க‌ இதெல்லாம்

*இயற்கை ராஜி* said...

/அன்புடன் அருணா said...
இன்னும் நிறைய மலரட்டும்!/

நன்றிங்க‌ அக்கா