மனதில் மலர்ந்தவை 18/04/10

Sunday, April 18, 2010
பொஸஸிவ்னஸ் என்பது உறவிகளுக்கிடையேயான மிகக் கடும் பிரச்சினை. இந்த மாதிரி பொசஸிவ்னஸில் புலம்பும் எத்தனையோ பேரை லெபட் அன்ட் ரைட் வாங்கி இருக்கேன்.நான் எப்போவுமே என் நட்புகளிடம் பொஸஸிவ்னஸ் கொள்வதில்லை அப்படின்னு ஒரு நெனப்புலயே சுத்திட்டு இருந்தேன்.ஆனால் அண்மையில் வெளியூரில் வேலை செய்யும் தோழி ஒருத்தி ஊருக்கு வருவதை என்னிடம் சொல்லாமல் வேறொருவர் சொன்னது,அவர் மூலமாகத் தெரியவந்தபின் அவளை நான் திட்டிய திட்டு ,அம்மாடி.. எனக்கே கொஞ்சம் பாவமாய்த்தான் இருக்கு.அதுக்கு அவள் கேட்டாள்."ஏய் இப்ப உனக்கு என்ன பிரச்சினை. நான் உன்கிட்ட சொல்லாம வந்ததா இல்ல அவர்கிட்ட சொன்னதா" என்று. சர்வ நிச்சயமாய் பதில் தெரியவில்லை.....என்னிடமும் பொஸஸிவ்னஸ் எட்டிப்பாக்குதோ

**********************************************************************************
என் தோழி ஒருத்தி தவறாமல் குறுந்தகவலோ, மெயிலோ தினமும் தவறாமல் அனுப்புவாள்.திடீரென கொஞ்ச நாள் நிறுத்திவிடுவாள்.மீண்டும் கொஞ்ச நாளில் மீண்டும் தொடங்குவாள்.ஏன் எனக் காரணம் கேட்டப்போது சொன்னாள். நான் அனுப்பாதப்போ ஏன் அனுப்பலைன்னு கேக்கறவங்களும்,அவங்களே அனுப்பறவங்களும் தான் நம் மெசேஜ்களை விரும்பறாங்கன்னு அர்த்தம்.மத்தவங்களுக்கு நம் மெசேஜ் ஒரு சுமைதான்.சில நேரங்களில் நம் நட்பும் கூட அதனால் Try to keep away from them என்கிறாள்.நிஜமா மக்காஸ்.அப்போ மெசேஜ் அனுப்பறதுலதான் நட்பு இருக்கா?

*********************************************************************************

அண்மையில் டெக்னிகல் மேட்டர் அதிகமாக இல்லாத ஒரு தேர்வுத்தாளைத் திருத்தும் சந்தர்ப்பம் அமைந்தது.அதில் தெரிந்த்து மாணவர்களுக்கு செல்போன்களால் விளையும் மிக முக்கிய தீமை.பதில்களில் பலப்பல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள்.பல இடங்களில் sms language.உடனே off செய்துவிட்டேன்.என் மொபைலில் dictionary mode.இப்படியே போனால் ஆங்கிலமும் அரைகுறை ஆகிவிடும் போல இருக்குதே

**********************************************************************************
நம் நாட்டில் நம் ஊரில் வாழ்வதில் பெருமைப்படும் தருணங்கள் பல நேரங்களில் நிகழும்.அப்படிப்பட்ட ஒரு தருணம் அண்மையில் வந்தது. இந்தக் கோடியில் இருவரைப் பற்றி அறிந்ததும். நானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் உத்வேகத்தை விதைத்தோர்க்கு நன்றியும்,வணக்கங்களும்


******************************************************************************.

23 comments:

ரோகிணிசிவா said...

//இப்படியே போனால் ஆங்கிலமும் அரைகுறை ஆகிவிடும் போல இருக்குதே//-athu naala than naan ippa tamila typaren ,,, he he he ippa lazy so did not switch tamil yaar !!!

கானா பிரபா said...

பாஸ் வரவர உங்க பதிவுகளில் பொறுப்புணர்ச்சி மலர்வதைப் பார்க்கிறேன்

ஆயில்யன் said...

// கானா பிரபா said...

பாஸ் வரவர உங்க பதிவுகளில் பொறுப்புணர்ச்சி மலர்வதைப் பார்க்கிறேன்//

பெரிய பாண்டி சொன்ன மாதிரியே நானும் பார்க்கிறேன்!

Thamiz Priyan said...

\\\ ஆயில்யன் said...

// கானா பிரபா said...

பாஸ் வரவர உங்க பதிவுகளில் பொறுப்புணர்ச்சி மலர்வதைப் பார்க்கிறேன்//

பெரிய பாண்டி சொன்ன மாதிரியே நானும் பார்க்கிறேன்!\\\

டிட்டோ போட்டுக்கிறேன்!

நட்புடன் ஜமால் said...

பொஸஸிவ்னஸ் இல்லாட்டி உங்க நட்பு இடை நிலை தான்

Keep away from them is also correct but

அப்போ மெசேஜ் அனுப்பறதுலதான் நட்பு இருக்கா?

this is no

நிஜமா நல்லவன் said...

// கானா பிரபா said...

பாஸ் வரவர உங்க பதிவுகளில் பொறுப்புணர்ச்சி மலர்வதைப் பார்க்கிறேன்//

பெரிய பாண்டி சொன்ன மாதிரியே நானும் பார்க்கிறேன்!

Anonymous said...

தினம் பருப்பு சாதமா சாப்பிடாதேன்னா கேட்கறையா? பாரு இப்பல்லாம் என்னன்னமோ எழுதறே :))

ஈரோடு கதிர் said...

ராஜி...

நல்லாத்தான் மலர்ந்திருக்கு

சீமாச்சு.. said...

//தினம் பருப்பு சாதமா சாப்பிடாதேன்னா கேட்கறையா? பாரு இப்பல்லாம் என்னன்னமோ எழுதறே :))
//

ரீப்பீட்டேய்..............

ஜோசப் பால்ராஜ் said...

பொஸஸிவ்னெஸ் இல்லாத ஆளே இருக்க முடியாது மேடம். அது ஆளுக்கு தகுந்த மாதிரி வெளிப்படும். அதை பாசிட்டிவா கையாளத்தெரிஞ்சவங்க புத்திசாலிகள்.

SMS தாக்கம் - என்னத்த சொல்ல ?

மரம் வளர்ப்பு - மரம் வளர்த்தா மட்டும் போதாது. மரம் வளர்கனும்ங்கிற உணர்வையும் வளர்க வேண்டியிருக்கு.

இரசிகை said...

possessiveness - ithu alavuku athikamaa irunthaal yellaame thappaayidum.thevaiyaana alavu ku thaan venum.

mail seiyalanaalum natpu nu oru murai
nirnaiyichchathu maarave maaraathu...

☀நான் ஆதவன்☀ said...

ஒரு பொறுப்பான ஆசிரியரா சில பல மேட்டர் இப்பெல்லாம் அதிகமா வருதுங்க :)

//பொஸஸிவ்னஸ் என்பது உறவிகளுக்கிடையேயான மிகக் கடும் பிரச்சினை. இந்த மாதிரி பொசஸிவ்னஸில் புலம்பும் எத்தனையோ பேரை லெபட் அன்ட் ரைட் வாங்கி இருக்கேன்.//

:)))))))))))))) இதை நீங்க சொல்லும் போது சிரிப்பு போலீஸ் ஞாபகம் தான் வருது :)

G3 said...

// தமிழ் பிரியன் said...

\\\ ஆயில்யன் said...

// கானா பிரபா said...

பாஸ் வரவர உங்க பதிவுகளில் பொறுப்புணர்ச்சி மலர்வதைப் பார்க்கிறேன்//

பெரிய பாண்டி சொன்ன மாதிரியே நானும் பார்க்கிறேன்!\\\

டிட்டோ போட்டுக்கிறேன்!//

டிட்டோ போட்டுக்கிறேன்!!

[ஆயில்ஸ் பாஸ், நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டேனா பாஸ் ??? :P]

'பரிவை' சே.குமார் said...

ராஜி,
உங்கள் இதயத்தில் நல்லா மலர்ந்திருக்கு உங்கள் இந்த அரும்'பூ'.

வாழ்த்துக்கள்..!

தாரணி பிரியா said...

மெசேஜ்ல இத்தனை மேட்டர் இருக்கா. ம் . அப்புறம் செல்போன் மேட்டர்க்கு பெரிய எஸ். நான் இப்ப லெட்டர் டைப் செய்யும்போது எல்லாம் இந்த தப்பை சரியா செஞ்சுக்கிட்டு இருக்கேன் :(.

ஆயில்யன் said...

தங்கச்சீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இப்பிடியெல்லாம் பாச மழை அடிக்கடி பொழியாதம்மா ஒரே அழுகைஅழுகையா வர்து!

Rajalakshmi Pakkirisamy said...

Tharani, Viji..

Ungakitta innum ethir parkuren :)

Anonymous said...

பாஸ் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... ஆனாலும் பொசிசிவ்னஸ் சில சமயம் தப்பா தெரில்ல..அன்பு கரைப்புரள்வதால்தானே!

மங்குனி அமைச்சர் said...

//நிஜமா மக்காஸ்.அப்போ மெசேஜ் அனுப்பறதுலதான் நட்பு இருக்கா?///


குட் கொஸ்டீன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா மலர்ந்திருக்கு

வால்பையன் said...

அன்பு அதிகமானால் பொஸஸிவ்னஸ் எட்டி பார்க்க தான் செய்யும்!

Thenammai Lakshmanan said...

நான் அனுப்பாதப்போ ஏன் அனுப்பலைன்னு கேக்கறவங்களும்,அவங்களே அனுப்பறவங்களும் தான் நம் மெசேஜ்களை விரும்பறாங்கன்னு அர்த்தம்.மத்தவங்களுக்கு நம் மெசேஜ் ஒரு சுமைதான்//உண்மைதான் ராஜி சரியா சொன்னீங்க

அபி அப்பா said...

\\Seemachu said...

//தினம் பருப்பு சாதமா சாப்பிடாதேன்னா கேட்கறையா? பாரு இப்பல்லாம் என்னன்னமோ எழுதறே :))
//

ரீப்பீட்டேய்..............
\\
ஓரு டபுள் ரிப்பீட்டேய்!!

ராஜி என்ன ஆச்சு? என்னவோ போ!