எனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர் பதிவு

Friday, April 2, 2010
எனக்குப் பிடித்த பெண்கள் பத்து பேரைப் பத்தி எழுதச் சொல்லி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா கூப்ட்டு ரொம்ப நாளாயிடுச்சிங்க.அழைப்பிற்கு நன்றி ஐயா. தாம‌தத்திற்கு ம‌ன்னிக்க‌வும்.


இத்தொடர்பதிவிற்கான நிபந்தனைகள்
1.உங்களின் சொந்தக்காரராய் இருக்கக் கூடாது
2.வரிசை முக்கியமில்லை
3.ஒரே துறையில் பலர் பிடித்தமானவராய் இருக்கும்.இப்பதிவு வெவ்வேறு துறையில் இருப்பவராய் இருக்க வேண்டும்

பிடித்தவர்களைப் பற்றி நினைக்கையில் முதல் முதலில் கண்முன் நிற்பது தோழமைச் சொந்தங்கள்.அவர்களைப் பற்றி இப்பதிவில் எழுதக் கூடாதென்பது விதியாகையால், அதை தாண்டி யோசிக்கும் போது வரிசை கட்டி மனதை நிரப்புகிறார்கள் கீழுள்ளவர்கள். உலகறிந்த சாதனைப் பெண்களாய் இவர்கள் இல்லாவிட்டலும்,என் ம‌ன‌தைக் கொள்ளை கொண்ட‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.

1.நான் ஆரம்பக் கல்வி பயில்கையில், என் பள்ளியின் அருகில் கடை வைத்திருந்த பாட்டி. அவரின் பெயர் சிவகாமி என நினைக்கிறேன்.எங்கள் பள்ளியில் பலருக்கும் பகிர்ந்துண்ணுதலை கற்றுக் கொடுத்த‌வர் அவர்தான். நாங்கள் ஏதேனும் தின்பண்டம் வாங்கும் போது, அருகில் ஒரு எழைக் குழந்தை இருந்தால் அந்தப் பாப்பாவுக்கும் கொஞ்சம் குடுக்கலாம் நீதான் நிறைய வச்சிருக்கியே அப்படின்னு சொல்லி பகிர்ந்தளிப்பார்கள்.அந்த வயதில் அவரைச் சுத்தமாய்ப் பிடிக்காது. நாம வாங்குற மிட்டாயில யாருக்கோ பங்கு தரச் சொல்றாங்களேன்னு.. ஆனால் இப்போது புரிகிறது அவரின் மனசு

2.என் கல்லூரிக் காலத்தில், எங்க‌ள் க‌ல்லூரிப் பேருந்தின் ஒரு திருப்ப‌த்தில் தினமும் டாடா காண்பித்து உற்சாகத்தை விதைத்த ஐந்து வயது மதிக்கத்தகுந்த ஒரு குட்டிப் பாப்பா

3.வ‌ய‌தான கால‌த்திலும், ம‌ங்க‌ள‌க‌ர‌மான தோற்றத்துடன் அதிகாலை நேரத்திலேயே வாச‌லுக்கு நீர் தெளிக்கும் எங்க‌ள் எதிர் வீட்டு ப‌ணிப்பெண் சரஸ்வதியம்மா.மனதில் விருப்பம் இருப்பின் வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்துபவர் இவர்

4.எங்கள் கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர் திருமதி.அமுதா.அவரின் உடை உடுத்தும் நேர்த்திக்கு நான் அடிமை என்றே சொல்லாம்

5.தனியொரு மனுசியாய்,உறவுகளின் துணையும் பெரிதாக இல்லாத நிலையிலும் தன் மூன்று பெண்களையும் நன்றாகப் படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்த என் பெரியம்மாவின் தோழி கனகம் அத்தை.அவரின் தன்னம்பிக்கை மகத்தானது

6.மிகச் சிறிய தையல் கடை ஒன்றை ஆரம்பித்து, ஐந்தாறு ஆண்டுகளில் அதைத் தையல் பள்ளியாகவும், நகரின் குறிப்பிடத்தகுந்த ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனமாகவும் உயர்த்திய என் அக்காவின் சீனியர் கீதா அக்கா. உழைப்புக்கு உதாரணமாய் எனக்குத் தோன்றுபவர் அவர்.

7.எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தாலும்,அயராமல் தான் நினைத்தவரையே கைப்பிடித்த என் கல்லூரி மாணவி சுகன்யா.அவரின் செயல்கள் சிலவற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் எடுத்ததை முடிக்கும் அவரின் திண்மையை வியக்கிறேன்

8.எங்கள் வீட்டருகில் இருக்கும் மைதானத்தில் தினமும் ஓட்டப் பயிற்சி எடுக்கும் மாணவி கீர்த்தனா.எப்படியும் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்னும் அவளது ஆசையும் அதற்கான கடும் உழைப்பும் ஈர்க்கின்றன என்னை

9.பெண் என்றால் மென்மை என்பதற்கு உதாரணமாய், வண்டிக்காரனிடம் அடி வாங்கும் மாட்டிற்கும் கண்ணீர் சிந்தும் என் கல்லூரித் தோழியின் தாய் லஷ்மி அம்மா

10.சில நாட்களுக்கு முன் மருத்துவமனை சென்ற போது முதன் முதலில் நான் பார்த்த அப்போதுதான் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை.


பட்டியலில் பத்துபேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இது வரை இத்தொடர் பதிவை எழுதியவர் யார் யார் என்பது சரியாகத் தெரியாததால் நான் யாரையும் அழைக்கவில்லை

.

17 comments:

வியா (Viyaa) said...

arumaiyana padaippu...
valthukkal akka..

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றிங்க!

க.பாலாசி said...

//2.என் கல்லூரிக் காலத்தில், எங்க‌ள் க‌ல்லூரிப் பேருந்தின் ஒரு திருப்ப‌த்தில் தினமும் டாடா காண்பித்து உற்சாகத்தை விதைத்த ஐந்து வயது மதிக்கத்தகுந்த ஒரு குட்டிப் பாப்பா//

இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க அக்கா... பரவாயில்லையே...

ஒவ்வொரு நிலையிலயும் கடந்துபோறவங்களை மறக்காம புடிச்சவங்க லிஸ்ட்ல வச்சிருக்கீங்க......

தாராபுரத்தான் said...

உள்ளத்தில் உள்ளதை பதிந்துள்ளீர்கள்..ங்க

Menaga Sathia said...

நல்ல பகிர்வு!!

கானா பிரபா said...

2.என் கல்லூரிக் காலத்தில், எங்க‌ள் க‌ல்லூரிப் பேருந்தின் ஒரு திருப்ப‌த்தில் தினமும் டாடா காண்பித்து உற்சாகத்தை விதைத்த ஐந்து வயது மதிக்கத்தகுந்த ஒரு குட்டிப் பாப்பா//

அந்தப் பாப்பா மிட்டாயைப் பிடுங்கித் தின்ற கதை எப்ப வரும் பாஸ்

கானா பிரபா said...

பத்துப் பெண்களைச் சொல்லி கனமாக்கிட்டீங்க பாஸ், வேணாம் நான் போறேன்

துபாய் ராஜா said...

வித்தியாசமான பகிர்வு. வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு ராஜி..

ராஜிக்கு ஏன் ராஜியவே பிடிக்கலைன்னு தெரியலையே

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ராஜி

இராகவன் நைஜிரியா said...

இதுவரை நான் படித்ததில் மிக வித்யாசமாய் சொல்லியிருக்கின்றீர்கள்.

வாழ்த்துகள்.

சுசி said...

ரொம்ப வித்யாசமா சொல்லி இருக்கீங்க.

ஆயில்யன் said...

//ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு ராஜி..

ராஜிக்கு ஏன் ராஜியவே பிடிக்கலைன்னு தெரியலையே
//


டெரர் கொஸ்டீன் !

அடுத்த போஸ்ட்ல உங்க அருமை பெருமைகளை ஸ்டார்ட்டுங்கோ! படிக்கத்தான் பாவப்பட்ட ஜென்மங்க நாங்க இருக்கோம்ல! :)))))))))

ஆயில்யன் said...

//கானா பிரபா said...

பத்துப் பெண்களைச் சொல்லி கனமாக்கிட்டீங்க பாஸ், வேணாம் நான் போறேன்//

மீ ஆல்சோ ஸேம் கனமாகிப்கோயிங்க்!! :(

பிரேமா மகள் said...

நல்லாயிருக்கு ராஜி.... ரசனையான எழுத்துக்கள்..

மங்குனி அமைச்சர் said...

நல்ல செலக்சன்

Anonymous said...

:-)