ஒரே ஒரு லிட்டர் - ப்ளீஸ்

Monday, March 29, 2010
அடுத்த‌ த‌லைமுறைக்கு சொத்து சேர்க்கும் அவ‌ச‌ரத்தில் இருக்கும் நாம், கையிலிருக்கும் விலைமதிக்கமுடியாத இயற்கைச் செல்வம் மிக வேகமாகக் கரைவதை உணர்ந்தாலும், நடைமுறைச் சிக்கல்கல்க‌ளில் சிக்கிக் கொண்டு அதைக் காக்கும் செய‌ல்க‌ளைக் கோட்டை விடுகிறோம்.ஏதாவ‌து செய்ய‌ வேண்டும் என்னும் எண்ண‌ம் எல்லார் ம‌ன‌திலும் இருக்கிற‌து. ஆனால் செய‌ல் வ‌டிவ‌ம் பெறுவ‌தில்தான் கற்கள் பாறைக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌.மிக முக்கிய , அவசர, அத்தியாவசிய கவனம் செலுத்தப்படவேண்டியது நீரின் முறையான உபயோகம் மற்றும் சேமிப்பு.

இதோ அதோன்னு பயந்திட்டு இருந்த வெயில் காலம் வந்தே விட்டது.வெயிலின் கொடுமை சில ஆண்டுகளாக ஏறுமுகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கும் அதிகமாக மார்ச் மாத துவக்கதிலிருந்தே தாங்க முடியாத அனலடிக்கிறது என்பது கண்கூடான உண்மை.இதன் தொடர்ச்சியாக நம் வெகு அருகில் நிற்பது கடும் தண்ணீர் பிரச்சினை.மழை என்பது மருந்துக்கும் பெய்யாத இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீரின் நிலையும் பெட்ரோல், டீசல் போன்ற ஒரு அதிக விலை கேட்கும் பொருளாக மாறும் என்பது திண்ணம்.இந்நிலையில் நம் தண்ணீர் தேவைகளை சுருக்கிக் கொள்வதென்பது அத்தியாவசிய அவசியமாகும்.

நாம் சேமிக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ‌சிய‌மான‌து. ஒரு நாளுக்கு ஒருவ‌ர் ஒரு லிட்ட‌ர் த‌ண்ணீரைச் சேமிக்கிறார் எனில்,ச‌ராசியாக ஒரு குடும்ப‌த்தில் ஒரு நாளில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 4 லிட்ட‌ர்.ஒரு மாத‌த்தில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 120லிட்ட‌ர்.ஒரு ஊரில் 10,000 குடும்ப‌‌ங்க‌ள் உள்ள‌தெனில் ஒரு மாதத்தில் அவ்வூரில் சேமிக்க‌ப்ப‌டும் நீரின் அள‌வு 12லட்சம் லிட்டர்கள்.

ஒரு நாளுக்கு ஒரு லிட்டர் நீரைச் சேமிப்பதென்பது ஒன்றும் பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. அதே ஒரு லிட்டர் நீர் ஒரு குறிப்பிடத்தகுந்த பாசிடிவ் விளைவை கண்டிப்பாய் ஏற்படுத்தும். முகம் கழுவ உபயோகிக்கும் நீரில் சிறிதளவைக் குறைப்பதாலோ,குளிக்கும் நீரில் ஓரிரு மக்(mug) நீரைக் குறைப்பதாலோ நம் ஆரோக்கியமும் அழகும் எவ்விதத்திலும் குறையப் போவதில்லை.

நீரை உபயோகிக்கும் எல்லா இடங்களிலும் டேப் திறந்து விட்டு நேரடியாக உபயோகிப்பதை காட்டிலும்,ஏதேனும் ஒரு பாத்திரத்தில் இருக்கும் நீரை எடுத்து உபயோகிக்கும்போதும் சிறிது நீர் உபயோகம் குறையும்.
இதைப்போலப் பலவழிகள் இருக்கலாம். பின்னூட்டதில் சொல்லுங்கள்.மறக்காமல் செயல்படுத்துங்கள்


முடிவெடுங்க‌ள்.. செய‌ல்ப‌டுத்துங்க‌ள்.. கால‌ம் வெகு வேகமாய்க் க‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து

26 comments:

☀நான் ஆதவன்☀ said...

/ முடிவெடுங்க‌ள்.. செய‌ல்ப‌டுத்துங்க‌ள்.. கால‌ம் வெகு வேகமாய்க் க‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து //

ஓக்கே டீச்சர். இன்னேலருந்து நான் குளிக்கவே மாட்டேன். இது சத்தியம்.

பிரேமா மகள் said...

அட... பொறுப்பான புள்ளையா இருக்கியேம்மா.. உன்னைப் போய் இத்தனை நாள் கேலி செஞ்சேனே...

நல்ல சிந்தனை.... கண்டிப்பாக கடை பிடிப்போம்..

கபீஷ் said...

ஐடியா 1:

நம்ம வீட்ல இருக்கவங்க தண்ணி வீணாக்காம பாத்துக்கலாம்

ஐடியா 2:

உங்க ஸ்டூடன்ஸ்கிட்ட சொல்லி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தலாம்

மீதி ஐடியா அப்புறம் சொல்றேன்

கபீஷ் said...

டீச்சர் மாதிரியே கட்டளை போடறீங்க.

Radhakrishnan said...

அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செயல்படுத்தலாம் இயற்கை.. நல்ல போஸ்ட்..

நான் புதுசா ஒரு சிஸ்டம் இந்த தன்ணீர் தினத்திலிருந்து பயன்படுத்த தொடங்கி இருக்கேன்..அது என்னன்னா அரிசி களையும் தண்ணிய நேரா சிங்கில் விடாம ஒரு பாத்திரத்தில் சேத்து அதை தொட்டி செடிக்கு ஊத்த..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நாம் சேமிக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ‌சிய‌மான‌து. ஒரு நாளுக்கு ஒருவ‌ர் ஒரு லிட்ட‌ர் த‌ண்ணீரைச் சேமிக்கிறார் எனில்,ச‌ராசியாக ஒரு குடும்ப‌த்தில் ஒரு நாளில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 4 லிட்ட‌ர்.ஒரு மாத‌த்தில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 120லிட்ட‌ர்.ஒரு ஊரில் 10,000 குடும்ப‌‌ங்க‌ள் உள்ள‌தெனில் ஒரு மாதத்தில் அவ்வூரில் சேமிக்க‌ப்ப‌டும் நீரின் அள‌வு 12லட்சம் லிட்டர்கள்.//

ஆஹா !!! ஈரோடு லேடி விஜ‌ய‌காந்த் வாழ்க‌ ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

பாரேன் இந்த‌ புள்ள‌க்குள்ளேயும் இவ்வ‌ள‌வு அக்க‌ரை இருந்திருக்கு !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//மார்ச் மாத துவக்கதிலிருந்தே தாங்க முடியாத அனலடிக்கிறது என்பது கண்கூடான உண்மை.//


அப்போ கூலிங் கிளாஸ் போட்டா பிர‌ச்சினையிருக்காதான்னு யாரோ கேட்க‌றாங்க‌ மேட‌ம் !!!

Anonymous said...

வேணா இந்த வெயில் காலம் முடியும் வரை குளிக்க வேண்டாம்னு லீவ் விட்டடலாமா டீச்சர்?

Kumky said...

ஓக்கே டீச்சர். இன்னேலருந்து நான் குளிக்கவே மாட்டேன். இது சத்தியம்.

ஹி...ஹி....
இது ஏற்கெனவே நமக்கு பழக்கம்தானுங்களே...

அப்படியே ஆகட்டும்..

Unknown said...

மிக அவசியமான பதிவு.. ! அரசாங்கமும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.. பல இடங்களில் அரசாங்க / மாநகர பஞ்சாயத்து குழாய் தண்ணீர் வீணாகிறது. முக்கியத்துவத்தை விளக்கி சொல்லவேண்டிய அரசாங்கமே இப்படி வீணடிப்பது வருத்தமே

www.myownscribllings.blogspot.com

இராகவன் நைஜிரியா said...

சிறு துளி பெரு வெள்ளம்.

தேவன் மாயம் said...

நீரை உபயோகிக்கும் எல்லா இடங்களிலும் டேப் திறந்து விட்டு நேரடியாக உபயோகிப்பதை காட்டிலும்,ஏதேனும் ஒரு பாத்திரத்தில் இருக்கும் நீரை எடுத்து உபயோகிக்கும்போதும் சிறிது நீர் உபயோகம் குறையும்.///

நல்லாச்சொன்னீங்க! இயற்கை மகள் என்றால் சும்மாவா?

பனித்துளி சங்கர் said...

நாங்கள் எப்பொழுதுமே நல்ல புள்ளைகதான் !

ஜோசப் பால்ராஜ் said...

பல்லு விளக்கும் போது பலரும் செய்வது பைப்ப திறந்துவிட்டே இருப்பது. இதை சரியா கவனிச்சாலே பாதி மிச்சம்.

பொறுப்பான பதிவு.

கார்த்திகைப் பாண்டியன் said...

அவசியமான இடுகை.. வாழ்த்துகள் தோழி..:-))

சுசி said...

நல்ல பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல சிந்தனை

ஈரோடு கதிர் said...

நியாயமான இடுகை..
நன்றி ராஜி

ரோகிணிசிவா said...

இரண்டாவது/முன்றாவது முறை துணிகளை அலாசிய தண்ணியை வேறு உபயோகத்திருக்கு பயன்படுத்துவது,
மரம் நடுதல்,
மழை நீரை சேமித்தல்,
குழந்தைகளுக்கு சிக்கனமாக நீரை உபயோகப்படுத்த சொல்லித்தருவது,
குழாய்களில் ஏற்படும் சிறு சிறு கசிவுகளை சரி செய்தல் ....
இப்படி நிறைய இருக்கு
இன்னும் நியாபகம் வரும் போது சொல்றேன்

க.பாலாசி said...

உண்மதானுங்க... நாமளும் செய்யணும்...

சுந்தரா said...

ரொம்ப அவசியமான இடுகை.

சின்னக்குழந்தைகளிடம் பழக்குவது ரொம்ப அவசியம். இனிவரும் காலத்துக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

மாதேவி said...

அவசியமான இடுகை.

Unknown said...

//நாம் சேமிக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ‌சிய‌மான‌து. ஒரு நாளுக்கு ஒருவ‌ர் ஒரு லிட்ட‌ர் த‌ண்ணீரைச் சேமிக்கிறார் எனில்,ச‌ராசியாக ஒரு குடும்ப‌த்தில் ஒரு நாளில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 4 லிட்ட‌ர்.ஒரு மாத‌த்தில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 120லிட்ட‌ர்.ஒரு ஊரில் 10,000 குடும்ப‌‌ங்க‌ள் உள்ள‌தெனில் ஒரு மாதத்தில் அவ்வூரில் சேமிக்க‌ப்ப‌டும் நீரின் அள‌வு 12லட்சம் லிட்டர்கள்.//

விஜயகாந்து படத்துக்கு வந்துட்டேனோன்னு நினைச்சேன்..

ப்ரியா கதிரவன் said...

குளோபல் வார்மிங் குறித்த விழிப்புணர்வை தூண்டும் ஒரு நல்ல பதிவு.
ஒரு லிட்டர் தண்ணீரோடு மட்டும் நிறுத்தி இருக்காமல், இன்னும் சற்று அகன்ற ஸ்கோப் கொடுத்து எழுதி இருக்கலாமே ராஜி?

- முடிந்த வரை பேப்பர் வேஸ்ட் பண்ணாம இருக்கணும். ஒரு பேப்பரை கசக்கி தூக்கி எறியும் போது, ஒரு மரம் அழற மாதிரி கற்பனை செய்து பாருங்கள். அடுத்த முறை பேப்பர் வேஸ்ட் பண்ண மாட்டோம். எனக்கு ஒரு ஆசிரியர் சொல்லி தந்த ட்ரிக் இது.
- உபயோகிக்காத நேரங்களில், மின்சாதனங்களை ஆப் பண்ணனும்.
- ரீசைக்கிள் பண்ணமுடியாத குப்பைகளை கவனமாக டிஸ்போஸ் பண்ணனும் (பிளாஸ்டிக் கவர்களில் ஆரம்பித்து, பேட்டரிகள் வரை...நாம் குப்பை கூடையில் போடும் முன், சற்று யோசிக்கணும்)
- மரம் வளர்க்கணும். அபார்ட்மென்ட் வாழ்க்கையில் இது சற்று கஷ்டம் தான். எனக்கு தெரிந்த ஒருவர், மரம் வளர்க்கும் சூழ்நிலையில் வாழா விட்டாலும், வளர்க்க முடிந்த உறவினர்களுக்கு செடிகள் வாங்கி பரிசளிப்பார். இது மாதிரி ஏதாவது யோசிக்கலாம் (உன்னால் முடியும் தம்பில வர்ற தாத்தா ஊருக்கு வெளியே எங்கயோ போய் செடிகள் நட்டு வளர்ப்பார்)

-இவை எல்லாவற்றையும் நமது குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்.