சில நாட்களுக்கு முன், நண்பரொருவரின் அலுவலகத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.அவர் சரியான வழியைச் சொன்னாலும், புது ஏரியால விட்டா கண்ணைக் கட்டி, காட்டில விட்ட மாதிரி முழிக்கும் என் பழக்கத்தால்,சற்று சுத்தி சுத்தி அலுவகலத்தைக் கண்டுபிடித்தேன். நகரின் மையப் பகுதியில்,குடியிருப்புகளுக்கு அருகிலிருக்கும் அந்த ஏரியாவில் ஒரு மது பானக்கடை. திரும்ப வரும்போது ஒரு விஷயத்தை கவனித்தேன்.சில கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகவே ஏறத்தாழ 7,8 கடைகள். அனைத்தும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளே..
மதுபானக்கடைகள் பள்ளி,வழிபாட்டுத்தலம்,குடியிருப்பு போன்ற பகுதிகளுக்கு அருகில் இருக்க கூடாது என்னும் விதிமுறை இன்னும் சட்டத்தில் இருக்கிறதா மக்களே?
*******************************************************************
இன்றைய சமூக நிலையில், கல்லூரியில் மாணவர், ஆசிரியர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய வேறுபட்ட கருத்துகள் ஆசிரியர்களிடையே நிலவி வ்ருகிறது.
மாணவன் ஆசிரியரை நண்பனாகப் பார்த்தால் போதும் என்கிறது ஒரு தரப்பு.
ந்ட்பு ரீதியிலான அணுகு முறை எல்லாம் பயன்தராது. மாணவன் ஆசிரியரிடையே டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்வது அவசியம் என்கிறது மற்றொரு தரப்பு.. எது சரியாக இருக்கும்.கொஞ்சம் சொல்லுங்க மக்களே
****************************************************************
விபத்துகள் அடிக்கடி நிகழும் நிகழ்வாக மாறிவிட்டன.அதைப் பற்றிப் பேசும்போது, பலர் சொல்வது " இந்தப் பிரைவேட் பஸ்காரங்க பஸ் ஓட்டற லட்சணத்தால தான் இப்பிடி நடக்குது" கண்ணு மண்ணு தெரியதா ஸ்பீடுல ஓட்டறாங்க. ஆனால் இப்பிடிக் குறை சொல்லும் பலர் பயணத்திற்குத் தேர்ந்தெடுப்பது, மிக அதிக வேகத்தில் செல்லும் பிரைவேட் பஸ்களையே". அப்போ உங்களுக்காகதானே மக்களே .. பஸ்காரங்க வேகமா போறாங்க. அவங்களை மட்டும் ஏன் திட்டறீங்க?
**********************************************************************
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
டைட்டில்ல மனதில் கொஸ்டீன்களாய் மலர்ந்தவை என்றிருந்திருக்கவேண்டும் :)
சட்டத்தில்(மட்டும்) இன்னும் இருக்கு
டிஸ்டன்ஸ் இருக்கனும் நட்போடு.
மாணவர்களும் தங்கள் பொருப்பை உணரனும் ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தருவதாக நினைத்து சொல்லி கொடுக்கனும்.
நல்ல கேள்வி ...
(நமக்காத்தான் மக்களே இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்)
//சில கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகவே ஏறத்தாழ 7,8 கடைகள்//
அவ்ளோத்தானா....பாவம் பண்ணின மக்கள் போலருக்கு...
//மதுபானக்கடைகள் பள்ளி,வழிபாட்டுத்தலம்,குடியிருப்பு//
இதுங்களுக்கு பக்கத்துலதான் வைக்கக்கூடாது டீச்சர்... நாலு கடை தள்ளி வக்கலாம்னு அந்த சட்டத்துக்குள்ள ஒரு ஓட்டையும் வைச்சிருக்காங்க....
மேடம்.. மக்களை கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி...நாம என்ன செய்யணும்ன்னு யோசிப்போம்.... சரியா?
டீச்சர் ஒன்னு சொல்லவா? கேள்வி கேட்குறது ரொம்ம்ம்ம்ப ஈஸி.. ஆனா பதில் சொல்றது இருக்கே ரொம்ப்ப கஷ்டம். இந்த டீச்சருங்களே இப்படி தான். ஈஸியா கேள்வி கேட்டுருவாங்க :)
// அனைத்தும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளே..//
"குடி" மக்கள் நிறைய இருக்காங்க போல..
நட்புதான் சரி.
அவங்கள திட்டக் கூடாது.
முழு விடை எழுத நேரம் போதாம இருக்கிறதால சுருக்கமா எழுதிட்டேன்.
//////////க.பாலாசி said...
//சில கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகவே ஏறத்தாழ 7,8 கடைகள்//
அவ்ளோத்தானா....பாவம் பண்ணின மக்கள் போலருக்கு...
//மதுபானக்கடைகள் பள்ளி,வழிபாட்டுத்தலம்,குடியிருப்பு//
இதுங்களுக்கு பக்கத்துலதான் வைக்கக்கூடாது டீச்சர்... நாலு கடை தள்ளி வக்கலாம்னு அந்த சட்டத்துக்குள்ள ஒரு ஓட்டையும் வைச்சிருக்காங்க....
////////////////
சரியாக சொன்னீங்க.
//மாணவன் ஆசிரியரிடையே டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்வது அவசியம் என்கிறது மற்றொரு தரப்பு.. //என்னை பொருத்தவரை மாணவனுக்கும் ஆசிரியருக்கும் சிறிது இடைவெளி தேவை.மாணவன் தடம் மாறி போகும் வாய்ப்பிருந்தால் மட்டும் ஆசிரியர் ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.அப்போழுது தான் இருவருக்கும் உறவு வலுப்படும்.இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே...
ஓ பரீட்சை நேரமா????ஒரே கேள்வியா இருக்கு!
//". அப்போ உங்களுக்காகதானே மக்களே .. பஸ்காரங்க வேகமா போறாங்க. அவங்களை மட்டும் ஏன் திட்டறீங்க?//
வேகத்துக்காக மட்டும் தனியார் பேருந்துகளைத் தேர்வு செய்வதில்லை!
அரசுப் பேருந்தின் பராமரிப்பு, என்னிக்கு, எவ்வளவு தூரத்தில் ரிப்பேராகி நிக்கும் போன்ற பல்வேறு விஷயங்களும் இருக்கு!
//மதுபானக்கடைகள் பள்ளி,வழிபாட்டுத்தலம்,குடியிருப்பு போன்ற பகுதிகளுக்கு அருகில் இருக்க கூடாது என்னும் விதிமுறை இன்னும் சட்டத்தில் இருக்கிறதா மக்களே?//
சட்டப்படி குடியிருப்பு, கோவில்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தொலைவைத் தாண்டியே இருக்க வேண்டும்!
அப்படி மதுக்கடைகள் இருப்பின் பொதுநல வழக்கு தொடரலாம்!
தங்காச்சி பாஸ்...
ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு பட்டிமண்றம் ஆரம்பி
//மாணவன் ஆசிரியரை நண்பனாகப் பார்த்தால் போதும் என்கிறது ஒரு தரப்பு.//
நெருக்கமான நண்பராக பார்க்க வேண்டும் என்பது என் தரப்பு.. நான் அப்படித்தான் இருக்கிறேன்..:-))))
// மதுபானக்கடைகள் பள்ளி,வழிபாட்டுத்தலம்,குடியிருப்பு போன்ற பகுதிகளுக்கு அருகில் இருக்க கூடாது என்னும் விதிமுறை இன்னும் சட்டத்தில் இருக்கிறதா மக்களே? //
தப்பா படிச்சிருப்பீங்கன்னு நினைக்கின்றேன்...
மதுபானக்கடைகளுக்கு அருகில் பள்ளி, வழிப்பாட்டுத்தலம், குடியிருப்பு ஆகியவை இருக்கக்கூடாது. அதனால அவர்களை உடனடியாக காலி செய்யச் சொன்னாலும் ஆச்சர்யப் படக் கூடாது.
// மாணவன் ஆசிரியரை நண்பனாகப் பார்த்தால் போதும் என்கிறது ஒரு தரப்பு.
ந்ட்பு ரீதியிலான அணுகு முறை எல்லாம் பயன்தராது. மாணவன் ஆசிரியரிடையே டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்வது அவசியம் என்கிறது மற்றொரு தரப்பு.. எது சரியாக இருக்கும்.கொஞ்சம் சொல்லுங்க மக்களே //
இதற்கு சரியான தீர்வு சொல்வது கடினம். நேரத்திற்கு ஏற்ப செயல் படவேண்டியது முக்கியம்.
// பஸ்காரங்க வேகமா போறாங்க. அவங்களை மட்டும் ஏன் திட்டறீங்க? //
Speed Thrills but KILLS - என்பது தெரியாததால்..
// \
மாணவன் ஆசிரியரை நண்பனாகப் பார்த்தால் போதும் என்கிறது ஒரு தரப்பு.
//
எல்லா நேரத்திலேயும் இது சரிபட்டு வராது!
//
அனைத்தும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளே..
//
இந்த விஷயம் என்னவோ உண்மைதான்:(
பயந்து பயந்துதான் நடமாடனும் அதுதான் விதிக்கபடாத சட்டம்:(
நல்ல இடுகை ராஜி, எல்லாரும் கூறுவது போல் இது கேள்வி நேரமோ?
எனக்கு கேள்வி கேக்கதான் தெரியும், பதில் சொல்ல தெரியாதே:)
ஆசிரியர் மாணவர் உறவு எப்டி இருக்கனும்னா
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
இந்தக் குறள்ல சொல்லியிருக்க மாதிரி இருக்கனும்.
இது ஆசிரியர்/ மாணவர், பணியாளர்/மேலதிகாரி என எல்லா இடத்துலயும் பொருந்தும்.
அச்சச்சோ மதுபான கடைகள் எல்லாம் வீடு, பள்ளிகளுக்கு பக்கத்துல இருக்குன்னு நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களா?
இல்லீங்க, நல்லா விசாரிச்ச்சு பாருங்க. மதுபானக் கடைகளுக்குப் பக்கத்துல போயி வீட்டையும் பள்ளிக்கூடத்தையும் கட்டிருக்காங்க எல்லாரும்.
Post a Comment